திங்கள், 28 மே, 2018

துப்பாக்கிச்சூடு.. துணை வட்டாட்சியர்கள் கண்ணன் .சேகர்... மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை நிறைவேற்றினர்?

துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக எப்.ஐ.ஆரில் தகவல்மாலைமலர் :13 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

BBC :சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல்
அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. >மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது.
இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

திமுக தலித்துக்களுக்கு உரிய இடம் அளித்திருக்கிறதா ? சுபவீயிடம் வினவிய ஐரோப்பிய பேராசிரியர்கள்

ஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்! -சுப. வீரபாண்டியன்
இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹியூகோ கோரிஞ் (Hugo Gorringe), பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரு வையாட் (Andrew Wyatt) இருவரும் தமிழக அரசியல், தலித் அரசியல் ஆகியனவற்றில் ஈடுபாடு உடையவர்கள் என்பதோடு, அவை குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் சமூகவியல், அரசியல் துறைப் பேராசிரியர்கள்.
அவர்களின் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருப்பதால், இங்கே (இங்கிலாந்து) தங்கியிருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. லீட்ஸ் (Leeds) நகரில் உள்ள என் மகனின் நண்பர் சரவணன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறினார்.
அரசியல் குறித்து மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும், அவற்றில் உள்ள அரசியல் குறித்தும் கூட அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். மதுரையை மையமாக வைத்து வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஹியூகோ எழுதியுள்ள கட்டுரை உண்மையாகவே நமக்கு வியப்பளிக்கிறது. மதுரை வீரன் தொடங்கி கபாலி வரையில் பல்வேறு படங்கள் குறித்து அக்கட்டுரையில் அவர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.

உப்பு நீக்கும் ஆலையால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் ஆபத்து ...

உப்பு நீக்கும் ஆலையால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து?மின்னம்பலம் :நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட கடல் நீரைத் தூய்மைப்படுத்தும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மே 8ஆம் தேதியன்று நடைபெற்ற 190வது கூட்டத் தொடரில் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய் வாரியம்(CMWSSB) ரூ 3,912.16 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை தூய்மைப்படுத்தும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்புதலைக் கோரியிருந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (EAC) நிபுணர் மதிப்பீட்டுக் குழு (CRZ) களஆய்வு செய்து ஆய்வறிக்கையைத் தயார் செய்தனர். இதனடிப்படையில் தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெமிலி அருகே பேரூர் என்னுமிடத்தில் துவங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 40 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது.

7 ஆண்டுகளுக்கு மேல் போராடி பெற்ற பாலம் திறந்து வைத்த கனிமொழி எம்பி.

போராடிப் பெற்ற பாலம்!
மின்னம்பலம் : திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஒரு பாலத்தைத் திறக்க வைக்க 7 ஆண்டுகளுக்கு மேல் போராடி இப்போது அந்தப் பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறார் கனிமொழி எம்பி.
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் இருந்தவரிடம் மக்கள் முக்கியமான ஒரு பிரச்னையை தெரிவித்தனர்.
“கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாற்றின் குறுக்கே அபிவிருத்தீஸ்வரம், கமுகக்குடி இடையே பாலம் கட்டினால் பத்தூர் மேல்கரை, கப்பலூடையான், திருவரங்க நல்லூர், அக்காஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு பயனாக இருக்கும். இப்போது பாலம் இல்லாததால் 10 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது’’ என்று மனு கொடுத்தனர் மக்கள். இந்த பாலத்துக்காக பல ஆண்டுகள் போராடிவருவதையும் கருணாநிதியிடம் குறிப்பிட்டனர். அப்போது இந்த மனுவை தன்னுடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த கனிமொழியிடம் கொடுத்துவிட்டார்.

தூத்துக்குடிக்கு புறப்பட்டார் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தினத்தந்தி "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர்
போராட்டம் நடந்தது.  இந்த நிலையில், இந்த போராட்டம் 100வது நாளன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.  கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.< எனினும் ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி பேரணி சென்றது.  அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது.  இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் 13 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்ற நிலை நீடித்து வந்தது.  இதனால் பதற்றத்தினை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் 144 தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்தது.  நள்ளிரவு முதல் இணையதள சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..

