வியாழன், 29 ஜனவரி, 2015

உத்தர பிரதேஷ் Police Station 100 மண்டை ஓடுகள் கண்டெடுப்பு


உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் போலீஸ் அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்படாத கட்டத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்கூடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிமினல் விசாரணை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் இதுவாகும். எழும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் முன்னதாக போலீஸ் மருத்துவமனையின் ஒருபகுதியாக செயல்பட்டுவந்தது. பலஆண்டாக பூட்டப்பட்டு இருந்த அறையில் தேவையில்லாத பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் இவையாகும். கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் பத்து ஆண்டுகளாக இங்கே கிடந்துள்ளது. பிரேத பரிசோதனையை அடுத்து இவைகள் தகனம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எலும்பு கூடுகள் மிகவும் பழமையானது. இவை தகனம் செய்யப்படாமல் இப்படி விடப்பட்டதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடபட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கான்பூர் மற்றும் உன்னாவ் பகுதிக்கு இடையே கங்கை ஆற்றில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிதைந்த மனிதசடலங்கள் மிதப்பது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களால் அவர்களது உடல் ஆற்றில் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. dailythanthi.in

கருத்துகள் இல்லை: