திங்கள், 29 ஜனவரி, 2018

ஜப்பான் 534 மில்லியன் டாலர்கள் ஹாக்கிங் கொள்ளை. கிரிப்டோகரன்சி


ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

 என்இஎம் என்னும் பரவலாக அறியப்படாத ஒரு வகை கிரிப்டோகரன்சியை ஹேக்கிங் செயல்பாட்டின் காரணமாக இழந்துள்ளதாக கூறியுள்ள காயின்செக் என்னும் அந்த நிறுவனம், பிட்காயின் தவிர்த்த மற்றனைத்து மின்னணு பணங்களின் பரிமாற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தாங்கள் வெள்ளைக்கிழமையன்று இழந்துள்ள பணத்தை மீண்டும் பெறவியலாத நிலைக்கூட ஏற்படலாம் என்று ஜப்பானிய ஊடகங்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இணைய திருட்டு உறுதிப்படுத்தப்பட்டால், உலகில் இதுவரை நடந்த இணைய திருட்டுகளிலேயே மிகவும் மோசமானதாக இது கருதப்படும். இணையத்தின் மூலமாக திருடப்பட்ட காயின்செக் நிறுவனத்தின் மின்னணு பணமானது “ஹாட் வாலெட்” என்றழைக்கப்படும் பணப்பரிமாற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவை சேமிப்பு கணக்கு போல செயல்படும் “கோல்ட் வாலெட்”டுக்கு மாற்றப்பட்டு ‘ஆஃப்லை’னில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

17 நாடுகளில் பொது தமிழ் பாடத்திட்டம் .. புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்த ... அறிவகம் 10 ஆம் ஆண்டில் ...

இணைந்து வளர்ப்போம்! உயர்ந்து நிற்போம்!
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தாய்மொழி மீதான பற்றால் தம் சந்ததியினருக்கு தாய் மொழியை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் புகட்டியே வந்தனர். 2008 ஆம் ஆண்டுக்கு முன் கனடாவில் ஆங்காங்கு ஒரு சில தமிழாசிரியர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒரு சில அமைப்புகள் குறிப்பிட்ட மாணவர்கள் அடங்கிய சிறு குழுக்களுக்கும் தமிழை கற்பித்து வந்தனர்.>
எனினும் புலம்பெயர் தேசங்கள் அனைத்திலும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் எமது வரலாறுகளை உள்ளடக்கியதாகவும், எமது பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் தமிழைக் கற்பித்து வரும் நிலை காணப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு உலகளாவிய அளவில் புலம்பெயர் தமிழ் மாணவர்கள் பெருமளவில் வாழும் 17 நாடுகளை இணைத்து எமது வரலாறுகளையும், எமது பண்பாடுகளையும் கொண்டதாக பொதுவான ஒரு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு அமைவாக பல கல்விமான்கள் இணைந்து பல ஆண்டுகள் முயற்சித்து பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் எழுதி வெளியிட்டனர். இறுவட்டுகளையும் உருவாக்கினர்.  இவ்விதமாக எமக் கென்று ஒரு பொதுவான தமிழ் கற்பிக்கும் செயற்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மதிமாறன் : பத்மாவதி .. ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால்

அலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.
இலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.
அதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.
‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.

சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகை மக்கள் கலை இலக்கிய கழகம்

தமிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது

வினவும் :தமிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது.
சேத்துப்பட்டு பேருந்து நிருத்தத்தில் இருந்து பறைமுழக்கத்துடன் துவங்கிய ஊர்வலம் சங்கரமட அலுவலகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றது. இதைக் கண்டு ஏற்கனவே அங்கு குவிந்திருந்த போலீசு பதறியடித்து ஓடிவந்து, போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறியது. ஆனால் தடையை மீறி சங்கரமட வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் முன்பு நின்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை ம.க.இ.க செயலர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

பஸ் கட்டணத்தை சிறிய அளவில் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு.. கண் துடிப்பு நாடகம் என ..

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பஸ் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு
மாலைமலர் :தமிழக அரசுப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் கனிசமாக உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது கட்டணங்களை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.> சென்னை: தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்க வரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர் சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.>
வரும் திங்கள் அன்று பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். இது மட்டுமல்லாமல் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசுப்பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், தினமும் 10 கோடி அளவில் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொன்மணி .. ஈழத்தில் சாதி ஆணவக்கொலை பற்றிய திரைப்பட இயக்குனர் தர்மசேனா பத்திராஜா மறைவு


பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம்.
தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள்.
எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார்.



