ram gopal : கடந்த
4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக்
கொண்டே இருக்கிறது. தொடர்
செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில்
நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது
தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ
என எண்ணுகையில்....என் பெரிய குழந்தை வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, 11. காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 &6 ஆம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம், 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய். இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு "மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்" விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு "தற்காலிக விசாரணை ரூம்" என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ஜட்ஜ் அய்யா விடுப்பில் இருக்கிறார்.


