4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது தினத்தந்தி :4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது. புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதேபோன்று மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி ஆகியவற்றிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோன்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான ஹுகும் சிங் மரணம் அடைந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அமித் ஷாவின் அத்தனை மோசடிகளையும் முறியடித்த எதிர்கட்சிகள் .. கர்நாடக


Savukku : சாத்தியமற்றதை அமித் ஷா செய்துள்ளார். ஆளுக்கொரு
திசைநோக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்றுபடுத்தியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்பு விழாவில் அவர்களனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை, என்ன செய்தாவது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறும் தந்திரம்,  எதிர்க்கட்சிகளை துண்டு துண்டாக உடைத்து வெற்றி பெரும் உத்தி ஆகியவை  தற்சமயம் தோல்வியுற்றுள்ளது என்பதை உறுதியாகியுள்ளது.
”இந்த ஒற்றுமை நீடிக்கும். மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இனி வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் இதை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங். அக்கட்சியின் மத்தியப் பிரதேச  தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக அவர் அறிவிக்கப்பட்டள்ளார். ஆனால், மாயாவதியுடனும் அவரது பகுஜன் சமாஜ் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அவர் கருத்து கூற மறுக்கிறார்.

தருமு சிவராம்: நட்சத்திரவாசி

எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பத்தில் தருமு சிவராம் என்றும், பின்னாளில் பிரமிள் என்றும் அறியப்பட்ட இவர், காலம் நமக்கு அருளிய பெரும் கொடை. சிறுபத்திரிகை என்ற கருத்தாக்கத்தின் செம்மையான வடிவமாக, காந்தியுக அர்ப்பணிப்பு உணர்வுடன் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ (1959-70) இதழின் மூலம் இளம் வயதிலேயே ஒரு பேராற்றல்மிக்க படைப்பு சக்தியாகவும் விமர்சன சக்தியாகவும் வெளிப்பட்டவர். அறிவியல், மெய்ஞான தத்துவங்களின் மீதான ‘அறிவின் விசார மயமான பிரமிப்புகள்’ அவருடைய படைப்புலகம் என்றால், இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த அறிவின் விசாரமயமான அணுகுமுறையே அவருடைய விமர்சன நெறி. தன்னுடைய 20-வது வயதில் ஓர் அபூர்வ ஞானச் சுடராக, ஈழத்தின் திருகோணமலையிலிருந்து எழுத்துப் பிரவேசம் நிகழ்த்தியவர்.
1939, ஏப்ரல் 20-ல் பிறந்த இவரின் முதல் கவிதை, 1960 ஜனவரி ‘எழுத்து’ இதழில் பிரசுரமானது. இதிலிருந்து ஆரம்பம் கொண்ட இவருடைய எழுத்தியக்கம், சிறுபத்திரிகை இயக்கத்தில் ஒரு திகைப்பூட்டும் சக்தியாக எழுச்சி கொண்டது.

ஞாயிறு, 27 மே, 2018

மே.வங்கம் .. ரயிலில் முஸ்லிம் இளைஞரை தாக்கிய இந்துத்வா வெறியர்கள் .. பிரதமர் பெயர் தெரியாததால்..

Jaya chitra - Oneindia Tamil : மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில், பிரதமர் மோடி மற்றும் தேசிய கீதம் பற்றிய கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாத முஸ்லிம் இளைஞரை  சிலர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14ம் தேதி மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து கலியாக் என்ற ஊருக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார். அந்த ரயிலில் ஏறிய நான்கு பேர், அவரது பக்கத்தில் அமர்ந்து, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தேசிய கீதம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு அந்த தொழிலாளி சரியாக பதில் அளிக்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நான்கு பேரும், தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள், பாந்தல் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது. சக பயணியர் எடுத்த செல்போன் வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என காளியாக் காவல் ஆய்வாயர் சுமன் பானர்ஜி தெரிவித்துள்ளார்

சிலோன் கந்தையா ..இலங்கை ராணுவத் துப்பாக்கிக்குத் தப்பித்தவர் தூத்துக்குடி தோட்டாவினால் உயிரழந்தார்!

tamilthehindu :ஸ்டெர்லைட்
போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் ஒருவர் இலங்கையிலிருந்து இங்கு வந்து வசித்து வந்த கந்தையா என்ற நபர் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் குடும்பம் இலங்கையில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 1981-ம் ஆண்டே மற்ற தமிழர்களுடன் இந்தியா வந்துள்ளார், இவருக்கு இப்போதைய வயது 58.< இலங்கையிலிருந்து வந்த இவர் தூத்துக்குடி சிலோன் காலணியில் மனைவி செல்வமணி, மகன் ஜெகதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு

Sterlite Massacre Row: Police releases CCTV video of Tuticorin collector office Shyamsundar tamilthehindu:  சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.> பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டது.

வைகோ :ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் 10 மாவட்ட மக்களைத் திரட்டி பெரும் போராட்டம்

: Mohan Prabhaharan - Oneindia Tamil: மதுரை : ஸ்டெர்லைட் ஆலை இயங்க இனியும் அரசு தாமதிக்கக்கூடாது. அப்படி ஆலை தொடர்ந்து இயங்கினால், 10 மாவட்ட மக்களைத் திரட்டி மதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் சுட்டதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சந்திரபாபு நாயுடு : நாட்டை நாசமாக்கிய பாஜக 2019 தேர்தலில் தோல்வி அடையும்!

