செவ்வாய், 4 மார்ச், 2014

ஸ்டாலினிடம் பேசினார் சோனியா? கூட்டணிக்கு இறுதி கட்ட முயற்சி!


சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக இறுதி கட்ட முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பிரபு. சோனியாவின் குட்புக்கில் இருப்பவரும் கூட. தமது பங்குக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பிரபுவும் முயற்சித்திருக்கிறார். ஆனால் ஸ்டாலினோ எத்தனை எத்தனை பிரச்சனைகளில் தமிழகத்தின் உணர்வை காங்கிரஸ் மதிக்கவே இல்லை.. அதனால் எப்படி கூட்டணி அமைப்பது என்று பிரபுவிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ஸ்டாலினிடம் பேசினார் சோனியா? கூட்டணிக்கு இறுதி கட்ட பகீரத முயற்சி! இதற்கு பதில் சொல்ல முடியாத பிரபு, சோனியாவின் லைனுக்குப் போய் பேசினாராம். பின்னர் பிரபுவின் போனில் இருந்தபடியே ஸ்டாலினுடன் சோனியா பேசி இருக்கிறார். சில விஷயங்கள் தமக்கு தெரியாமல் நடந்ததால் வருந்துகிறேன்.. ராகுலை கூட்டணிக்காக அனுப்புகிறேன். வலுவான கூட்டணி அமைக்கலாம் என்றெல்லாம் சோனியா கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று எஸ்கேப்பாகிவிட்டார் என்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள். இதை மு.க. ஸ்டாலின் தரப்பும் உண்மை என்கிறது.
tamil.oneindia.in

பாலியல் பலாத்காரம்: சர்ச்சைக்குரிய சோதனை முறைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறையில் மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும், பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்படும் 'இரட்டை விரல் சோதனை' (two-finger test) என்ற சர்ச்சைக்குரிய சோதனை நடைமுறைக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சுகாதார ஆராய்ச்சித் துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து நிபுணர்கள் உதவியுடன் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவச் சோதனை முறையில் திருத்தம் ஏற்படுத்தியுள்ளதோடு, மருத்துவ நடைமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளது.

தேமுதிக கூட்டணி கமிஷன் வியாபாரத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது


வாய்ப்பு பறிபோன கதாநாயகர்கள் வில்லனாக நடிப்பதுதான் தமிழ் சினிமாவின் மரபு. கிழடுதட்டிய நாயகர்கள் ரொமான்ஸ் பண்ணுவதைப் பார்த்து மக்கள் சிரிக்க ஆரம்பித்த பிறகு ‘கற்ப’ழிக்கும் பாத்திரத்துக்கு அவர்கள் தம்மை தகவமைத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய உதாரணங்கள் இங்குண்டு, சிவாஜி கணேசன் மாதிரியான விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் ஒரு கதாநாயகன் காமெடியனான சம்பவம் ஒரேயொரு முறைதான் நடந்திருக்கிறது. கிழக்கே போகும் ரயில் சுதாகர்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்.
அவருக்குப் போட்டியாக யாருமே வர விரும்பாத சூழலில் அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பது நமது கேப்டன் மட்டுமே. விஜயகாந்த் படத்துக்கு கதை பிடிப்பதைவிட கதாநாயகி பிடிப்பது பெரும் துயரமாக மாறிய சில காலத்துக்குள் அவர் சினிமாவில் நடிப்பதை கைவிட்டுவிட்டார். அது தமிழகத்துக்கு எத்தனை மகத்தான சேவை என்பதை உணராதவர்கள் நரகத்தில் தர்மபுரி படத்தை தொடர்ந்து பார்க்கும் தண்டனைக்கு ஆளாவார்கள்.
நமது சினிமா கதாநாயகர்கள் இயல்பில் கோழைகள், பேராசைக்காரர்கள் மற்றும் சோம்பேறிகள். இவர்கள் எல்லோருக்குமே ஏதாவது ஒரு விபத்தில் எம்ஜியாராகிவிட வேண்டும் எனும் அடங்காத ஆவல் உண்டு.

