செவ்வாய், 5 ஏப்ரல், 2016

தேமுதிகவில் பிளவு ஏன்? நக்கீரன் கருத்து கணிப்புகள் நம்பகமானதா?

நக்கீரன்: கட்சி துவங்கியது முதல் மக்களோடும் மகேசனோடும்தான் கூட்டணி என்று பேசிவந்த விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அதன் பலனாக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் ஆனார்.  ஆனால், அதன் பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. >நாடாளுமன்ற தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வந்தபோதும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தொண்டர்களை அதிருப்திக் குள்ளாக்கினார் விஜயகாந்த்.>நடைபெறவிருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பை பெறலாம் என்று தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை வலியுறுத்தி வந்தனர்.   தேமுதிகவுடன் கூட்டணி என்று அறிவிப்பார் என காஞ்சிபுரம் மாநாட்டில் எதிர்ப்பார்த்து காத்திருந்த தொண்டர்களூக்கு குளப்பம்தான் மிஞ்சியது.
  ‘கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை; கிங்காகத்தான் இருப்பேன்’ என்று அறிவித்து குளப்பினார் விஜயகாந்த்.

இது குறித்து நக்கீரன் நடத்திய சர்வேயில், திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவேண்டும் என்பதையே தேமுதிக தொண்டர்களின் மனநிலை இருந்தது. 

ட்டணி, பா.ஜ.க. இவற்றுடன் பேசி,  கூட்டணி அமைத் துதான் தேர்தலை சந்திப்பார் என சொல் கிறார்கள். சரியான முடிவு என விஜயகாந்த் தின் முடிவை ஆதரித்த 23 சதவிகிதம் மக்களை கழித்துப் பார்த்தால் தமிழக மக்கள் திரளில் 77 சதவிகிதம் பேர் விஜயகாந்த்தின் முடிவை ஏற்க வில்லை என்பதை நமது கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.இந்நிலையில், தேமுதிகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடையே நடைபெற்ற நேர்காணலில், 95 சதவிகிதம் பேர் திமுகவுடன்  கூட்டணி அமைக்கவேண்டும்.  அப்போதுதான் வெற்றி வாய்ப்பு உறுதி என்று விஜயகாந்திடம் வலியுறுத்தினர்.  அதற்கு விஜயகாந்தும், அப்படியே செய்திடலாம் என்று அவர்களிடம் கூறியிருக்கிறார்.


விஜயகாந்த் தனது முடிவை மாற்றி திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று தொண்டர்கள் காத்திருந்த   நேரத்தில்தான் காத்திருந்த தொண்டர்களின் தலையில் அடுத்த இடியை இறக்கினார் விஜயகாந்த்.  ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், யாருடனும் கூட்டணி இல்லை; தனித்துதான் போட்டி என்று அறிவித்து, தொண்டர்களை கவலையடைய வைத்தார்.

அப்போதும் தனது முடிவை மாற்றிக்கொள்வார் விஜயகாந்த் என காத்திருந்தனர்.  ஆனால், தனித்து போட்டி என்று அறிவித்த விஜயகாந்து, திடீர் என்று மக்கள் நலக்கூட்டணியில் சேரும் முடிவை எடுப்பார் என்று கொஞ்சமும் அவர்கள் யோசிக்காததால் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களின் மூலமாக, மக்கள் நலக்கூட்டணியை விட்டு விஜயகாந்த் வெளியேற வேண்டும். திமுகவுடன்தான் கூட்டணி அமைக்கவேண்டும். கலைஞர்தான் ஆட்சி அமைக்கப்போகிறார். விஜயகாந்த தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இவர்கள் பேட்டி கொடுத்த இரண்டு மணி நேரத்தில், அனைவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்துவிட்டதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: