சனி, 7 ஜூன், 2025

அடூர் கோபாலகிருஷ்ணன்: மணி ரத்தினத்தால் ஒரு தமிழ்ப்படத்தை எடுக்கவே முடியாது!

 Rebel Ravi    மணிரத்னம் எனும் ஊதிப் பெருக்கப்பட்ட சநாதன மாய பிம்பம் சுக்கு நூறாய் நொறுக்கப்பட்டது இந்த நூற்ற்றாண்டின் ஆகப்பெரிய நிகழ்வு. 
இதற்கு முன்னர் இன்னொரு மனுஸ்மிருதி வெறியன் ஷங்கர் செருப்படி பட்டு ஒழிந்ததும் காலத்தின் கட்டாயம். ஒரு சாதாரண வணிக சினிமாவின் சுமாரான இயக்குநரை ஏதோ கிறிஸ்டோபர் நோலன், இன்னாரிட்டு, அல்மொடவர், பொலான்ஸ்கி ரேஞ்சுக்கு உயர்த்திய பாமின் மீடியாவால், இன்றைய சோசல் மீடியா சுனாமியை எதிர் கொள்ள இயலவில்லை. 
தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள் மணியை. 
அவர் எடுத்த எல்லாப் படங்களுமே வெகு சுமாரானவை தான். காவியப்புந்தையெல்லாம் இல்லை. 
என்ன அழகாக இருக்கும்!
அவ்வளவே: அவை மேக்கப் போடப்பட்ட சவங்கள். 

வெள்ளி, 6 ஜூன், 2025

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

 தேசம்  நெட் - arulmolivarman  : நேற்றைய தினம் வவுனியாவில் கணவனால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியையும் கர்ப்பணித் தாயுமான சொர்ணலதா விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
இந்தக் கொலைச் சம்பவம் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் குடும்ப வன்முறையின் உச்ச கட்டமாக இதனைப் பார்க்க வேண்டும். கொலையான பெண் தவறு இழைத்தாரா?
அல்லது இழைக்கவில்லையா? என்ற விவாதத்திற்கு அப்பால் அப்பெண்ணை கொலை செய்யும் அதிகாரம் கொலை செய்த ரா ஜூட் என்ற கணவனுக்கு இல்லை.

விடுதலை ராஜேந்திரன் : ராமதாஸ்- குருமூர்த்தி சந்திப்பு: அதிமுக போல பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது!

 மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசுவதன் மூலம் அதிமுகவைப் போல பாமகவும் பாஜக பிடிக்குள் போகப் போகிறது என திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் எச்சரித்துள்ளார். Ramadoss-Gurumoorthy Meeting
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் விடுதலை க.ராசேந்திரன் கூறியுள்ளதாவது: பாமகவை மருத்துவர் ராமதாஸ் துவக்கிய போது பார்ப்பனர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார்.
இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் தர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

 இந்து தமிழ் : நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் தர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

வியாழன், 5 ஜூன், 2025

மனைவி சுவர்ணலதாவின் தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் சுகிர்தரன்! வவுனியாவில் ஏனிந்த கொடூரம்

 Vijaya Baskaran  :  ஏனிந்த கொலை வெறி
வன்னியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் மனைவியை வெட்டிக் கொலை செய்து தலையோடு பொலிசில் சரண் அடைந்துள்ளார்.இந்தக் கொலைக்கு மனைவியின் தவறான உறவு என ஊடக செய்திகள் கூறுகின்றன. இதில் உண்மை பொய் தெரியாது.
ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரான பரப்புரைகளில் பாலியல் தவறுகள் முன் வைக்கப்படுகிறது.இது மிகவும் இலகுவானதும் மலினமான பரப்புரைகளாகும்.இந்த சமூகம் ஒழுக்கம் என்ற விசயத்தில் ஒரு பெண்ணில் மட்டுமே பார்க்கிறது. பெண்ணிடமே எதிர்பார்க்கிறது.ஆண்களின் தவறுகளை கணக்கெடுப்பதே இல்லை. இதைவிட பெண்களை பெண்களே தவறாக பார்ப்பதும் விமர்சனம் பண்ணுவதும் மகா கொடுமை.
ஒரு ஆணைக்கூட கெட்டவனாக காட்ட பெண் தொடர்புகளை இந்த சமூகம் கட்டவிழ்த்துவிடுகிறது.அங்கேயும் பெண்தான் பலிக்கடா ஆகிறாள்

மஹுவா மொய்த்ரா (TMC MP) திருமணம் பிஜு ஜனதா முன்னாள் எம்பி மிஸ்ராவை கரம்பிடித்தார்!

 மாலைமலர் : மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
 இவருக்கு 50 வயதாகிறது. 50 வயதான மஹுவா மொய்த்ரா 65 வயதான பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாக தெரிகிறது.

