மின்னம்பலம் : திமுகவின்
சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி, இன்று
(பிப்ரவரி 6) சேலத்துக்கு வந்தார். முதல் வேலையாக புதிய பஸ் நிலையம் அருகே
இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
சகிதமாகச் சென்று மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியை தேர்தல் பிரிவு
செயலாளரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா
புறக்கணித்துவிட்டார்.வியாழன், 6 பிப்ரவரி, 2020
வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்ற செல்வகணபதி: சேலம் திருப்பம்!
மின்னம்பலம் : திமுகவின்
சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி, இன்று
(பிப்ரவரி 6) சேலத்துக்கு வந்தார். முதல் வேலையாக புதிய பஸ் நிலையம் அருகே
இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
சகிதமாகச் சென்று மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியை தேர்தல் பிரிவு
செயலாளரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா
புறக்கணித்துவிட்டார்.சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்
மின்னம்பலம் :
சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகளை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.சிஏஏ, என்.பி.ஆரை ஆதரிப்பதாக நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பீதி ஏற்படுத்தப்பட்டதாகவும், சில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு தீவிரமாக யோசிக்க வேண்டும். எஃப்ஐஆர் போட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் எனவும் எச்சரித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் பாஜகவின் குரலாக ஒலிப்பதாக குற்றம்சாட்டினர்.
நடிகர் விஜய் ! 38 இடங்கள்; ரூ.300 கோடி ஆவணங்கள்; ரூ.77 கோடி ரொக்கம்!' - வருமான வரித்துறை சொல்வதென்ன? #ITRAID
பிந்தய செய்தி நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் கைப்பற்ற படவில்லை!
vikatan.com - ராம் பிரசாத் : வருமான வரித்துறை சோதனை<!
பிரபல
நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும்
அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா
தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில்,
நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
வரி ஏய்ப்புப் புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம், 'பிகில்'. நடிகர்
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படம், பாக்ஸ்
ஆபீஸ் ஹிட் அடித்தது. பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச்
சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய்
மற்றும் ஃபைனான்ஷியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான
வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.

வரித்துறையினர் சோதனையில் இறங்கினர். 9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100 சதவீதம் உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது - முக ஸ்டாலின்
மாலைமலர் : சென்னை:
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10-ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
2015 -16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம்
என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில்
பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது
என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால்,
2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும், 2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல்
3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை
விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது
என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.சீமானுக்கும் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பணபரிமாற்றம்?

Shankar A : ·
திமுக மீது அதிபர் அண்ணனின் தாக்குதல்கள் இனி உக்கிரமாக இருக்கும்.
8 நாட்களுக்கு முன்னதாக, முதல்வரை அவரது வீட்டில் நள்ளிரவில் தனியாக சந்தித்துள்ளார் அதிபர் சீமான். நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் தரப்பில் என்ன பதில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்றும், தலைமைச் செயலகத்தில் அதிபர் அண்ணன் முதல்வரை சந்திக்கிறார். பகலில் பார்த்து சந்தித்து விட்டு, கோரிக்கை வைத்தது தொடர்பாக பேட்டியளிப்பது நல்லதுதான். நள்ளிரவில் ஏன் சந்தித்தார் என்று அதிபர் விளக்குவாரா
3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு பாதிப்பு.... கொரோனா வைரஸ்: ஜப்பான் துறைமுகத்தில்
BBC : ஜப்பானின் யுகோஹாமா
துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட
பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
கப்பலில் இருந்த 80 வயது ஹாங்காங் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல் நலம் குன்றியதை அடுத்து பரிசோதனைகள் தொடங்கின.
3600 பேருடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்துள்ள இன்னொரு சொகுசு கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுமார் 1.8 கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோடிகளில் ஊழல்: ராதாரவிக்கு எதிராக சின்மயி சபதம்!
minnamblam : நடிகர்கள்
சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், இயக்குநர்கள் சங்கத்
தேர்தல், ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் எனத் திரைத் துறை சார்ந்து
நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கிடையே
நடைபெற்றவைதாம். இவற்றுக்குச் சற்றும் குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது,
திரைத் துறையின் டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல். இதில், பல
வருடங்களாகத் தலைமைப் பொறுப்பேற்று வரும் ராதாரவிக்கு எதிராக, பின்னணிப்
பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் புகழ்பெற்ற பாடகி சின்மயி
போட்டியிட்டார். ஆனால், திடீரென சின்மயியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு,
போட்டியின்றி ராதாரவி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.
சீனா .. கொரோனா.. 570 பேர் உயிரிழப்பு .. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் ...
Shyamsundar /tamil.oneindia.com :
- பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான
சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி
எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா
வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல்
மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து
வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு
வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து
சோதனை செய்து வருகிறார்கள்.
வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆனால் இத்தனை செய்தும் இந்த வைரஸ் வெளியே சென்றுவிட்டது என்றுதான் கூற
வேண்டும்.
பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
தினத்தந்தி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது.
பதவி பறிபோய்விடும் என்பது வதந்தி, ஆதாரம் இதோ!’- பெரியகோயில் சென்டிமென்ட் குறித்து தங்கம் தென்னரசு
vikatan.com - கு. ராமகிருஷ்ணன் - ம.அரவிந்த் :
1997-ல், கலைஞர்
மட்டுமல்ல, பல அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் சென்று
வந்தார்கள். அவர்கள் எவரும் பதவியை இழக்கவில்லை. மீதியிருந்த
ஆட்சிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்தார்கள்.
உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக
நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வருகையால் தஞ்சை நகரமே விழாக்
கோலத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இவ்விழாவில் அ.தி.மு.க அமைச்சர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இது தஞ்சை
மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிர மற்ற
அமைச்சர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.டெல்லி பெரியார் படத்தை நீக்ககோரி பிஜேபினர் பகுஜன் திராவிட கட்சியினர்களிடம் வாக்குவாதம்..
BBCI Bahujan Broadcasting Company India :
2020 புதுடெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது பகுஜன் திராவிட கட்சி திரு. ராஜபீர் அவர்களுக்கு சமத்துவ தூதர் ஜீவன் குமார் மள்ளா வாக்கு சேகரிக்கும் பொது உயர் சாதியை சேர்ந்த பிஜேபியினர்(BJP) தந்தை பெரியார் அவர்களின் புகைப்படத்தை நீக்கக்கோரி பிரச்சனை பண்ணினார்கள் ஆனால் பகுஜன் திராவிட கட்சி சகோதரர்கள் தந்தை பெரியார் புகைப்படத்தை நீக்க முடியாது என்றும் பகுஜன் திராவிட கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிஜேபியினர் சிதறி ஓடினர்.. இதை கண்ட பொதுமக்கள் பகுஜன் திராவிட கட்சியின் நபர்களை வெகுவாக பாராட்டினார்கள்...
BBCi செய்திப்பிரிவு .. புது டெல்லி...
11 வயது குழந்தையை வகுப்பறையில் வைத்து விசாரணை செய்த பாசிச போலீஸ் கர்நாடக
ram gopal : கடந்த
4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக்
கொண்டே இருக்கிறது. தொடர்
செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில்
நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது
தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ
என எண்ணுகையில்....என் பெரிய குழந்தை வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, 11. காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 &6 ஆம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம், 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய். இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு "மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்" விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு "தற்காலிக விசாரணை ரூம்" என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ஜட்ஜ் அய்யா விடுப்பில் இருக்கிறார்.
எம்எல்ஏ வேட்பாளரை பிரசாந்த் கிஷோர்தான் முடிவு செய்வாரா? திமுகவினர் கலக்கம்!
nakkheeran.in - ஆதனூர் சோழன் :
திமுகவின்
சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் உதவியை
திமுக நாடியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
70 ஆண்டு வரலாறைக் கொண்ட மாபெரும் இயக்கமான
திமுக, தனது தொண்டர்கள் பலத்தையும், அமைப்புகளின் பலத்தையும், கட்சி
நிர்வாகிகளின் தேர்தல் வேலையையும் நம்பாமல் ஒரு கார்பரேட் ஆளை எப்படி
நம்புகிறது என்று திமுகவினர் கொந்தளிக்கிறார்கள்.ஆனால், திமுகவினரில் ஒரு பகுதியினர், சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்குவதை எதிர்கொள்ளவே பிரசாந்த் கிஷோரின் கார்பரேட் கம்பெனி உதவும் என்கிறார்கள். திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சிகளை முறியடிக்கவும், மீடியாக்களில் திமுகவின் செய்திகளை பாசிட்டிவாக இடம்பெறச் செய்யவும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
புதன், 5 பிப்ரவரி, 2020
என்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும்
savukkuonline.com :
ஜூலை 2018. தமிழ்நாட்டின் விடியல் திடுக்கிடலாய் அமைந்தது.
செய்தித்தாள்கள் அன்று அனைத்துத் தரப்பினருக்கும் பதட்டத்தை
ஏற்படுத்தியிருந்தன. அன்றாடம் தென்படுகிற செய்தியில் ஒன்றாய் அதைக் கடக்க
யாராலும் இயலவில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அன்றாட
நிகழ்வாகிவிட்ட பின்னரும் இந்த செய்தி அனைவரைம் பாதிப்பதற்கான காரணம்
இருந்தது. பதினோரு வயதே ஆன மாற்றுத்திறனாளியான, செவித்திறன் குறைபாடு
கொண்ட சிறுமிக்கு பதினேழு பேரால் ஏற்பட்ட பாலியல் தாக்குதல் என்பது
அனைவரையும் ஆழமாய் பாதித்தது. சம்பவம் நடந்தது சென்னை அயனாவரம் என்பதால்
இது ‘அயனாவரம் வழக்கு’ என்றழைக்கப்பட்டு தொடர்ந்து செய்தித்தாள்கள்
தகவல்களைத் தந்தன. தகவல்கள அனைத்துமே அதிர்ச்சியைத் தரக்கூடியன.
பதினோரு
வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி தான் தினமும் சந்திக்கும் நபர்களால் ஆறு
மாத காலத்துக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருப்பது
தெரிய வந்தபோது அது பெரும் மனஉளைச்சலை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது.
குற்றவாளிகள் அனைவரும் 23 முதல் 60 வயதானவர்கள்.ரஜினி ஒரு நேர்மையற்ற சுயநலமி மட்டுமல்ல. கோழையான சந்தர்ப்பவாதியும் கூட... சவுக்கு சங்கர்
savukkuonline.com :
ரஜினிகாந்த்
செய்வதும், சொல்வதும் செய்தியாகும் என்பது ரஜினிக்குத் தெரியும். ரஜினியே
எதிர்பார்த்திராத ரசிகர் கூட்டம் இந்தியா கடந்தும் விரிந்திருக்கிறது.
இதற்கு அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் அந்த உழைப்பின் பலனை அவர்
தவறாகப் பயன்படுத்தியதன் விளைவை அதே ரசிகர்கள் முன்னிலையில்
அனுபவிக்கிறார்.
கடந்த 4 ஜனவரி அன்று, தர்பார் படத்தின் தெலுங்கு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஒரு அறிவுரை போல இவ்வாறு கூறினார். “கொஞ்சமாக ஆசைப்படுங்கள்”. இது போல அவ்வப்போது, ரஜினி மனம் போன போக்கில் பல்வேறு பொன்மொழிகளை உதிர்ப்பார். ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் சொன்னதை தனக்கு அல்ல என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.
கடந்த வாரம், இந்து நாளேடு, ரஜினிகாந்த் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்வதாக வருமான வரித் துறையிடம் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தார். பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, வருமான வரி பற்றிய கேள்விக்கு, “நான் ஒரு ஹானஸ்ட் இன்கம் டாக்ஸ் பேயர். சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்யவில்லை. வேண்டுமென்றால் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று மட்டும் மழுப்பலாக கூறி முடித்துக் கொண்டார்.

லண்டனில் 9 கோடி சம்பளம்... ஆபீஸ் கேண்டினில் திருடிய வட இந்தியர்
Velmurugan P -/tamil.oneindia.com/ - லண்டனில் ஆபிஸ் கேண்டினில் சாப்பாடு திருடியதாக உயர்ந்த பதவியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சிட்டி குரூப் வங்கி அதிகாரி பரஸ் ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயர்ந்த பதவியில் அந்தஸ்தில் இருக்கும் சிலருக்கு சில்லண்டி தனமாக ஸ்பூனை திருடுவது, சிறிய சிறிய பொருட்களை திருடுவது என மோசமான பழக்கம் இருக்கும். அப்படி தான் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு ஆபிஸ் கேண்டினில் உணவை திருடும் கேவலமான பழக்கம் இருந்திருக்கிறது.
பரஸ் ஷா வயது 31. இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிட்டி குரூப் வஙகியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும ஆப்பிரிக்கா பிரிவின் வர்த்தகத்தை தலைமை பொறுப்பை இருந்து கவனித்து வருகிறார். ஆண்டுக்கு 9.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்
பரஸ் ஷா கடந்த 2017ம் ஆண்டு சிட்டி குரூப்பில் சேர்ந்துள்ளார்.. அதற்கு முன்பு ஹெச்எஸ்பிசி வங்கியில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் லண்டனில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு உயர்ந்த பதவி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பரஸ் ஷா, அங்கு அலுவலகத்தில் உள்ள கேண்டினில் உணவை திருடி சாப்பிட்டுக்கிறார்.

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!
தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு
மாலைமலர் : டெல்லி மேல்சபையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
இந்த 12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
1. திருச்சி சிவா (தி.மு.க.)
2. டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)
3. சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.) தற்போது இவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.
4. விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.)
5. மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.)
6. முத்துகருப்பன் (அ.தி.மு.க.).

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!
