"சசிகலா மீது புகார் சொன்ன சிறைத்துறை டிஐஜி ரூபா
இன்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகர போக்குவரத்து
ஆணையராக அவர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல, 2 கோடி ரூபாய்
பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் கொடுத்தார் என ஏடிஜிபி
சத்யநாராயணா மீது பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார் ரூபா. அந்த
சத்யநாராயணாவும் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரூபா சொன்ன புகாரை விசாரிக்கக் கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக் குழு
அமைத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ரூபாவும் மாற்றம் செய்யப்பட்டு
இருக்கிறார்.
திங்கள், 17 ஜூலை, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தால் குண்டாஸ்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டு
பிரசுரங்கள் விநியோகித்ததற்காகக் கைது செய்யப்பட்ட மாணவி மீது குண்டர்
தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் நக்சல் அமைப்புடன் தொடர்பிலிருக்கிறார், என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிஐஜி ரூபா மாற்றம் : முதல்வர் விளக்கம்!

மின்னம்பலம் : சசிகலாவுக்கு
எதிராகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா
அதிரடியாகப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபி
சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான
உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இந்தநிலையில், சிறைக்காவலர்கள் சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை வழங்கியுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுகுறித்து இன்று ஜூலை 13 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ரூபா,’சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதுகுறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இந்த சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் ஜாதகம் பார்த்து சிகிச்சை! ம . பி. பாஜக அரசு முடிவு! RSS குண்டர்களுக்கு பெரும் வாய்ப்பு!
மின்னம்பலம் : மத்திய பிரதேச அரசு, ஜோதிடர்களை வைத்து புற
நோயாளி துறையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஜோதிடர்கள் மற்றும் குறிசொல்லுகிறவர்கள்
ஆலோசனை வழங்குவார்கள்.
போபாலில் உள்ள மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தான் (எம்.பி.எஸ்.எஸ்) என்னும் அரசு நிறுவனத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஜோதிடர்கள் நியமிக்கப்படுவார்கள். ஜோதிடர்கள், வாஸ்து வல்லுநர்கள், வேதவாதிகள் ஆகியோர் வாரத்துக்கு இருமுறை 3 முதல் 4 மணி நேரம் வரை நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களின் ஜாதகங்களை ஆழமாக ஆராய்வார்கள்.
ஆஸ்ட்ரோ- புற நோயாளி துறை என்ற பெயரை மட்டுமே நாங்கள் வழங்கியுள்ளோம். எந்த விதமான சிகிச்சையும் செய்யப்படுவதில்லை.
போபாலில் செஞ்சிலுவை கட்டிடம் அருகே அமைந்துள்ள யோக மைய கட்டிடத்தில் புற நோயாளி துறை செயல்படும். என எம்.பி.எஸ்.எஸ் இயக்குநர் பி.ஆர்.திவாரி தெரிவித்துள்ளார்.

BBC :டெல்லியில் மீண்டும் தமிழக விவசாயிகளின் போராட்டம் !
தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் தங்களது நூதனப் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 41- நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய அவர்கள், தாற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள்.
இந் நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து, நேற்று நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். கால், கைகளை சங்கிலியால் பிணைத்த பூட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்கையா நாயுடு .. பாஜகவின் துணை குரியரசு தேர்தல் வேட்பாளர்.
துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் -18 ஆகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை, துணை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் வெங்கைய நாயுடு என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக உள்ளார் வெங்கைய நாயுடு. 2002ல் இருந்து 2004 வரை பாஜகவின் தேசிய தலைவராக இருந்தவர் வெங்கைய நாயுடு. ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் வெங்கையநாயுடு. நக்கீரன்
Smart Class சென்னை AC.. எல் கே ஜி முதல் ஆங்கில வழி வகுப்புகள் .. நகராட்சி நடுநிலை பள்ளியின் சாதனை
tamilthehindu : குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் ஸ்மார்ட் கிளாஸ்; 13
கம்ப்யூட்டர்களுடன் நவீன ஆய்வகம்; 2,700 நூல்களுடன் நூலகம்; எல்.கே.ஜி. முதல் ஆங்கில வழி வகுப்புகள்; பள்ளியில் மின் சாதனங்கள் இயங்க சூரிய ஒளி மூலம் மின்சாரம்; விதவிதமான செடிகளுடன் பசுமையாகக் காட்சியளிக்கும் விசாலமான பள்ளி வளாகம்… இப்படி இன்னும் பல வசதிகளுடன் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை, ஏழை மாணவர்களுக்கு முற்றிலும் இலவ சமாக வழங்கி வருகிறது சென்னை பெரம்பூர் மடுமா நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. மாணவர்கள் விரும்பும் வகை யில் போதனை முறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட அனைத்து கற்பித்தல் சாதனங்களையும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாகப் பயன் படுத்துகிறார்கள். எஸ்.எஸ்.ஏ. பயில ரங்குகளில் வழங்கப்படும் பயிற் சியை ஆசிரியர்கள் அப்படியே வகுப் பறைகளில் அமல்படுத்துகின்றனர். எந்த வகுப்பில் நுழைந்தாலும் அங்கே செயல்வழிக் கற்றல் என்பதைப் பார்க்க முடிகிறது.
BBC :அமர்நாத்,, 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 16 யாத்ரிகர்கள் மரணம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 16 அமர்நாத் யாத்ரிகர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில், விபத்து குறித்த தகவலை மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதுஜம்மு காஷ்மீர் மாநில அரசின் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 42 பேர் பயணிக்கக்கூடிய பேருந்து ஒன்று ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்திரிகர்களுடன் பயணித்து கொண்டிருந்தது.
அப்போது திடிரென சுமார் 200-250 அடி உயரமுள்ள பள்ளத்தாக்கு ஒன்றிற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த யாத்ரிகர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளதாகவும் பிடிஐ முகமை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 10 ஆம் தேதி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், பயணிகள் பேருந்து ஒன்றின் மீது இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது, சரியாக ஆறு தினங்கள் கழித்து இந்த விபத்து நடந்துள்ளது.
ஞாயிறு, 16 ஜூலை, 2017
Stop Hindi Imposition ஹிந்தி ஆதிக்கத்துக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு!
Stop Hindi Imposition
This is the "Silent Revolution" going on in Bengaluru now.
In just the last 5 days, I came across several stickers (on vehicles) and posters (in shops) appealing to those who have been in Karnataka for a long time or planning to settle down in Karnataka, to give a try to learn some basic Kannada so that they need not remain as "guests forever". The top-left poster was in a popular jewelry store (Avenue Road, Bengaluru). And the blue colored stickers are distributed for free at an auto stand near Chikpete. Also, some of these auto drivers have a stock of tiny booklets titled "Learn Kannada in 1 hour" which they give away to their customers for free of cost. One of the common complaints has been that even if someone is interested in learning Kannada, there is nobody to teach them. Hence, several enthusiastic Kannadigas are sparing some time from their busy schedules, to prepare simple tutorials to teach Kannada through simple & easy chapters. There are websites, whatsapp groups, SMS groups, facebook pages, and even audio lessons through which one can easily learn Kannada. ©Guru_Prasad #StopHindiImposition More details: http://www.thehindu.com/news/national/karnataka/kannada-gottilla-learn-on-w
நடிகர் விஜய் சொன்னது வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது: டெல்லியில் அய்யாக்கண்ணு
விஜய் ஐயா சொன்னது வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது என்று தென்னிந்திய
நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணையதளத்தின் சினிமா விருதுகள் வழங்கும்
நிகழ்வில் கலந்து கொண்டார் விஜய். அப்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை
குறித்து கவலை தெரிவித்துப் பேசினார்.
தன்னுடைய பேச்சில், "அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாக பெற
ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு
தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. முதலில் விவசாயிகளுக்கான
நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்"
என்று பேசினார் விஜய்.
முன்னணி நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு
சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில்
விவசாயிகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்ணு என்பது
குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் கமலஹாசன் கருத்துக்களை அடித்து துவம்சம் செய்த மதிமாறன் ... சபாஷ் தோழரே?
‘நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியதால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிமீதும் காயத்ரி ரகுராம்மீதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜூலை 16ஆம் தேதி விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கமலின் முழு முயற்சியாலேயே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. பணத்துக்காக அவர் எதையும் செய்வார். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆபாச கருத்துகள் வெளியிடுகின்றனர். கமல்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்
பாமக குடியரசு தேர்தலை புறக்கணிக்கிறது ... ராமதாஸ் அறிவிப்பு!
மின்னம்பலம் :நாளை (ஜூலை 17) நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ளது. இதில், பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேருமே தலித் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராய நகரில் பாமகவின் 29-வது தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது,அப்போது விழாவில் கலந்து கொண்ட பின், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறினோம். ஆனால், அவர்கள் இதுபற்றி எந்தப் பதிலையும் தரவில்லை. அதனால் பாமக நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம்.
பாமக-வைபோல் எந்தக் கட்சியும், மக்களுக்கும், மொழிக்கும் பாடுபட்டதில்லை. அதிமுக முடிந்து போன கட்சி. அணையப் போகும் நேரத்தில் விளக்கு பிரகாசிப்பதை போல் இப்போதைய நிலை உள்ளது. திமுக ஆட்சிக் கனவும் பலிக்காது. இந்த 2 கட்சிகளாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாமக நிரப்பும்.
மீரா குமாருக்குப் பெருகும் ஆதரவு! மனசாட்சி கருதுகோள் வெற்றியை நோக்கி?
மின்னம்பலம் : ஜனாதிபதி தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி நடைபெற
இருக்கும் நிலையில், இரண்டு அணிகளாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் அணி, மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைவதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அதையொட்டி, வேட்பாளர்கள் இருவரும் தங்கள் தரப்பு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது
தமிழகம் திரும்பமாட்டோம்:
டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று விரைவில் தீர்வு ஏற்படும் என்று வாக்குறுதி அளித்ததால், 41 நாட்கள் நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று தமிழகம் திரும்பினர்.
மே 25-ந்தேதிக்குள் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. இதனால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.
‘சேரி பிஹேவியர் ’ என்று சொன்ன காயத்ரிக்கு சாரு நிவேதிதா சொல்லும் விநோத தண்டனை!
charu nivedha: :முகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி. எழுதியவர் லுலு தேவ ஜம்லா
குளிக்காத கழுதைகள்
நேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன்! அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி…
இங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் மாதிரி… அவுங்களை இங்க long grassers அப்டீன்னு சொல்லுவோம்… அவுங்க lifestyle ல குளிக்கிறதுங்கிற பழக்கமே இருக்காது… அவுங்க நம்மள கடந்து போயி 5 நிமிஷம் ஆனாலும் அவுங்களோட கந்தம் அந்த இடத்த விட்டு போகாது… அந்த நற்கந்தத்தை நாம தான் உணர்ந்து மூக்கை பொத்திக்குவோமே ஒழிய, அவுங்ககிட்ட நீ நாறுற அப்டீன்னு சொல்ல மாட்டோம்! அவுங்களும் அந்த நாத்தத்தை ஒரு போதும் உணருறதே இல்ல! அப்டி யாராச்சும் அவுங்க நாத்தத்தை பத்தி சொன்னா அவுங்களை இவ யாருடா கிறுக்கச்சி பெனாத்துறான்னு பார்ப்பாங்களா இல்லியா?

பெங்களூர்... ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தென்னிந்திய மாநில மாநாடு ... கர்நாடக ரக்ஷக வேதிகே ஒழுங்கு ..
ஹிந்தி ஆதிக்கத்தை கூட்டாக எதிர்ப்போம்'
இந்திய மொழிக் குடும்பங்களுடன் சேர்ந்து ஹிந்தி மொழியின் ஆதிக்கத்தை கூட்டாக எதிர்ப்போம் என கர்நாடக ரக்ஷனவேதிகே தலைவர் நாராயண கெளடா தெரிவித்தார்.
கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் தமிழக கேரளா கர்நாடக பிரதிநிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் மொழி சமத்துவத்துக்கான கோரிக்கை வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: இந்தியா, பன்மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் அதிகாரப்பூர்வ அலுவல்மொழியாக மட்டுமல்லாமல், ஆட்சிமொழியாகவும் அறிவிக்க வேண்டும். ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது ஹிந்தி திணிப்பதை கர்நாடக ரக்ஷனவேதிகே தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி நாள் கொண்டாடுவது, ரயில்வே துறை நடத்திய டி-பிரிவு தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்தது,
வைரமுத்து : கலைஞர் எழுதிய சரித்திர படங்களிலும் சமுகமே பேசப்பட்டது!
எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார்.
அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை
உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய்
சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும்
உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா
ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’
(Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது,
திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள்
கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று.
மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா
பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல்
வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த
‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின்
எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல்
‘ஹரிதாஸ்’ 20 பாடல்களோடு வெளியானது. நடிகர்களே பாடகர்களாகவும் பாடகர்களே
நடிகர்களாகவும் இயங்கிவந்த மேடை நாடகங்கள் திரைப்படத் தேரேறியபோதும்
பாடல்கள் என்ற பண்ட மூட்டைகளை விட்டெறியவோ குறைத்துக்கொள்ளவோ முடியவில்லை.
மலையாள நடிகர் திலீப் .... திலகனின் ஆவி பழிவாங்குகிறதா?
யார் இந்த திலீப்?
பன்னீர்செல்வம் : எடப்பாடியும் ஸ்டாலினும் புதுவகையான கூட்டணி அமைத்துள்ளனர்
தம்பிதுரை திடீர் ஞானோதயம் : மத்தியரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது .. அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்
மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது: அரசியல் ரீதியாக அதிமுக எதிர்கொள்ளும்: தம்பிதுரை நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சகாநாயகருமான தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா, தினகரன் ஆகியோர் லஞ்சம் கொடுத்தாக புகார்கள் தொடர்ச்சியாக வருவது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப் புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன எனவும் இதை அரசியல் ரீதியாக அதிமுக எதிர்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் நீட் பிரச்சினைக்கு காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம். தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது.