பாடல்கள்

  • எடுக்கும் இளம் தோளில் மணமாலையே, (பாடியவர்: சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: கமலினி செல்வராஜன்)

உலகின் மிக மோசமான ரெயில்களில் ......

ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு!minnambalam : பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதவளம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (ஜனவரி 27) பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மனிதவள மேம்பாட்டிற்கு ரயில்வேத் துறை சிறப்பு கவனம் செலுத்தும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரயில்வேத் துறை கூடுதல் கவனம் செலுத்தும். பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ரயில் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
ரயில் இயங்கும் அறை முற்றிலும் ஏ.சி. மயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கழிவறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுடன் நேரடி உரையாடல் வாய்ப்பையும்

சந்திரபாபு நாயுடு பாஜகவை கழற்றி விடுகிறார் ... தோல்வி பயம் !

தெலுங்கு தேசம் – பாஜக விரிசல்?மின்னம்பலம் :ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் அம்மாநில பாஜகவினர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக – தெலுங்குதேசம் இடையே விரிசல் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது என்று கூறியுள்ளார் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி இடம்பெற்றது. இந்த கூட்டணி, ஆந்திரா சட்டமன்றத் தேர்தலிலும் பெருவெற்றியைப் பெற்றது. இதனையடுத்து, தெலுங்குதேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சி நீடித்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திர பாஜக தலைவர்கள் தெலுங்கு தேசத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

சோடா பாட்டில் ஜீயர் .. ஆண்டளுகிட்டே மன்னிப்பு கேட்டுகிராராம் .

மின்னம்பலம் :"எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று பேசியதற்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக" ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று (ஜனவரி 28) தெரிவித்துள்ளார்.
தினமணி சார்பாக கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து உரையாற்றினார். ஆண்டாள் குறித்து அவர் கூறியது சர்ச்சைக்குள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில் அறிவித்தபடி ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், அறநிலையைத் துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தின் இரண்டாவது நாளான ஜனவரி 18 அன்றே போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

யார் அந்த 2G ஒப்பந்த கொலையாளி? திமுகவை தீர்த்துகட்ட சதி தீட்டிய ... சண்டே கார்டியன் பத்திரிகை ...

திமுகவை அழிக்க முயன்ற ஒப்பந்த கொலையாளியை தேர்வு செய்தது யார்?மின்னம்பலம்: பங்கஜ் வோரா
இந்தியாவில் இருந்து வெளியாகும் சண்டே கார்டியன் நாளிதழில் வெளியான கட்டுரை தமிழாக்கம் செய்து வெளியிடப்படுகிறது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை நிர்மூலமாக்கிய ஒப்பந்தக் கொலையாளி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டவர் முன்னாள் மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத்ராய். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு அந்தப் பதவிக்கு தகுதியானவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்வு செய்தபோது, அந்தப் பட்டியலில் வினோத்ராயின் பெயர் முதலிடத்தில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
’2ஜி அவிழ்க்கப்படாத முடிச்சுகள்’ (2G Saga Unfolds) ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில், வினோத்ராயை மத்திய தணிக்கை மற்றும் தலைமைக் கணக்காளர் பதவியில் அமர்த்தியது யார் என்று விரிவான விசாரணை செய்யப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. அவருக்கு அந்த பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது யாரென்று, இந்திய மக்களுக்குத் தெரிய வேண்டுமென்றார். ஆனால், தனது பேச்சில் வினோத்ராய்க்கு உதவிய நபர் யார் என்று ராசா குறிப்பிடவே இல்லை.

ஸ்டாலின் : ஒரு படையே இருக்குறாங்க. சீக்கிரம் பார்ப்பீங்க.... முழுப்பேட்டி

தமிழ் இந்து செய்தித்தாளில் வெளியான திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் முக்கியப்பேட்டி. கட்டாயம் படித்துப்பகிரவும்!
****
திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.
திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
அரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர்.

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர் கிரண் ர்ஜ்சுசு ...

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர்!
மின்னம்பலம் :காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரரைச் சந்தித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆசி பெற்றார்.
ஹெச்.ராஜா தந்தையின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்த்திருந்தார். ஆனால், நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார். இது தமிழ் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தமிழ் அமைப்புகளும் காஞ்சி மடத்தின் முன்பு போராட்டம் நடத்தின. திக தலைவர் வீரமணி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் மடத்துக்குக் காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.   சங்கரராமன்  கொலை புகழ்  ஜெயேந்திரன் முன்பாக நிலத்தில் உட்கார்ந்து இருக்கும்  பொன்.ராதாகிருஷன்   பதவிக்காக எந்த லெவலுக்கும் கீழே இறங்குவேன் என்று காட்டுகிறார் இது பழைய படம்தான் மறக்கவே கூடாத காட்சி .

மன்னிப்புகளால் கழுவ முடியாத கறை!

சிறப்புக் கட்டுரை: மன்னிப்புகளால் கழுவ முடியாத கறை!மின்னம்பலம்":  மதரா: குடியரசு தினத்துக்கு முன்தினம் தமிழர்களைப் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உட்படுத்திய செய்தி ஒன்று வந்தது. இசைத் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்துள்ள இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் அறிவிப்புதான் அந்தச் செய்தி.
இந்த மகிழ்ச்சியை மட்டுப்படுத்தித் தமிழர்களை மனம் வருந்தச் செய்த ஒரு நிகழ்வும் குடியரசு தினத்தன்று அரங்கேறியது. இளையராஜாவுக்கு விருதளித்ததன் மூலம் தலித்துகளைத் தன் பக்கம் இழுக்க மத்திய அரசு முயல்கிறது என்னும் விமர்சனத்தை முன்வைத்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
இந்தச் செய்திக்குப் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த நாளிதழ் அடுத்த நாளே (ஜனவரி 27) மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பது நல்ல பண்பு என்பதில் ஐயமில்லை.

ஆதார் இல்லையெனில் சிலிண்டர் இல்லை!

ஆதார் இல்லையெனில் சிலிண்டர் இல்லை!மின்னம்பலம் :மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் காஸ் சிலிண்டர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் முறைகேடுகளைத் தடுக்க சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் சமையல் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வுதினத்தந்தி :காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 158 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுபற்றி சம்பவம் நடந்த பகுதியருகே இருந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான மீர்வாயிஸ் யாசினி கூறும்பொழுது, ஆம்புலன்ஸ் ஒன்று சோதனை சாவடி அருகே வந்தபொழுது வெடிக்க செய்யப்பட்டு உள்ளது என கூறினார். உள்துறை அமைச்சகத்தினை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை யாருக்கு கசக்கிறது? ... அய்.அய்.டி. கருத்தரங்கம்

கோ. ஒளிவண்ணன் :  Politics of Mr.Rajiv Malhotra on Harvard Tamil chairs ஹார்வர்ட் தமிழ் இருக்கையும் அய்.அய்.டி. கருத்தரங்கமும் ...
டிசம்பர் மாத இறுதியில், ஒருநாள் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அய்.அய்.டி வளாகத்தில் ஹார்வர்ட் இருக்கைக் குறித்து மாணவர்களிடம் கலந்து உரையாட வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு சென்றபோது ஆச்சரியம் ஆரியவடிவில் காத்துக் கொண்டிருந்தது. ‘இன்டோலாஜிக்கல் சுதேசி மாநாடு’ நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் நாற்பதிலிருந்து அறுபது வயதினை உடையவர்களாக இருந்தனர். மருந்துக்குக் கூட மாணவர் போல ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை. ‘பிரேக்கிங் இந்தியா’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தை எழுதிய ராஜீவ் மல்ஹோத்ரா என்பவரால் முன்னெடுத்து நடைபெறும் கருத்தரங்கம். இந்நூலினை மறுத்து திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தொடர் உரை ஒன்றினை திடலில் ஆற்றினார். அவைகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றது இப்பொழுது இச்சமயத்தில் உதவும் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
கருத்தரங்கின் நோக்கம், என்னிடம் கூறிய வகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதன் நோக்கம் அதன் தாக்கம் என்பதாகும். தொடக்கம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. இராஜீவ் மல்கோத்ரா நெறியாளராகவும், ஒருபுறம் நானும் இன்னொருபுறம் ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழல் சுதேசி என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர் பத்மினியும் கலந்துக் கொண்டோம். விவாதம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதன் போக்கு முற்றிலுமாக வேறு திசையில் பயணிக்கத்தொடங்கியது.

