புதன், 19 டிசம்பர், 2018

அருணாசலம் முருகானந்தம் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கர் தெரிவு குழுவுக்கு தேர்வாகி உள்ளது ..


Indian short documentary film, Period. End of Sentence, gets shortlisted for the Oscars in the Documentary Short Subject category for the 91st Academy Awards. The 26-minute long short film is about the stigma around menstruation that women in India face and it also delves into the work of Arunachalam Muruganatham, the real-life pad man.
Indian Short Film, "Period. End of Sentence", Gets Shortlisted for Oscarsமின்னம்பலம் : உலகம் முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள், ரசிகர்கள்
பெரிதும் எதிர்பார்க்கும் ஆஸ்கர் விருது இந்த ஆண்டு யார் யாருக்கு வழங்கப்படும் என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட திரைப்படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தியா சார்பில் இந்த ஆண்டு அனுப்பப்பட்ட ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கவனிக்கவேண்டிய படம் ஒன்று இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பூம்புகார் கடலில் குளித்த கல்லூரி மாணவிகள் மூவர் உயிரழப்பு !!

DEATHnakkheeran.in - selvakumar : பூம்புகார் கடலில் குளித்த கல்லூரி மாணவிகள் மூன்று பேர் சுழல் அலையில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. அந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப்பயிலும் ஏழு மாணவிகள் இன்று தேர்வு முடிந்து விடுமுறை என்பதால் பூம்புகார் கடற்கரைக்கு  ஜாலியாக சென்றிருக்கின்றனர்.  மதியம் நேரம் என்பதால் கடலில் இறங்கி  குளித்துள்ளனர். அவர்கள் ஜாலியா விளையாடிய நிலையில், எதிர்பாராமல் வந்த ராட்சத சுழல் அலை அவர்களை  நிலைக்குளைய செய்தது.

பன்னீரின் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கம் ..தினகரனுடன் ரகசிய உறவு - நீக்கப் பின்னணி!

மின்னம்பலம் :  “பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த சகோதரர்தான் இந்த ஓ.ராஜா.
இன்று காலை மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.ராஜா. தலைவர் பதவிக்கான போட்டி என்பது பலமாக இருந்தது. போட்டியை நேரடியாகச் சமாளிக்காமல் சில குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓ.ராஜா. இன்று நடந்த தேர்தலில் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட துளசி என்பவர் ஆதாரங்களுடன் முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். முதல்வரின் தனிச் செயலாளரான ஜெயஸ்ரீதான் அவருடன் பேசியிருக்கிறார். அப்போது, ‘என்ன நடந்துச்சு என்பதை ஆதாரங்களுடன் நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன். இதை முதல்வரிடம் உடனடியாகச் சொல்லுங்க. இல்லைன்னா நான் திமுக கவனத்துக்குக் கொண்டு போவேன். அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..’ என்று சொல்லியிருக்கிறார். ஜெயஸ்ரீயும் உடனடியாக இந்தத் தகவல்களை முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

பொன் மாணிக்கவேல் : என்மீது குற்றம் சொல்பவர்கள் ஒரு சிலை திருட்டையும் கண்டு பிடிக்காதது ஏன்? இது பகுதியினரும் பரஸ்பரம் பேட்டி விடியோ


tamil.samayam.com சிலை கடத்தல் பிரிவில் தனிஆளாக போராடுகிறேன்- பொன். மாணிக்கவேல் உருக்கம்" சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன் மீது கொடுத்த புகார் தொடர்பாக, சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.i>புகார் தொடர்பாக அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதியாத போது, பணிச்சுமை எப்படி இருக்கும் என பொன். மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
தன் மீது புகார் அளித்த காவலர்கள் இதுவரை ஒரு முதல் தகவல் அறிக்கையையும் பதியவில்லை, புகார் கூறியவர்கள் ஒருமுறை கூட பணி மாறுதல் கோரவில்லை என பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது இன்று டிஜிபி-யிடம் புகார் அளித்தனர். பொன். மாணிக்கவேல் தலைமையிலான பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருகக்கு பணிக்காலம் முடிந்துவிட்டதால், அவர்களை திருப்பு அனுப்பினார் அவர்.

ராஜஸ்தானிலும் விவசாய கடன்கள் தள்ளுபடி .. 18 ஆயிரம் கோடி ... முதல் கோப்பில் கையொப்பம் காங்கிரஸ் தொடர் அதிரடி!

ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்புமாலைமலர் : ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி செலவை அரசு ஏற்றது. ஜெய்ப்பூர்: சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல் மந்திரியாக  பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

பெரியாரை புறக்கணிக்கும் பேரணியை திக, திவிக, தபெதிக ஆதரிப்பதா ? ? டிசம்பர் 23 கரும் சட்டைப் பேரணி


சாந்தி நாராயணன் : · பெரியாரின் பேரில்  பெரியாரியர்களின் மீதே தீண்டாமையா ?
பெரியாரின் சிந்தனைகள் குழப்பத்தை நீக்கி தெளிவைக் கொடுப்பவை டிசம்பர் 23 கரும் சட்டைப் பேரணி என்ற பெயரில் பெரியாரியர்களை அழைக்கிற அழைப்பாளர்கள் ஏன் குழப்பத்தில் இருக்கிறார்கள்?
ஆட்சிக்கு யார் வரக்கூடாது  என்கிற பெரியார் யார் வரவேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தாரே!
இந்துத்துவா பாஜகவை வீழ்த்த அழைப்பு விடுக்கிற டிச 23 பேரணி அழைப்பாளர்கள் பேராசிரியர் அன்பழகன் அய்யா சுபவீ , தோழர் மதிமாறன் உள்ளிட்டவர்கள் மீது மாறுபட்ட பார்வை கொண்டிருப்பதேன்? 
அவர்கள் இந்துத்தவா சக்திகளும் , அவர்தம் அடிமைகளும் துரத்தப்பட்டு திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொன்னதாலா?
அப்படி திமுகவை ஆதரிப்பவர்கள் மீது ஏன் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் பேரணி அழைப்பாளர்கள் ?
திமுகவை ஆதரிக்கிறவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிப்பதனால் பெரியாரும் இந்த தீண்டாமைக்குள் வருகிறாரே?
வாக்கு அரசியலில் திமுகவை ஆதரித்தால் புறக்கணிப்போம் என்று பேரணி அழைப்பாளர்கள் சொல்வர்களையானால் பெரியாரும் புறக்கணிக்கப்படுகிறாரா ?

பெரியாரை புறக்கணிக்கும் பேரணியை திக, திவிக,  தபெதிக ஆதரிப்பதா ?
குழப்பத்தை தெளிவுபடுத்தவேண்டியோர் குழப்பத்தில் ஆழ்வதா? பார்ப்பனியம் பெரியார் இயக்கங்களை தொட்டுப்பார்க்கும் துணிவுக்கு வந்துவிட்டதா ?

ப சிதம்பரம் : தேர்தல் யுத்தத்துக்கு ஆயத்தமாக இன்னும் 100 நாட்கள் உள்ளன.

Savukku  வறுமை, வளர்ச்சி பற்றி ஏமாற்றப்பட்ட வாக்குறுதிகளுடன் மக்களால் வாழ முடியும்; ஆனால் எப்போதும் போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் வாழ முடியாது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது எப்போதும் ஒரு மாயைதான். நாட்டில் தேர்தல் வரைபடத்திலிருந்து காங்கிரஸை ஒழித்துக்கட்ட முடியும், அவ்வாறு செய்வோமென்ற முட்டாள்தனமான கருத்தைச் சொல்லி மக்களை அதை நம்பவைக்க பாஜகவும் குறிப்பாக தலைவர்கள் திரு. நரேந்திர மோடியும் திரு. அமித் ஷாவும் மிகவும் சிரமப்பட்டனர். காங்கிரஸ் இதை நிராகரித்தது. இந்த பைத்தியக்காரத்தனமான வாசகத்திலிருந்து தன்னை ஆர்எஸ்எஸ்ஸேகூட அந்நியப்படுத்திக் கொண்டது. இந்திய மக்களோ பாஜகவின் திட்டத்தைக் குற்றமாக எடுத்துக்கொண்டுவிட்டனர்.
பாஜகவும் காங்கிரசும் நேரடியாகப் போட்டியிட்ட மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் சந்தர்ப்பம் கிட்டியபோது வாக்காளர்கள் உறுதியாக காங்கிரசுக்கே வாக்களித்தனர். ‘உறுதியாக’ என்ற வார்த்தை இதை படிக்கும் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் தேர்தல் முடிவுகளை கவனமாக அலசி ஆராய்ந்த பின்னரே இவ்வார்த்தையைத் தேர்ந்தெடுத்தேன்.

