புதன், 10 அக்டோபர், 2012

கோவில்களை விட கழிப்பறைகள் கட்டுவதே முக்கியம்''.. ஜெயராம் ரமேஷ்

டெல்லி: நாட்டில் கோவில்கள் கட்டுவதை விட கழிப்பறைகள் கட்டுவதே மிகவும் முக்கியமானது, அவசியமானது என்று கூறியுள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ்.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெயராம் ரமேஷ் பேசுகையில், நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளது. கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Karnataka 71 எம்.எல்.ஏக்களும் பதவி விலக ரெடி? ஊழலை மறைக்க காவிரி

பெங்களூர்: காவிரிப் பிரச்சினைக்காக எங்களது கட்சியைச் சேர்ந்த 71 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலகத் தயாராக உள்ளனர் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பரமேஷ்வர் கூறுகையில், காவிரிப் பிரச்சினையில் பாஜக அரசு எங்களிடம் முன்கூட்டியே எந்த ஆலோசனையையும் நடத்துவதில்லை. தன்னிச்சையாக அது நடந்து வருகிறது.
டெல்லிக்குப் பாஜக எம்.பிக்களுடன் போன முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய அவர் தவறி விட்டார்.
காவிரிப் பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சியின் 71 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்றார் அவர் ஊழலை மறைக்க 

கர்நாடக முதல்வரைப் பார்க்க மறுத்த பிரதமர்

 Pm Coldshoulders Shettar Over Cauve 2 நாளாக காத்திருந்து ஏமாந்தார் ஷெட்டர்!

டெல்லி வந்திருந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் 2 நாட்களாக கடுமையாக முயற்சித்தும் அவரைப் பார்க்க மறுத்து விட்டாராம் பிரதமர் மன்மோகன் சிங். தனது உத்தரவையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மதிக்காமல் தன்னிச்சையாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தியதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஷெட்டரைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2 நாட்களாக பிரதமரைப் பார்க்க கடுமையாக முயற்சித்தும் ஷெட்டரால் முடியவில்லை. இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஷெட்டர் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

மீண்டும் Yuvan Shankar and Selvaragavan

Yuvan Rejoin With Selva Again மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் செல்வராகவன்!

இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களை ரொம்பவே மயக்கிய இசையமைப்பாளர் - இயக்குநர் என்றால்... அது யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன் கூட்டணிதான்.
துள்ளுவதோ இளமையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இசை தமிழ் சினிமாவைக் கலக்கியது. இந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இப்போதும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்தார் செல்வா. இந்த இரு படங்களுமே பெரிதாக பேசப்படாமல் போயின.
அடுத்து இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.
இந்த நிலையில் தற்போது யுவனும் செல்வாவும் மீண்டும் இணைந்துள்ளனர்.

ராதிகாவின் சீரியல் கொடுமைகள்? பேசாமல் கரண்டு போயிருக்கலாம்

Tamil Serials Inject Terror Among Kids கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ராதிகா: பயந்து விழித்த குழந்தை

இரவு நேரத்தில் தொலைக்காட்சியை பார்க்கவே இப்பொழுது பயமாகத்தான் இருக்கிறது. கணவனை கொலை செய்ய துடிக்கும் மனைவி. குழந்தையை மீட்க கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் மனைவி என குடும்ப உறவுகளை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளாகவே சீரியலில் ஒளிபரப்பாகின்றன.
ராதிகாவின் செல்லமே சீரியல் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தில் அதை பார்த்துவிட்டு படுத்தால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை என்கின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.

வீரபாண்டியாருக்கு சிறையில் அருமையான வசதிகளாம்?

 அப்போ எதுக்கு சகோதரிகள் வாய்தா மேல் வாய்தா வாங்குறாங்க...?
வேலூர்: "வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை, சிறை வாசம் முற்றிலும் மாற்றி விட்டது'
வேலூர்: "வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை, சிறை வாசம் முற்றிலும் மாற்றி விட்டது' என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவருக்கு உள்ள, "எக்ஸிமா' - தோல் ஒவ்வாமை நோய், சிறையில் அவரை எட்டிக் கூட பார்க்கவில்லையாம்.
சேலம், அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில், 2012 ஜூன், 4ம் தேதி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சென்னையில் கைது செய்த போலீசார், வேலூர் சிறையில் அடைத்தனர். ஜூன், 18ம் தேதி, சேலம் மாநகர போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

