செவ்வாய், 8 டிசம்பர், 2015

புதுச்சேரியில் ராகுல் காந்தி நிவாரண பொருட்களை...

வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான தளத்திற்கு வந்த அவரை காங்கிரசார் வரவேற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கைகுலுக்கி பேசிய ராகுல்காந்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
புதுவையில் சுற்றுப்பயணம் செய்து பார்வையிடுவதற்காக குண்டுதுளைக்காத கார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த காரில் ராகுல்காந்தி ஏறவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் காரில் ராகுல்காந்தி ஏறிக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் ஆகியோரும் உடன் சென்றனர்.

கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு....

Jpegசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இணையம் மற்றும் ஊடகங்களில் இவை குறித்த செய்திகள் ஏராளம் வந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் ஆறுதலும் கிடைப்பது சாத்தியமல்ல. அதை அரசு நினைத்தால் மட்டுமே ஒருங்கிணைத்து முழு ஆற்றலுடன் செய்ய முடியும். ஆனால் அரசு எந்திரமோ அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதற்கே ஆள் இல்லாமல் திணறுகிறது. மக்கள் தன்னார்வத்துடன் கொண்டு வரும் பொருட்களை அ.தி.மு.க ரவுடிக் கூட்டம் பறித்துக் கொள்கிறது. மறுப்பவரை சில இடங்களில் தாக்கியும் வருகிறது.
ஜெயலலிதா அரசை நேரடியாக கண்டிக்கத் துப்பற்ற ஊடகங்களோ இதை வெறும் மனிதாபிமான நடவடிக்கையாக மட்டும் சுருக்கி பரபரப்பை தக்க வைக்க முயல்கின்றன. இறுதியில் மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலம் தள்ளுகிறார்கள். வேறு சில ஓட்டுக் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெயர்பலகை அமைப்புகளோ தமது பெயர் வருவதை உறுதி செய்து கொண்டு பொருட்களை அளிக்கின்றன.

சென்னை மழைக்கு எல் நினோ மட்டுமா ? காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது..

இயற்கையின் விதிகளை புரிந்து கொள்ளுதல் அறிவியலின் சாரம். இந்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் மீதான மனித சமூகத்தின் ஆளுமை அதிகரிக்கிறது. நேர்மறையில் இது இயற்கைக்கும் அதன் நீட்சியான மனித சமூகத்திற்கும் வளர்ச்சி குறித்த வழிகளை திறக்கிறது. அந்த வளர்ச்சியே இன்றைய நவீன வாழ்க்கைக்கு அச்சாரம். இன்னொருபுறம் அந்த வளர்ச்சி ஒரு சேர மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் சமமாக பயன்படுவதில்லை. வர்க்கங்களாகவும், ஏழை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளாகவும் பிரிந்து விட்ட உலகில் இயற்கைக்கும் மனித சமூகத்திற்குமான முரண்பாடு வெறும் வளர்ச்சியையும் மட்டும் கொண்டு வருவதில்லை, அழிவையும் சேர்த்து கொண்டு வருகிறது.
சென்னை மழை வெள்ளத்திற்கு இந்தக் காரணங்கள் அனைத்தும் அடிப்படையாக இருக்கின்றன. தமிழக அரசின் அலட்சியம் தோற்றுவித்திருக்கும் பயம் மக்களிடையே இருப்பதால் கால நிலை மற்றும் மழை, வானிலை குறித்த பல்வேறு புரளிகளையும், வதந்திகளையும், அறிவியல் பூர்வமற்ற கணிப்புகளையும் நம்புகிறார்கள். வதந்திகளாகவும் பேசுகிறார்கள்.

அதிமுகவினரால் தாக்கப்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் ( வீடியோ)

சென்னை அண்ணாநகர் கிழக்குப்பகுதியில் தன்னார்வத்தொண்டர்கள் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு உணவு அளித்து வந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுக வட்டச்செயலாளர் கோ.தமிழ்ச்செல்வன், இவர்களுக்கெல்லாம் நாங்கள் தனியாக உணவு தயார் செய்கிறோம். நீங்கள் வந்து உணவு கொடுக்ககூடாது என்று தகராறில் ஈடுபட்டார். தன்னார்வத்தொண்டர்களை துரத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் முன்வந்து உதவி செய்தால் என்ன? நாங்கள் செய்யும் உதவியை மக்கள் பெற்றுக்கொள்கிறார்களே என்று தன்னார்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.nakkheeran,in

அன்புமணி : நிவாரணப் பொருள்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமை...