திண்டுக்கல் மாணவர்களின் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியை ! புனித பிரான்சிஸ் சேவியர் மேல் நிலை பள்ளி


திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முத்தழகுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி நேரம் முடிந்தது, மாணவ, மாணவிகள் வீட்டுக்கு சென்றனர். அதில் 3–ம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5–ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ் பிரகாஷ், நவீன் பிரதாப், நிர்மல், செபஸ்தியான் ஆகியோர் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு சென்றனர். இது குறித்து மாணவர்களிடம், பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது தலையில் முடி அதிகமாக வளர்ந்து இருப்பதாக கூறி, அந்த 5 பேரையும் அழைத்து தலைமை ஆசிரியை மாணவர்களின் தலைமுடியை வெட்டியதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மேலும் தலைமை ஆசிரியையின் செயலை கண்டித்துபுனித பிரான்சிஸ் சேவியர் மேல் நிலை பள்ளி   பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிமுக அங்கம் வகிக்கும் வகையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் ! அப்பதானுங்கோ வழக்குகளை ஒருவழி பண்ணலாம்


அதிமுக அங்கம் வகிக்கும் வகையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் என்று காஞ்சிபுரம் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசினார்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதல் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மாலை 4.45 மணிக்கு காஞ்சிபுரம், காமராஜர் சாலை பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா பேசியதாவது:பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டை காடா க்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்த தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்று கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன்மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

பட லொக்கேஷன் பார்க்க சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் very important

சென்னை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது லொகேஷன் பார்க்கவே சிங்கப்பூர் சென்றதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றார். உடன் அவர் மனைவியும் சென்றிருந்தார். அங்கு மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும், ஒரு மாதத்துக்கு அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சைப் பெற்றாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய விஜயகாந்த். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- ‘சகாப்தம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன்.அவனவன் கூட்டணிக்காக லோ லோன்னு அலையறான் இவரு சிங்கப்பூர் லொகேஷனுக்கு மசாஜ் செய்யபோயிட்டார் .வெளங்கிடும் தமிழ்நாடு 

திமுக 35 தொகுதிகளில் போட்டியிட திட்டம் ! திமுக கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை


 திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. இன்றே தொகுதிப் பங்கீடு முடிவாகிவிடும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கிறது. மாலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தப் படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளனர். சிதம்பரம், விழுப் புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக் கப்படும் எனத் தெரிகிறது.

பாரதிராஜாவின் இனவாதத்திற்கு கேரள அரசின் பரிசு

தமிழ் சினிமாவில், கன்னடர்கள், மலையாளிகள் ஆதிக்கம்… தமிழகத்தில் திருமலை நாயக்கர் வழிவந்த தெலுங்கர்களின் ஆதிக்கம்..
திராவிட இயக்க அரசியல் தமிழனுக்கு எதிரானது… பெரியார் சரியில்லை..
ஏன் தமிழனுக்குத் தலைமை தாங்க தமிழனே கிடைக்கிலையா.. தமிழனுக்கு அந்தத் தகுதியில்லையா?’
என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிர இனவாதம் பேசிய இயக்குநர் பாரதிராஜா வெட்கப்படும்படியாக அவரை,
கேரள ‘காங்கிரஸ்’ அரசு, திரைப்பட விருது கமிட்டி தலைவராக நியமித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கான சிறந்த மலையாளப் படம், கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க 7 பேர் அடங்கிய விருது கமிட்டிக்கு தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோதிடர்கள் கையில் கம்யூனிஸ்ட்களுக்கான 'சீட்'மங்களகரமாக துவங்கியது தேர்தல் பிரசாரம்:

அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில், எல்லாமே ஜோதிடம் மற்றும் சாஸ்திரப்படிதான் நடக்கும். அந்த வகையில், லோக்சபா தேர்தலுக்காக, நேற்றிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தை துவங்கி இருப்பது, ஜோதிடர்களின் அறிவுரைப்படியே.
காஞ்சிபுரத்தில், நேற்று மாலை, தேர்தல் பிரசாரத்தை துவங்கினார், ஜெயலலிதா. இதற்காக அவர், ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரத்துக்குச் சென்றார். காஞ்சிபுரத்தில், தேர்தல் பிரசாரம் துவங்கிய அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும், அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும், ஆங்காங்கே இருக்கும், லோக்கல் தலைவர்களை அழைத்து, தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். முன்னதாக, கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, அனைத்து வேட்பாளர்களுக்கும், தேர்தல் பிரசாரம் தொடர்பாக, சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, மார்ச் 3ம் தேதி, மாலை 3:32 மணிக்கு, சரியாக பிரசாரத்தை துவங்க வேண்டும். வேட்பாளர் பிரசாரத்தை துவங்கும்போது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்ல வேண்டும்.

ஜெயலலிதா : துரோகம் இழைத்த காங்., - தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுங்கள் !

காஞ்சிபுரம்: ''மத்தியில் உள்ள காங்., ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க, அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள்,'' என, காஞ்சிபுரத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு, மத்தியில் உள்ள காங்., அரசு செய்த துரோகங்களையும், முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் துவக்கினார். பிரசார பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த, 2011 தேர்தலில், தமிழகத்தில், குடும்ப ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தேன்; அதை நிறைவேற்றினீர்கள்.
சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மின்வெட்டு மூன்று மாதங்களில் சரி செய்யாதது முதல் துரோகம் பழைய ஓய்வூதி்ய தி்ட்டமே தொடரும் என வாக்குறுதி் அளித்துவிட்டு புதி்ய ஓய்வூதி்யத் தி்ட்டத்தை கொண்டு வந்தது இரண்டாவது துரோகம் மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணி வழங்க நீதி்மன்றம் ஆணையிட்டும் அதை மதி்க்காதது அடுத்த துரோகம் டாசுமாக்கை தி்றந்து வைத்து அனைவரையும் குடிகாரர்களாக மாற்றியது துரோகம் மீசை வைத்துள்ள வயதி்ல் மூத்த ஆண் மகனை தனது காலடியில் விழ வைப்பது ஆண்குலத்துக்கு இழைக்கும் அடுத்த துரோகம் வளர்ப்பு மகனுக்கு சிறப்பு தி்ருமணம் செய்து வைத்தபின் ஒதுக்கி தள்ளியது துரோகம் நடராசனுக்கு சொந்தமான சசியை அபகரித்து தன்னுடனேயே வைத்துக்கொண்டதும் துரோகம் வருமானவரி செலுத்தாமை வாய்தா வாங்கி வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பது துரோகம் ஃ மீதி் துரோகங்களை யாராவது தொடருங்கப்பாஃஃஃ

திங்கள், 3 மார்ச், 2014

என்.டி.திவாரி : ரோகித் சேகர் என் மகன்தான் ! ஒப்பு கொண்டார் என்.டி.திவாரி youtube

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி. தற்போது இவருக்கு 89 வயதாகிறது. ஆந்திர மாநில கவர்னராகவும், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில முதல்வராகவும் பதவி வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு உ.பி.யில் காங்கிரஸ் பெண் நிர்வாகி உஜ்வாலா சர்மா என்பவரின் மகன் ரோகித் சேகர் (34), என்.டி.திவாரிதான் என் தந்தை என்று பேட்டி அளித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரோகித் என் மகன் அல்ல என்று திவாரி திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ரோகித். எனது தந்தை யார் என்று பலர் கேட்கின்றனர். இதனால் சமூகத்தில் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சொத்துக்காக நான் இதை கூறவில்லை. உண்மையில் திவாரிதான் என் தந்தை. இதை அவர் ஏற்றுக் கொண்டால் போதும் என்று கூறியிருந்தார்.  இவா எல்லாம் முதல் மந்திரி மத்திய மந்திரி கவர்னர் தூத்தேரி !

தென்சென்னையில் குஷ்பு போட்டி? திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று முடிகிறது.


திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதிநாளில் சென்னையின் மூன்று தொகுதிகளுக்கும் புதுவைக்கும் நேர்காணல் நடக்க உள்ளது.
புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளுக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி, கண் வலி காரணமாக சிகிச்சையில் இருந்ததால் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு மாலையில் நடந்தது.
இன்று காலை வடசென்னை, மத்திய சென்னைக்கும், மாலையில் தென் சென்னை மற்றும் புதுவைக்கும் நேர்காணல் நடக்கிறது. மத்திய சென்னையில் தயாநிதி மாறனே மீண்டும் வேட்பாளராவார் எனத் தெரிகிறது. தென் சென்னையில் நடிகை குஷ்பு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளார். அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வடசென்னை தொகுதிக்கு மீண்டும் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு செய்துள்ளார். ஆனால், இம்முறை வடசென்னையில் திமுக சார்பில் புதிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. tamil.thehindu.com/

இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி ! Why and How?

டெல்லி: இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளார்களாம். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் பணக்கார இந்தியராம். சீனாவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹுருன் 2014ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் யார், யார் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்று பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 68 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பெர்க்ஷயர் ஹாத்தவேயின் வாரன் பஃபெட் 64 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 41வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தான் பணக்கார இந்தியர் ஆவார்.

திருச்சி திமுக 10 வது மாநில மாநாடு ஒரு Flash back !


2ஜி வழக்கு: கனிமொழி, ராசாவிடம் ஏப்ரல் 4-ல் சாட்சியம் பதிவு

2ஜி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சில கார்ப்பரேட் தொழிலதிபர்கள் அகியோரிடம் ஏப்ரல் 4-ல் சாட்சியம் பதிவு செய்யப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று (திங்கள் கிழமை) சாட்சியம் பதிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், பாதி அளவிலேயே இந்தப் பணி முடிந்துள்ளதாலும் சாட்சியம் பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சயினி தெரிவித்துள்ளார்.

86 வது Oscar விருது விழா: கிராவிட்டி படத்துக்கு 7 விருதுகள்



லாஸ் ஏஞ்சல்ஸ் 86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரி்ல் கோலாலமாக துவங்கியது டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு  ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
* சிறந்த துணைநடிகர் - ஜார்டு லெடோ
* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கேத்ரின்
* சிறந்த குறும்படம் -  ஹீலியம்
* சிறந்த சவுண்ட் எடிட்டிங் - கிராவிட்டி
* ஒப்பனை கலைஞர்கள் - மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன்
* சிறந்த ஒலிக்கலவை - கிராவிட்டி
* சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிராவிட்டி
* சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி
* சிறந்த துணை நடிகை - லுபிடா நியாங்
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி கிரேட் கேட்ஸ்பை
* சிறந்த அனிமேஷன் குறும்படம் - Mr.Hublot
கிரேவிட்டி என்ற ஆங்கில திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த இயக்குனர், ஆகியவற்றிற்கு 6 ஆஸ்கர் விருதுகளை பெற்றது.

தினமணி: இப்போதே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு அவசரச கால நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும்

Dinamani_logo
ஊடகங்கள் அரசியல்வாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீதித்துறையும் ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் நமது அரசியல் சட்டத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய நிர்வாகத் தலைமையும், நீதித்துறையும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் விமர்சிக்கவும் முற்படுமேயானால், அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் கருதப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க தமிழினவாதிகள் மறுக்கிறார்கள்


நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடனான தி.மு.க., தே.மு.தி.க.-வின் கூட்டணி வாய்ப்புகளை முறியடிப்பது ஜெயலலிதாவின் முதல் நோக்கம். மூவர் விடுதலைக்காகப் போராடிய – குரல் கொடுத்த அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் பெருமையையும் புகழையும் களவாடிக் கொள்வது இரண்டாவது நோக்கம். மூவர் விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு தருமபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்ற ரத்தத்தின் ரத்தங்களையும் விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்வது மூன்றாவது நோக்கம். தனது அதிரடி அறிவிப்பின் காரணமாக மூவர் விடுதலை தடைப்பட்டு விடுமோ என்ற கவலை ஜெயலலிதாவுக்கு இல்லை. ஏனென்றால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்பதும் தூக்கிலிட வேண்டும் என்பதும்தான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.
ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் அனுதாபம் – என்ற நேரெதிரான இரண்டு விசயங்களையும் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. மூவர் தூக்கு மட்டுமல்ல, ஈழப் பிரச்சினை என்பதே ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவர் விரும்பிய படியெல்லாம் ஆதாயங்களைக் கறந்து கொள்ளக் கிடைத்த காமதேனுவாகத்தான் அன்று முதல் இன்று வரை பயன்பட்டு வருகிறது. அவ்வாறு கறந்து கொடுக்கும் பணியைத் தமிழகத்தின் இனவாதிகள் செய்து வருகிறார்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.
ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனே, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், மூவரையும் தமிழக அரசு விடுவித்துவிடும் என்றும் அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

கோயம்புத்தூர்:கல்லுரி மாணவியை கற்பழித்த இரட்டை சகோதரர்கள் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்துரில் உள்ள கல்லூரில் படிக்கும் இரட்டை சகோதரர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை கற்பழித்துள்ளனர். அந்த மாணவியை அவர்கள் பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளனர். பிப்ரவரி 23-ம் தேதி அந்த மாணவியை அவர்கள் தங்களது அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு வர சொல்லி பின்னர் அவருக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்துள்ளனர். இரட்டையர்களில் ஒருவன் அந்த மாணவியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். போலீசார் அந்த செல்போனையும் அதன் தொடர்பான கம்ப்யூட்டர் ஆதரங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ அலோசனை வழங்கப்பட்டு வருகிறது.dinakaran.com

தி.மு.க. கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது.
இதை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி உருவாகும். இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக பா.ஜனதாவுடனும், காங்கிரசுடனும் பேசிக் கொண்டிருக்கிறது. எந்த பக்கம் சாய்வார் விஜயகாந்த் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. தனது அணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 40 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்களின் நேர்காணல் இன்றுடன் முடிவடைந்தது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நாளை தொடங்குகிறது. இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? -கலையரசன் (சிறப்பு கட்டுரை)


2010 thaiponkalசோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்” என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்லை.
//தமிழகத்தின்  நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாக எது இருந்தது? தைப்பொங்கல்? கிடையாது. …. சோழர் ஆட்சிக் காலத்தில் இந்திர விழாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கத்தில் விழா எடுக்கிற மரபு பல ஆண்டுகளாக சோழ நாட்டில் இருந்து வந்துள்ளது.

எழுத்தாளர் ஞாநி லோக்சபா தேர்தலில் போட்டி? ஆம் ஆத்மி வேட்பாளர் ?


சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஞாநி (ஞாநி சங்கரன்) தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி சங்கரன், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து 'தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றியும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருவதாக எழுதி வருகிறார். ஆம் ஆத்மி வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி லோக்சபா தேர்தலில் போட்டி? அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், இப்போது நடக்கப் போகும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மறுபடி நேரடி அரசியலில் ஈடுபடலாமா என்ற சிந்தனை தோன்றியிருக்கிறது. வித்தியாசமாக சிந்திக்கிறேன் என்று பாவனை பண்ணிபுட்டு பாஜக பக்கம் அல்லது ஜெயா பக்கமாக போய்விடுவீங்க என்று நம்புறோம் சார் ! என்ன பண்றது நெறைய டுபாக்குர்களை பாத்துட்டோம்ல !

