வியாழன், 25 ஜனவரி, 2018

படிக்காத மாணவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!
மின்னம்பலம்: விழுப்புரத்தைச் சேர்ந்த காமராஜ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பழகும்விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் காலத்தில் படிப்பில் அக்கறை செலுத்தாத மாணவர்கள், பின்னாளில் அதற்காக வருத்தப்படுவார்கள் என்பதால் அவர்களுக்குப் படிப்பின் அவசியத்தை வலியுறுத்த தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு மண்டியிட்டு வேண்டுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் பாலு.
இவர் விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவரிடத்தில் நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறுவதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் வீடு தேடி வந்து படிப்பின் அவசியத்தை வலியுறுத்தவும் செய்கிறார். மேலும் மாணவர்கள் முன் மண்டியிட்டு அவர்கள் நன்றாகப் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.

உதயநிதி :என் அரசியல் தொண்டர்களை நோக்கியது!

என் அரசியல் தொண்டர்களை நோக்கியது!மின்னம்பலம் :திமுக சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி, தன்னுடைய அரசியல் தேர்தலை நோக்கியதல்ல; தொண்டர்களை நோக்கியது என்று குறிப்பிட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி தற்போது சினிமாவில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தாம் அரசியலுக்கு வருவதற்கு நேரம் வந்துவிட்டதாகவும் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு அரசியலில் இருந்ததாகவும் கூறியிருந்தார். உதயநிதியின் அரசியல் தொடர்பான பேட்டிக்கு திமுக தொண்டர்களிடையே இருவேறு விதமான கருத்துகள் நிலவின.

போலீஸார் தாக்கியதால் மனமுடைந்த கால்டாக்சி ஓட்டுநர் தீக்குளிப்பு .. சாலைமறியலில் பொதுமக்கள் -

tamilthehindu :சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாக பேசியதுடன் இரும்புக் கம்பியால் தாக்கியதால் மனமுடைந்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 65% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்லையைச் சேர்ந்தவர் மணிகண்டன்(21). சென்னை தாம்பரத்தில் வசிக்கிறார். கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
இவர் இன்று மதியம் தரமணி அருகே ஓ.எம்.ஆர் சாலையில் சவாரி இறக்கிவிட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது இவரது காரை போக்குவரத்து போலீஸார் விஜயகுமார், தாமரைச்செல்வன் மற்றும் சிலர் மடக்கி உள்ளனர்.

புதன், 24 ஜனவரி, 2018

மாலினி ஜீவரத்தினத்தின் "லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்" தயாரிப்பு பா.ரஞ்சித்... ஆவணப்படம்

நக்கீரன் :நாம் வாழும் இந்த சமூகம் காதல், திருமணம் போன்ற எந்தவொரு தனிப்பட்ட காரணிகளையும், அவரவருக்கான தன்னிச்சையான முடிவுகளுக்கு விட்டுவிடாதபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியே சாதிகடந்த திருமணங்களுக்குப் பின்னர் நடக்கும் ஆணவப்படுகொலைகள். இதுவொரு வகை என்றால் இங்கு தாம் ஒரு ஒரினச் சேர்க்கையாளர் என்பதை சொல்லிக்கொள்ளவும், அவர்களது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவும் மிகப்பெரிய தடையாகவே இருக்கிறது இந்தச் சமூகம். உலகின் பல்வேறு நாடுகளிலும் விவாதப்பொருளாகி இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய விவாதம் ஆவணப்பட வடிவிலும் மேடையேறி இருக்கிறது. சமூக ஊடகங்களில் கருத்து, விவாதம்... பின்னர் சென்னையில் LGBT ஊர்வலம்... என்று வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள், இப்பொழுது கலை வடிவை எடுத்திருக்கின்றன.

பாரதிராஜா :நாங்கள் போட்ட சோற்றைத்தின்றுவிட்டு தமிழை அவமதிப்பதா? ஆவேசம்


மின்னம்பலம் :தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அவமதித்தும், தேசிய கீதத்துக்குத் தகுந்த மரியாதையும் அளித்த விஜயேந்திரரின் செயலைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், விஜயேந்திரரை கைது செய்ய வேண்டுமென்றும் தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் நாகரிகமாக எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாரதிராஜாவின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
என் இனிய தமிழ் மக்களே!
தமிழ் மொழியும், தமிழ் இனமும் எங்கே நிற்கிறது, எதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது. சிந்திக்கவேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். கேரளம் கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம் கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ராமஜெயம் கொலை வழக்கில்-சி.பி.ஐ. டீம், தீவிரமா இறங்கி, இப்ப சாமி ரவிங்கிற பிரபல ரவுடியை நெருங்கியிருக்கு

