டெல்லியில் மாசை கட்டுப்படுத்த முடியாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின்
வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை அந்நாட்டு தூதரகம்
விலைக்கு வாங்கி வந்தது.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு மூன்று நாட்கள்
சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தார். புதுடெல்லியில்
நிலவும் மாசு அளவு குறித்து வழக்கமாக கணக்கெடுக்கும் அங்குள்ள அமெரிக்க
தூதரகம், ஒபாமாவின் வருகைக்காக முன்னதாக 1,800 ஏர் ப்யூரிஃபையர்
இயந்திரங்களை ஸ்வீடன் நிறுவனமான ப்ளூ ஏரிடமிருந்து விலைக்கு வாங்கி
பொறுத்தப்பட்டது.
சனி, 31 ஜனவரி, 2015
இளங்கோவன் மீது அதிருப்தியில் சோனியா ! சிதம்பரத்தை வெளியேறச் சொல்வதா?
ஜெயந்தி நடராஜன் வெளியேறியதை அடுத்து கருத்துக்
கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால் நல்லது என்று கூறியதற்கு காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகியதற்கு கோடானு கோடி நன்றிகள் என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால், கட்சியே விமோசனம் அடையும் என்று தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகியதற்கு கோடானு கோடி நன்றிகள் என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால், கட்சியே விமோசனம் அடையும் என்று தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன் : வேதாந்த குழுமம், அதானி குழும திட்டங்கள் போன்ற விவகாரங்களில் ராகுல் நிர்ப்பந்தம்.....
டெல்லி: சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடக்குமாறு
தன்னை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிர்ப்பந்தம் செய்ததாகவும்,
தான் ராகுல் காந்தியின் உத்தரவுகளை மதித்து நடந்ததாகவும் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி
நடராஜன் கடிதம் எழுதியுள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் கடிதத்தை ஜெயந்தி நடராஜன் சோனியாவுக்கு
அனுப்பியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்
காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்றி
வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், சோனியா காந்திக்கு அவர் கடந்த நவம்பர் மாதம் எழுதியுள்ள
கடிதத்தில், ராகுல் காந்தியின் நிர்ப்பந்தம் குறித்து கூறியுள்ளதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய
அம்சங்கள்
ராகுலின் கோரிக்கைகள்...
சுற்றுச்சூழல் தொடர்பான சில முக்கிய முடிவுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல் காந்தியிடமிருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் வந்தன.
சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல்
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின்
மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி, டெல்லியில்
உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிணமாக கிடந்தார்.
இதை மர்ம மரணமாக முதலில் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார்,
கடந்த சில நாட்களுக்கு முன் கொலை வழக்காக மாற்றினர். இது குறித்து
விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் ஓட்டல் ஊழியர்கள், சசிதரூரின் வேலைக்காரர்கள்
உள்ளிட்டோரிடம் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் சசிதரூர் மற்றும் மூத்த
பத்திரிகையாளர் நளினி சிங் ஆகியோரிடமும் கடந்த சில நாட்களுக்கு விசாரணை
நடத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி? மனிஷங்கர் அய்யர் கலைஞர் சந்திப்பு ......
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான மணிசங்கர்
அய்யர், நேற்று காலை, திடீர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து
பேசியது, 'மீண்டும் தி.மு.க., - காங்., உறவு மலருவதற்கான துவக்கம்' என, இரு
கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீரங்கம்
இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, தமிழகத்தின்
அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்த பின்னும், காங்., 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்
போட்டியிடவும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை' என்ற நிலைப்பாட்டை எடுத்து
அறிவித்தது.
சீனாவில் 3500 தியேட்டர்களில் அமீர் கானின் பிகே திரையிடப்படுகிறது
நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த பி.கே. திரைப்படம்
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. எனினும், வசூலில் சாதனை
படைத்தது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய அரசு திரைப்பட நிறுவனமான China
Film Group Corporation (CFGC) பி.கே. படத்தின் இயக்குனர் ராஜ்குமார்
ஹிரானிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்று பெய்ஜிங் சென்ற
ராஜ்குமார் அங்கு இரண்டு மாதங்களுக்குள் பி.கே. படத்தை 3500
திரையரங்குகளில் வெளியிடுவதற்கான Sino-India Mutual Film Importation
Agreement என்ற ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றுவதற்கான பணிகளில்
ஈடுபட்டார். அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட சந்தையாக
சீனா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 34 வெளிநாட்டு படங்கள் அங்கு ஹாலிவுட்
பிளாக்பஸ்டராக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஹிந்தி படங்கள் ஹாலிவுட்
பிளாக்பஸ்டர் ரெக்கார்டை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இந்த
புதிய ஒப்பந்தத்தின்படி CFGC நேரடியாக பி.கே திரைப்படத்தை இறக்குமதி செய்து
சீனாவின் திரையரங்குகளில் ஒளிபரப்புகிறது. thenee.com
வெள்ளி, 30 ஜனவரி, 2015
நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்! நயவஞ்சகம் என்றால் என்ன என்று கற்று தரும் .........
