சிவமேனகை : புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி
நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு
200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட
பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என
கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள்
தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.