நொண்டிக் குதிரைக்குச் சறுக்குனா சாக்குதான். இவ்வளவு நாளா நொண்டி அடிச்ச  கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், இப்ப புதுவேகம் தெரியுதே?”’ ”சி.பி.சி.ஐ.டி. விசாரிச்ச வழக்கில், நம்பிக்கை இல்லைன்னு ராமஜெயம் மனைவி லதா நீதித்துறையிடம் முறையிட்டதன் பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ.யின் கைக்கு வந்தது. சி.பி.ஐ. டீம், தீவிரமா இறங்கி, இப்ப சாமி ரவிங்கிற பிரபல ரவுடியை நெருங்கியிருக்கு. ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  சாமிரவிக்கு  தொடர்பிருக்கலாம்ன்னு, 2016 செப்டம்பர் இதழிலேயே நம்ம நக்கீரன் அழுத்தமா தெரிவிச்சிருந்தது. அதோடு, இந்த வழக்கை அப்ப அங்க ஏ.சி.யா இருந்த ஜெயச்சந்திரன்தான் விசாரிச்சாருங்கிறதையும்,  சம்பவத்தன்னைக்கு சாமி ரவி, திருப்பதியில் இருந்தார்னு ரவியிடம் வாக்குமூலம் வாங்கிப்பதிவு செஞ்சாருங்கிறதையும் கோடிட்டுக்காட்டியது நம்ம நக்கீரன்.

நீராரும் கடலுடுத்த’ தமிழ் பாடலே அல்ல - இது அர்ஜூன் சம்பத்

வெப்துனியா: :தற்போது தமிழ் தாய் வாழ்த்தாக பாடப்படும் நீராரும் கடலுடுத்த பாடல் தமிழ் பாடலே அல்ல என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து மரியாதை செய்யாமல் இருந்து விட்டு, தேசிய கீதம் பாடியபோது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத் “வேண்டுமென்றே விஜயேந்திரர் இப்படி செய்திருக்க மாட்டார்.
கவனக்குறைவில் இப்படி நடந்திருக்கலாம். மேலும், வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியாரின் வரிகள்தான் தமிழ் தாய் வாழ்த்தாக முன்பு பாடப்பட்டது.

ரஜினியின் சொத்து விபரம் : 360 கோடி ரூபாய் .... இதர விபரங்கள் பட்டியல் ..

மொத்த சொத்து மதிப்பு Tamilarasu- GoodReturns Tamil :சென்னை:  தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் இன்று ஹாட் ஸ்டாராக இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தான். ரஜினியின் அரசியல் அறிவிப்புப் பின் அரசியல் தலைவர்களின் இவரது வருகை குறித்துப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் இவரது அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் அரசியல் வருகையைப் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வரும் நிலையில், ரஜினி இக்கட்சியுடன் கூட்டணி வைப்பார் எனக் கூறப்பட்டாலும், தான் தனிக்கட்சி துவங்குவதாகவே ரஜினி அறிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று ஃபின்ஆப் வெளியிட்டுள்ளது. இதுவே ரஜினியின் பிரபலத்தினை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் இவரது சொத்து மதிப்பு என்பது மிகவும் அதிகமாக உயரும்.
ரஜினிகாந்த்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது, அதே நேரம் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி அணிக்கு வரும் 7 எம்.எல்.ஏ.க்கள்?

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அணிக்கு வரும்  7 எம்.எல்.ஏ.க்கள்?மின்னம்பலம் :“ஒருவேளை தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அதில் எங்களால் சேர முடியாது. ஆனால், அவர் தனியாகக் கட்சி தொடங்கும் பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியிலிருந்து ஆதரவு தருவோம். அவர் தனியாகச் செயல்படுவார். நாங்கள் தனியாகச் செயல்படுவோம். ஆனால் எங்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். தினகரன் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அவரோடு போனால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் பதவியை இழக்க நேரிடும். ஏற்கெனவே இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் சூழ்நிலையில் இப்படியான ஒரு ரிஸ்க் எடுக்க 18 பேருமே தயாராக இல்லை. அதனால்தான் வெற்றிவேல் இப்படிச் சொல்லியிருக்கிறார். தினகரனுடன் இது தொடர்பாக கலந்து பேசிவிட்டுத்தான் மீடியாவிடம் பேசினார் வெற்றிவேல்.

விஜயேந்திரன் சுந்தரனார் நினைவிடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் ... தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை


மின்னம்பலம்: சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எச். ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா ராயப்பேட்டையில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது.
இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பேராசிரியர் சாலமன் பாப்பையா, காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், எச்.ராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
நூலை வெளியிட்டுப் பேசிய பன்வாரிலால், “மொழி வளம் மிக்க இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் பிரதான மொழிகள். சமஸ்கிருதம், பல மொழிகளுக்குத் தாய் மொழியாக உள்ளது. அறிவியல் சார்ந்த விஷயங்கள் சமஸ்கிருதத்தில் புதைந்துள்ளன. அதைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

பத்மாவதி .. இந்து வெறியர்கள் பள்ளி பேருந்து மீது .. சிறுவர்கள் கதறல் ... விடியோ

பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனாவினர் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பத்மாவத் படத்திற்கு நிலவியை தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை அடுத்து, வடமாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. திரையரங்குகள் மீது தாக்குதல், சாலை மறியல் வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் வட மாநிலங்களில் பரவி வருகிறது. படத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வரும் கர்னி சேனா அமைப்பினர் படத்தை திடையிட அனுமதிக்க மாட்டோம் என கூறிஉள்ளனர். அவர்களால் வன்முறை சம்பவங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறை சம்பவங்கள் பரவி வருகிறது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
அரியானாவில் நாளை படம் திரைக்கு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் குண்டர்கள் குர்கானில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என அரியானா மாநில அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் சாலைகளில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஸ்டாலின் : தமிழ்தாய் வாழ்த்து பாடல் ..... தேசிய கீதம் பாடப்படும்போது தியானம் செய்யவில்லையா விஜேந்திரன் ?


மாலைமலர் : காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்தற்கு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பாடப்படும் போது விஜயேந்திரர் தியானம் செய்யவில்லையா?: மு.க ஸ்டாலின் 
சென்னை: சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி சங்கரமடத்தின் விஜயேந்திரர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால், விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் எழுந்து நின்றார்.

மோடி : பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்’ பொருளாதார உச்சி மாநாட்டில்....

தினத்தந்தி ::பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்று டாவோஸ் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.
இதில், ‘பிரிந்து உள்ள உலகில், எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 1997-ம்ஆண்டு பிரதமராக இருந்த தேவ கவுடா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அவருக்கு பின்னர் இப்போது நான்தான் இதில் பங்கேற்று உள்ளேன்.

ஜகத்ரட்சகன் ரஜினி பக்கம் சாய்கிறாரா ? அல்லது சாய்ந்தே விட்டாரா?

Raj - Oneindia Tamil சென்னை: திமுக தலைமையின் நிழல்களில் ஒருவராக இருந்த அதி முக்கிய பிரமுகர் அக்கட்சியை விட்டே விலகி வெகுதொலைவு சென்றுவிட்டதுதான் இப்போது ஹாட் டாபிக். கொள்கைக்காரராக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு ஒருகட்டத்தில் அசைக்க முடியாத அமைச்சராக, திமுகவின் குறுநில மன்னர்களில் ஒருவராக உயர்நிலைக்கு வந்தவர் அந்த அதிமுக்கிய பிரமுகர்.
 இதன் உச்சகட்டமாக திமுக தலைமையின் நிழலாகவும் வளர்ந்தார், Political Gossip on DMK Senior leader ஆனால் அண்மைக்காலமாக திமுகவை விட்டு விலகி அவர் வெகுதொலைவு பயணித்துவிட்டார். முதுபெரும் தலைவரின் நிழலாக இருந்த நம்மை கிள்ளுக்கீரை போல மாற்றி விட்டார்களே என்கிற அடுப்படி அரசியல் மீதான கோபம்தான் இதற்கு அடிப்படை காரணம் என்கிறார்கள். அதேசமயம், இன்னொரு பக்கம் இவர் "சைட்" எடுக்க, திமுக ஆட்சியில் குவித்த சொத்துகள், கல்வி நிறுவனங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் காரணம். அவரைப் பொறுத்தவரை திமுகவால் தனக்கு இனி தேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதிமுக கொள்ளையர் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு!