பெண் இன்ஜினியரை கொலை செய்தது எப்படி? நடித்து காட்டினர் வாலிபர்கள்

சென்னை : சிறுசேரி சாப்ட்வேர் பெண் ஊழியர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்தது எப்படி என்று கைதான மே.வங்கத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் நேற்று நடித்து காட்டினர்.சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில், சில தினங்களுக்கு முன்பு சாப்ட்வேர் பெண் ஊழியர் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கு வங்க வாலிபர்கள் உஜ்ஜவ் மண்டல், உத்தவ் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கைது செய்தனர். இவர் களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி, டிஎஸ்பி வீரமணி, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், போலீஸ் காவலில் கொண்டு வரப்பட்ட 3 பேரையும் நேற்று காலை 10 மணிக்கு, சம்பவம் நடந்த சிறுசேரி சிப்காட் பகுதிக்கு அழைத்து சென்றனர்.அங்கு உமா மகேஸ்வரி நடந்து வந்தது, அவரை தாக்கி புதர் பகுதிக்கு தூக்கி சென்றது, கழுத்தை அறுத்தது, வயிற்றில் கத்தியால் குத்தியது போன்றவற்றை 3 பேரும் நடித்து காட்டினர். பலாத்காரம் செய்த இடம் மற்றும் மூவரும் தங்கியிருந்த இடம் ஆகியவற்றையும் அடையாளம் காட்டினர்.dinakaran.com

தேர்தல் நிதியுடன் ஓட்டம் பிடிக்கதே.மு.தி.க நிர்வாகிகள் திட்டம்?

கட்சி தலைமை உத்தரவுப்படி வசூலித்த, தேர்தல் நிதியுடன் அ.தி.மு.க.,விற்கு ஓட்டம் பிடிக்க, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் உட்பட, பல மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதால், விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. இலக்கு நிர்ணயம்:தே.மு.தி.க.,விற்கு, மாநிலம் முழுவதும், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கட்சி செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒவ்வொரு மாவட்ட செயலரும், லோக்சபா தேர்தல் நிதியாக 1.50 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, கட்சி தலைமை ஏற்பாட்டில் அச்சடிக்கப்பட்ட, நன்கொடை புத்தகங்கள், மாவட்ட செயலர்களிடம் வழங்கப்பட்டன. மாவட்ட செயலர்கள் மூலம், அவர்களுக்கு கீழ் உள்ள மற்ற மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், நகர, பேரூர், வட்டம், பகுதி செயலர்களுக்கு நன்கொடை புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. பொதுக்குழு கூட்டம், உளுந்தூர்பேட்டை மாநாடு என, நடந்ததால், தேர்தல் நிதி வசூலிப்பில், தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால், நிதி வசூலிப்பு தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அல்லக்கைகளும் அமைச்சர் பெருமக்களும் மக்களிடமிருந்து போட்ட ஆட்டை, சாராயம் வித்து.மம்மி அடிச்ச வேட்டை, அடுத்த கட்சி ஆளுங்களை கட்டுன மூட்டை, இதெல்லாம் பத்தாது என்று இப்போ அடுத்த கட்சி காசை லவட்டுவது சூப்பர். மம்மின்னா மம்மி தான். கொன்னுட்டார் போங்கோ..

நீலகிரியை கை கழுவுகிறார் ராஜா? : தினமலரின் சந்தேகம் ?

அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, தொகுதி பக்கம் அதிகமாக வராததால், உடன்பிறப்புகள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். நீலகிரி எம்.பி., தொகுதியில், 2009 தேர்தலில் போட்டியிட்டு, 80 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராஜா வெற்றி பெற்றார். தொலைதொடர்பு துறை அமைச்சராகவும் ஆனார். "2 ஜி' அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான புகாரால், 2010ல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
கடந்த 2011, பிப்., 1ல் கைது செய்யப்பட்டு, டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, 15 மாத சிறை வாசத்திற்கு பின், 2012, மே 15ல் ஜாமினில் வெளிவந்தார். கடந்த 2011, ஜனவரியில் நீலகிரி தொகுதிக்கு வந்தவர், 16 மாதங்களுக்கு பின், 2012, ஜூன் 10ல் தான், மீண்டும் தொகுதிக்கு வந்தார். சிறைக்கு செல்லும் முன், அமைச்சராக இருந்த போதும், இரு வாரங்களுக்கு ஒரு முறை, தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். உங்கள் செய்தியிலிருந்து ஆ. ராசா நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என தெரிந்துகொண்டோம்.