சனி, 19 ஜூலை, 2014

யாவரும் நலம் @ நண்பேன்டா ஷூட்டிங் ஸ்பாட்!

உதயநிதியும், சந்தானமும் நயனதாராவும் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துவருகிறார்கள் நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வதந்தி பரவியது. சந்தானம், நயன்தாரா என தனது நெருக்கமான நண்பர்களுடன் நண்பேன்டா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதிக்கே இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்ததாம்.

ஆதாரம் இல்லாமல் பரப்பப்பட்ட இந்த வதந்தி மேலும் பரவாமல் இருக்க தனது டுவிட்டர் கணக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படத்தை போட்டு தான் நலமாக இருப்பதை உதயநிதி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியோ ‘இந்த வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. வேலை தலைக்குமேல் இருக்கிறது’ என்று கூறிவிட்டார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: