திங்கள், 3 மார்ச், 2014

தேர்தல் நிதியுடன் ஓட்டம் பிடிக்கதே.மு.தி.க நிர்வாகிகள் திட்டம்?

கட்சி தலைமை உத்தரவுப்படி வசூலித்த, தேர்தல் நிதியுடன் அ.தி.மு.க.,விற்கு ஓட்டம் பிடிக்க, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் உட்பட, பல மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதால், விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. இலக்கு நிர்ணயம்:தே.மு.தி.க.,விற்கு, மாநிலம் முழுவதும், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கட்சி செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒவ்வொரு மாவட்ட செயலரும், லோக்சபா தேர்தல் நிதியாக 1.50 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, கட்சி தலைமை ஏற்பாட்டில் அச்சடிக்கப்பட்ட, நன்கொடை புத்தகங்கள், மாவட்ட செயலர்களிடம் வழங்கப்பட்டன. மாவட்ட செயலர்கள் மூலம், அவர்களுக்கு கீழ் உள்ள மற்ற மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், நகர, பேரூர், வட்டம், பகுதி செயலர்களுக்கு நன்கொடை புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. பொதுக்குழு கூட்டம், உளுந்தூர்பேட்டை மாநாடு என, நடந்ததால், தேர்தல் நிதி வசூலிப்பில், தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால், நிதி வசூலிப்பு தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அல்லக்கைகளும் அமைச்சர் பெருமக்களும் மக்களிடமிருந்து போட்ட ஆட்டை, சாராயம் வித்து.மம்மி அடிச்ச வேட்டை, அடுத்த கட்சி ஆளுங்களை கட்டுன மூட்டை, இதெல்லாம் பத்தாது என்று இப்போ அடுத்த கட்சி காசை லவட்டுவது சூப்பர். மம்மின்னா மம்மி தான். கொன்னுட்டார் போங்கோ..
மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் வசூல் நடக்கிறது. இந்நிலையில், திருத்தணி எம்எல்.ஏ.,வும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலருமான, அருண் சுப்பிரமணியன், சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க., பக்கம் தாவினார். காப்பாற்றிக் கொள்ள..:
இவர் மீது, நில அபகரிப்பு, செக் மோசடி வழக்குகள் இருக்கும் நிலையில், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே, இந்த முடிவை, எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில், வசூலிக்கப்பட்ட தேர்தல் நிதி, இன்னும், தே.மு.தி.க., தலைமையை சென்று சேரவில்லை. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகிகளிடம், மாநில நிர்வாகிகள் கேட்டபோது, 'வசூலித்த நிதியை, உடனுக்குடன் அருண் சுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டோம்' என, கூறியுள்ளனர். ஆனால், உண்மையிலேயே, அருண் சுப்பிரமணியனிடம் அந்த நிதியை கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இழுப்பவர்களின் யோசனை:
இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள் உட்பட, பல மாவட்ட நிர்வாகிகளை அ.தி.மு.க., பக்கம் இழுப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்பாட்டில், அருண் சுப்பிரமணியன் இதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. இவர்கள், விரித்த வலையில், பல நிர்வாகிகள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் ஜெயலலிதா, ஒவ்வொரு பகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லும் போது, அவரது முன்னிலையில், தே.முதி.க., நிர்வாகிகள் இணையும் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வசூலித்து வைத்த தேர்தல் நிதியுடன், கட்சி தலைமைக்கு, 'டாடா' காட்டிவிட்டு அ.தி.மு.க., பக்கம் தாவ, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் முடிவு செய்துள்ளனர். அவர்களை, அ.திமு.க., வுக்கு இழுப்பவர்களே, இந்த யோசனையை சொல்லியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரம் என்பதால், இவ்விஷயத்தில் என்ன செய்வது என, தெரியாமல், தே.மு.தி.க., தலைமை திணறுகிறது.


- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: