வியாழன், 29 ஜனவரி, 2015

கிரண் பேடியிடம் இரண்டு வாக்கார் அட்டைகள்? விசாரணை நடக்கிறது

பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறியதாவது:
தில்லியில் உள்ள உதய் பூங்கா முகவரியிலும், தல்கோத்ரா லேன் முகவரியிலும் கிரண் பேடிக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தெரியும். இரு வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்தை பற்றியும் நேர்மையை பற்றியும் வகுப்பெடுக்கும் கிறேன்பேடி தானே நல்ல முன்னுதாரணமாக நடக்கவேண்டாமா ? திருட்டு கோட்டாவில் மகளுக்கு மெடிகல் சீட் வாங்கிய புண்ணியவதி அல்லவா?

தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் உதய் பூங்கா முகவரியே குறிப்பிடப்பட்டுள்ளார். அவரிடம் உள்ள இரண்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை நீக்கம் செய்யக் கோரி அவர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அவ்வாறு அவர் விண்ணப்பம் ஏதும் அளிக்காதபட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை: