திங்கள், 6 நவம்பர், 2017

திரைப்பட சென்சாருக்கு 68 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் ... தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி ..

 Censor boards new regulationstamiloneindia.com :சென்னை: திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்று வழங்க இனி சென்சார் குழு 68 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகினரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இத்தனை காலமும் சென்சார் என்ற தணிக்கைக் குழுவின் சான்று என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. சென்சார் என்பது ஒரு சம்பிரதாயச் சடங்காக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாகத்தான் சென்சார் குழுவை பூதாகரமாக்கி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 68 நாட்களுக்கு முன்பே சான்றிதழுக்கு படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தணிக்கைக் குழு.
படத்தை பரிசீலிக்க ஒரு வாரம், ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்கள், ஆய்வுக் குழு அறிக்கை அனுப்ப 10 நாட்கள், விண்ணப்பதாரருக்கு தகவல் அனுப்ப 3 நாட்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்படைக்க 14 நாட்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்ய 14 நாட்கள், சான்றிதழ் வழங்க 5 நாட்கள் என 68 நாட்களை எடுத்துக் கொள்ளுமாம் தணிக்கைக் குழு.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு..! - 20-க்கும் மேற்பட்டோர் பலி

vikatan கார்த்திக்.சி :  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.< அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் சதர்லேண்ட் பகுதியில் பாபிஸ்ட் சர்ச்சில் வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபர், திடீரெனச் சுட ஆரம்பித்தார். அதில், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'பாதிக்கப்பட்ட சதர்லேண்ட் பகுதி மக்களுடன் கடவுள் இருப்பார். இந்த நிகழ்வுகளை எஃப்.பி.ஐ கண்காணிக்கின்றன. ஜப்பானிலிருந்து நான் இதைக் கண்காணிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த ஒரு மாத காலத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச்சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி: யார் இந்த அல்வாலிடு பின் தலால்! நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்

மின்னம்பலம் : சவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலிடு பின் தலால் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இவர் அரேபிய நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். உலகின் மதிப்புமிக்க பில்லியனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை இவர் பெற்றிருக்கிறார். இதனால் இவருடைய கைது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அல்வாலிடு பின் தலால் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார்? எதற்காக தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்த சிறு செய்திக்குறிப்பை காணலாம்.
சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் பிரின்ஸ் தலால் மற்றும் மோனா அல் சோக் இணையர்களுக்கு அல்வாலிடு பின் தலால் 1955ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார். இவருடைய தாத்தா இபின் சவுத் சவுதி அரேபியாவின் முதல் அரசர் ஆவார். அல்வாலிடு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ கல்லூரியில் தொழில் நிர்வாகப் பட்டமும், நியூயார்க் நகரில் உள்ள சைரக்ஸ் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பாடப் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அல்-தலாலைப் பொறுத்தவரையில் பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் நாளை ஆர்ப்பாட்டம்

தினகரன் : சென்னை: கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.

மோடி சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்

பிரதமர் இன்று சென்னை வருகை ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பங்கேற்கிறார்தினத்தந்தி’ பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் பிரதமர் கலந்து கொண்டு பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.

ஸ்டேட் வங்கியின் குண்டர்கள் தாக்குதல் விவசாயி மரணம், ஸ்டேட் வங்கியின் ட்ராக்டர் கடன்,,

மாலைமலர் : தண்டராம்பட்டு அருகே வங்கி ஊழியர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய வந்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் மயங்கி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். டிராக்டரை ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு: விவசாயி மயங்கி விழுந்து மரணம் தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானசேகரன் (வயது55). விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கினார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்தி வந்தார். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !

வினவு : இன்று (05-11-2017) கார்ட்டூனிஸ்ட் பாலாவை அவரது இல்லத்தில் நெல்லை போலீசு கைது செய்தது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாளர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை !நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார்.
கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின்  அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுதந்திரமான கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி கார்ட்டூன் வரைந்து வருகிறார்.

சவுதியில் அரசியல் குழப்பம் ... 11 இளவரசர்கள் அமைச்சர்கள் கைது ,,, பதவி போட்டி .. ஊழல் ,,, தீவிரவாதம் ...



தினமலர் : ரியாத்: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை துவங்கிய நிலையில், முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தவதை தடுக்கவும், ஊழல் செய்த நபர்களை தண்டிப்பதே விசாரணை கமிஷனின் நோக்கம் என அந்நாட்டு மீடியாவில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அந்நாட்டு கோடீஸ்வரரான அல் வலீத் பின் தலாலும் ஒருவர் ஆவார்.

ஆளுங்கட்சி பாஜக ... எதிர்கட்சி கமலஹாசன் ,,, இதுதான் பார்ப்பனீயம் ! எங்கும் அவாளே ,,,

Aalanci Spm : ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக் கொண்டிருந்தோம். ..கமல்
இல்லை கமல் அவர்களே
ஐம்பது ஆண்டுகளாக உங்கள் பூணூலை மறைத்துக் கொண்டிருந்தீர்கள்.. ஆனாலும் அதையெல்லாம் மீறி அடிக்கடி எட்டிபார்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்.. ..
கொஞ்சம் கவனித்தால் புரியும் இதுவரை கமல் பாஜகவை விமர்சிக்கவே இல்லை .. ஆனால் பகுத்தறிவு வேடம் கட்டி நம்மை விமர்சிப்பார். விமர்சனம் செய்யட்டும் அதில் காரியமாக ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.. ஐம்பதாண்டுகள் என யாரையெல்லாம் சொல்கிறார் ..
அண்ணா கலைஞர் மகோரா ஜெயா ஆட்சி .. நாங்களே மகோரா ஜெயா ஆட்சியை திராவிடத்தின் ஆட்சியாக கருதியதில்லை திராவிட போர்வையில் ஏறக்குறை பாசிச கைகூலிகளின் ஆட்சி அது .. இங்கே நேரடியாக வலம் வரமுடியாதென்பதால் திராவிட போர்வையில் ஆட்சி செய்தார்கள் அதனால் மயிலு குயிலென்றென்லாம் பெயர் சூட்டி மத்தியில் ஆள்வோரை/அதிகாரிகளை குளிர்வித்து ஆட்சி செய்தார் .. ஜெயாவோ நேரடியாகவே இந்துத்துத்துவவாதிகளை செயல்படவிட்டார் கடைசி காலங்களில் அவர்களாலேயே மிரட்டலுக்கும் ஆளானார்.

கமலுக்கு திருமாவளவன் ஆதரவு!

மின்னம்பலம் : நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, விசிக தலைவர் திருமாவளவன், "கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்று சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கமலுக்கு திருமாவளவன் ஆதரவு!நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகத் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக ட்விட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டுவரும் நிலையில், கடந்த வாரம் வெளிவந்த ஆனந்த விகடன் வார இதழில், ”முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததைச் சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர்” என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஃபேஸ்புக்கில் 27 கோடி போலிக் கணக்குகள்!

ஃபேஸ்புக்கில் 27 கோடி போலிக் கணக்குகள்!மின்னம்பலம் :உலக முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை நேற்று (நவம்பர் 4) வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஃபேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 210 கோடி பயனாளிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் விரும்பத்தகாத வகையில் உள்ளது.

ப்ளூ வேல்: தற்கொலைக்காக சென்னை வந்த இளைஞர்!

ப்ளூ வேல்: தற்கொலைக்காக சென்னை வந்த இளைஞர்!minnambalam : ப்ளூ வேல் கேம் விளையாடி தற்கொலை செய்துகொள்ள சென்னை வந்த 17 வயது இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடிவந்துள்ளார். அவர் பி.ஏ., முதலாமாண்டு படித்துவந்துள்ளார். அந்த விளையாட்டின் அட்மின் அவரை ரயிலில் சென்னைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த இளைஞர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாருக்கு இளைஞரின் புகைப்படத்தை அனுப்பித் தகவல் கொடுத்தனர்.