சென்னை: நிவாரணப் பொருள் கொள்ளைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் போதிய அளவு  நிவாரண உதவி வழங்கப்படவில்லை. இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் வழங்கும் நிவாரண உதவிப் பொருட்களை ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்துச் செல்வதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன.
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்படும் உதவிப் பொருட்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமைகள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கட்டாயப்படுத்தி ஒட்டப்படுகின்றன.
கிறித்தவ அமைப்பின் சார்பில் 3 லாரிகளில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை வேலூர் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றின்  ஊழியர்களால் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள உணவு, போர்வை மற்றும் மருந்துகளை  அ.தி.மு.க.வினர் பறித்து வைத்துக் கொண்டு அமைச்சர் வளர்மதி வந்த பிறகு, அவர் தான் உதவிப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால், பல மணிநேரமாகியும் அமைச்சர் வராத நிலையில் அந்த உதவிப் பொருட்களை தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு கோரி வழக்கு..நிவாரண பொருட்களை குண்டர்கள் பறித்து தாக்குவதால் உதவிக்கு வர பலரும் தயங்கம்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு வருகிறது.
அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெமினி அருகேயுள்ள செவித்திறன் குறைவுற்றோர் பள்ளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக டிசம்பர் 3 ஆம் தேதி சென்றோம். அப்போது அங்கு வந்த குண்டர்கள் எங்களை தடுத்ததோடு, நிவாரணப் பொருள்களை தங்களிடம் வழங்கிட்டு செல்லுமாறு மிரட்டினர்.

நிவாரண பொருட்களை சூறையாடும் சமுக விரோத கும்பல்கள்...வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்களை மிரட்டி..

கடலுார்: கனமழையால் மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் நிவாரண உதவி என்ற பெயரில் தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த மாதம் 8ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் கடலுார் மாவட்ட மக்கள் தொழில் மற்றும் உடமைகளை இழந்து மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக கூலித் தொழிலாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் பல்வேறு நிவாரணப் பொருட்களுடன் கடலுார் மாவட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கெடிலம் வழியாக கடலுார் மாட்டத்திற்கு நுழைந்த உடன் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

பாஜக யஷ்வந்த் சின்ஹா : பாகிஸ்தான் உடன் திடீர் பேச்சுவார்த்தை ஏன்?

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் செல்ல உள்ள நிலையில், இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க., அரசின் நிலைப்பாடு என்ன என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் உடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதற்காக காரணம் என்ன என்பது குறித்து பா.ஜ.க., அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக  தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்த நிலையில், தாக்குதல்களுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று மத்திய அரசு கூறிவந்தது. இந்நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நடைபெற காரணம் என்ன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.” என்றார்.

ஜெயலலிதா : வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்: 10000 நிரந்தர வீடுகள்....எனது அரசு எனது ஆணைப்படி......

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் பெருமக்கள் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திங்கள், 7 டிசம்பர், 2015

உலகின் அதிவெப்ப ஆண்டில் சென்னையில் அதிகன மழை

டிசம்பர் 1-ம் தேதியன்று பருவநிலை மாற்றத்தின் அத்தனை அம்சங்களும் ஒன்றிணைந்து சென்னையில் வரலாறு காணாத மழையை கொட்ட வைத்துள்ளது. இது ஒரு கெட்ட செய்தி என்றால், இந்த நிலை மேலும் நீடிக்கும், அதாவது மேலும் கனமழை பெய்யவே வாய்ப்பிருப்பது மோசமான செய்தியாகும். உலக வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டின் எல் நினோ விளைவு பற்றி தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமிருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் மிகச்சரியாகவே கணித்தது. எல் நினோ விளைவால் மேற்கு இந்திய கடல் நீர் வெப்பமடைதலும், கிழக்கு இந்திய கடல்நீர் குளிர்வடைவதும் நிகழ்ந்தது. இந்தியப் பெருங்கடல் இந்த ஆண்டு அளவுக்கதிகமாக வெப்பமடைந்ததால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் வெப்ப அளவு அதிகரித்து தெற்கு அந்தமான் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வந்துள்ளன, வருகின்றன என்று ஸ்கைமெட் கணித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி இத்தகைய வலுவான பருவநிலை அமைப்பினால் சுமார் 490மிமீ மழைநீரைச் சுமந்து மேகங்கள் படையெடுத்து சென்னையை வெள்ளக்காடாக்கியுள்ளது, இது எல் நினோ விளைவைக் காட்டிலும் அதிகமானது என்கிறது ஸ்கைமெட்.

சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் இலங்கை கடற்பகுதியில் மிதக்கின்றன.

திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை. திருகோணமலை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டவரின் அடையாள அட்டை.
இலங்கை திருகோணமலை கடற்பரப்பில் சென்னையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மிதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலை கடற்பரப்பில் இரண்டு பெண் சடலம் உள்பட ஐந்து சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் திருகோணமலை காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது திருகோணமலை நிலாவெளி எனும் கடற்பகுதியில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு பின்னர் பிரதேசப் பரிசோதனைக்காக திருகோணமலை தலைமை மருத்துவமனையில் அனுப்பப்பட்டது.

ஸ்டிக்கர் ஓட்டும் போட்டியில் அதிமுகவுடன் போட்டியிடும் நடிகர் விஜய்....

மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவல நிலையையும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். முக்கியமாக ஆளும் அதிமுக கட்சியினர், தன்னார்வலர்களால் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களையும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டியே விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.>பல இடங்களில் அதிமுகவினர் முதல்வரின் படத்தை ஒட்டவேண்டும் என்று தகராறில் இறங்கியதும் நடந்திருக்கிறது.<விஜய் ரசிகர்களும் நிவாரணப் பொருள்களில் விஜய் படத்தை ஒட்டி விநியோகித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
 

சென்னை மழை – மக்கள் இயக்கம் சமுக ஊடகங்களின் தேவை ..சாருநிவேதா

இதுவரை சமூக வலைத்தளங்கள் மீதான என்னுடைய அவநம்பிக்கை அகன்று விட்டது.  சமூக வலைத்தளங்கள் மூலம்தான் இந்தப் பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் செய்திகளும் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.   ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  பொதுவாக எந்தக் காரியத்திலும் தலையிட்டுக் கொள்ளாத பிராமணர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் அண்டாவை வைத்து ஆயிரம் பேருக்கு சமையல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மீனவர்கள் படகில் போய் மக்களை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள்.  அரசியல்வாதிகள் ஒளிந்து கொண்டு விட்டாலும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் மக்கள் சேவை செய்து வருகிறார்கள்.  பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.  போலீஸை எப்போதும் மக்கள் திட்டுவார்கள்.  ஆனால் இப்போது போலீஸ் ராப்பகலாக வீட்டுக்குப் போகாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  பேரிடர் வந்துவிட்ட நேரத்தில் மக்களே ஒரு இயக்கமாகத் திரண்டு ஒருவருகொருவர் உதவி செய்து கொண்டதை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  இதுவரை மக்கள் கூட்டமாகச் சேரும் போது 2000, 3000 என்று மனிதர்கள் கொல்லப்பட்டதுதான் இந்திய வரலாறு.  தில்லி திர்லோக்புரியையும் குஜராத்தையும் நம்மால் மறந்து விட முடியுமா?  ஆனால் சென்னையில் இந்தப் பிரளயத்தில் மற்ற மனிதனின் துயரத்தைத் தன்னுடைய துயரமாக உணர்ந்தான் மனிதன்.  ஆர்ஜே பாலாஜி, நடிகர் சித்தார்த் போன்றவர்கள் இந்த மக்கள் இயக்கத்தின் முன்வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  இவர்களைப் போன்றவர்கள்தான் அரசியலில் இருக்க வேண்டும்.  அரசியலுக்கு வர வேண்டும்.  வெள்ளத்தில் தத்தளிப்பவர்களைப் பார்த்து மாடமாளிகையில் இருந்து பரிகாசம் செய்து கொண்டிருக்கும் சிலருக்கு மத்தியில் இந்த இருவரின் பணி நம்முடைய வணக்கத்திற்குரியது.
ஆர்ஜே பாலாஜியின் ஒரு வேண்டுகோள் இந்த முகநூலில் இருக்கிறது.  பகிர்ந்து கொண்டால் நலம்.
www.facebook.com/rjbalajiofficial/videos/932766633472134/

வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை ஆளில்லா விமானம் உதவியால் மீட்டனர் ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு போலீசார் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உள்ளனர். அதன்மூலம் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் மீட்கப்பட்டனர். ‘வாட்ஸ்–அப்’ தகவல்களை வைத்தும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தனர்.
போலீஸ் நடவடிக்கை சென்னை நகரில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை, போலீஸ் படை, கடலோர காவல் படை மற்றும் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 10 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை நகர போலீஸ் சார்பில் 12 ஆயிரம் போலீசார் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

கடலூரில் 93 பேர் பலி....7 மாவட்டங்களின் வடிகால் கடலூர்

கடலுார்:பூகோளரீதியாக, கடலுார் மாவட்டம், மேற்கே உள்ள, ஏழு மாவட்டங்களின் வடிகாலாக அமைந்துள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும், மேற்கே அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்தால், கடலுார் வெள்ளக்காடாக மாறி விடுவது வழக்கம். >இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்ப்பதால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 228 ஏரிகளில், 199 ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகின்றன.நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால், அனைத்து நீர் நிலைகளில் இருந்தும், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 436 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும்மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது

ரூ.100 கோடி உணவுப்பொருட்கள் வீண்....விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள்

வானத்து சுனாமி'யாக விடாது கொட்டிய கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், வீணாகி விட்டன. மழை விடும் சமயம், கடைகளை திறந்த வியாபாரிகள், உள்ளே இருக்கும் வீணான உணவு பொருட்களை, விரக்தியில், வீதியில் கொட்டினர். வணிகர்கள் கண்ணீர்:தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடுமையாக பெய்து வருகிறது. ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டன; இதனால், சென்னை நகரம், கடல் போல மாறியது. வெள்ளத்தில், ஏராளமான வணிக நிறுவன கட்டடங்களும் மூழ்கின. இரண்டு நாட்கள் மழை விட்டு, சற்று வெள்ளம் வடிந்த நிலையில், வணிகர்கள், கடைகளை திறந்தனர். கடைகளில் இருந்த, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தண்ணீரில் நனைந்து, வீணாகிவிட்டன. இதைப்பார்த்து கண்ணீர் வடித்த வணிகர்கள், வீணான பொருட்களை, சாலைகளில் கொட்டுகின்றனர்.தி.நகர், ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.,நகர் என, பல பகுதிகளிலும், சாலையோரங்களில், உணவுப்பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக்ததில் கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

செய்வீர்களா ? செய்வீர்களா ? Jayalalitha's last 4 years Vikatan TV Vikatan TV விகடனின் எக்ஸ்ரே அலசல்



ஞாயிறு, 6 டிசம்பர், 2015

அடுத்த 48 மணிக்கு அதிக மழை கணிப்பு..ஏரிகளில் நீர் வருவது குறைந்துள்ளது

இடைப்பட்ட ஞாயிறன்று மழை மற்றும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் முன்னறிவிப்பு சாதாரண வாழ்க்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரும்பி இருக்க வேண்டும் தோன்றினார் கூட தங்கள் கால் விரல் சென்னை, அதன் புறநகர் மற்றும் கடலோர மாவட்டங்களில் வைக்கப்படும்.ஒரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு படம் கீழ் ஒரு வெள்ளத்தால் சாலையோர சேர்ந்து அமர்ந்துள்ளனர். . சென்னை சென்ட்ரல் எழும்பூர் இருவரும் இருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான செயல்பாடுகளை, மற்றும் ரயில்
சேவைகள் அடையார் மற்றும் கூவம் ஆறுகள் நீர்வரத்து ஞாயிறு பிற்பகல் தடங்கள் மீட்க அதிகாரிகள் செயல்படுத்த குறைந்தபோது நாளை புதுப்பிக்க இருக்கிறார்கள் ஞாயிறு முழுவதும், சென்னை, அதன் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் weatherman அடுத்த 48 மணி அதிக மழை கணித்து மாவட்டங்களில் உள்ள, கனரக நேரங்களில் அவை இடைவிட்டு மழை, உள்ளன.

1 லட்சம் கோடி இழப்பு..சென்னையில் மழை வெள்ளம் ..

சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

சென்னை மற்றும் புறநகரில் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் ஒவ்வொரு ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 16–ந்தேதியன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 30–ந்தேதி 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர். 1–ந்தேதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வீடுகள் மூழ்கி பெருத்த சேதம் ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளான வழுதலம்பேடு, குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர் மலை, அனகாபுத்தூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

சென்னையை விட்டு வெளியூர்வாசிகள் பலரும்.. உசுரோட ஊர் போய் சேர்ந்தா போதும்

சென்னை: நூறாண்டு காணாத கனமழை சென்னையின் இயல்பை மட்டும் தலைகீழாக புரட்டிப் போடவில்லை... வாழுகிற மக்களின் வாழ்க்கையை கவிழ்த்து போட்டுவிட்டது... இந்த பெரும் வெள்ளத்தில் பலியாடுகளாக உடைமைகளை இழந்து 'அகதிகளாக' அலைந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள்தான்.. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பெருமளவு படையெடுக்கத் தொடங்கியது என்பது கடந்த கால் நூற்றாண்டு காலத்தில்தான்... ஊருக்கு ஒருத்தர் இரண்டு பேர் சென்னையில் இருந்த காலமெல்லாம் மலையேறிப் போய் ஊரில் இருக்கிற அத்தனை பசங்களும் சென்னையில்தான்டா என்கிற நிலைமை உருவாகிவிட்டது...25 ஆண்டுகளுக்கு முன்னர் பல தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு சென்று வருவதே மலைப்பாக இருந்தது...

நிவாரணப் பொருட்களை பெற மாநகராட்சி தயார் இல்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை, பாதுகாப்பாக வைத்து வினியோகம் செய்ய, நேரு உள்விளையாட்டு அரங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.<இங்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆகியோர் ஒருங்கிணைப்பில், 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அண்டை மாநில அரசுகள் சார்பிலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் அனுப்பி வைக்கப்படுபவை மட்டுமே, நேரு உள்விளையாட்டு அரங்கில் பெறப்படுகின்றன. தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை, மாநகராட்சி பெற தயாராக இல்லை. அவ்வாறு வரும் பொருட்களை, தாங்களாகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும் என்றுஅதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் உதவி செய்ய முன்வந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதி எது, நிவாரணப் பொருட்களை யாரிடம் வழங்குவது என தெரியாமல், தவிக்கும் நிலைஏற்பட்டுள்ளது.

ஜனங்க மதிக்கமாட்டாய்ங்க...அதாய்ன் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுறோம்...அதிமுகவினர் சொல்றாய்ங்க

சென்னை:'எங்கிருந்தோ வரும் தனி நபர்கள், எங்கள் வார்டுக்கு வந்து, நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, மக்கள் எங்களை மதிப்பதில்லை. அதனால், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்று நாங்கள் வழங்குகிறோம்' என, மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
அனாதையாய் வீதிக்கு வந்துள்ள மக்களை பேணிக் காக்க வேண்டிய இவர்கள் இப்படி பேசியது, இவர்களின் கீழ்த்தர அரசியல் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க., நகர் மண்டல அலுவலகத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லுார் ராஜு ஆகியோர் தலைமையில், மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  அடடே இத்தாய்ன் மாட்டர்ன்னு  வெளிப்படையாகவே சொல்ல தொடங்கியாச்சா  நல்ல டெவலப்மெண்டு வெளங்கிடும் ... 

அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டுவதால் தாமதம்...பயனாளிகள் பொறுமை காக்க......


தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்த பொருள்களை உதவியாக அளிக்க முன் வந்தால், அவற்றின் மீது ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பல மணி நேரங்கள் தாமதம் செய்யப்படுகிறதாம்! ஏன், உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலே கூட, ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டி அனுப்புவதற்காக தாமதம் செய்யப் பட்டதாக ஏடுகளிலேயே செய்தி வந்துள்ளது. 
இன்னும் கொடுமை ஒன்று கூறட்டுமா? : கலைஞர் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை : ’’தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில், தி.மு. கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். முதலமைச்சர் என்ற முறையில் நான் அறிவித்திருந்த சலுகைகளையெல்லாம் போதாது என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது என்ன நிலைமை தெரியுமா? தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி மிகச் சிறிய மாநிலம். அங்கேயும் பெருமழை பெய்து அதிக அளவுக்கு நாசம் நடந்துள்ளது. அங்கே எந்த அளவுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்றுள்ளன தெரியுமா? அந்த மாநில முதல் அமைச்சரே நேரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடந்தே சென்று, நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு, அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி யிருக்கிறார்.