மின்னம்பலம் :
வருமான
வரித் துறையினரின் சோதனைகள் மிக சாதாரணமாகவே இன்று(05.02.2020) காலை
தொடங்கியது. ஆனால், நேரம் ஓட ஓட அவர்களது வேகமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட
சினிமாவில் நடப்பது போன்றே இன்றைய ரைடுகளையும் நடத்தி முடித்துவிட்டு,
விஜய் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கின்றனர் வருமான வரித்துறையினர்.சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு, அங்கிருந்து அப்படியே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டது. அன்புச்செழியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு அதிக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதை அறிந்ததனால் இந்த ரெய்டுகள் நடைபெறுவதாக அறிந்ததால், அடுத்து யார்? என்று பார்ப்பதற்கு பரபரப்பாக தயாரானது கோலிவுட். சென்னையில் இருப்பவர்களில் யார் வீட்டுக்கு ரெய்டு என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, நெய்வேலியில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தது மெசேஜ்.
நடிகர் விஜயை படப்பிடிப்பில் இருந்து அழைத்து சென்று வீட்டில் வருமானவரி சோதனை .. ஏஜிஎஸ், அன்புசெழியன் வீடுகளிலும் ரெயிட் .. பிகில் கறுப்பு பணம் ?
கலைமோகன்
ஸ்டாலின் - நக்கீரன் :
ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜயிடமும், விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வருமானவரி சோதனையில் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏஜிஎஸ் குழுமத்தில் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.ரஜினிகாந்த் : குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
தினத்தந்தி : மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை
போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் வரவில்லை.என்பிஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) நாட்டுக்கு அவசியம் முக்கியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.
சிஏஏ சட்டத்தால் ( குடியுரிமை திருத்த சட்டம்) இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியா பிரிவினையின் போது எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால் நான் முதலாவதாக குரல் கொடுப்பேன்.
திமுகவும் பிரசாந்த் கிஷோரும் .. காலத்தின் தேவையா?
வளன்பிச்சைவளன் : புதிய யுக்திகளே வெற்றியை தந்தன வரலாறு சொல்லும் பாடம் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து எந்த உயிரியும் வாழ முடியாது அறிவியல் உண்மை ஆரியர்கள் குதிரையோடு வந்தனர்.
அக்குதிரை திராவிடர்களிடம் இல்லாததே திராவிடர்களின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் பீரங்கியோடு வந்தார்கள் வாளோடும் வில்லோடும் போர் புரிந்த இந்தியர்களை எளிதில் வீழ்த்தினார்கள்.
என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது திமுக நீண்ட வரலாறு கொண்ட இயக்கம் பிரச்சார பலம் பொருந்திய இயக்கம். திண்ணை பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் பத்திரிக்கைகள் என மக்களிடம் நெருங்கிச் சென்று வெற்றி பெற்ற வரலாறு கொண்ட இயக்கம்.
ஆனால் இன்று பிரச்சாரம் வேறு பரிமணாமங்களோடு நடைபெறுகிறது. இவ்வேளையில் இம்மாற்றங்களுக்கு ஏற்ப திமுகவும் மாறியாக வேண்டிய கட்டாயம். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்காத பல உயிரினங்கள் அழிந்து விட்டன.
இந்த அறிவியல் உண்மைகளுக்கு ஏற்ப திமுக வும் தனது பிரச்சார யுக்தியை மாற்றிக் கொண்டு ஒரு விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை .... 10 அரிய செய்திகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் :
1. 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.
2. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
3. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
. கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.
5. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
6. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! இபிஎஸ்-ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!
nakkheeran.in - இரா. இளையசெல்வன் :
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11
எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில், சபாநாயகர் தனபாலை நோக்கி
உச்சநீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்விகளால் அதிர்ச்சியடைந்திருக்கிறது
அதிமுக! தலைமைசெயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அதிகாரிகள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சர்களிடம் மட்டும் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதில் பல்வேறு அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஓபிஎஸ்சுடன் தனியாக ஆலோசித்தார் எடப்பாடி. அதில், பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை குறித்து விரிவாக அலசியிருக்கிறார்கள்.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவு சீனியர்களிடம் விசாரித்தபோது, ‘’ உச்சநீதிமன்றம் என்னதான் உத்தரவிட்டாலும் சபாநாயகருக்கு ஆணையிடும் அதிகாரம் அதற்கு கிடையாது.
சி.பி.சி.ஐ.டி. பிடியில் சித்தாண்டி… `726′ அதிகாரிகள் டிஸ்மிஸ்?!

vikatan.com = ந.பொன்குமரகுருபரன் :
ஆயுதப்படை எஸ்.ஐ.
சித்தாண்டியை 8 நாள்களுக்கு முன்னரே சி.பி.சி.ஐ.டி கைது செய்துவிட்டதாக
போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய விசாரணையில் என்ன சொன்னார்
சித்தாண்டி?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், இராமநாதபுரம்
மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேடாகத்
தேர்வாகியிருப்பது தொடர்பான பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், திருநெல்வேலி,
சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேரை கைது
செய்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியபோதே, இம்முறைகேட்டில் முக்கிய
இடைத்தரகர்களாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமார், ஆயுதப்படை எஸ்.ஐ.
சித்தாண்டி இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)