மாயாவதிக்கு பிரதமர் பதவியில் கண்? காங்கிரஸ் கூட்டணியில் சேர தயக்கம்: காங்கிரஸ் உ.பி.யில் தனித்து போட்டியிடத் தயாராகிறது

tamil.thehindu.com : ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகி லேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. ஆனாலும், அம் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மாயாவதியும் அகிலேஷூம் புறக் கணித்துள்ளனர். இவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வேண்டும் என சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்தால் அதிருப்தி காரணமாக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் முக்கிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக மாயாவதி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் கலப்படம்: 74 கம்பெனிகளுக்கு தடை

வெப்துனியா :கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த 74 தனியார் கம்பெனிகளின் தேங்காய் எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதில் 9 கம்பெனிகள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தினந்தோறும் சமையலுக்கும் உடலுக்கும் பயன்படுத்தும் எண்ணெய் தேங்காய் எண்ணெய். இதில் அதிகளவில் கலப்படும் செய்யப்படுவதாகவும், இதனால் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கேரள அரசு அதிகாரிகள் அம்மாநிலத்தில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய்களை பரிசோதனை செய்ததில் 74 தனியார் கம்பெனிகள் கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவற்றுக்கு தடை விதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட 74 நிறுவனங்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது<

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு! - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்

மாணவர்கள்vikatan.com -sahayaraj-m":
`33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் லட்சக்கணக்கில் செலவழித்து பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

கஜா புயல் பாதிப்பு விவாதிப்பதை நாடளுமன்றத்தில் தடுத்த அதிமுக MPக்கள் / கூலிப்பட்டாளம் Rajya Sabha disruption: Opposition flags AIADMK ‘foul play’

Raising objection: AIADMK MPs protesting in Parliament during the winter session on Tuesday.கஜா புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க இருந்த தினத்தன்று அவையை நடக்க விடாமல் அமளி செய்த அதிமுக அடிமைகள்.
thehindu.com : Raising objection: AIADMK MPs protesting in Parliament during the winter session on Tuesday. Opposition parties says All India Anna Dravida Munnetra Kazhagam is disrupting the House at the behest of BJP; AIADMK says Mekedatu issue is serious.
The Opposition parties on December 18 accused the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) of deliberately stalling Rajya Sabha proceedings for the fifth consecutive day on the bidding of the ruling Bharatiya Janata Party.
As soon as the House assembled for the day, the AIADMK MPs trooped into the Well, protesting the Central Water Commission’s decision to give in principle nod to the Mekedatu dam on the Cauvery

கலப்பட வெல்லம் உற்பத்தி; கரும்பு விவசாயிகள் .. திடீர் முற்றுகை!

 Mixed Jaggery production; Sugarcane Farmers Collector's Office Sudden Siege!நக்கீரன் : சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, சின்னத்திருப்பதி, இடைப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. வெல்லம் உற்பத்தியாளர்கள் பலர், சர்க்கரை மற்றும் ரசாயன பொருள்களைக் கலந்து தரமற்ற வெல்லத்தை உற்பத்தி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
 கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்பு, மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கலப்பட வெல்லம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் நேற்று நடந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறினர். கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதால், கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் போவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் பாமகவும் வருகிறது? பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் ஏற்று கொள்ளுமா?

வலு சேர்ப்பு tamil.oneindia.com - veerakumaran.: திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வருகிறதா அந்த முக்கிய கட்சி?- வீடியோ சென்னை: 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியின் காரணமாக, தமிழகத்தில் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல் மூன்று மாநிலங்களிலும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ராகுல் காந்தி தலைமை ஏற்ற பிறகு காங்கிரஸ் கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

சசிகலா : மோடி எதற்காக நம்மை வீழ்த்தினார் என்ற "உள்கணக்கு" எனக்கு மட்டும்தான் தெரியும் ! வேறு என்ன பணம் கொடுக்கல் வாங்கல்தான்?


விகடன் : வரப் போகும் தேர்தலில் என்ன வியூகம் வேண்டுமானாலும் மோடி எடுத்துக்கொள்ளட்டும். நாம் ஒற்றுமையாக இருந்து செயலாற்றாமல் போய்விட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம் ‘ எனப் பேசியிருக்கிறார் சசிகலா.
` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா?!'  - தினகரனிடம் கொதித்த சசிகலா
`சசிகலாவுடனான நேற்றைய சந்திப்பு தினகரனுக்கு திருப்திகரமாக அமையவில்லை’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். ` அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையோடு செயல்படுவது குறித்தும் தேர்தல் நிலைப்பாடு பற்றியும் சசிகலா கூறிய கருத்தில் தினகரன் உடன்படவில்லை’ என்கின்றனர் சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று மதியம் தினகரனோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கத்துரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி உள்ளிட்டோரும் உடன் சென்றனர். சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாள் விசாரணை நடத்திய பிறகு நடக்கும் சந்திப்பாகவும் இது இருந்தது. தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சென்றது; நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

மோடியின் சோனியா ராகுல் வெறுப்பு பிரசாரத்தால் அதிக பயன்பெற்ற காங்கிரஸ் ..

சவுக்கு :சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் (சோனியா) காந்தி குடும்பத்தைத் தாக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. பிரதமரது தேர்தல் பிரசாரங்களில் உரத்த குரலில் காந்தி குடும்பத்தைத் தாக்குவது என்பது பிரிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. குஜராத் முதல்வராகத் தான் இருந்தபோது சோனியா காந்தியை ‘ஜெர்ஸி பசு’ என்றும் ‘பாஸ்தாபென்’ என்றும் அழைத்த மோடி தற்போது ராகுல் காந்தியை ‘நாம்தார்’ (வம்சாவளி அரசர்) என்றும் தன்னை ‘காம்தார்’ (வேலை புரிபவர்) என்று
குறிப்பிடுகிறார். இவரது சொல்லம்புகளால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படவில்லை. என்றாலும், காந்தி குடும்பத்தினரைப் பொதுமேடையில் அவமானப்படுத்துதல், திட்டுதல் என்பதே ஆளுங்கட்சியின் பாணியைக் காட்டும் கண்ணாடியாகிவிட்டது. ஆனால், காந்தி குடும்பத்தினரைத் தாக்குவது பலருக்குச் சலிப்பூட்டுவதாகவும் ராகுலுக்குச் சாதகமாகவும் தற்போது ஆகிவிட்டதோ?
அதிகபட்ச வெறுப்பு உமிழப்படும் ராகுல் காந்தியின் நிலை, தார்மிக அடிப்படையில் உயர்ந்துள்ளது என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. அவர் மக்களின் அனுதாபத்தைப் பெற்று ‘பாவம் அவர்’ என்று அவர்கள் சொல்லும் நிலைக்குச் சென்றுவிட்டார். ஜெய்ப்பூர் பிரசாரத்தின்போது சோனியா காந்தியை மறைமுகமாகத் தாக்கும் விதமாக ‘காங்கிரஸின் விதவை யார்’ என அவர் பேசியதால் சோனியா காந்திக்கு ஆதரவாகச் சமூக ஊடகங்களில் பெரும் அனுதாப அலை வீசியது.

தாம்பரத்தில் பேருந்துக்குள் தாயைக்கொன்ற தனயன்: சகோதரிக்கும் அரிவாள் வெட்டு

THE HINDU TAMIL : தாம்பரத்தில் சொத்துப் பிரச்சினையில் தாய், சகோதரி இருவரையும் அரிவாளால் வெட்டிய மகன் போலீஸில் சரணடைந்தார். இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53) என்கிற மகனும், விஜயலட்சுமி (55) என்கிற மகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். முத்தம்மாளுக்கு சொந்தமாக கூடுவாஞ்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக மகன் தேவராஜுக்கும் தாய் முத்தம்மாளுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சொத்தை சரி பாகமாக மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு கொடுக்கவேண்டும் என முத்தம்மாள் பிடிவாதமாக இருந்தார்.
சமீபத்தில் சொத்து பிரிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் தேவராஜ். ஆத்திரம் கொலைவெறியாக மாற தாயையும் சகோதரியையும் கொல்ல திட்டமிட்டார். இன்று முத்தம்மாளும், விஜயலட்சுமியும் கூடுவாஞ்சேரியிலிருந்து கோவூரில் வசிக்கும் இன்னொரு மகள் வீட்டுக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தனர்.

மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவரானார்! ...சம்பந்தர் அதிர்ச்சியிலா?

Mahinda Rajapaksa was named as the Leader of the Opposition today by Speaker Karu Jayasuriya
Ajeevan Veer : எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தர் இழந்ததால்
அதிர்ச்சியில் இருப்பதாக பரப்புரை செய்து வருகிறார்கள்.
தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பு பாராளுமன்றம் வருவது அமைச்சு பதவிக்காகவோ அல்லது எதிர்க் கட்சி தலைமை ஏற்கவோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி அமைச்சு பதவியேற்று மக்களுக்கு சேவை செய்தால் அதுபோல நல்ல விடயம் வேறேதும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.
ஆனால் சிலரது பிரதமர் பதவி போனதை மறந்து அடுத்தவனது எதிர்க் கட்சி பதவி போனதே என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதுபோல கொடுமை வேறெதும் இல்லை.
சம்மந்தர் ஏற்கனவே எதிர்க் கட்சி தலைவர் பதவியை தேவையில்லை என சொல்லிவிட்டார். அது சிலருக்கு தெரியாமலிருக்கலாம். அவர்களுக்கு தேவையானால் இன்றும் அரசில் கெபினட் பதவி பெறலாம்.அரசோடு இணைந்து செயல்படலாம். அவர்கள்தான் தயாராக இல்லை. தமிழ் கட்சியின் நோக்கம் பதவியல்ல. நான் அவர்களோடு உடன்பாடு இல்லாவிட்டாலும் இதுவே உண்மை!

பொன் மாணிக்கவேல் பொய்வழக்கு போட மிரட்டல்? 13 போலீஸ் அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு .. நடவடிக்கைக்கு அரசு தயார்?

Tamilnadu Government mulls to take action against Idol wing chief Pon Manickavel tamil.oneindia.com - veerakumaran : சென்னை: சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்மாணிக்கவேல் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால் அவரது பணிக்காலத்தை ஒரு வருடம் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கும் பொன்மாணிக்கவேலுக்கும் நடுவே பகிரங்கமாகவே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் குழுவில் பணியில் இருந்த 60 போலீசார் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப் படுகின்றனர்.

ஜெயலலிதா அப்போலோவில் உணவுக்காக மட்டும் 1.17 கோடியாம் .. மருத்துவ செலவு ரூ.6,85,69,584..


தினத்தந்தி : மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவின் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில், அவருக்கான உணவு செலவு மட்டும் ரூ. 1.17 கோடி ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584 எனவும் அப்பல்லோ தெரிவித்துள்ளது.
 மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்.13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது, பின்னர் ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017- ஜூன் 15 ஆம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது எனவும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்னும் ரூ.44.46 லட்சம் தர வேண்டியுள்ளது எனவும் அறிக்கையில் தகவல் உள்ளது.

ஆந்திராவை அடித்து போட்ட பெய்ட்டி புயல்... விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் விமான சேவை முடங்கியது.

Cyclone  Phethaitamil.indianexpress.com :  பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தில் நேற்று  கரையை கடந்தது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம்
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. கட்ரன்கோனா கிராமத்தின் வழியே புயலின் கண், கரையை கடந்தபோது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. அத்துடன் கனமழையையும் கொட்டித் தீர்த்தது.
கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, விஜயநகரம், விசாகபட்டினம், விஜயவாடா ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, கிருஷ்ணா மாவட்டத்தின் கடலோர பகுதிகளில், பலத்த சூறைக்காற்றுடன் பேரலைகள் எழும்பியது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
திரிணமுல் காங்கிரஸ் -சுப்ரதா முகர்ஜி
மாலைமலர்:  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டணி தொடர்பாக தீர்மானிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கொல்கத்தா: 2019- பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மாநிலங்களை கட்சிகளும் காங்கிரசுடன் கரம்கோர்க்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டங்களில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சிலமுறை பங்கேற்றுள்ளார். எனினும், மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள 42 பாராளுமன்ற தொதிகளிலும் பா.ஜ.க.வை எதிர்த்து நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம் என்று முன்னர் மம்தா குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி ரூ. 6590 கோடிகளில் வெளிநாட்டு பயணங்கள் + விளம்பரங்கள் .. தமிழக ஊடகங்கள் ஆழ்ந்த நித்திரையில்

