நக்கீரன்: கட்சி
துவங்கியது முதல் மக்களோடும் மகேசனோடும்தான் கூட்டணி என்று பேசிவந்த
விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து
போட்டியிட்டார். அதன் பலனாக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் ஆனார்.
ஆனால், அதன் பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அடுத்தடுத்த
தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
>நாடாளுமன்ற
தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொண்டர்கள்
வலியுறுத்தி வந்தபோதும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தொண்டர்களை
அதிருப்திக் குள்ளாக்கினார் விஜயகாந்த்.>நடைபெறவிருக்கின்ற
2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பை
பெறலாம் என்று தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை
வலியுறுத்தி வந்தனர். தேமுதிகவுடன் கூட்டணி என்று அறிவிப்பார் என
காஞ்சிபுரம் மாநாட்டில் எதிர்ப்பார்த்து காத்திருந்த தொண்டர்களூக்கு
குளப்பம்தான் மிஞ்சியது.
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
நிதிஷ் குமார் அதிரடி : பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்..
Bihar turns dry as CM Nitish Kumar announces total prohibition on liquor
இந்திய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாகச் சொல்கிறார் முதல்வர் நிதீஷ் குமார். பிஹார் மாநிலத்தில் முதலில் சில பகுதிகளில் துவங்கி, ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பிஹாரில் சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாக அவர் முதல்வர் நிதீஷ் குமார் கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் வெற்றிபெற்றால் பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென வாக்குறுதி வழங்கியிருந்தார் நிதீஷ் குமார்.
இந்திய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாகச் சொல்கிறார் முதல்வர் நிதீஷ் குமார். பிஹார் மாநிலத்தில் முதலில் சில பகுதிகளில் துவங்கி, ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பிஹாரில் சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாக அவர் முதல்வர் நிதீஷ் குமார் கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் வெற்றிபெற்றால் பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென வாக்குறுதி வழங்கியிருந்தார் நிதீஷ் குமார்.
எது ஒரிஜினல் தேமுதிக? போட்டி தேமுதிகவினர் அறிவிப்பு...முரசு சின்னம் எமக்குத்தான்....
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் முரசு சின்னத்தை முடக்கும்
முயற்சியின் முதல் கட்டமாக இப்போதே 6 மாவட்ட செயலாளர்கள், 3 எம்.எல்.ஏக்கள்
நாங்கள்தான் "ஒரிஜனல் தேமுதிக" என சட்டசபை கொறடா சந்திரகுமார் தலைமையில்
'வாய்ஸ்' கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். இந்த கலகக் குரல் தேமுதிகவுக்கு
பெரும் சேதாரத்தைத்தான் கொடுக்கும்; முரசு சின்னத்தை முடக்கி வைக்கும் என
தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என கடந்த 3 மாத
காலமாக பெரும் பரபரப்பு நிலவியது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என
அனைத்து தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக்
கொண்டிருந்தது தேமுதிக.
Trouble for DMDK's Murasu Symbol?
நத்தத்தை பறிகொடுத்த நத்தம் விஸ்வநாதன்.....பழிதீர்த்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா....
அமைச்சர்கள் பலருக்கு இந்தத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறதோ
இல்லையோ, நத்தம் விஸ்வநாதனுக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கப் போகிறது
என்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.கவினர்.
திண்டுக்கல், நத்தம் தொகுதியை 2001 முதல் தக்கவைத்துக் கொண்டிருந்தார்
விஸ்வநாதன். தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தப்
பகுதியை அ.தி.மு.கவின் வலிமையான தொகுதியாக மாற்றியதில் விஸ்வநாதனுக்கு
ரொம்பவே பங்குண்டு. கட்சிக்காரர்கள் முதல் தொகுதி மக்கள் வரையில் யார் என்ன
உதவி என்றாலும், உடனே செய்து தருவதால் யாரும் பகைமை பாராட்ட
நினைத்ததில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறை மற்றும் மதுவிலக்கு
ஆயத் தீர்வை துறைகளில் நத்தம் விஸ்வநாதனின் மகன் மற்றும் உதவியாளர்கள்
போட்ட ஆட்டம் பற்றிய தகவலால் அதிர்ந்து போனது கார்டன். இன்றுவரையில்,
நத்தத்தின் உறவினர் கோபி, உளவுத்துறையின் தீவிர வளையத்தில் இருக்கிறார்.
தேமுதிகவில் வெடித்தெழுந்த போர்கொடி....நம்பவச்சு ஏமாதிட்டாய்ங்க.....
விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரும் நீக்கம் (கொபசே சந்திரகுமார் உட்பட)
5 எம்.எல் .ஏக்கள்மா.செக்கள் விஜயகாந்துக்கு 24 மணி நேரம் கெடு....திமுகவுடன்தான் கூட்டணி.....அதிருப்தியாளர்களை டிஸ்மிஸ்.....தேமுதிக
தே.மு.தி.க. கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்து பத்திரியாளர்களைச் சந்தித்தவர்களை கட்சியைவிட்டு நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கு அதிருப்தி தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் சில மாவட்டச் செயலாளர்களும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
24 மணி நேரத்திற்குள் விஜயகாந்த் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து கட்சித் தலைவர் விஜயகாந்த் நீக்கியிருக்கிறார்.
அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், துணைச் செயலாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர்கள் பலர் என பத்து பேரை கட்சியைவிட்டு நீக்குவதாக விஜயகாந்த் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.tamil.bbc.com
பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம்: யோகா குரு ராம்தேவ்

இந்தியாவில் சட்டம் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் ''பாரத் மாதா
கி ஜே' என சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று யோகாகுரு ராம்தேவ்
பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் எழுப்ப வேண்டும் என்று
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு
இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க இஸ்லாமிய அமைப்புகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தன.
yoga guru Baba Ramdev's controversially 'hate speech'
இந்நிலையில் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை
என்றால் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம்
என்று குறிப்பிட்டார். வைகோ துரோகம் செய்துவிட்டார்! – திண்டுக்கல் ஐ.லியோனி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உயிருள்ளவரை திமுக தலைவர் கருணாநிதிக்கு துரோகம் நினைக்க மாட்டேன் என்று அன்று திமுக மோடைக்குமேடை வைகோ கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை சில நாட்களிலயே மீறிவிட்டார். அவரது துரோகத்தை காலம் மறக்காது. வைகோவிற்கு விடிவுகாலமே இல்லை.
பணம் வாங்கிக் கொண்டு தான் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணி அதிமுகவிற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார்.வெப்துனியா.com
நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றார்?
Priyanka Chopra attempted suicide three times during her struggling days, her ex-manager ...நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பிரியங்கா சோப்ரா
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில்
நடித்து ருகிறார். அந்த படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.
இந்த நிலையில் 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள்
மானேஜர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
3 முறை தற்கொலைக்கு முயன்றார்
பிரியங்கா சோப்ரா இப்போது மிகவும் பலமானவராக இருக்கிறார். ஆனால், அவருக்கு
நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா
சோப்ராவின் முன்னாள் ஆண் நண்பர் அசீம் மெர்சண்ட்டின் தாய் இறந்ததை
தொடர்ந்து, 2002-ம் ஆண்டில் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, நான்
தான் அவரை தடுத்து நிறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
BBC:1,200 இந்தியர்கள் இலங்கையில் சிறுநீரக தானம்
கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார்
1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக
தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில்
ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட
இந்தியர்கள் தரப்பு வழக்கறிஞர் லஷான் டயஸ் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத்
தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆறு பேரும் இலங்கையில் தமது சிறுநீரகங்களை அன்பளிப்பு செய்ததாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆறு பேரும் இலங்கையில் தமது சிறுநீரகங்களை அன்பளிப்பு செய்ததாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உடையும் நிலையில் வாசன், சரத்குமார் கட்சிகள்.....
வருத்தப்படுகிறார் வைகோ ! வாசன், வேல்முருகன் அதிமுகவால் கைவிடப்பட்டதால்....அதிமுகவின் பி டீம் பேச்சாளர் அல்லவா?
வருத்தப்படுகிறேன்.(இருக்காதா பின்னே?) என்னால் கருத்து கூற முடியாது: வைகோ பேட்டி
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், த.மா.கா. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து தன்னால் தனித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக கூட்டணியில் வாசன், வேல்முருகன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய சூழலில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று தெரியாது. மற்றப்படி நானாக எதையும் சொல்ல முடியாது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நானாக எந்த கருத்தையும் தற்போது கூற முடியாது என்றார்.nakkheeran.in
திங்கள், 4 ஏப்ரல், 2016
47 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை....1991ல் பிலிபிட் என்கவுண்டர்...10 சீக்கியர்களை சுட்டுக்கொன்றதாற்காக
A total of 57 policemen were chargesheeted in the case of which 10 died in the course of the trial. ... A special CBI court Friday held 47 policemen guilty of killing 10 Sikh men in three fake encounters in a single night in Pilibhit district of Uttar Pradesh nearly 25 years ago ...
+டெல்லி: 1991ல் பிலிபிட் போலி என்கவுண்டர் வழக்கில் 47 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது 10 சீக்கியர்களை சுட்டுக்கொன்றதாக போலீசாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் 3 போலி என்கவுண்டர்களில் 10 சீக்கியர்களை கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.
தமிழக கோவில்களில் ஆடைகட்டுப்பாடு ரத்து...உயர்நீதி மன்றம் ஆணை
தமிழகத்திலுள்ள கோயில்களில் நுழைய பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை
கட்டுப்பாட்டை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை
கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஆண்டு
நவம்பர் 26ம் தேதி உத்தரவிட்டது.
Dress code in Temple: Madras High Court Bench on Monday dismissed an
order passed by a single judge
அதை தொடர்ந்து, ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை,
இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது.
இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை
வைக்கப்பட்டது.
தமாகா...கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில்...விரைவில் ஜெ.வுடன் சந்திப்பு?
கேட்டதைவிட குறைவான தொகுதி களை தந்தாலும் பரவாயில்லை, அதிமுகவுடனே கூட்டணி
அமைப்பது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்துவிட்டார். ஓரிரு
நாளிள் ஜெயலலிதாவை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. சொந்த
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் மாவட் டத்துக்கு ஒரு தொகுதி
என்றும் தமாகா கோரிக்கை விடுத்ததால், அதிமுக வுடன் பேச்சுவார்த்தை தொடங்கு
வதில் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில், அதிமுக - தமாகா இடையே நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில்
உடன்பாடு ஏற்பட்டுள் ளதாகவும் ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் ஓரிரு நாளில்
சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா ! கொள்ளையர்கள் விபரம்: அமிதாப் பச்சன்,ஐஸ்வர்யா ராய், அதானி,கே.பி.சிங்,அனுராக்.........
பனாமா என்றதும் அட்லாண்டிக்
பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய்
நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும்.
பனாமா கால்வாயின் புகழுக்கு போட்டியாக பனாமா நாடும் உலகெங்கிலும் உள்ள
திருட்டு பணத்தை, ஊழல் சொத்தை, வரி ஏய்ப்பு வருமானத்தை பத்திரமாக
பாதுகாக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது.
உலகெங்கிலும் பறந்து சென்று இந்தியாவின் புகழை பரப்பி வரும் மோடிஜியின் பணிக்கு பனாமாவும் துணை நிற்கிறது. ஆம் நண்பர்களே, சென்ற வருடம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள HSBC Geneva ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்களின் கள்ளக் கணக்குகளும் கருப்புப் பணமும் அம்பலத்திற்கு வந்தன. அது ஜெனிவா லீக்ஸ் என்றால் இந்த வருடம் பனாமா லீக்ஸ். பனாமா லீக்ஸில் அலங்கரிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல்.
வரியற்ற சொர்க்கம் என்று அழைக்கப்படும் பனாமா நாடு வட அமெரிக்கா மற்றும் தென்னெமரிக்காவை இணைக்கும் மத்திய அமெரிக்காவில் உள்ளது.
உலகெங்கிலும் பறந்து சென்று இந்தியாவின் புகழை பரப்பி வரும் மோடிஜியின் பணிக்கு பனாமாவும் துணை நிற்கிறது. ஆம் நண்பர்களே, சென்ற வருடம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள HSBC Geneva ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்களின் கள்ளக் கணக்குகளும் கருப்புப் பணமும் அம்பலத்திற்கு வந்தன. அது ஜெனிவா லீக்ஸ் என்றால் இந்த வருடம் பனாமா லீக்ஸ். பனாமா லீக்ஸில் அலங்கரிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல்.
வரியற்ற சொர்க்கம் என்று அழைக்கப்படும் பனாமா நாடு வட அமெரிக்கா மற்றும் தென்னெமரிக்காவை இணைக்கும் மத்திய அமெரிக்காவில் உள்ளது.
வாசனுக்கும் வேல்முருகனுக்கும் போயஸ் கார்டன் கதவை சாத்திய மர்மம்...
அதிமுக வேட்பாளர்கள் 234 பேரின் பெயர்கள் விபரம்....31 பெண்கள்..
