சனி, 19 டிசம்பர், 2020

BBC :போலி கொரோனா தடுப்பு மருந்து லண்டனில் பதஞ்சலி நிறுவனம் மோசடி

பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள பதஞ்சலி நிறுவனத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது) மற்றும் பாபா ராமதேவ் ஆகியோர் நிறுவினர். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்று கூறப்படும் போலி மருந்துகள் லண்டனில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் விற்கப்பட்டு வருவது பிபிசி புலனாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.                  இந்தியாவின் 'பதஞ்சலி ஆயர்வேத்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கொரோனில் மருந்து லண்டனில் ஆசிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் "கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும்" என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .....

கொரோனில் மருந்தை உற்பத்தி செய்யும் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், இந்த மருந்து மூச்சுக் குழாயில் உள்ள தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறுகிறது...... பிபிசி மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக எந்த வகையான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிபிசிக்காக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் இந்த மருந்தை சோதனைக்கு உட்படுத்தியது....செடி-கொடிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மருந்து கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்காது என்பது இந்த சோதனையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: