சென்னை:'கட்சி தேர்தலில், புகார்கள் தொடருமானால், கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, எச்சரிக்கை
விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:லோக்சபா
தேர்தலில், தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு தோற்று
விட்டது. இனி, இங்கே இருந்து பயனில்லை; பழுத்த மரத்தைத் தேடிச் செல்லாம்
என, நடவடிக்கை எடுக்கப்பட்ட, 33 பேரில், ஒருவரை தவிர, வேறு யாரும்
எண்ணிக்கூட பார்க்கவில்லை.அந்த ஒருவரும் கூட, அங்கிருந்து வந்தவர் தான்.
அவரை, நாம் தான் துாக்கி வைத்து அமைச்சர் பதவியும் கொடுத்தோம். ஆனால், அவர்
தன் குணத்தைக் காட்டிவிட்டார். விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, கட்சி
தலைமையை தாக்கி, பதில் அளித்திருந்தார்.ஏற்கனவே ஸ்டாலின் பஜனையால் தொண்டர்கள் புட்டுகொண்டு போய் விட்டார்கள் ...இப்போது இருக்கும் கட்சி தலைவர்களையும் விரட்டி விரட்டி அடியுங்கள்
திங்கள், 21 ஜூலை, 2014
உக்ரேன் விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா குடும்பத்துடன் பலி
சுட்டு
வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக
பலியாகி விட்டார். பிறந்த நாள் கொண்டாடிய 2 நாளில் மரணம் அவரை வந்து தழுவிய
கொடுமை நேர்ந்துள்ளது.
நெதர்லாந்து
தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298
பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17,
உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில்
கடந்த 17–ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.
மக்களுக்கு நேரடி மானிய பணம் ! மத்திய அரசு காங்கிரசின் திட்டத்தை தொடர தீர்மானம் !
புதுடில்லி: 'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை
மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, மத்திய திட்ட கமிஷன் மற்றும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் அதிகாரிகள் குழு, நாடு முழுவதும், 300 மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறது. முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.ஆதார் அடையாள அட்டையை, மானியம் வழங்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தவும், மத்திய அரசு முடிவு செய்தது.கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சமையல், 'காஸ்' ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானிய தொகைகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், தவறான நபர்களின் கைகளுக்கு இந்த மானியம் சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து, மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது. அரசு மானியமாக வழங்கும் பணத்தை இதுவரை இடைதரகு முதலாளிகள்தான் கொள்ளை அடிக்கின்றனர் .இது மக்களின் பணம் , மக்களின் கைகளுக்கு நேரடியாக சேரவேண்டும் , நம்ப ஆத்தாவா இருந்தா முந்தய ஆட்சியின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காகவே இதை கிடப்பில் போட்டிருப்பார், அதிமுகாவுக்கு பாஜக எவ்வளவோ தேவல ?

ஞாயிறு, 20 ஜூலை, 2014
சதுரங்க வேட்டை ! தமிழ் ரசிகர்களுக்கு சலஞ்சிங்கான வேட்டைதான்
வித்தியாசமான முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை. சமீபமாக பல திரைப்படங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அப்படி எதிர்பார்க்காமல் ஆச்சரியப்படுத்தும் படமாகவே இருக்கிறது சதுரங்க வேட்டை.
பெரிய ஸ்டார்களை நம்பாமல் திரைக்கதையின் வேகத்தை மட்டுமே நம்பி உள்ளார் அறிமுக இயக்குனர் ஹெச்.வினோத். என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை படத்தின் இறுதிக் காட்சி வரையில் தக்க வைத்திருப்பது இயக்குனரின் அபாரத் திறமையைக் காட்டுகிறது.
வாழ்க்கையில் பணம் மட்டும் போதும் என்று நினைக்கிற மனிதன். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நினைக்கும் ஒருவன். பல பித்தலாட்டங்களை செய்து மக்களை ஏமாற்றுகிறான்.
திமுகவும் அதிமுகாவை போல் கொத்தடிமை கூடாரம்தான் ! கழக உறுப்பினர்களின் மன்றாட்ட கடிதங்களை வெளியிட்ட Sadism ?
திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு
27-6-2014 அன்றும், 29-6-2014 அன்றும் முறையே “சூட்சமத்தைப் புரிந்து
கொள்வாய்” என்ற தலைப்பிலும், “பெரியார் கூறிய கட்டுப்பாடு காத்திட; அண்ணா
வழியில் உழைப்போம் வாரீர்” என்ற தலைப்பிலும் இரண்டு உடன்பிறப்பு மடல்களை
நான் எழுதியிருந்தேன் அல்லவா; அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மூன்றாவது
கடிதம்! நாடாளுமன்றத்
தேர்தலில் கழகம் அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதும்,
இனி அவ்வளவுதான்; திராவிட முன்னேற்றக் கழகத்தால் இனி எழுந்திருக்கவே
முடியாது; கழகத்தின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் தி.மு. கழகத்தை விட்டு
விலகி விடுவார்கள்; தொண்டர்களோ கேட்கவே வேண்டியதில்லை; ஆயிரக்கணக் கில்
நம்முடைய கட்சியிலே வந்து இணைந்து விடுவார்கள் ; தி.மு. கழகத்தின் தலைமை
இனி எழுந்திருக்கவே எழுந்திருக்காது என்றெல்லாம் வழக்கம்போல் நம்முடைய
எதிரிகள் மனப்பால் குடித்தார்கள்! அவர்களுடைய கற்பனை எண்ணங்களை எல்லாம்
தூள் தூளாக்குகின்ற விதத்திலே கழகத்திலிருந்து அடி மட்டத்திலே ஆணி வேர்களாக
உள்ள ஒரு தொண்டன் கூட அசையவில்லை என்பதைப் பார்த்த பிறகுதான், அவர்கள்
யோசிக்கத் தொடங்கினார்கள்.
நான் இனி திமுகவின் கொத்தடிமை இல்லை.. நீக்கப்பட்ட முல்லைவேந்தன்
தர்மபுரி: கடந்த 15 வருடங்களாக கொத்தடிமை போல வைத்திருந்தனர். இப்போது
சுதந்திரம் கிடைத்து விட்டது என்று திமுகவிலிருந்து நிரந்தரமாக
நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த
15 ஆண்டுகளாக எனக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து எந்த கட்சி பணியையும்
செய்யவிடாமல் முடக்கி வைத்திருந்தனர். இப்போது எனக்கு நல்லதை செய்துள்ளனர்.
இனி நான் சுதந்திரமாக எங்கும் எதையும் பேசலாம்.
நான் இனி திமுகவின் கொத்தடிமை இல்லை.. நீக்கப்பட்ட முல்லைவேந்தன்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நான்,
கே.பி.ராமலிங்கம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்பட பல பேருக்கு கட்சி
நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் மீது வந்துள்ள
புகார்கள் எல்லாம் காழ்ப்புணர்ச்சி காரணமாக வந்த புகார்கள் என விளக்கம்
எழுதி கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொது
செயலாளர் அன்பழகன் கூறினார்.
அப்படி காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் கூறியிருந்தவர்கள் மீதும் அவர்கள்
நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்
தாலுகா தளி பகுதியில் கட்சியை வளர்த்தேன். இதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
சிறகை உடைத்து விட்டு பறக்க சொல்பவர்கள் அவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்தில் எதையும் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டு
கொத்தடிமைகளாக வைத்திருந்தார்கள். கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி
தேர்தல்களில் தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து
போட்டியிட்டவர்கள் மீது இந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் எல்லாம் இன்றும் தங்களை தி.மு.க.வினர் எனக் காட்டிக்கொள்கின்றனர்.
இனிமேல் மாவட்டத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை சுதந்திரமாக செய்யலாம்
என்றார் முல்லைவேந்தன்
/tamil.oneindia.in
/tamil.oneindia.in
அழகிரி : திமுகவில் என்னனவோ நடக்கிறது ! சநதி சிரிக்கும்
தி.மு.க.வில் இருந்து தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.இந்த
நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாத காரணத்தை கூறி
முன்னாள் அமைச்சர்கள் முல்லை வேந்தன், பழனி மாணிக்கம், தர்மபுரி வடக்கு
மாவட்ட செயலாளர் இன்பசேகரன் ஆகியோரை தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்
செய்து கட்சி தலைமை உத்தரவிட்டது.இந்த
நிலையில் முல்லை வேந்தன் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய
அமைச்சர் பழனி மாணிக்கம், இன்ப சேகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில்
சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பு செயலாளருமாக இருந்த மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்,
‘’முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார். ஆனால் முல்லை வேந்தன் என்ன கருத்தை சொன்னாரோ, அதே
கருத்தைத்தான் கே.பி.ராமலிங்கம் எம்.பி.யும், கூறியி ருந்தார்.