அதிமுக-வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும்,
முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். பிற்பகல் முதல் வெளியாகிக்
கொண்டிருந்த வேட்பாளர் பட்டியல் தற்போது முழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக 227 தொகுதிகளிலும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்:
1. ஆர்.கே நகர் - மீண்டும் ஜெயலலிதா போட்டி
2. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்;
3. .கடலூர் - எம்.சி. சம்பத்;
4. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக 227 தொகுதிகளிலும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்:
1. ஆர்.கே நகர் - மீண்டும் ஜெயலலிதா போட்டி
2. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்;
3. .கடலூர் - எம்.சி. சம்பத்;
4. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்
அதிமுக சீட் வழங்காமல் ஒதுக்கிய கட்சிகள் விபரம்.... வேல்முருகன்,சேதுராமன், ஸ்ரீதர் வாண்டையார்.....
சென்னை: அதிமுகவின் கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டிருந்த தமிழக
வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
234 தொகுதிகளுக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை
இன்று வெளியிட்டார், கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான
ஜெயலலிதா. அதிமுக 227 தொகுதிகளிலும், கூட்டணியிலுள்ள கட்சிகள் 7
தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jayalalitha avoid to share seats with some alliance partners
சமீபத்தில் உருவாக்கப்பட்ட நடிகர் கருணாசின் கட்சி, தமீம் அன்சாரி
கட்சியினருக்கெல்லாம் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக
வாழ்வுரிமை கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதிமுக கூட்டணி தொகுதிகள் வேட்பாளர்கள் விவரம்
மதுராந்தகம் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சியின் தலைவர்)
திருச்செந்தூர் சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்)
காங்கேயம் தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர்)
நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்)
ஒட்டன்சத்திரம் (மனிதநேய ஜனநாயக கட்சி)
கடையநல்லூர் எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லீம் கட்சியின் தலைவர்)
திருவாடானை கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்)
அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. nakkheeran.in
அதிமுக 227 தொகுதிகளில் போட்டி,கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில்,
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அஇதிஅமுக தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ளது.இதன்படி அஇஅதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 227லும் கூட்டணிக் கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கட்சித் தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பல அமைச்சர்களுகு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
போடியில் ஓ பன்னீர்செல்வம், ஆலந்தூரில் பன்ருட்டி ராமச்சந்திரன், ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன், மைலாபூரில் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேதிமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தவர்களில் பாண்டியராஜனுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.tamil,bbc.com
கட்சித் தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பல அமைச்சர்களுகு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
போடியில் ஓ பன்னீர்செல்வம், ஆலந்தூரில் பன்ருட்டி ராமச்சந்திரன், ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன், மைலாபூரில் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேதிமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தவர்களில் பாண்டியராஜனுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.tamil,bbc.com
180 தொகுதிகளில் திமுக போட்டி, 41 தொகுதிகளில் காங்கிரஸ், 5 தொகுதிகள் இ.யூ.மு.லீக்,5 தொகுதிகள் ம,நே,ம,கட்சி ,தலா 1 தொகுதிகள்
சட்டமன்றத்
தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ்
கட்சியின் சார்பாக, அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் இன்று
திமுக தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக மற்றும்
காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு குறித்தப் பேச்சுவார்த்தை
நடைபெற்றது.&>இதனைத் தொடர்ந்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கலைஞரைசந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, எத்தனைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு, 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கலைஞரைசந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, எத்தனைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு, 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது.
கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நடந்த இழுபறிகள் ஓரளவு சுமுகம்
சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி நடிக்கும்...ரம்...
சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை கதா பாத்திரமாக தோன்றி, தமிழக
இளைஞர்களின் உள்ளங்களை கிறங்கடித் தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது
அறிமுக இயக்குனர் ‘சாய்’ இயக்கும் ‘ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பீட்சா – 2′ படத்திற்கு பிறகு, மூன்று
வருடம் கழித்து இவர் நடிக்கும் தமிழ் படம் இதுதான்.
அனிரூத் இசையமைப்பில் All In Pictures விஜய் தயாரிப்பில் ‘ரம்’ ஒரு
திரில்லர் மூவி. படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான்
நடைபெற்று வருகிறது. “இப்படத்தில் காரில் துரத்திக்கொண்டு போகும் காட்சி
ஒன்று இருப்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் அந்த காரை நான் தான் ஓட்ட
வேண்டும் என்று இயக்குனர் சொன்னவுடன் மனதிற்குள் ஒரு பயம் கலந்த பதற்றம்
ஏற்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