போக்குவரத்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு பல்வேறு இடங்களிலும் வலுத்து வருகிறது. இங்கே தமிழ் பேஸ்புக் பதிவர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
vinavu :போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து ஃபேஸ்புக் பதிவர்களின் கருத்துக்கள்……. அடிமை அரசு மீது அளவில்லாத வெறுப்பை மக்களிடம் உண்டாக்கி செயல் தலைவரின் கட்சியை செயலிழ‌க்க வைத்து பாபா சாமியாரை ஆட்சி கட்டிலில் ஏற்றி வைக்க பரிவாரங்களின் மாஸ்டர் பிளான் தானோ இந்த பேருந்து கட்டண உயர்வு என்றும் சந்தேகபட வைக்கிறது. மக்கள் இவ்வளவு துன்பபட்டுகொண்டிருக்கும் போது பைத்தியகார ஆட்சியாளன் தவிர வேறு எவனும் இப்படி ஒரு பாரசுமையை மக்கள் மீது திணிக்கமாட்டான். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு மக்களிடையே பலத்த ஆதரவு உருவானது.
இப்போது அதற்கு செக் வைக்கும் விதமாக கட்டண உயர்வு என்ற காய் நகர்த்தலை செய்திருக்கிறது அரசு. தொழிலாளர்கள் எங்களை நிர்பந்திப்பதால் இந்த கட்டண உயர்வு என்ற உளவியலை மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறது அரசு.

மலையக தமிழ் பெண் அதிபரை முழங்காலிட செய்த முதலமைச்சர் தசநாயக கைது


பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில், நேற்று (23) சரணடைந்தார்.
இதனையடுத்து பதுளை பொலிஸார் அவரை, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, நீதவான் அவரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன், வழக்கை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதன்போது முதலமைச்சர் சார்பாக, ஐந்து சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

ம.பி மசூதியை ராமேஸ்வரம் என்று பாஜக அறிவுகொழுந்து குருமூர்த்தி


பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளது. முகநூல் பக்கத்தில் பல வருடங்களாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக 1740 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் கட்டப்பட்டது. இந்திய பொறியாளர்களின் திறைமைக்கு இது முன்னுதாரணம் எனக் கூறி, ஒரு புகைப்படம் உலா வருகிறது.
;ஆனால், அது உண்மையில் ராமேஸ்வரம் அல்ல. மத்தியபிரதேசத்தில் மந்து எனும் பகுதியில் உள்ள மசூதி என்பது உண்மையான செய்தியாகும்.

டெல்லி ..கணவரின் கண் எதிரில் இளம்பெண் கற்பழிப்பு - 4 பேர் கொண்ட கும்பல் கைது

webdunia : துப்பாக்கி முனையில் கணவர் மற்றும் மைத்துனரின் கண் எதிரே இளம்பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட  கும்பல் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கரம் டெல்லியில் மிகவும் அதிகரித்துள்ளது. சிறுமிகள் முதல் முதியவர் வரை பெண்கள் அங்கு தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாகவே டெல்லி மாறியுள்ளது.இந்நிலையில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவவம் நேற்று இரவு டெல்லி குர்கான் பகுதியில் நடந்துள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவன், மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய மூவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். குர்கான் பகுதியில் உள்ள 56வது செக்டர், பிசினஸ் பார்க் டவர் அருகே காரை நிறுத்தி அப்பெண்ணின் கணவர் கீழே இறங்கியுள்ளார்.

சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இருக்கிறது! #RIPCeylonManohar


சிலோன் மனோகர்
ஆர்.சரண் Vikatan :  "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
ஆர்.சரண்பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ...
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்...!"- மறக்கமுடியுமா இந்தப் பாடலை? இலங்கையின் 'பாப் மாஸ்ட்ரோ' என்றழைக்கப்பட்ட சிலோன் மனோகரின் குரல் 70-களில் தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே நேரத்தில் வசியப்படுத்தி வைத்திருந்த மாயக்குரல். இலங்கைக்கே உரிய பாரம்பர்ய இசையான 'பெய்லா' (Baila) என்ற இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து ஃபியூஷன் இசையை உலகுக்குத் தந்தவர்தான் சிலோன் மனோகர். இன்றும் இவரின் பெய்லாக்களைத்தான் கோவாவில் வாழும் போர்ச்சுக்கீசியர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிகிறார்கள். (பெய்லா என்ற இசைவடிவம் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தது. ஆப்பிரிக்க காஃபிர்கள் இலங்கைக்கு 1630களில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் மூலம் உருவானதுதான் பெய்லா இசை. சிங்களம் கலந்த ஆப்பிரிக்க வரிகளில் பாடுவதை பெய்லா என்று அழைத்தனர்.)