நக்கீரன் :நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை
ருசிபார்க்கும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் குறைந்த நிதி ஒதுக்கியது, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாதது என சில காரணங்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி.
இதையடுத்து அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மோடி அரசின் நான்காண்டு கால அரசு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அடுத்த தேர்தலில் பா.ஜ.க. தோற்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்வுமாலைமலர் :தூத்துக்குடி  துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு  ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

காடுவெட்டி குருவும் ..ஆர்.வெங்கட்ராமனும் ... பார்ப்பானுக்கு ஒரு நீதி வன்னியருக்கு ஒரு நீதி ..

LR Jagadheesan : நேற்றெல்லாம் ஜாதி ஒழிப்புப்போராளிகளாக களமாடிய ாவை ஆட்சிக்கு கொண்டுவரும் ஒரே நோக்கத்தோடு ஒன்றுக்கு இரண்டுமுறை தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்தவர் ஆர் வெங்கட்ராமன் என்னும் அதி உத்தமர். அந்த இரு ஆட்சிக்கலைப்புகள் தமிழக அரசியலில் ஏற்படுத்திய மடை மாற்றத்தை உங்களில் எத்தனைபேர் உணர்ந்தீர்கள்? எத்தனைமுறை அதை விவாதப்பொருள் ஆக்கினீர்கள்? அந்த அநியாயத்தை அடுத்த தலைமுறைக்கு அறியவைக்க நீங்கள் இதுவரை ஆற்றிய ஆனப்பெரிய பங்களிப்பென்ன? அதை எதையும் செய்தாமல் காடுவெட்டி குருவின் மரணத்தை சாக்காக வைத்து அவரை வசைமாரி பொய்வதும் ஒட்டுமொத்த வன்னியர்களையும் ஜாதிவெறியர்கள் என்று ஓலமிடுவதுமாக நேற்றைய பொழுதை கழித்தீர்கள். நல்லது. அதிதீவிர வன்னியரான காடுவெட்டி குருவை அவரது வன்னிய சொந்தங்களே தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள். எல்லா வன்னியர்களும் அவர் பின் போகவும் இல்லை. அவரை ஆதரிக்கவும் இல்லை. கடுமையாக எதிர்த்தார்கள். 
ஆனால் ஆர்வியை அக்ரஹாரவாசிகள் எத்தனை பேர் எதிர்த்தார்கள்? அரசியலில் அவருக்கு எதிர்கட்சிகளில் இருந்தவர்கள் கூட அவரை என்றும் பெரிதாக எதிர்க்கவில்லையே ஏன்? 

லண்டன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுப வீரபாண்டியனை தடைசெய்த தமிழ் குண்டர்கள்.

லண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன்
கலந்து கொள்ளவில்லை?  -சுப. வீரபாண்டியன்
நீதி கேட்டு எழுந்த தூத்துக்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட நியாயமற்ற துப்பாக்கிச் சூடும், இறந்துபோன 13 பேரின் உயிர்களும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலும், அயர்லாந்திலும், தூத்துக்குடிப் படுகொலைகளுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
26.05.2018 மாலை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, தமிழ்த் தோழமை இயக்கம் (Tamil Solidarity), பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் ஆகியன முன்னின்று நடத்தின. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இயலுமா என்று அதன் அமைப்பாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தற்போது லீட்ஸ் (UK) என்னும் நகரத்தில் உள்ளேன். அங்கிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரப் பயணத்தில் லண்டன் சென்றுவிட முடியும். எனவே உறுதியாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் செய்தியை நானும், அமைப்பாளர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தோம். என்னுடன் சேர்ந்து லீட்ஸ் நகரிலிருந்தும் ஏழெட்டுப் பேர் கலந்துகொள்ள வருவதாகக் கூறினர்.

காடுவெட்டி குரு மரணம் ..102 அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல்- 2 ஓட்டுநர்களுக்கு காயம், கடைகள் அடைப்பு, போக்குவரத்து பாதிப்பு

tamilthehindu :ஜெ.குரு மறைவையொட்டி கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் நேற்று வெறிச்சோடிக் கிடந்த சிதம்பரம் பேருந்து நிலையம்.
ஜெ.குரு மறைவையொட்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கல் வீசி தாக்கப்பட்ட அரசுப் பேருந்து.
அரியலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய கடைவீதி.
ஜெ.குரு மறைவையொட்டி கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் நேற்று வெறிச்சோடிக் கிடந்த சிதம்பரம் பேருந்து நிலையம்.
ஜெ.குரு மறைவையொட்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கல் வீசி தாக்கப்பட்ட அரசுப் பேருந்து.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு முதல் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் பல பகுதிகளில் 102 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

விலங்குகளால் நிபா பரவவில்லை: ஆய்வு!