பத்ம விருதுகள் ...பார்ப்பனீயத்தின் நமக்கு வாய்த்த அடிமை அங்கீகாரம்தான் அது!

தமிழ் மறவன் விருதுகள் வெற்றி பெறுவதில்லை! ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தங்களின் வாழ்வில் போராட அணியமாகும் கலை, இலக்கியவாதிகளே வரலாற்றில் நிலைப்பார்கள், மாறாக, தங்களின் சுகவாழ்வைப் பற்றியே சிந்திக்கவும், ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராகவும், தான் உண்டு தன் தொழிலுண்டு என வாழும் கலை,இலக்கியத் துறையில் வாழும் சுயநலவாதிகளை வரலாறு குறித்துக் கொள்வதேயில்லை. இப்படிப்பட்ட திறமையாளர்களால் அவர்களின் குடுபத்தினரைத் தவிர எவருக்கும் பயனில்லை எனும்போது அந்த சுயநல கலை,இலக்கியலாளர்களுக்கு தரும் விருதுகளா நம் சுயமரியாதையை மீட்கும்?
இல்லவேயில்லை! மாறாக; பார்ப்பனீய அடிமைகளாக தொடர்வதற்கான அங்கீகாரம் தருவதே விருதுகளின் உள்ளீடு! ஆம் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சனையாய் பெற்ற அயோக்கிய துரோணாச்சார்யன் பெயரில் விருதுகள் வழங்குதலும், இனத்துரோகி விபீஷணன் பெயரில் விருது வழங்குதலும் ஆரியத்திற்க்கு பெருமை தரலாம். அவ்விருதுகளை கைநீட்டிப் பெறுவதோ தனமானத்திற்க்கும், இனமானத்திற்க்கும் பெரும் இழுக்கு.
“நமது இலக்கியம், மொழி, சட்டம், அரசு எல்லாமே சாதி காப்பாற்றுபவை. இதுகாறும் வந்த சீர்திருத்தவாதிகள் எல்லாரும் இந்த அடித்தளத்தை அப்படியே வைத்துவிட்டு மேற்தளத்தில் இருந்த ஓட்டை உடைசல்களை மட்டுமே பூசிக் கொண்டிருந்தனர்.

விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !


வினவு :எச்ச ராஜாவின் ‘பிதா ஜி’ வெளியிட்ட தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்னவாளு தெனாவட்டாக உட்காந்திருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பரவலான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழை அழித்து, இந்தியை திணித்து, செத்த மொழி சம்ஸ்கிருதத்திற்கு சிங்காரம் செய்து இப்படியாக இந்தியாவில் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது. அப்படித்தான் எச்ச ராஜாவின் ‘பிதாஜி’ வெளியிட்ட தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்ன சங்கரன் தெனாவட்டாக உட்காந்திருந்தார். இதை ஒட்டு மொத்த தமிழகமும் கண்டித்து வருகிறது.
இந்த வீடியோவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் சங்கராச்சாரிகளையும், பார்ப்பனக் கூட்டத்தையும் நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜீயருக்குக் குவியும் கண்டங்கள்!

மின்னம்பலம் : கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகவே அது தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்ததுவரும் நிலையில், நேற்று (ஜனவரி 26) திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், “உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளைப் பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். எதற்கும் துணிவோம்” என்று கூறியிருந்தார்.
ஜீயரின் பேச்சுக்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இன்று (ஜனவரி 27) இது தொடர்பாக திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள், கல் எறிந்தாலும் சோடா பாட்டில் வீசினாலும் அதை அண்ணா வழியில் எதிர்கொள்வோம். அண்ணா கத்தியைத் தீட்டாமல் புத்தியைத்தான் தீட்டச் சொல்லியிருக்கிறார் அவர் வழியில் செயல்படுவோம்" என்றும் ஜீயரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகசாமிக்கு பத்ம விபூஷன் கொடுத்தது அநியாயம் ..... தமிழ் ஆதிமொழி அல்ல என்று ஆய்வு செய்தானாம்!