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.நீதி – நியாயத்தை மக்கள் பெறுவதற்கான கடைசி புகலிடமாகச் சித்தரிக்கப்படும் நீதித்துறையானது, வழக்குகளைக் கையாளும் முறையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் உள்ளது என்பதை ஜெயலலிதா – சசிகலா கும்பலுக்குப் பிணை வழங்கிய தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இது ஏதோ விதிவிலக்கான விவகாரமாகக் கருத முடியாது. இப்படித்தான் ஏறத்தாழ எல்லா வழக்குகளையும் நீதித்துறை கையாள்கிறது .
உங்க தாத்தா (பக்தவத்சலம்) அரிசி பதுக்கிய கதை எங்களுக்குத் தெரியாதா.. ஜெயந்தி மீது பாயும் ஈவிகேஎஸ்!
ஜெயந்தி நடராஜனின் தாத்தாவான தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம்
தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அரிசி பதுக்கியவர் என தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன், காங்கிரஸில் இருந்து
வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் கட்சியில் இருந்த
தனக்கு, உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் அளிக்கவில்லை என அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜெயந்தி நடராஜனின் விலகல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனடியாக, தனியார் தொலைக்காட்சி
ஒன்றிற்கு தொலைபேசி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் அவர், ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதல்வருமான
பக்தவத்சலத்தை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
இளங்கோவன் கூறுகையில், ‘தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது
பக்தவத்சலம் கிடங்கில் அரிசியைப் பதுக்கியவர். பெருந்தலைவர் காமராஜரின்
நற்காரியங்கள் பக்தவத்சலத்தின் ஆட்சியால் வீணானது.
1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு பக்தவத்சலமே காரணம் என்று
குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயந்தி நடராஜன் அமீத் ஷாவை சந்தித்த பின்னரே ராகுல் காந்தி மீது புகார் மழை?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பாஜக தலைவர் அமீத்
ஷாவை ஜெயந்தி நடராஜன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல்
கசிந்துள்ளது. இருப்பினும் அவரை பாஜகவில் சேர்க்க சில முக்கியத் தலைவர்கள்
ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார் ஜெயந்தி நடராஜன். இந்த
நிலையில் அவர் சமீபத்தில் அமீத் ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அமீத் ஷா, ஜெயந்தி சந்திப்பு
நடந்ததாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. எதற்காக இந்த சந்திப்பு என்பது
தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு நடந்த நிலையில் தற்போது காங்கிரஸை
விட்டு விலகியுள்ளார் ஜெயந்தி. இடம் கிடைக்காமல் அலைந்து திரியும் ஆவி போல .எதோ இப்போதைக்கு பிஜேபி என்ற
முருங்கை மரம் ஏறுகிறது . ஆட்சி மாறினால் அந்த மரம் ஏறும் . அனுபவிக்கும்
போது ராகுலை புகழ்ந்து விட்டு இப்போது புழுதி வாரி இறைப்பது கேவலாமாக
தெரியவில்லை போலும் .
நல்லம நாயுடு நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு !ஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணை அதிகாரி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரி நல்லம
நாயுடு நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு
அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தொடர்பான
விசாரணை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 16வது நாளாக
நேற்று, சசிகலா தரப்பு இறுதி வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில்,
ஜெயலலிதாவின் பினாமிகளாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும்
சித்தரிக்கப்பட்டிருப்பதாக சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
ஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணை அதிகாரி நல்லம நாயுடு நேரில் ஆஜராக கோர்ட்
உத்தரவு நல்லம்மா நாயுடுவின் அறிக்கையை தண்ணி ஊத்தி மூட ரொம்பவும் முயற்சி? பச்சையாகவே தெரியறது .
Pakistan:150 ஆசிரியைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ! தீவிரவாதிகள் தாக்குதலை சமாளிக்க ....
பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு
பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது
துப்பாக்கி எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.
பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியின்மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16&ம் தேதி தீவிர துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 151 பேர் பலியாகி விட்டனர். இதைத் தொடர்ந்து, வடமேற்கு மற்றும வடக்கு பிராந்தியங்களில் தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியின்மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16&ம் தேதி தீவிர துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 151 பேர் பலியாகி விட்டனர். இதைத் தொடர்ந்து, வடமேற்கு மற்றும வடக்கு பிராந்தியங்களில் தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
ஜெயா வழக்கில், அரசியல் பேச வேண்டாம் ! வக்கீல்களுக்கு வகுப்பெடுக்கும் நீதிபதி ?
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தொடர்பாக,
கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்டியல் வைத்து பணம் வசூலித்தது பற்றியும்,
சர்க்காரியா கமிஷன் பற்றியும் நேற்று விவாதம் நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்
முறையீட்டு மனு மீது, 16வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. சசிகலாவின்
வக்கீல் பஸந்த் வாதிட்டார்.சிகலா வக்கீல்:
வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதாவின் பணம், 32 கம்பெனிகளுக்கு
கொடுக்கப்பட்டதாக கூறும் போலீசார், அதற்கான ஆதாரங்களை, சமர்ப்பிக்கவில்லை.தி.மு.க.,
பொதுச்செயலர் அன்பழகன் வக்கீல் சரவணன்: நமது எம்.ஜி.ஆர்., நாளிதழுக்கு,
15,???, 18,??? ரூபாய் என, 'டெபாசிட்' வசூலித்தனர். இதில், 14 கோடி ரூபாய்
வசூலானது. அந்த பணத்தில், 32 கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின், 44வது பிறந்த நாளுக்கு, 'டிடி' யாக, பணம் வசூல்
செய்யப்பட்டது.நமது எம்.ஜி.ஆர் எல்லாம் சந்தா கட்டவே ஆள் இல்லை...மிஞ்சி மிஞ்சி போனா
தமிழ்நாடு முழுக்கவே அந்த நமது எம்.ஜி.ஆர் வாங்கறது இருநூற் பேறு கூட
இருக்காது...அதுல எப்படி கோடி கணக்குல பணம் வரும் ? ஒரு சந்தாவே அந்த
காலகட்டத்தில் நூறு ரூபாய் கிட்ட தான்...அதுல இவங்களுக்கு கோடி கணக்குல
பணம் வந்ததாமா?
ஸ்ரீ ரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம் ? பன்னீருக்கு வெற்றியில் பங்கு கிடையாது?
ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா, டிஜிட்டல் திரை மூலம் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான
ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம்
சட்டசபைத் தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் வளர்மதி நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதுதவிர, தி.மு.க., - பா.ஜ., - மா.கம்யூ., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும்
களத்தில் உள்ளனர். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
என்ற துடிப்புடன், தேர்தல் பணிகளை அ.தி.மு.க., வினர் துவக்கி உள்ளனர்.
தி.மு.க.,வினர், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டு களை விட, கூடுதல் ஓட்டுகளை
பெற்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன், களம் இறங்கி உள்ளனர். நான் கூட முதல்ல நினைச்சேன் இந்த அம்மா ஏதோ வசமா இந்த கும்பல்கிட்ட
மாட்டிகிச்சு..ஏதோ ஒரு ஆதாரம் செமையா சிக்கிகிச்சு அதான் அந்த கும்பல்
இந்தம்மாவ ஆட்டி வக்குதுன்னு நினைச்சேன்....இப்படி தான் ராதா அண்ணனும்
ஏமாந்து அந்தம்மாவுக்கு ஜால்ரா தட்டிகிட்டு இருந்தார் ரொம்ப நாள்
முன்னாடி....போக போக தான் தெரிஞ்சது இந்தம்மா பினாமிகளை உருவாக்கி வச்சு
இருக்குது...சசிகலா நட்டுவுடன் இருந்தால் ரெண்டும் மொத்தமா சுருட்டிகிட்டு
இந்தம்மாவ காலி பண்ணிட்டு போயிடும்னு ரெண்டையும் பிரிச்சு இந்தம்மா அது மேல
ஆதிக்கம் செலுத்திகிட்டு இருக்குன்னு...ஆமா இத்தனை ஆயிரம் கோடிய
வச்சுக்கிட்டு யாருக்காக? பணம் ஒரு போதை ..கட்டுமரம் மாதிரி கட்டிய மேல
வைக்கிற வரைக்கும் அந்த போதை தேவை படுகிறது...