விலங்குகளால் நிபா பரவவில்லை: ஆய்வு!மின்னம்பலம் :உள்ளிட்ட விலங்குகள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இரண்டு செவிலியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாணி (62) என்ற பெண் நேற்று (மே 26) உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் போலீஸ் .. போராட்டத்தை ஒருங்கிணைத்த ...

 'மக்கள் அதிகாரம்’ நிர்வாகிகள் கூண்டோடு கைது!
மின்னம்பலம் :தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேந்த தென்மாவட்ட நிர்வாகிகளை போலீஸார் தீவிரமாக வேட்டையாடி வருகிறார்கள்.
தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை , நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேரை நேற்று முன் தினம் நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள் தூத்துக்குடி போலீசார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை எனினும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மத்திய மாநில உளவுத்துறைகளின் தூத்துக்குடி பற்றிய ரிப்போர்ட்டில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது மக்கள் அதிகாரம். இந்த அமைப்பு ஓர் புரட்சிகர அமைப்பு. ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து டாஸ்மாக் பாடல் பாடிய பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். இவர் மூலம்தான் மக்கள் அதிகாரம் வெகுஜன ஊடக வெளியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் சமூக தளங்களில் மக்கள் அதிகாரம் தீவிரமாக இயங்கி வருகிறது. நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்துப் பிரச்னைகளையும் கையிலெடுத்து போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.

பாஜகவுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வருகிறதா? மு.க.ஸ்டாலின் பேட்டி

நக்கீரன் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர், மு.க.ஸ்டாலின்
 இன்று (26.05.2018) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: செய்தியாளர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று விசாரணை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?
ஸ்டாலின்: இந்த ஆட்சியாளர்கள் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, என்கவுண்டர் செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகை.. புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆவேசம்

Kalai Mathi - Oneindia Tamil  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்னைப்பர் துப்பாக்கியை கொண்டு 13 பேரை எடப்பாடி அரசு சுட்டுக்கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். Chief Minister Edappadi Palanisamy house sieged in Chennai முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இலவச பயணம்: மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

இலவச பயணம்: மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்தினத்தந்தி : மெட்ரோ ரெயிலில் நேற்று இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.
அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள்.

கொலைப் பட்டியல் தயாரித்த இன்ஸ்பெக்டர்!

டிஜிட்டல் திண்ணை: கொலைப் பட்டியல் தயாரித்த இன்ஸ்பெக்டர்!இந்த இன்ஸ்பெக்டர் தான் இந்த படுகொலை களுக்கு எல்லாம் காரணமா? பத்தாண்டுகளாக அங்கு பணிபுரிகிறாரா? அப்ப சரி ஸ்டெர்லைட் சம்பளம் அதிகம் வாங்கியிருப்பான். அதறகு நன்றி கடன் தான் செய்திருக்கிறான். இவன் மனைவியும் இன்ஸ்பெக்டரா இதே ஊரிலே? இது போதும் இவங்க தூத்துக்குடி யில் கால்வாசி வாங்குற அளவு சம்பாதிச்சு இருப்பாங்க. இவன் மீது சிபிஐ விசாரணை யே நடத்தலாம்
minnambalam : மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் வந்து விழுந்தது.
“தூத்துக்குடியில்தான் இரு நாட்கள் இருந்தேன். அங்கே தமிழக அரசின் உத்தரவு காரணமாக இணைய வசதி இல்லை. எனவே மதுரையிலிருந்து இப்போது தொடர்புகொள்கிறேன்’’ என்று முன்னுரை கொடுத்துவிட்டு மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“தூத்துக்குடியில் இன்னும் இயல்பு நிலை முழுதாகத் திரும்பவில்லை. கடைகள் திறப்பதும், பேருந்துகள் ஓடுவதும்தான் இயல்பு வாழ்க்கை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறது. ஆனால் மக்கள் மனதிலிருந்து அச்சமும் கோபமும் இன்னும் முழுதாக அகலவில்லை. தூத்துக்குடியில் போய் இறங்கித் துப்பாக்கிச் சூடு பற்றிதான் முழு விசாரணை நடத்தினேன். அதில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி தாக்குதலுக்காகவே வேல்முருகன் கைது?

If you go with Velmurugan you have to go jail only: police வேல்முருகனோடு சென்றால் ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் என திமுக புள்ளியை தூத்துக்குடி போலீஸ் மிரட்டிய சம்பவம் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடிப்பட்டவர்களை நேரில் சந்திக்க சென்ற வேல்முருகன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை புழல் சிறையில் வைக்குமாறு திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வேல்முருகன் கைதுக்கு முன்னதாக விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து திமுக புள்ளி கூறிய அதிரவைக்கும் தகவல்..
சென்னை விமான நிலையம். நாள் 25.5.18, நேரம் மதியம் 1 மணி தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகக் கிளம்பி வந்திருந்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.