தைலாபுரத்தில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு! ஆடிட்டர் குருமூர்த்தியின் பாஜக டீல் சக்ஸஸ்

 hindutamil.in : விழுப்புரம்: பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. 
அதிகார மோதல், தந்தை - மகன் உறவில் விரிசல் என்ற இந்த மோதல் போக்கு பாமக மூத்த நிர்வாகிகள் தொட்டு கடைநிலை தொண்டர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆதங்கத்தை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை, 7 நாட்டவருக்கு கட்டுப்பாடு - டிரம்ப் புதிய உத்தரவு என்ன?

 BBC News தமிழ்  : பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது.

பெங்களூர் கிரிக்கெட் மைதானம் 11 பேர் உயிரிழப்பு மேலும் பலர் மருத்துவமனையில்!

 தினகரன் -Arun Kumar : கர்நாடகா: சோகத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்து விட்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 
பெங்களூரில் துயரமான நிகழ்வு நடந்துள்ளது; 
இந்த விபத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். “மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அரசு நிறைவேற்றும்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பை வென்றுள்ளது. இதனையடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் பெரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதன், 4 ஜூன், 2025

தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

 தினமலர் :  தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன்,52, என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுத்த நபர் மீது புகார் அளிக்க எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த கலைஞரின் ஆட்சிக்கு நிகராக இந்தியாவில் எந்த ஆட்சியும் கிடையாது HBD 102 Kalaingar

May be a graphic of 2 people and text that says 'கலைகா'

 ராதா மனோகர் : கலைஞர் எத்தனையோ இமாலய வெற்றிகளை குவித்திருந்தாலும்  அவற்றை எல்லாம் மறக்கடிக்கின்ற அளவுக்கு படு மோசமான தோல்விகளையும் கண்டிருக்கிறார்.
தொடர்ந்து ஒரு மணிக்கூறுதானும் அவர் நிம்மதியாக இருந்திருக்கவில்லை என்றுதான்  என் உள்ளுணர்வு எப்போதும் கூறுகிறது!
அந்த அளவுக்கு அளவு கடந்த சுமை அவர் தலைமேல் எப்போதும் இருந்திருக்கிறது.
எந்த மனிதனாலும் சுமக்க முடியாத சுமை!
எப்போதும் ஒரே நேரத்தில் பல எதிரிகளோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதிக்கொண்டே அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட முடியுமா என்று தருணம் பார்த்து காய்களை நகர்த்திய ராஜதந்திரி!
இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரி கலைஞர்தான்!  
இளமையிலேயே திரைத்துறையில் யாரும் சாதிக்காத அளவு பிரமாண்டமான வெற்றிகளை தொடர்ந்து குவித்தவர் !
அந்த வெற்றிகளை ரசித்து கொண்டே இனிமையாக அவர் வாழ்ந்திருக்கலாம்.

கைதடி கிருஷாந்தி கொலை வழக்கு - 5 ராணுவத்தினரின் மரண தண்டனை- மன்னிப்பு வழங்க நீதிமன்றம் மறுப்பு

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+

 hiru news : கிருஷாந்தி கொலை வழக்கு - மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனு ஏகமனதாக நிராகரிப்பு
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ கோப்ரல் ஒருவர் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஏகமனதாக நிராகரித்துள்ளது. 

செவ்வாய், 3 ஜூன், 2025

இந்தியாவின் தேசிய மொழி எது? - ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்!

 minnambalam.com  - Selvam : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைத்து ஆதரவு கோர ஏழு எம்.பி-க்கள் கொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதில், கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஷ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் விளக்கி வருகின்றனர்.

மனைவியின் (சுவர்ணலதா) தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் சுகிர்தரன் - வவுனியா!

 jaffnamuslim.com : கர்ப்பிணியான மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
இன்று -03-  புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

திங்கள், 2 ஜூன், 2025

ரஷ்யாவின் 40 போர் விமானங்களை அழித்த உக்ரைன்… அமைதி பேச்சுவார்த்தை எடுபடுமா?

 minnambalam.com  - christopher  : உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாடுகளுக்கு பிறகு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாட்டைச் சேர்ந்த தலைவர்கள் துருக்கியில் இன்று (ஜூன் 2) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். is russia ukraine peace talks will lead ceasfire
வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்கும், அதன் அண்டை நாடான உக்ரைன் நாட்டிற்கும் இடையே கடந்த 2022ஆம் தேதி போர் தொடங்கியது. மூன்றாடுகளுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் இடையே தீவிர தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இரு நாடுகளும் போரை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் : துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ !

 hindutamil.in : சென்னை: “பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, 
அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், 
உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, 
அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். 
துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெங்களூரு: ஆட்டோ ஓட்டுனரை செருப்பால் அடித்த வடமாநில பெண் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்

 மாலைமலர் : “கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் வடமாநில இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
இதனையடுத்து, அவர், ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இளம்பெண் தனது செருப்பை கழட்டி ஆட்டோ டிரைவரை தாக்கினார். மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது.
இதை ஆட்டோ டிரைவரின் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.,

நீங்கள் சிந்து நதியை தடுத்தால் பிரம்மா புத்திராவை நாங்கள் தடுப்போம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீன எச்சரிக்கை

 tamil.oneindia.com  - Vigneshkumar : பெய்ஜிங்: பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருந்தது. 
இதற்கிடையே பாகிஸ்தானுக்குப் போகும் நீரை இந்தியா நிறுத்தினால்.. 
இந்தியாவுக்குப் போகும் நீரைச் சீனாவும் நிறுத்தும் எனச் சீனாவின் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ்  கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