Adv Manoj Liyonzon : இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூ. 6590 கோடிகளில்
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விளம்பரங்கள் மேற்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.
இதை வடநாட்டு ஊடகங்கள் வருத்தெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக ஊடகங்கள் ஆழ்ந்த நித்திரையில் குப்புறப்படுத்து களிகூர்ந்து கொண்டிருக்கின்றன. நாமாவது இதை அலசுவோம்.
ஜனநாயக குடியரசு நாடான இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் என்னென்ன காரணங்களுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று சில நெறிமுறைகள் இருக்கிறது
அவை 1). வெளியுறவு கொள்கைகளை மேம்படுத்த; 2). பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த; 3). பெருவாரியான மக்கள் வகிக்கும் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் 3அ).வர்த்தக சமநிலை (Balance of Trade), 3ஆ).கட்டண சமநிலை (Balance of Payment), 3இ).பொருட்கள் அல்லது சேவை பரிமாற்றம் (Exchange of Goods or Service) ஒப்பந்தங்கள் செய்ய, 4). பன்னாட்டு உடன்படிக்கைகள், தொடர்பாக மட்டும் தான் இந்திய பிரதமர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும்போது தான் மக்கள் பணத்தை செலவு செய்ய வேண்டும்

அ.தி.மு.க., - அ.ம.மு.க.ரகசிய பேச்சு .. தினகரனை கழற்றிவிட தந்திர முயற்சி? தினமலர்

 அ.தி.மு.க.,அ.ம.மு.க.,ஐக்கியம்?,தினகரன், கழற்றி விட,முடிவு
காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வை இணைப்பதற்கு, திரைமறைவில் பேச்சு துவங்கியுள்ளது. இந்த பேச்சு வெற்றி பெற்றதும், பிப்., 24ல், மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில், இணைப்பு விழா நடத்துவதற்கு, 'இணைப்பு திட்டம்' தயாராகி வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும், தினகரனை, 'கழற்றி விட'வும், இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளையும், பா.ஜ., கூட்டணி கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா வாயிலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திட்டம் மேலும், தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பிரச்னை ஏற்பட்டு, காங்கிரஸ் தலைமையில், அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இணைந்த, மூன்றாவது அணி அமைக்க முடியாத அளவிற்கு, ஸ்டாலின் திட்டமிட்டு காய் நகர்த்தி உள்ளார். அதே > மாயாவதி, சரத் பவார் போன்ற தலைவர்கள் போட்டி போடுவதற்கும், முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

ஆந்திராவில் மீன் மழை.. வானிலிருந்து விழுந்த மீன்களைக் கண்டு பொதுமக்கள் ..


நியூஸ் 7 : ஆந்திர மாநிலத்தில் பெய்ட்டி புயல் தாக்கிய நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீன் மழை பெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, மாவட்டங்களில் பெய்ட்டி புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் கிராமத்தில் நேற்று மாலை மீன் மழை பெய்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்குள்ள நகராட்சி பள்ளி அருகே சுற்றுப்பகுதிகளில் மீன் மழை பெய்து இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் மசோதா: மக்களவையில் அமளி!
மின்னம்பலம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமைகள் பாதுகாப்பு மசோதா, நேற்று (டிசம்பர் 17) உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று, மாநிலங்களவையில் மாற்றுப் பாலின உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2014ஐ தாக்கல் செய்தார் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. தனிநபர் மசோதாவின் கீழ் இது தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுப் பாலினத்தவருக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க இது வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா ஏகமனதாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பாராட்டு தெரிவித்தார் அப்போதைய மாநிலங்களவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன்.