தி.மு.க.
கரை வேட்டியை கட்டிக்கொண்டு தான் கே.பி.ராமலிங்கம் பேட்டியளித்தார். ஆனால்
முல்லை வேந்தனை நீக்கிய கட்சி தலைமை கே.பி.ராமலிங்கத்தை நீக்கவில்லை. அவர்
ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பதால் அவரை நீக்க பயப்படுகின்றனர். இதனால்
தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியில்
எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும், மேலும் குழப்பத்தைத்தான்
ஏற்படுத்துமே தவிர சிக்கலை தீர்க்க உதவாது.
தி.மு.க.வில்
இன்னும் நிறைய நடக்கின்றன. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது
கூடிய விரைவில் நடக்கும்’’என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in
நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை: நீதிபதி மார்கண்டேய கட்ஜு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தான் பதவி வகித்திருந்த காலத்தில்
நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை என்று மார்கண்டேய
கட்ஜு தெரிவித்துள்ளார்.
"சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக என் அனுபவங்கள்” என்ற தலைப்பில் அவர் தனது ஃபேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
2004-05 ஆம் ஆண்டில் நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றியபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட்டதில்லை. (அதாவது நீதிபதி இடங்களைப் பூர்த்தி செய்வதில்), நீதிபதி பொறுப்பிற்கு இவரை நியமியுங்கள் என்று அவர் ஒருவரையும் பரிந்துரை செய்து எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. அதுமட்டுமல்லாது, நீதித்துறையின் செயல்பாட்டில் அவர் எந்த விதத்திலும் தலையிட்டதில்லை. நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது அவரிடமிருந்து எந்த விதமான அழுத்தமும் எனக்கு வந்ததில்லை, ஏனெனில் அவர் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பவர்” என்று அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார். அது சரி ரொம்பவே நம்புறோம் நீதிபதி அவர்களே ! வேற யார் யார் நீதி துறையில் தலையிட்டதில்லை என்று குறிப்பிட்டால் இன்னும் வசதியாக இருக்கும் , அப்பா குதிருக்குள் இல்லை

திமுகவிலிருந்து முல்லைவேந்தன் நீக்கம்; பழநிமாணிக்கத்தின் கட்சிப் பதவி பறிப்பு
தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான
முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின்
பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தருமபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பெ. இன்பசேகரன் ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு, உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மக்களவைத் தேர்தலில் தலைமையின் வேண்டுகோளை ஏற்காமல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் பலர் மீது புகார் எழுந்தது. தவறுக்கும் மேலாக தவறை புரிந்து கொண்டே தானிபட்டு போரானடி ஞானப் பெண்ணே?

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்! பெங்களூரில் பெரும் போராட்டம் !
பெங்களூரில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட
சம்பவம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. ஏராளமான பெற்றோர் வீதிகளில்
திரண்டும், போலீஸ் நிலையம் முன் குவிந்தும், குற்றவாளிகளை கைது செய்யக்
கோரி, போராட்டம் நடத்தியதால், பெங்களூரு நகரமே குலுங்கியது.
பெங்களூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த, 6 வயது சிறுமி, வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்ததால், வகுப்பு ஆசிரியை, அந்த மாணவிக்கு தண்டனை வழங்கினார். வகுப்பறையை விட்டு வெளியே சென்று, உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருக்கும்படி, அந்த மாணவியிடம், ஆசிரியை கூறியுள்ளார். தனியாக அந்த அறையில் இருந்த சிறுமியை, மாணவர்களுக்கு உடற்பயிற்சி கற்று தரும் இருவர், பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பாலியல் குற்றங்களுக்கு ஒரே தீர்வு..... முதல் வாரம் விசாரனை, குற்றம் நிருபிக்கபட்டால் எந்த குறுக்கீடுமில்லாமல் இரண்டாம் வாரம் தூக்கு அல்லது கண்டதும் சுட உத்தரவு. கற்பழிக்கும் காமுகர்களை ( மனித மிருகங்களை ) குற்றம் உறுதியானவுடன் தூக்கு தண்டனை நிறைவேற்றிவிட வேண்டும். . நமது இந்திய தண்டனை சட்டம் மற்றும் அரசியல் சாசனம் 60 ஆண்டு கால பழையது. அதை மாற்றி எழுதும் நேரம் வந்துவிட்டது. நான் ஒன்றும் emotional ' ஆக இதை எழுதவில்லை. மிகவும் ப்ராக்டிகல் ஆக யோசித்துதான் சொல்கிறேன். இது போன்ற கடுமையான தண்டனையால் தான் இது போன்ற சமூக சீர்கேடுகளை அவலங்களை தடுக்கமுடியும். பயமில்லாத சமுதாயம் மிகவும் அபாயகரமான மற்றும் பலகீனமான சமுதாயம். இப்பொழுது உள்ள நிலையை பார்த்தால் மனிதர்கள் மிருகங்களாக மாறிகொண்டிருக்கின்றார்களோ என்ற அச்சம் எழுகின்றது. தப்பு செய்பவருக்கு கடும் தண்டனை ஒன்றே தீர்வாகும்

சனி, 19 ஜூலை, 2014
ஓம் சாந்தி ஓம் படக்குழுவினரின் பணத்தை கையாடல் செய்தவர்கள் மாட்டினார்கள்
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளரிடம் மோசடி செய்ததாக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சாலிகிராமம் கண்ணய்யா தெருவைச் சேர்ந்தவர் அருமைச்சந்திரன். இவர் சிங்கப்பூரில் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். அருமைச்சந்திரன் எயிட் பாயிண்ட் எண்டர்டெய்மெயிண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஓம் சாந்தி ஓம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வருகிறார்.

BAR களில் வேலை செய்ய அதிக பெண்கள் முன் வருகிரார்கள் !
மதுபான அரங்குகளில் மது விற்பனை, மது வகைகளைப் பரிமாறுதல் ஆகிய பணிகளையும்
பெண்கள் இன்று திறம்படச் செய்துவருகிறார்கள். ஆனால், 'கால் சென்டரில் வேலை
பார்க்கிறேன்' என்றோ, 'ஐ.டி. கம்பனியில் வேலை' என்றோ, 'எம்.என்.சி. வேலை'
என்றோ பெருமையாய்ச் சொல்லிக்கொள்பவர்கள், "நான் பாரில் வேலை பார்க்கிறேன்"
என்பதை இயல்பாகச் சொல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆண்களே இதற்குத் தயங்கும்போது, பெண்களின் நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம்
என்கின்றனர் சிலர். மதுபானக் கடைகளில் செய்யப்படும் இந்தப் பணி, பார்
டெண்டிங் என்று சொல்லப்படுகிறது. மதுபானங்களைச் சரியான அளவுகளில் கலப்பது,
பரிமாறுவது, மதுப்புட்டிகளைச் சுழற்றி வித்தைகள் காட்டுவது ஆகியவை இந்தப்
பணியில் அடக்கம்.
"பார் டெண்டிங் என்பது ஒரு கலை. சரியான அளவுகளில் மதுபானங்களைக் கலப்பதைத்
தாண்டி, இதில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனி ஸ்டைல் உள்ளது"
2013 தற்கொலையில் தமிழகம் (16,927 பேர்) முதலிடம்: கடந்த வருடம் (1,34,799 பேர்) தற்கொலை செய்தவர்களில் ஆண்களே அதிகம்
2013-ம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில்,
2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரமும் (16,112), 3-வது இடத்தில் மேற்கு
வங்கமும் (14,957), 4-வது இடத்தில் ஆந்திரமும் (14,238), 5-வது இடத்தில்
கர்நாடகமும் (12,753) உள்ளன. தமிழ்நாட்டில்தான் ஹீரோ வொர்ஷிப் அதிகமாக இருகிறது இது தன்னம்பிக்கை இன்மையின் அடையாளம் ரஜினி கடவுள் ஜெயலலிதா கடவுள் ? அடிமைத்தனமே தற்கொலைக்கு நிகரானதுதான் , சட்ட சபையில் புரத்சி தலைவி அம்மா புகழ் பாடும் அரசியல்வாதிகள் மக்களை அழைத்து செல்வது இந்த தற்கொலை பாதையில்தான் Self Esteem இல்லாத சமூகமாகிவிட்டது
விமான விபத்தில் எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் 100 பேர் பலி ! ஆஸ்திரேலியா சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு பிரதிநிகள் ..
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ்
மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதிநிதிகள் சுமார் 100 பேர் பயணம் செய்ததாக
தெரியவந்துள்ளது.