சென்னையும் பிரிட்டன் போல மாறலாம்

உண்மை நிலை சென்னை வாசிகளுக்கு நன்கு தெரியும் .. திமுக ஆட்சியை விட ஆதிமுக ஆட்சியில் சென்னையின் நிலைமை படு மோசம் .. நானே நேற்று முன்தினம் மட்டும் 6 முறை கார்பரேசனுக்கு தொலை பேசியில் அழைத்து வெட்டுவான்கினியில் உள்ள குப்பைகளை அள்ளுமாறு கேட்டு கொண்டேன் , இன்றும் அந்த குப்பைகள் நடு ரோட்டில் நாறி கொண்டு தான் உள்ளன ... இதில் லண்டனுடன் வேற போட்டியா ?? அடேயப்பா தாங்காதுடா உங்க பில்டப்பு .. சைதை துரைசாமி, அம்மாக்கு பாத பூஜை செய்யவே நேரம் போதவில்லை போலும் .. மக்களின் தலைவிதி .

சென்னை: ""குறைந்த அளவு, கரியமில வாயு வெளியிடும், தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தால், சென்னையும், பிரிட்டன் போல் மாறும்,'' என, லண்டன் மேயர், டேவிட் வூட்டன் கூறினார்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அம்மா(சுமித்ரா) முன்பு கிளுகிளுப்பு காட்சியில் நடித்த மகள்

சுமித்ரா கண்முன் கிளுகிளுப்பான காட்சியில் அவரது மகள் நட்சத்திரா நடித்த காட்சி படமானது. நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா. இவர் தமிழில் ‘டூ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘வில்லேஜ் கய்ஸ் என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். இதில் சுமித்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக ஹீரோவுடன் கிளுகிளுப்பு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தளத்தில் சுமித்ராவும் இருந்ததால் அவர் கண்முன் காட்சிகள் படமாக்க இயக்குனர் தயக்கம் காட்டினார். நட்சத்திராவிடம் இது

மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!

‌டந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மேடக் நகரத்தின் இந்திரா நகரில் உள்ள மூத்த சிவில் நீதிபதி சந்திரசேகர பிரசாத் தனது வீட்டுக் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்கவே  என்னவென்று அறிய எட்டிப் பார்க்கிறார். ஒரு 12 வயதுச் சிறுவன் கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டு கீழே விழுந்து கிடக்கிறான். அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை எழுப்பி யார் என்ன என்று விசாரிக்கிறார்.
அவ‌னது பெயர் மகபூப் என்றும், நீதிபதியின் வீட்டு மதிலை ஒட்டி அமைந்துள்ள காஸி உலூம் மதரசா பள்ளியில் அரபி படிக்க அவனது பெற்றோர்கள் அவனை அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிய வருகிறது. அரபி படிக்க பிடிக்காமல் வீட்டுக்கு தப்பி ஓட இருமுறை முயன்றானாம். அப்படி தப்பி விடாமல் இருக்க அவனை இரும்புச் சங்கிலியால் கடந்த 15 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர் மதரசா நிர்வாகத்தினர். அங்கிருந்து தப்பி நீதிபதியின் குளியலறைக்குள் வந்து கிடந்தவன் தனது ஆசிரியரான கலீல் அகமது, தலைமையாசிரியர் மவுலானா பர்கத் ஆகியோர் தான் இவ்வாறு செய்தனர் என நீதிபதியிடம்  கூறியுள்ளான்.

பாலாவின் லண்டன் விசா ரிஜெக்ட்! புலன்பெயர்களால் வந்த வினை

பாலாவின் ‘பரதேசி’ லண்டன் ஆடியோ ரிலீஸூக்கு விசா ரிஜெக்ட்! “யார் பரதேசி?” சந்தேகம்!!

Viruvirupu 
தற்போது படத்தின் ஆடியோ ரிலீஸை வெளிநாடு ஒன்றில் வைத்தால்தான் படத்துக்கு ஒரு பூஸ்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடியோ ட்ராக்குகளுடன் எல்லோரும் வெளிநாடு பறந்து கொண்டிருக்கிறார்கள்.
பாலாவின் ‘பரதேசி’ படத்தின் ஆடியோ ரிலீஸையும் லண்டனில் வைத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
விசா, ரிஜெக்டட்!

356 ??? கர்நாடகா அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம்

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதும் கூட கர்நாடக மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அசோக் ஹரனஹள்ளிதான்!
தமிழகத்துக்கு அக்டோபர் 15-ந் தேதி வரை 9 ஆயிரம் கன அடிநீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 28-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் நேற்று இரவு முதல் திடீரென காவிரியில் நீர் திறப்பதை கர்நாடக அரசு நிறுத்திக் கொண்டது. இதையடுத்து கர்நாடகா அரசு மீது தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே கர்நாடகத்தின் இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கையை அம்மாநிலத்தின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அசோக் ஹரனஹள்ளியும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கிற இந்த கடும் நடவடிக்கையால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள அடுத்த கட்ட விசாரணையின் போது கர்நாடகத்துக்கு மேலும் சிக்கல் ஏற்படும். கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்போது அரசியல்சாசன சிக்கல் ஏற்படும். கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளலலாம். மேலும் கர்நாடக அரசு தொடர்ந்தும் பிடிவாதம் காட்டினால் மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிதிமீது soft ? புகாருக்கு No Action

ஸ்டாலின் – பரிதி முறுகலால் ஆனந்தமாக டிலே ஆனதா போலீஸ் ஆக்ஷன்?

Viruvirupu
தி.மு.க.வுக்குள் தாமரை இலையும் தண்ணீரும்போல இருந்துவரும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது ஒரு நில மோசடி வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.
மற்றைய தி.மு.க. வி.ஐ.பி.களுக்கு எதிராக மோசடி வழக்குகள் மழையாக கொட்டியபோது, மழையில் தூறல்கூட பரிதியில் பட்டதில்லை. அதற்கு காரணம், அவர் தி.மு.க.-வுக்குள் முறுகல் நிலையில் இருந்ததுதான் என்பதாகவும் ஒரு பேச்சு இருந்தது. (பரிதி முறுகியது, ஸ்டாலினுடன்)
காயா.. பழமா?
எப்படியோ, இப்போது, பரிதி மீது ஒரு மோசடி வழக்கு வந்து சேர்ந்திருக்கிறது. சென்னை வில்லிவாக்கத்தில் தர்ம தோப்பு என்ற அறக்கட்டளை உள்ளது. இந்த  அறக்கட்டளைக்கு சொந்தமாக அங்கு ஏழரை ஏக்கர் நிலம் உள்ளது.
அதன் ஒரு பகுதியை  பரிதி இளம்வழுதி மற்றும் அவர் உதவியாளர் கக்காரீன், வாசு, சிட்டிபாபு உள்பட 24 பேர் ஆக்கிரமித்ததாக ஒரு புகார் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது.

காவிரி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழகம் முடிவு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை நிறுத்தி விட்டதால் அம்மாநில அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவகாரம் குறித்து முதல்வர் ஜெ., அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற 
கடந்த மாதம் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட பிரதமர் ஆணையிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையும் மதிக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்தனர். இதனையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என அங்கு கடும் போராட்டம் நடந்தது. மாநிலம் தழுவிய பந்த்தும் நடந்தது.

வீட்டை விட்டு ஓடி... ரயில்வே ஸ்டேஷனில் உணவு தண்ணீரின்றி மயங்கிவிழுந்த நடிகை!

வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.
சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா.
அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.

கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றிபெற்றவர் மரணம்

ப்ளோரிடாவில் கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசினை பெரும் முன்பு திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் பெயர் எட்வர்டு ஆர்க்போல்டு வயது 32. வெள்ளிக்கிழமையன்று டெரிபீல்ட் பீச்சில் உள்ள பென் சிகெல் என்பவருக்கு சொந்தமான ஷாப்பில் நடைபெற்ற கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் அவர் பங்கேற்றார். ஆர்க்போல்டு உடன் 30க்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
பல டஜன் கரப்பான் பூச்சிகளை வேகம் வேகமாக விழுங்கினார்கள். போட்டி நேரம் முடிவடைந்த உடன் முடிவுக்காக காத்திருந்தனர். இதில் அதிக அளவில் கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆர்க்போல்டு திடீரென மரணமடைந்தார்.

Karnataka CP M :கர்நாடகா மட்டும்தான் இந்தியாவா? இல்ல.. மாண்டியா மட்டும்தான் கர்நாடகாவா?

கோலார்: காவிரி நதிநீரை தமிழகத்துக்குத் திறந்துவிடக் கூடாது என்று கன்னட அமைப்புகளுடன் இணைந்து கொண்டு கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார் கர்நாடக மார்க்சிஸ்ட் கட்சி செயலர் ஸ்ரீராம ரெட்டி.
கோலாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீராம ரெட்டி பேசியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தலைவர்கள் பேசிவருவது நாட்டின் உயரிய அரசியல் அமைப்புக்கு விடுக்கப்படுகிற பெரிய அச்சுறுத்தல். மக்களின் உணர்வுகளை அரசியல் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர். காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றன கட்சிகள்.
கர்நாடகத்தின் கோலார் மற்றும் சிக்பல்லபூரை ஒப்பிடுகையில் மாண்டியா மாவட்டத்தில் வேளாண்சாகுபடி சிறபாகவே இருக்கிறது. கோலார் மற்றும் சிக்பல்லபூர் மாவட்டங்களில் குடிக்கக் கூட நீர் இல்லை. காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் களத்தில் குதிக்கின்றன. ஆனால் ஹைதராபாத் கர்நாடகா பகுதியின் குடிநீர் பிரச்சனையையோ அல்லது மத்திய கர்நாடகாவின் குடிநீர் பிரச்சனையையோ பற்றி யாரும் பேசுவதே இல்லை.

காவிரி நீரை நேற்று அடாவடியாக முடியபின் இன்று பிரதமருடன் சந்திப்பு!

Viruvirupu
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்டக் கோரி பிரதமரிடம் கர்நாடகா இன்று புதிய மனுவை சமர்ப்பிக்க உள்ளது. நேற்று இரவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியபின், இன்றைய சந்திப்பு நடக்கவுள்ளது.
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நதிநீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் தலைமைப் பொறியாளர் விஜயகுமார், “கர்நாடக அரசின் உத்தரவுப்படி காவிரி நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் அம்பயர்களின் 'மேட்ச் பிக்சிங் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ

டெல்லி: லஞ்சம் பெற்றுக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆப்பரேஷன் வேல்ர்டு கப்" என்ற பெயரிலான இந்த காட்சியில் வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும், இலங்கை பிரீமியர் லீக் ஆட்டங்களிலும் முடிவுகளை மாற்றி அறிவிக்க இவர்கள் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றனர்.

தடையற தகர்க்க அருண்விஜய்யின் தேனி ‘டீல்’!

நடிகர் அருண்விஜய் நடித்த ‘தடையற தகர்க்க’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் அருண்விஜய். இயக்குனர் மோகன் இயக்கத்தில் ‘டீல்’ என்ற படத்தில் நடிக்கிறார் அருண்விஜய். 
டீல் படத்திற்கு பழனி முருகன் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு தேனியில் படப்பிடிப்பை துவங்கினர் டீல் படக்குழு.
அருண்விஜய் நடித்து வெற்றியடைந்த தடையற தகர்க்க படம், இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு அருண் விஜய் நடித்து வெளிவந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்: தி.மு.க - அ.தி.மு.க - காங்கிரஸ் நம்பர் ஒன் பிராடுகள்

""வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். மூன்று கட்சிகளும், "நம்பர் ஒன் பிராடுகள்,'' என, விஜயகாந்த் பேசினார். ( காணாமல் போவது அல்லது வீணாப்போவது என்று முடிவு எடுத்த பின் வாயில வந்ததெல்லாம் பேச வேண்டியதான் ? விஜயராஜா என்கின்ற விஜயகாந்த் ஜாதகத்தில் வைகோ யோகம் ரொம்ப ரொம்ப )
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயகாந்த், தன் தொகுதிக்கு அரசு அளிக்கும், மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட, குடிநீர் குழாய் பாதையை, நேற்று மதியம் திறந்து வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:கிராம மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பேன். அடிக்கடி என்னால் தொகுதிக்கு வர முடியாது. நான் அங்கிருந்தால் தான் (சென்னை), மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆர்க்கவாடி - அரும்பராம்பட்டு, பிரம்மகுண்டம் - ராவுத்தநல்லூர் இரண்டு இடங்களிலும் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்க உள்ளன.மணலூர்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இங்கு இருந்து கொண்டே, நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீர்த்து வைக்கப்படும்.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் வசூலைக் குவிக்கவில்லை but பாராட்டு குவியுது


நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றாலும் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பாக்ஸ் ஆபீசில் சொல்லிக் கொள்ளும்படி வசூலைக் குவிக்கவில்லை.
படத்தின் முதல் நாள் வசூல் வெறும் ரூ 2.80 கோடிதான் என்பதில் தயாரிப்பாளர் பால்கி, அவர் மனைவியும் படத்தின் இயக்குநருமான கவுரி ஷிண்டேவுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது
மும்பை மற்றும் வட இந்தியாவில் இந்தப் படத்துக்கு பகல் காட்சிகளில் 20 சதவீத கூட்டமும், மாலை மற்றும் இரவுக் காட்சிகளுக்கு 35 சதவீத கூட்டமும் மட்டுமே வருகிறதாம்.
மல்டிப்ளெக்ஸ்களில் ஓரளவு வசூல் உள்ளதாம். ஆனால் சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றைத் திரையரங்குகளில் நிலைமை படுமோசமாக உள்ளதாம்.
தமிழைப் பொருத்தவரை நகர்ப்புறங்களில் மட்டும்தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சிறப்பாக இருந்தாலும், படத்தைக் காப்பாற்றுவது சில நிமிடங்கள் மட்டுமே வரும் அஜீத்தான்.
படத்தின் பெரிய ஹீரோ இல்லாத குறையை அவரின் சில நிமிட தோற்றம் ஈடுகட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 8 அக்டோபர், 2012

தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவதை திடீரென நிறுத்தியது கர்நாடகம்! Contempt of Court

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை மீறும் வகையில் மாக இன்று இரவு 8 மணி முதல் திடீரென தண்ணீர் திறப்பை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு.
சம்பா பயிரைக் காக்கும் வகையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 2 டிஎம்சி நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து ஆரம்பத்தில் பிரதமர் கமுக்கமாக இருந்தார். பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது பிரதமர் அலுவலகத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!

அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்
நான்காண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மின்வெட்டு பிரச்சினை இன்று பூதாகரமாகி, தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில் நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு சிறுதொழில்களின் உற்பத்தியும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும் அடியோடு முடங்கிப் போயுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வேலையிழந்துள்ளனர். மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தினமும் 12 மணிநேர மின்தடையால் அச்சுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தினமும் 15 கோடி ரூபா அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டறைகளுக்குப் பூட்டு போட்டு சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை என்கின்றனர், நவீன விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர். கோவை – திருப்பூர் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 மணிநேர மின்வெட்டினால் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், என்ஜினியரிங் ஆலைகள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கிறார்கள். 3 ஷிப்ட்டுக்குப் பதிலாக ஒரு ஷிப்ட்டில்தான் ஆலைகள் இயங்குவதாகவும், உற்பத்தி பாதிப்பால் தமிழகம் ஜவுளிச் சந்தையை இழந்து நிற்கிறது என்றும் புலம்புகிறார்,தென்னிந்திய மில் உரிமையாளர் சங்கத் தலைவர்.

சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

“இன்றைய தேதியில் ரூபாய் நூறு கோடி வசூலை குறுகிய காலத்தில் எட்டும் நடிகர் யார்? சந்தேகமேயில்லாமல் சல்மான்கான்தான். இந்தி நடிகரான இவரது ‘வாண்டட்’, ‘தபங்’, ‘ரெடி’, ‘பாடிகாட்’ ஆகிய படங்கள் அனைத்துமே நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியவை. அதுவும் இந்த ஆண்டு ரம்ஜானை ஒட்டி வெளியான ‘ஏக் தா டைகர்’ இந்திப் படம், முதல் ஐந்து நாட்களிலேயே இந்த நூறு கோடி ரூபாய் வசூலை கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. எனவே அவர்தான் இன்றைய தேதியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ” என ஏகமனதாக இந்தி(ய) பத்திரிகைகள் அனைத்தும் எழுதுகின்றன, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. இன்றைய தேதியில் ஒரு படத்துக்காக அவர் வாங்கும் தொகை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்.

Karnataka கோயிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடைமந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.இந்த நன்கொடை மூலம் சர்வஜ்ஜ மண்டபம் பின்புற முள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்’’ என்று  கூறப்பட்டுள்ளது