திமுக கூட்டணியில் தேமுதிக? கொள்ளிக்கட்டையை எடுத்து சொருகி கொள்ள திமுக ஆயத்தம்?

 minnambalam.com : திமுக கூட்டணியில் தேமுதிக? அதிமுகவுக்கு 'நோஸ் கட்' கொடுத்த பிரேமலதா! 
ஸ்டாலின் தந்த சிக்னல்?
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்த கருத்தை வரவேற்காமல், எங்களது அரசியல் நிலைப்பாடும் தேர்தலை நோக்கித்தான் இருக்கும்; விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்த திமுகவுக்கு நன்றி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வே: மக்கள் அதிர்ச்சி

 hindutamil.in :  சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் புதிய, இரட்டை பாதை என 9 திட்​டங்​களுக்கு மத்​திய பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது. 
இது, மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பட்​ஜெட்டில் தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 
இதன்படி, தெற்கு ரயில்​வே​யில் தமிழகம், கேரளத்​தில் நடை​பெறும் 12 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்​வேறு காரணங்​களை முன்​வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​து.

ஞாயிறு, 1 ஜூன், 2025

மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது சாதிவெறி கும்பல் தாக்குதல் -உத்தர பிரதேசம்

 மாலை மலர் : தலித் குடும்பம் மண்டபத்தில் திருமணம் நடத்துவதா என கொந்தளித்த சாதிவெறி பிடித்த கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் வெள்ளிக்கிழமை இரவு திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தில் திருமணத்தை நடத்துவீர்களா என்று கேட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஆளும் கட்சிக்குள் பூகம்பம்!

May be an image of 1 person and text that says 'SHORT BREAKING SHORT NEWS அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைக்கும் சாத்தியம்! ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..! 01.06.2025'

 ilakkiyainfo.com : ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் உலாவ, பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில கிசு கிசுக்கள் வெளிவருகிறது.
அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்ற நிலையில், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாகவும் ஆளும் கட்சி தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி முதல் டிரம்ப் விதித்திருந்த அனைத்து சுங்க வரிகளும் செல்லாது என்று - நீதிமன்றம்

 ஸ்ரீதர் சுப்பிரமணியம்  ஜனவரியில் பதவியேற்றது முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது தன்னிச்சையாக கடுமையான சுங்க வரிகளை விதித்து வந்தார். 
தனது ஐந்து வயது மூளைக்குத் தோன்றிய வரிகளைப் போட்டு 'உனக்கு 100%, அவனுக்கு 150%, இவனுக்கு 175%' என்று விளையாடி வந்தார். அந்த விளையாட்டுகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் உற்பத்தியை பாதித்தன. இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளை சரிய வைத்தன. 
அவரின் விளையாட்டு முடிவுக்கு வரும் போலத் தெரிகிறது. 
அந்த சுங்க வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பதியப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வந்திருக்கிறது. 
ஜனவரி முதல் டிரம்ப் விதித்திருந்த அனைத்து சுங்க வரிகளும் செல்லாது என்று பன்னாட்டு வர்த்தகத்துக்கான அமெரிக்க ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

மதுரையில் மு.க.அழகிரி வீட்டில் முதல்வர் ஸ்டாலின்

hindutamil.in : மதுரை: மதுரையில் தன் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். 
இதன்பின், மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் அருகிலுள்ள மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்று மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மதுரை மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை செய்தார்.

யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நாள் ஜூன் 1, 1981. இன்று ஜூன் 1, 2025 ..சரியாக 44 நான்கு வருடங்களுக்கு முன்பு

May be an image of monument
May be an image of 1 person

 ராதா மனோகர் : யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நாள் ஜூன் 1, 1981.
இன்று ஜூன் 1, 2025 ..சரியாக 44 நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த அக்கிரமம்.
மக்கள் படிக்கிறார்களே என்று ஒரு சிறு கூட்டம் வெறுப்புற்றது 
இவர்களை படிக்க விடலாமா என்று அந்த சிறு கூட்டம் கருதியது 
அவர்கள் விருப்பப்படியே படித்தவர்கள் நிரம்பிய சமூகம் பின்பு தற்குறிகள் நிரம்பிய சமூகமாக மாறியது.
விளைவு? 
கல்வியை தூக்கி எறிந்தால் என்ன நடக்கும் என்பதை பெரிய விலை கொடுத்து எல்லோரும் படித்து கொண்டார்கள்.
நூலக தீக்கிரை என்பது வெறும் ஒரு சம்பவம் என்று கடந்து போகமுடியாது.
எந்த குற்றங்களுக்கும் பல பக்கங்கள் இருக்கும். வெறுமையாக எதிரி எதிரி என்று சிங்கள இனத்தை மட்டும் சுட்டி காட்டி யாரும் தப்பி விடமுடியாது?