உத்தர பிரதேச அதிகாரிகள் பட்டியல் : பார்பனர்களே இனி மாவட்ட ஆட்சி தலைவர்கள் ,காவல் துறை தலைவரகள் ..

Manjai Vasanthan :
இந்துத்வா ஆட்சி ஆரிய பார்ப்பன உயர்விற்கும் நலனுக்கும் உரிய ஆட்சிதான் என்பதற்கு இதோ உத்திரபிரதேசம் உதாரணம்!

அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர்கள், பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினராகவே உள்ளனர்.
சுல்கான் சிங் (உ.பி மாநில காவல்துறை ஆணையர்),
ராஜீவ் சிங் ரோதேலா (கோரக்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
ராகேஷ் சிங் (கான்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
அமித்கிஷோர் சிங் (இடா மாவட்ட ஆட்சியாளர்),
நரேந்திர குமார் சிங் (சஹான் பூர் மாவட்ட ஆட்சியாளர்),
அரவிந்த் குமார் சிங் (பரத்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
சரத் சிங் (பிரதேப்கர் மாவட்ட ஆட்சியாளர்),
இந்திரா விகாஷ் சிங் (சாம்ளி மாவட்ட ஆட்சியாளர்),
நவ்நீத் சிங் (அமோகா மாவட்ட ஆட்சியாளர்),
நாகேந்திர பிரதாப் சிங் (சகாரன்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
விகேஷ் நாராயன் சிங் (கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியாளர்),
ராகேஷ் சிங் (முர்தாபாத் மாவட்ட ஆட்சியாளர்),
சுரேந்திர சிங் (கான்பூர் நகர் மாவட்ட ஆட்சியாளர்),
தன்ராஜ் சிங் (நொய்டா மாவட்ட ஆட்சியாளர்),

ராகுல் :இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க வேண்டும்

இந்தியாவின் 73% சொத்துக்கள் 1 சததவீதத்தினரின் கைகளில் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் ஊதிய சமநிலை, சொத்துகள் உள்ளிட்ட காரணிகளை மையமாகக் கொண்டு ஆக்ஸ்போம் எனும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2017ஆம் ஆண்டிற்கான இந்த ஆய்வை வெளியிட்ட ஆக்ஸ்போம், இதுகுறித்து பல தகவல்களையும் வெளியிட்டது.அதாவது, இந்திய மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதத்தினரிடம், நாட்டின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பில் 73 சதவீதம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

நீதிபதி லோயா .. கொலை சந்தேக நபர் அமித்ஷா ! ... நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்

ஹரீஷ் சால்வே எதிர்ப்பு
துஷ்யந்த் தவே சால்வே ஆஜராக எதிர்ப்பு tamiloneindia :நீதிபதி லோயாவின் மரண வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்- வீடியோ டெல்லி: சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது.
முகுல் ரோத்தகி ஆஜர் குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த போது 2005-ம் ஆண்டு சோராபுதீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என குற்றம்சாட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

கமல் விக்ரம் இணைந்த படம் பூஜைக்கு முன்பே விற்றது.... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ?

பூஜைக்கு முன்பே விற்பனையான கமல்-விக்ரம் படம்!மின்னம்பலம் : கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பூஜை தொடங்கும் முன்பே படத்தை வாங்கியிருக்கிறது முன்னனி நிறுவனம் ஒன்று.
கமலிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் எம். செல்வா தூங்காவனம் திரைப்படம் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். ப்ரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், நள தமயந்தி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. தற்போது கமல் தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சமூக நீதியை அழிக்க சதி! நீட் தேர்வு சமுகநீதிக்கு விழுந்த ....

சமூக நீதியை அழிக்க சதி!மின்னம்பலம் :நீட் தேர்வு போன்ற சமூகநீதி பிரச்னையிலும் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படப் போகிறதா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 6 ஆம் தேதி மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்ற முறை நடந்த நீட் தேர்வில் பல்வேறு
விதமான கேள்வித்தாள்கள் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து குறித்து இன்று (ஜனவரி 23) கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 18.1.2018 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதில் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்வித்தாள்களைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் .இது எவ்ளவுப் பெரிய கொடுமை, இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் ஹாவாலா பணம் .... மாநில விசாரணை நேர்மையாக நடக்காது!

மின்னம்பலம் :குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதே நியாயமானதாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குட்கா ஊழலில் ஹவாலா பணம்!குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கில் வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வருமான வரித் துறை கடிதத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிஜிபி அசோக்குமார் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்தக் கடிதமானது போயஸ் கார்டனில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறை சார்பில் கூறப்பட்டது.