சனி, 19 ஜூலை, 2014

ஓம் சாந்தி ஓம் படக்குழுவினரின் பணத்தை கையாடல் செய்தவர்கள் மாட்டினார்கள்

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளரிடம் மோசடி செய்ததாக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 சென்னை சாலிகிராமம் கண்ணய்யா தெருவைச் சேர்ந்தவர் அருமைச்சந்திரன். இவர் சிங்கப்பூரில் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். அருமைச்சந்திரன் எயிட் பாயிண்ட் எண்டர்டெய்மெயிண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஓம் சாந்தி ஓம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வருகிறார்.

  இந்தத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொறுப்பாளராக சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (33), உதவியாளர்களாக சாலிகிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (34), ராமாபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (28) ஆகியோரை நியமித்திருந்தார். இவர்கள் மூலமாகவே அந்தத் திரைப்படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகைகள், தொழிலநுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் பாதியை அந்த மூவரும்  எடுத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
 இவ்வாறு இவர்கள் 3 பேரும் பல லட்சம் மோசடி செய்திருப்பது அருமைச்சந்திரனுக்கு சில நாள்களுக்கு முன்பு தெரிந்தது. இதையடுத்து அவர், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, ராஜசேகர், செந்தில்குமார், தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.
 மேலும் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை: