![]() |
நாமக்கல் குமாரபாளையத்தில், தி.மு.க வார்டு செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அந்தப் பகுதியின் (தி.மு.க.வின்) வார்டு செயலாளர். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது நண்பர்களுடன், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடையில் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞன் டூவீலரில் வந்து வேகமாக இறங்கியதோடு, திடுதிப்பென சரவணனை கீழே தள்ளிவிட்டு சரவணன் மீது அமர்ந்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தினார்.


dinakaran : கொல்கத்தா: மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்த திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் 4 மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி
நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட
போது, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் நட்டாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத்
தவறியதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றி மத்திய உள்துறை
அமைச்சகம் உத்தரவிட்டது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த
மு.க.ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர்
கெஜ்ரிவால், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக்
கெலாட் ஆகியோருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில்
நன்றி தெரிவித்துள்ளார். 



நிலத்தில்
எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத்
தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து
பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.
dhinakaran: போடி: தேனி மாவட்டம், போடி ஜக்கம்மநாயக்கன்பட்டியில்
பொதுப்பாதை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே கடந்த 17ம் தேதி மோதல்
ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இது பற்றி முறையிட 20க்கும்
மேற்பட்டோர் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு
நேற்று மாலை சென்றனர். இதை சில ஊடகத்தினர் செல்போனில் பதிவு செய்தனர்.
அப்ேபாது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
அங்கு சில நிருபர்கள், காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து,
அவர்களின் செல்போன்களை வாங்க உத்தரவிட்டார். உடனடியாக நிருபர்களின்
செல்போன்கள் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் பறிக்கப்பட்ட
செல்போன்களில் இருந்து காட்சிகள் அழிக்கப்பட்ட பின், உரியவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.
dinakaran: மதுரை: ஒரு சமுதாயத்தினரை இழிவாகப் பேசியதை கண்டித்து
மதுரையில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை, முற்றுகையிட்டு
ஆர்ப்பாட்டத்தி–்ல ஈடுபட்ட யாதவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். 



கொல்கத்தா:மேற்கு
வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி
நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற
உள்ளது.



