செவ்வாய்க்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
''அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, நிச்சயமாக
நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கினோம். அதிமுக இரண்டு
அணிகளாக பிரிந்திருக்கிறது, அவர்களுடைய வாக்குகள் இரண்டாகப் பிரியும்.
திமுக அந்தத் தொகுதியில் இரண்டொருமுறை வெற்றிகளையும், பலமுறை தோல்விகளையும்
கண்டிருக்கிறது என்று கணக்கிட்டு பணியாற்றினோம்.
வெற்றி பெற்ற நேரத்திலும், தோல்வியுற்றபோதும் திமுக பெற்றிருந்த வாக்குகளை இப்போது பெற்றால் நாம் வெற்றியடைவோம் என்று எண்ணியிருந்தோம். போதாக்குறைக்கு நம்முடன் ஒரு மெகா கூட்டணியும் இருந்தது. அவர்களின் வாக்குகளை எவ்வுளவுதான் குறைத்தாலும், குறைந்தது எல்லா கட்சிகளும் சேர்ந்து 5000 வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிட்டோம்.