தமிழர்களுக்கு அவமானம் வெட்கக்கேடு
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் தொல்லியல் துறை தலைவர் ஆர் நாகசாமிக்கு பத்மவிபுஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாகசாமி என்பவர் தான் தமிழ் என்பது ஆதி மொழிக் கிடையாது, சமஸ்கிருதத்தில் இருந்து உருவான மொழி என்று ‘MIRROR OF TAMIL AND SANSKRIT’ என்று நூல் எழுதி வெளியிட்டவர். அவர் ஒரு பிராமணர். அவருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து பத்மவிபுஷன் கிடைப்பது என்பது தமிழர்களுக்கு அவமானம், வெட்கக்கேடு.
ஆர்.நாகசாமியின் நூலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் யாவும் முழு அபத்தம் என்று மறுத்து ‘’தமிழும், சமஸ்கிருதமும்’’ என்ற எதிர் புத்தகத்தை வெளியிட்ட தேவ பேரின்பன் எளிமையான வாழ்வு வாழ்ந்து மறைந்தார். தன்னுடைய புத்தகத்தில் ஆணித்தரமாக ஆர். நாகசாமியின் புத்தகம் அபத்தம் என்பதை தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி : காஞ்சி விஜேந்திரருக்கு நாகரீகம் தெரியவில்லை

விஜய் சேதுபதி கருத்துவிஜயேந்திரர் அவமதிப்புtamiloneindia - Vignesh Selvaraj : திருச்சி : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்திய விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சங்கர மட விஜயேந்திரர் குறித்த இந்த சர்ச்சை பற்றி சில அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

புகழேந்தி :கடைசி காலத்தில் ஜெயலலிதாவின் உயரம் குறைந்துவிட்டது... அவரது உருவம் உருக்குலைந்து இருந்தது

வெப்துனியா : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் அவரது தோழி சசிகலாவை பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உகுலைந்து இருந்தது. உயரம் குறைந்துவிட்டது. கடைசி நாளில் அவரது காரில் இருந்து கூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வர சொன்னவர் தனது காலை அவரிடம் காட்டினார். தனது கால் ஷூவில் சுற்றியிருந்த புடவையை கூட அவரால் எடுக்க முடியாத நிலையில் இருந்தார். தனியாக நடக்க முடியாமல் சசிகலாவின் தோளில் கையைப்போட்டபடி ஜெயலலிதா வீட்டிற்குள் சென்றார். மேலும் தலைமைச் செயலகத்தில் முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா தூங்கிவிட்டார் என தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி :20 லிட்டர் பால்; காபி போட என நினைத்தேன்.. அம்மாவிற்கு என தெரியாது

வெப்துனியா :ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா 20 லிட்டர் பாலிற்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கூறினார் என கூறி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா இறந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியும், அதற்கு முதல்நாளும் சென்னை அப்பல்லோவில் நடந்த சம்பவங்களை விவரித்தார்.>இது குறித்து ராஜேந்திர பாலாஜி கூறியது பின்வருமாறு, ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக டிசம்பர் 4 ஆம் தேதி எனக்கு போன் வந்தது. எம்எல்ஏ-க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4 ஆம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்தது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது!

நக்கீரன் :முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, அவரது ஆதரவாளர்கள் மூலம் கரூரில் எம்.ஜி.ஆர். விழாவை முன்னிட்டு அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் செய்து வந்தார்.  போலீசார் இதை தடுத்தபோது அவர்களுடன் செந்தில்பாலாஜி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மறியலிலும் ஈடுபட்டார்.  இதையடுத்து செந்தில்பாலாஜியையும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி மரணம்!


நக்கீரன் :திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டாபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் ராதா(60). இவர் அருகில் உள்ள இஞ்சடிகோட்டகத்தில் உள்ள தனது வயலில் 2 ஏக்கர் சம்பா சாகுபடி செய்துள்ளார். கடும் வறட்சி, மழை ஏமாற்றத்தினால் இரண்டு முறை விதைத்த விதைகள் வீணாகிப் போனது. மூன்றாவது முறையாக விதைத்த நெல் பயிரும் காவிரியில் தண்ணீர் வராததால் தற்பொழுது வளர்ந்து கதிர் வரும் நிலைக்கு வரும் நிலையில் தண்ணீர் இல்லாததால் வளர்ந்த பயிர் கருக தொடங்கியது.>கருகும் பயிரைக் கண்டு தினம் தினம் விவசாயி ராதா வேதனை பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம் போல் இன்றும் வயலுக்கு சென்ற விவசாயி ராதா, பயிரை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். உடன் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் விவசாயி ராதாவின் உடலை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இறந்த  விவசாயிக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.