வியாழன், 29 ஜனவரி, 2015
உத்தர பிரதேஷ் Police Station 100 மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் போலீஸ் அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்படாத
கட்டத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும்
எலும்கூடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
கிரிமினல் விசாரணை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு
கூடுகள் இதுவாகும். எழும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் முன்னதாக போலீஸ்
மருத்துவமனையின் ஒருபகுதியாக செயல்பட்டுவந்தது. பலஆண்டாக பூட்டப்பட்டு
இருந்த அறையில் தேவையில்லாத பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்தது. பிரேத
பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் இவையாகும். கண்டெடுக்கப்பட்ட மனித
எலும்பு கூடுகள் பத்து ஆண்டுகளாக இங்கே கிடந்துள்ளது. பிரேத பரிசோதனையை
அடுத்து இவைகள் தகனம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீராவி முருகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்! கத்தி முனையில் பட்ட பகலில் ஆசிரியரின் செயினை பிரித்த .....
சென்னை,ஜன.28 (டி.என்.எஸ்) நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை
வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த
பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன்
பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று கூறியுள்ளார்.இச்சம்பவம் பற்றி
ஆசிரியை வேலம் மேலும் கூறும்போது கத்தி முனையில் என்னிடம் செயினை பறித்த
போது எனது உடலெல்லாம் நடுங்கியது. நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்த பின்னர்,
எனது ஸ்கூட்டியையும் எடுக்க அந்த நபர் (நீராவி முருகன்) முயற்சி செய்தார்.
அப்போது நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதாலேயே ஸ்கூட்டியை விட்டுச்சென்றார்
என்றார்.நேற்று வேலத்திடம், நீராவி முருகன் செயினை பறித்த
இடத்துக்கு போலீசார் அவனை அழைத்துச்சென்றனர். அப்போது நீராவி முருகன்,
ஆசிரியை வேலத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் chennaionline.com
கிரண் பேடியிடம் இரண்டு வாக்கார் அட்டைகள்? விசாரணை நடக்கிறது
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறியதாவது:
தில்லியில் உள்ள உதய் பூங்கா முகவரியிலும், தல்கோத்ரா லேன் முகவரியிலும் கிரண் பேடிக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தெரியும். இரு வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்தை பற்றியும் நேர்மையை பற்றியும் வகுப்பெடுக்கும் கிறேன்பேடி தானே நல்ல முன்னுதாரணமாக நடக்கவேண்டாமா ? திருட்டு கோட்டாவில் மகளுக்கு மெடிகல் சீட் வாங்கிய புண்ணியவதி அல்லவா?
சுஜாதா சிங் ஏன் திடீரென்று மாற்றப்பட்டார்?சந்தேகத்துக்கு நிச்சயமாக இடம் இருக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான குழுவின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, புதிய வெளியுறவுச் செயலர் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வெளியுறவுச் செயலராகப் பணியாற்றி வந்த சுஜாதா சிங்கின் இரண்டு ஆண்டு பதவிக்காலம்,வருகிற ஆகஸ்டில்தான் நிறைவடையும். இந்த நிலையில், அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வம்: இலங்கை அகதிகள் திருப்பி அனுப்ப இன்னும் காலம் கனியவில்லை!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்வது குறித்து,
நாளை (30-ந் தேதி) நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக
அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய
வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது அகதிகள்
விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால், அது அவர்களின் விருப்பம் என்பதை
பிரதமர் அறிவார்.
எனவே, இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு
நடவடிக்கையாகவே இந்த கூட்டம் கருதப்படும். மேலும், தமிழ் அகதிகள் தங்கள்
சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதை பதிவு செய்ய
விரும்புகிறேன்.
3 லட்சம் பேர் வருகை
சீனாவிலிருந்து அதிக அளவில் மருந்துகள் இறக்குமதி ஆரோக்கியமானதல்ல?