BBC : பெல்ஜியம் போலீஸிடம் சரணடைந்த கேட்டலன் முன்னாள் தலைவர்

பதவியில் இருந்து அகற்றப்பட்ட கேட்டலோனியா தலைவர் சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் ஆலோசகர்களும் தானாக பெல்ஜியம் போலீஸார் முன்பு ஆஜராகியுள்ளதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நீதிபதி ஒருவர் பிறப்பித்த ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதாணையை செயல்படுத்துவதா என்பதைத் திங்கட்கிழமை காலை விசாரணை நீதிபதி முடிவு செய்வார் என அவர் தெரிவித்துள்ளார். கேட்டலோனியா நாடாளுமன்றம் சுதந்திரத்தை அறிவித்தவுடன், ஸ்பெயினின் மத்திய அரசு அங்கு நேரடி ஆட்சியை அமல்படுத்திய பிறகு, பூஜ்டிமோன் பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றார். முறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்று பூஜ்டிமோன் கூறி இருந்தார். பூஜ்டிமோன் மீதும், அவரது நான்கு கூட்டாளிகள் மீதும் அரசுக்கு எதிராகக் கலகம் செய்தல், தேசத்துரோகம் மற்றும் மக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காகத் தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கமலஹாசன் :நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி!

மாலைமலர் : நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி:
நடிகர் கமல் அறிவிப்பு சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் கமலஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் கமலஹாசன் பேசியதாவது: பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும். இயற்கை சீற்றத்திற்கு ஏழை, பணக்காரர்கள் என வித்தியாசம் தெரியாது. ஏதோ ஆர்வக்கோளாறில் பதவிக்காக பிரச்சனைகளை பற்றி நான் பேசவில்லை. பணக்காரர்கள் மட்டும் முறையாக வரிகட்டினால் போதும் நாடு ஓரளவுக்கு சரியாகி விடும். அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகி விட்டது.

தாமரையுடன், இரட்டை இலை இணைய வேண்டும்' - அ.தி.மு.க சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பேச்சு!

விகடன் -இரா. குருபிரசாத் :  தாமரையுடன் இரட்டை இலை இணைந்து செயல்பட வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும், தாமரை உடன் இரட்டை இலை கூட்டணி அமைக்க வேண்டுமெனவும் கோவை சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ கனகராஜ் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், சர்ச்சைக் கருத்துகளை கூறுவது வாடிக்கையாகி விட்டது. இந்தப் பட்டியலில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனராஜ்க்கு முக்கிய இடம் உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. இதை சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் தொடங்கி வைத்தார். கோலப்போட்டியில், தாமரை உடன் கூடிய இரட்டை இலைச் சின்ன கோலத்திற்கு இரண்டாம் ரூபாய் பரிசு வழங்கினார். எம்.எல்.ஏ கனகராஜ்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது! அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததால்....

bala
vikatan -பிரதீப்.த.ரே ::நெல்லை  தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.
இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக,  'லைன்ஸ் மீடியா 'என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.

நடைபயிற்சிக்கும் கட்டணமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

Chinnaiyah Kasi : சென்னை, : விளையாட்டு / நடைபயிற்சிக்கு அரசு விளையாட்டு மைதானங்களில்  கட்டணம் வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு கட்டணங்களை வசூல் செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் இயங்கி வருகிற விளையாட்டு மையங்கள், பல்வேறு விளையாட்டு திறன்களை வளர்ப்பதற்கு பயன்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போதுள்ள 17 பல்நோக்கு விளையாட்டுக் கூடங்களும், 25 மினி விளையாட்டு அரங்குகளும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. அதே போன்று பொதுமக்களும் இந்த விளையாட்டுத் திடல்களை நடைபயிற்சிக்கும், விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஷாலின்: பிரமாண்ட இயக்குனர் பன்சாலியா ? சங்கரா ? பெரிது எல்லாமே அழகு கிடையாதே?

Shalin maria lawrence : சங்கரை பிரமாண்ட இயக்குனர்
என்று ஒரு போதும் ஒத்து கொள்ள மாட்டேன் .என்னை பொறுத்தவரை இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிதான் .
சங்கரின் பிரமாண்ட படங்கள் omr ரோட்டுலுள்ள மிக பெரிய கட்டிடத்திற்கு ஒப்பானவை .Its just steel and concrete .மாறாக பன்சாலியின் படங்கள் ஒரு அழகிய அரண்மனைக்கு ஒப்பாயிருக்கிறது .
பெரிது எல்லாமே அழகு கிடையாதே ....
என்னை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்பது ஒரு காட்சி என்னை வாயை பிளந்து ஆ வென பார்க்க வைக்க வேண்டும் .அந்த காட்சி என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .Teleportation போல் . அந்த பிரமாண்டம் நடிகர்களின் முக பாவனையில் தெரிய வேண்டும் .திரைக்கதையில் தெரிய வேண்டும் .கதையின் பரிமாணத்தில் தெரிய வேண்டும் .

யாருக்குப் பயனளிக்கிறது டிஜிட்டல் மீடியா?

சண்டே சர்ச்சை: யாருக்குப் பயனளிக்கிறது டிஜிட்டல் மீடியா?மின்னம்பலம்: கபீஷ் பாலகிருஷ்ணன் படம் ஓடவில்லை, சாட்டிலைட் ரைட்ஸ் விற்கவில்லை, வீடியோ பைரஸி என்று தினம் தினம் புலம்பும் சினிமா தயாரிப்பாளர்களின் சங்கடங்களைஓரளவுக்கு தீர்த்துவைக்கும் அவதார புருஷன் ‘வீடியோ-ஆன்-டிமேன்ட்’ (விஓடி) டிஜிட்டல் மீடியா என்று தற்போது சொல்லப்பபட்டுவருகிறது.
தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்பது வரையறுக்கப்படாத உலக நியதி. இந்நிலையில் மீடியா உலகம் முழுவதையும் தன்வயப்படுத்தும் முயற்சியில் அதீத வெற்றி பெற்றுள்ள விஓடி டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள், அதில் முழுமையான வெற்றியைப் பெறப் பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதற்கான செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும் விதத்தில் பொழுதுபோக்கு, செய்தி, சினிமா என்று அனைத்து ஊடகங்களின் டிஜிட்டல் ரைட்ஸையும்அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றன.

ஆர்.எஸ்.எஸ். கிளையாக மாறிய சிபிஐ!

மின்னம்பலம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பாக சிபிஐ மாறிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
வியாபம் வழக்கில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு , சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியதை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக சிபிஐ மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கமல்நாத், “சிவராஜ்சிங் சவுகானுக்கு எந்த நீதிமன்றமாவது நற்சான்றிதழ் வழங்கியதா? சிபிஐ அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் சிபிஐ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாகத் தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-ஐ கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிபிஐ தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் சிபிஐ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையாக மாறிவிட்டது நிரூபணம் ஆகியுள்ளது” என்று தெரிவித்தார்.

வாரணாசியில் கமல் வழக்கு 22 அம தேதி விசாரணை ! ஐந்து பிரிவுகளில்..

தினமணி : ஹிந்து தீவிரவாதிகள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிய கமல் ஹாசன் மீது தற்போது வாரணாசியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத நம்பிக்கைகளை காயப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, IPC பிரிவு 500, 511, 298, 295(a) & 505(c) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கமல்ஹாசன் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக கட்சியை சேர்ந்த எச்.ராஜா, "கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புக்கள் 20 வருடங்களுக்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்” என கூறியுள்ளார்.

இன்றும் பலத்த மழை .. 21 கிராமங்களுக்கு வெள்ள ஆபத்து

காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் அருகே மையம் இன்றும் பலத்த மழை பெய்யும்தினத்தந்தி : இன்றும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிப்பு 21 கிராமங்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. சென்னை, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக பருவமழை தொடங்கினாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

சென்னை புறநகர் ,,10 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன"

தினதநதி: சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாததால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஆலந்தூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டை ஏரி நிரம்பி வருவதால் அதன் அருகே உள்ள நெசவாளர் நகர், பல்லவன் நகர், ஏரிக்கரை தெரு பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் ஏரியின் கரையில் ஒரு பகுதியில் உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால் தண்ணீர் வெளியேறி சாலைகளில் ஓடியது. இதனால் தங்கள் பகுதிகளில் உள்ள தண்ணீர் வடிந்துவிடும் என அப் பகுதியினர் தெரிவித்தனர்.

வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர்திறப்பு

தினகரன் :கடலூர்: தொடர்மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 2000 கனஅடி நீர்வரத்து உள்ளதால் ஏரி நீர்மட்டம் 45 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்வால் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். வழியாக 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலுார்: கனமழை காரணமாக கடலுார் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லாததால் வேகமாக ஏரி நிரம்பிவருகிறது. முழு கொள்ளவான 47.5 அடி வீராணம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 44.64 அடியை எட்டியுள்ளது. வடவார் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வரத்து உள்ளது.

திரு.சண்முகநாதன் ... ஒரு உதயசூரியனின் 50 ஆண்டுகால .... இதுவரை தெரியாத செய்திகள் ....

Srinivasan Prabu Maruthanayagam Lalapet  :  திரு சண்முகநாதன்! இன்றிலிருந்து 50 ஆண்டுகால கடந்த கால தமிழக அரசியலை எழுதினால் அதில் இந்த பெயர் விடுபட்டிருந்தால் அது எழுதத் தெரியாதவன் குற்றமேயன்றி வரலாற்றின் குற்றமல்ல. ஆன்மீகத்தில் முருகன் வரலாறு எழுதினால் வீரபாகுவிற்கு பக்கங்கள் ஒதுக்குவதைப்போல, சிவபுராணத்தில் நந்தீஸ்வரர் வரலாறு எப்படியோ இப்படி ஆன்மீகம் தவிர்த்து பழைய வரலாறுகளில் கூட இருந்து கூட உதாரணங்கள் சொல்ல இயலும். அதையும் தாண்டி கருணாநிதி - சண்முகநாதன் உறவு என்பது பிற்காலத்தில் இது போல இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு உதாரண வரலாறாக இருக்கப்போவது என்பது மட்டும் உண்மை!
நமக்கு தான் அவர் சண்முகநாதன். ஆனால் இதோ கலைஞர் வீட்டில் சமீபத்தில் பிறந்த குழந்தை அருள்நிதி அவர்கள் மகனுக்கு கூட இவர் பெயர் “குட்டி பி ஏ” தான். தயாளுஅம்மாளும், ராஜாத்தி அம்மாளும் வைத்த “குட்டி பி ஏ” என்கிற பெயர் தான் இப்போதும் கோபாலபுரம் மற்றும் சி ஐ டி காலணி வீட்டின் சுவர் முழுக்க எதிரொலித்துக் கொண்டு இருக்கும். எனக்கு தெரிந்து அவர் இத்தனை நேரம் செல்வழித்து ஒருவருக்கு பேட்டி கொடுக்கின்றார் எனில் இதுவே முதன்முறை. இவரிடம் போய் “எனக்கு ஒரு பேட்டி வேண்டும்” என கேட்கும் தைரியம் கூட யாருக்கும் இருந்தது இல்லை. அத்தனை ஒரு பிசி மனிதன். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு மனிதன் தன் குடுப்பத்தை கூட கவனிக்காமல், தன் சொந்த பந்தங்கள் வீட்டு திருமண, துக்க நிகழ்வுகளுக்கு கூட செல்லாமல் தன்னை அர்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார் எனில் ஒரு விஷயம் தான் புலப்படுகின்றது. அவர் சம்பளத்துக்காக அதை செய்யாமல் ஒரு புலகாங்கிதம் அடையும் சேவையாக செய்து வருகின்றார் என்பதே பொருள்!