20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்
ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும்
இம்மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும்
ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து
கொள்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான
பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு
விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.
யாவரும் நலம் @ நண்பேன்டா ஷூட்டிங் ஸ்பாட்!
ஓடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் கைது !
புவனேஸ்வர்: ஒடிசாமாநில மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனாக
செயல்பட்டு வருபவர் சபயாசாசி பாண்டா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும்
மேலாக தெற்கு ஒடிசாவில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 60 கொலை,
கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுவரை 25 பாதுகாப்பு
படையினரையும், 34 பொதுமக்களையும் கொன்றுள்ளார். இவரை சரண் அடையும்படி மாநில
அரசு பலமுறை விடுத்த கோரிக்கையை ஏற்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து
வந்தார். அவரை பிடிக்க துப்பு தருபவருக்கு 5 லட்சம் பரிசு
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பெர்ஹாம்பூரில் பதுங்கியிருந்த
இவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து துப்பாக்கி, 2 லட்சம், 500 கிராம் தங்கம், 10 செல்
போன்கள், 2 சிடி மற்றும் 5 பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவோ ஒழிப்பு
நடவடிக்கையில், பாண்டாவின் கைது பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. dinakaran.com
சரத் பவாருக்கு 89 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்துள்ளது !
சரத்பவார் தலைமையில் செயல்படும் நிறுவனத்துக்கு
89 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி இருப்பதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளது.
சிவசேனா செய்தி தொடர்பாளர் நீலம் கோரே மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
89 ஏக்கர் நிலம் புனேயில் ‘வசந்ததா சுகர் இன்ஸ்டிடியூட்’ என்ற கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அறக்கட்டளை தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளார். மேலும் அதற்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு 89 ஏக்கர் நிலத்தை 1 ரூபாய்க்கு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அரசு ஒதுக்கி கொடுத்து உள்ளது. அவரது வரலாறு பூரா இதுதானே நடந்திருக்கிறது! இப்ப மட்டும் எதோ புதுசா கண்டு பிடிச்ச மாதிரில்லா சொல்றான்ய்ங்க , முன்னாடி ஜுஹு பீச்சில ஏராளமான நிலம் கொடுதாய்ங்க, போதும் போதாததுக்கு இவரு கிரிகெட் வாரிய தலையா இருந்து வாரி வாரி குவிசாய்ங்க , எந்த கட்சி வந்தாலும் இவரும் இவரின் வாரிசுகளும் எப்பவுமே ஜிகிர்தண்டா ஜாலிதான்

பள்ளிகளில் முதல் உதவி பெட்டி ! தீயணைப்பு சாதனைங்கள் எல்லாம் இருக்கவேண்டுமாமே? அப்ப இதுவரை அது ஒன்றும் இல்லையா ?
பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில்
சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும்
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை
விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி
இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளிக்கூட தலைமை
ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-
* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். கும்பகோணம் தீவிபத்து ஞாபகம் வந்திடுச்சு ! டோன்ட்வொர்ரி இரண்டு வாரத்துல மறந்துடுவோம்ல?

மலேசிய விமான விபத்து: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு
மலேசிய ;நிறுவனத்தின்
எம்.எச்.-17 விமானம் நேற்று உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன்
அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்
சாட்டி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள்
கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-உக்ரைனில்
உள்ள நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இப்போது விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 300 பேர் பலியாகி உள்ளனர்.
இந்து ஆன்மீக சேவை கண்காட்சியில் வன்னியர் ஸ்டால் ! அய்யர் ஸ்டால் ! ஜாதிகளுக்கு எல்லாம் தனி தனி ஸ்டால் !
வினவு அண்ணனுக்கு
வணக்கம்,
என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.
இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.
வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல, எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.
வெள்ளி, 18 ஜூலை, 2014
வாரணாசி தேர்தல் வழக்கு ! மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !
அலகாபாத்: வாரணாசி வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி தொடரப்பட்ட
வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில்
போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அஜய்ராய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
மோடி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவரது மனைவி யசோதாபெண்ணின்
வருமானம் குறித்த தகவல்களையும், கணக்கு எண்ணையும் குறிப்பிடாமல்
விட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும்
செயல் என்று கூறியுள்ளார். இப்படிதாய்ன் முந்தி இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாதுன்னு ராஜ்நாராயணன் என்கின்ற யூரின் தெரபிஸ்ட் இதே அலகாபாத்தில் வழக்கு போட்டார் .எல்லா பயலுவளும் இது பத்தி கண்டுக்காம இருதாக , ஆனா அந்த வழக்குல ராஜநாராயணன் வெற்றி பெற்றார் இது எப்படியோ ?
நடிகை அனன்யாவின் அலப்பறையும் அடாவடி செலவும் ! நூடுல்ஸான தயாரிப்பாளர் ?
அனன்யா நடித்த 'அதிதி' படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை நிகேஷ்ராம்
தயாரித்து இருந்தார். இவரே இதில் வில்லன் கேரக்டரிலும் நடித்தார்.
அனன்யாவின் அடாவடி மற்றும் ஊதாரிதனமான செலவுகளால் ரூ.50 லட்சத்துக்கு மேல்
நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிகேஷ்ராம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இதகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
‘அதிதி’ படத்தில் நடிக்க அனன்யாவை அணுகியதும் ரூ.22 லட்சம் சம்பளம்
கேட்டார். அதை கொடுத்தோம். படப்பிடிப்புக்கு கணவர் என சொல்லப்படும்
ஆஞ்சயேலுவை அழைத்து வந்தார். இருவரும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
அறை ஒதுக்கினோம்.
பத்திரிகையாளர்களும், திரையுலகினரும் தங்களை பார்த்து விடுவர் எனச்சொல்லி
அதில் தங்க மறுத்தார்.
அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் உணவுதான் பிடிக்கும். எனவே அங்கே ரூம் போடுங்கள்
என்றார். அதையும் செய்தோம். சொந்த உபயோகத்துக்காக சொகுசு காரை எங்கள்
செலவில் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினார். கருமம் கருமம்
ஜெயலலிதா மீது டிராபிக் ராமசாமி வழக்கு ! ஆளுனரிடம் அனுமதி கோரி மனு !
ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
பதவிப்பிரமாணத்தை
மீறும் வகையில் நடந்துகொள்ளும் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி
அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்
சென்னையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்
செய்துள்ளார்.முதல்வர்
ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல்
வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.இதனை
சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு
வழங்கியிருந்ததாகவும், அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை
எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுதாம் அம்மனுவில் கூறியு
ள்ளார்.
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி
அளிக்க வேண்டும் என்று மனு அனுப்பியிருப்பதாக தமது மனுவில்
குறிப்பிட்டுள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.nakkheeran,in
பதவிப்பிரமாணத்தை
மீறும் வகையில் நடந்துகொள்ளும் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி
அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்
சென்னையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்
செய்துள்ளார்.முதல்வர்
ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல்
வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.இதனை
சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு
வழங்கியிருந்ததாகவும், அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை
எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுதாம் அம்மனுவில் கூறியு
ள்ளார்.
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி
அளிக்க வேண்டும் என்று மனு அனுப்பியிருப்பதாக தமது மனுவில்
குறிப்பிட்டுள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.nakkheeran,in துப்பரவு பணியாளர் இருவர் பலி ! செப்டிக் டான்க் சுத்தம் செய்யும் தந்தையும் மகனும் தவறி விழுந்து ...
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்
(56). சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி
வந்தார். இவரது மகன் மணிகண்டன்(27). இவர் 2ம் புலிக்காடு ஊராட்சியில்
துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முத்துப்பேட்டை
சுரேஷ் (28).நேற்று இரவு 7.30 மணிக்கு தங்கவேலு, மணிகண்டன் மற்றும் சுரேஷ்
ஆகியோர், மல்லிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள செப்டிக்
டேங்கை சுத்தம் செய்ய அதன் மூடியை திறந்தனர். அப்போது சுரேஷ்
எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்கில் விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற
தந்தையும், மகனும் உள்ளே குதித்தனர். அவர்கள் டேங்கில் மூழ்கி விட்டனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாதையில்தான் பிரதமர் மோடியின் விமானமும் பின்னால் பறந்து வந்தது !
எம்.எச்.17 மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை அறிந்ததும் மோடி பயணம் செய்த விமான பயணத்தடம் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் பறந்து வந்த நரேந்திர மோடி விமானம்!மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்ளது. உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பு கூறியுள்ளது.உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த ஏர் இந்தியா-001 விமானமும் சென்றிருக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)