லோகாஸ்ட் பிளாஸ்டிக், மலிவான காது குடை பஞ்சு ( ஆஸ்பத்திரி வேஸ்ட் பளிச்
பண்ணியதாம்), ஹேர் பேண்ட் (கண்டம் ரீமக்காம்) , இப்படி எல்லாவற்றிலும்
சீப் ஐடம்சை டம்ப் செய்யுதே. மருந்தெல்லாம் எக்கச்செக்க கய்யூட்டடித்து
உள்ளூர் தயாரிப்பை (IDPL லை கொலை செய்து) , பலே வேலை செய்து ,
பயமாயிருக்கப்பா. நம்ம ப்ராண்ட் பேரில் வளரும் நாடுகளுக்கு சப்ளை வேற
செய்யுதாம். யு எஸ், சைனா இரண்டிடமும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க
வேண்டும்
புதுடில்லி: மக்களின் சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அத்தியாவசிய, அடிப்படை மருந்து பொருட்களும், அங்கிருந்து தான், கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தொழில்வளம் நிறைந்த அந்த நாட்டின் தயாரிப்புகள், உலகச் சந்தைகளை நிரப்பி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளை விட, விலை மிகக்குறைவாக இருப்பதால், சீன பொருட்களுக்கு, வளரும் நாடுகளில் ஏராளமான சந்தை வாய்ப்பு உள்ளது.
புதுடில்லி: மக்களின் சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அத்தியாவசிய, அடிப்படை மருந்து பொருட்களும், அங்கிருந்து தான், கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தொழில்வளம் நிறைந்த அந்த நாட்டின் தயாரிப்புகள், உலகச் சந்தைகளை நிரப்பி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளை விட, விலை மிகக்குறைவாக இருப்பதால், சீன பொருட்களுக்கு, வளரும் நாடுகளில் ஏராளமான சந்தை வாய்ப்பு உள்ளது.
புதன், 28 ஜனவரி, 2015
மோடியின் தங்க ஆடை ! ரூ 10 லட்சம் செலவில் பகட்டான சூட்! ஒபாமாவை சந்திக்கும்போது இந்த சீப்......
புதுடெல்லி
ஒபாமாவுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரூ.10 லட்சம் செலவில்
தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்ததாக சமூக வலைத் தளங்களில் தகவல்
பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா
வந்தபோது, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்
பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘பந்த் கலா’’ எனும் கருப்பு நிறத்தினாலான
கோட்–சூட் அணிந்திருந்தார்.
அந்த ‘கோட்’டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல செய்யப்பட்ட டிசைனில்"
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’’ எனும் மோடியின் முழுப் பெயர்
வடிவமைக்கப்பட்டிருந்தது.
அன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில்
மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர்
மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.
அந்த உடையின் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோடிக்கு டாடா காட்டியபின்பு ஒட்டு மொத்த அமெரிக்க குழுவும் விழுந்து விழுந்து சிரித்திருபார்கள்? டுபாக்கூர் ஆசாமிகளும் கடைந்தெடுத்த சர்வாதிகாரர்களும் இந்த மாதிரி மேனா மினுக்கு அலங்காரங்களுக்கு ஆசைபடுபவர்கள் என்பது வரலாறு தரும் பாடம் . சீக்கிரம் இன்னும் நெறைய கூத்து பாக்க போகிறோம்
டெல்லி : ஆம் ஆத்மி முன்னணியில்! பாஜக கடும் போட்டி! காங்கிரஸ் பின்னடைவு ?
A pre-poll survey conducted by ABP News – Nielsen shows that the Aam Aadmi Party has managed to win back supporters in New Delhi
.புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், தற்போதைய நிலவரப்படி பாஜவின் செல்வாக்கு சரிந்தும், ஆம் ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பது, வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்திப்பது, கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர்வது போன்றவற்றை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
.புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், தற்போதைய நிலவரப்படி பாஜவின் செல்வாக்கு சரிந்தும், ஆம் ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பது, வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்திப்பது, கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர்வது போன்றவற்றை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சுனந்தா கொலை வழக்கு: அமர்சிங்கிடம் 2 மணி நேரம் விசாரணை
அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான அமர் சிங்கிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷிராணி பண்டாரநாயக்கா மீண்டும் தலைமை நீதியரசரானர்
இலங்கையின் முந்தைய ஆட்சிக்காலத்தில்
அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கண்டனத் தீர்மானம் மூலம் பதவிநீக்கம்
செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா,
இன்று புதன்கிழமை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.அதனையடுத்து பதவிகளை பொறுப்பேற்க உச்சநீதிமன்றம் வந்த அவரை அங்கு கூடியிருந்த சட்டத்தரணிகள் வரவேற்றார்கள்.
அவர் தனது அலுவலகத்துக்கும் சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்
ஷிராணி
பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ததற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில்
முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவரது பதவி நீக்கம் செல்லுபடியாகாது
என்றும், அதேவேளை மொஹான்பீரிஸ் அவர்கள் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டமை
சட்டவிரோதமானது என்றும் மூத்த சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான
சுமந்திரன் கூறினார்.
அதனால்தான் ஷிராணி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் அடையளமாக ஒரே ஒருநாள் மட்டும் அவர்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்க போவதாக தெரிவித்துள்ளார் . அவருக்குபின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஸ்ரீ பவன் என்ற தமிழர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என்று நம்ப படுகிறது bbc.co.uk/tamil
அதனால்தான் ஷிராணி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் அடையளமாக ஒரே ஒருநாள் மட்டும் அவர்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்க போவதாக தெரிவித்துள்ளார் . அவருக்குபின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஸ்ரீ பவன் என்ற தமிழர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என்று நம்ப படுகிறது bbc.co.uk/tamil
17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சுரேந்தருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!
டெல்லியை
அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும்
குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர். இந்த விஷயத்தில் உத்தரபிரதேச
எந்த அக்கறையும் காட்டவில்லை இதனால் காணாமல் போவோரின் எண்ணிக்கை கூடிக்
கொண்டிருந்தது. 26 வயது இளம்பெண் பாயலும் காணாமல் போக, அவரது தந்தை
ரோஷன்லால் உ.பி உயர் நீதிமன்றம் வரை சென்று, கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர்
29-ல் போலீசாரைத் தட்டி எழுப்பினார்.காணாமல்
போன பாயலின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். சுமார் ஒன்றை
வருடங்களுக்குப் பின் திடீரென அந்த செல்போன் எண் மீண்டும் இயங்கத்
தொடங்கியது.
அதைப் பயன்படுத்திய சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.ஒரு வருடத்துக்கு முன்பே பாயலை கொன்று அந்த பங்களாவில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் கோலி ஒப்புக் கொண்டான். அவர்களிடம், “அங்கு தோண்டினால் பாயலின் செருப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்” எனவும் அலட்சியமாகக் கூறியுள்ளான்.
அதைப் பயன்படுத்திய சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.ஒரு வருடத்துக்கு முன்பே பாயலை கொன்று அந்த பங்களாவில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் கோலி ஒப்புக் கொண்டான். அவர்களிடம், “அங்கு தோண்டினால் பாயலின் செருப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்” எனவும் அலட்சியமாகக் கூறியுள்ளான்.
பவானிசிங் ஆடியோவால் பரபரப்பு! அதிக ஊதியம் கேட்டு நெருக்கடி கொடுத்தாரா?
ஆடியோ உரையாடலில் இருந்து:
வழக்கறிஞர்: சார்.. வணக்கம் சார்.. பவானிசிங் ரிசைன் பண்ணிட்டாரா?
போலீஸ் அதிகாரி: இல்லீங்க சார்..
வழக்கறிஞர்: சார்.. தமிழ் இந்துவிலெல்லாம் வந்துருக்கே..
போலீஸ் அதிகாரி: அப்படிலாம் இல்லீங்க சார்.. அவர் ஏன் ரிசைன்
பண்றாரு. ஜி.ஓ. வரலேங்கிறதுக்காக மிரட்டி கிட்ருக்கார். தமிழ் இந்துவை
இப்பத்தான் படிச்சேன்.
வழக்கறிஞர்: சார்.. அவர (பவானிசிங்) கேட்டீங்களா?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகிவரும்
பவானிசிங், அதிக ஊதியம் கேட்டு ராஜினாமா நெருக்கடி கொடுத்தாரா என்பது பற்றி
பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை யில் இந்த
விவாதத்துக்கு வலு சேர்க்கும்விதமாக ஒரு ஆடியோ ‘தி இந்து'வுக்கு
கிடைத்துள்ளது.
இந்த ஆடியோ மூலம் தெரியவந்திருக்கும் உரையாடலில் பெங்களூருவைச் சேர்ந்த
வழக்கறிஞர் ஒருவரும், சொத்து குவிப்பு வழக்குடன் தொடர்புடைய தமிழக போலீஸ்
அதிகாரி ஒருவரும் பேசிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