காமராஜரின் கல்விச் சாதனை ராஜாஜியை வெறுப்பேற்றியது ... ராஜாஜி மூடிய பள்ளிகளின் எண்ணிக்கை 8500 !
ஸ்டாலின் தி :காமராஜர் ஏன் கொண்டாடப்படுகிறார்?
திராவிட ஆட்சிகளின் மீதான சலிப்பும் கோபமும் மட்டும் காமராஜரைக் கொண்டாட காரணம் இல்லை. ராஜாஜி எனும் ராஜாகோபாலச்சாரி என்கிற பார்ப்பனர் தமது மகாண ஆட்சிகாலத்தில் பள்ளிகளை மூடிக் கொண்டிருந்தார். அவர் அப்படி மூடிய பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 8500.
பார்ப்பானுக்கு நிகராக மற்றவரும் கல்வி பெறக்கூடாது என்கிற சனாதன மனோபாவம் தான் அது.பள்ளியை மூடியதோடு இல்லாமல் இருக்கும் பள்ளிகளில் குலத்தொழிலை பயிற்றுவிக்கவும் விரும்பினார் ஆச்சாரி.காங்கிரஸ் மற்றும் திராவிட இய க்க பார்ப்பனரல்லாதார் முயற்சியால் ஆச்சாரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்சியேறிய காமராஜர் பள்ளிகளை திறப்பதையே தமது அடையாளப் பணியாக மாற்றினார்.
அவர் முதல்வராக பதவி ஏற்கும் போது 450 ஆக இருந்த உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை, அவர் ஆட்சி காலத்தில் 2200 ஆக உயர்ந்தது. 3.5 இலட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 13 இலட்சமாக உயர்ந்தது. அதுபோலவே 16000 ஆக இருந்த துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 30000 ஆக உயர்ந்தது. 16 இலட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 48 இலட்சமாக உயர்ந்தது. அவர் பரவலாக கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்திற்குப் பிறகு வெறும் 7 சதவீதமாக இருந்த மாணவர் வருகை 37 சதவீதமாக உயர்ந்தது.

பன்னீர்செல்வம் 40 ஏக்கள் நிலத்தை கிராம மக்களிடம் விற்கிறார் ... ஒரு டீக்கடை பன்னீருக்கு யோகம்தான்
பெரியகுளம்:தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவிக்கு சொந்தமான 40 ஏக்கர் விளைநிலத்தை ரூ.௬
கோடிக்கு வாங்க கிராம கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சுமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட மூன்று கிணறுகளும் வறண்டுவிட்டதால், ஒன்றரை மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊராட்சியின் குடிநீர் கிணறுக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழமாக கிணறு வெட்டியதால், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு வறண்டு போனதாக புகார் எழுந்தது.

Flashback: கர்நாடக சிறையில் பாஜக ஜனார்த்தன ரெட்டிக்கு சிறையில் ராஜ உபச்சாரம்.... வாரம் இருமுறை மசாஜ் செய்ய தனி ஆள்
சுஷ்மா சுவராஜுடன் ரெட்டி சகோதரர்கள்கர்நாடக மாநிலத்தின் சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள் தற்போது
சிறையில் உள்ளனர். அவர்களில் இளையவரான சோமசேகர ரெட்டியிடமிருந்து கடந்த ஆக-30 அன்று ரூ.15,000ஐ சிறை கண்காணிப்பு அதிகாரிகள் கைப்பற்றினார்களாம். ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சகோதரர்களில் நடுவில்லனான ஜனார்த்தன ரெட்டிக்கு சிறையில் ஏறக்குறைய வீட்டளவுக்கு ராஜ உபச்சாரம்.
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் கர்நாடக மாநிலத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்குமளவுக்கு செல்வாக்கு மண்டலமாக வளர்ந்து கொண்டவர்கள். இவர்கள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் வாதிகள் அல்ல. நாடு முழுவதும் உள்ள சிறையில் காசு இருந்தால் எல்லாம் கிடைக்கும் . பாஜக அதை கண்டு கொள்ளாது ஆனால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக ஊழலுக்கு எதிராக தர்மாவேசம் கொள்ளும் ... சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் என்ற குற்றச்சாட்டு பாஜகவின் பேரம் பேசும் தந்திரம்தான்
ஸ்டாலின் : நீட் விலக்கு கோரும் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்க
நீட் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரும் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒரு நாடு - ஒரே தேர்வு என்ற வல்லாதிக்க எண்ணத்தோடுத் திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு மத்திய அரசும் தமிழக அரசும் வேட்டு வைத்திருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக்கூட காட்ட அஞ்சுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)