தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் குழு
பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஆய்வு நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல்
நலன், பாதுகாப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். எழும்பூர் குழந்தைகள்
நல மருத்துவமனை மருத்துவர் குமுதா தலைமையில் ஒரு குழு மற்றும் மருத்துவக்
கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தலைமையில் மேலும் ஒரு குழு ஆய்வு நடத்தி
வருகிறது. தருமபுரி மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தினகரன்.com
செவ்வாய், 18 நவம்பர், 2014
சென்னை ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதித்த நேர்மையான அதிகாரி இடமாற்றம் !விஜய் பிங்ளே IAS Transferred Days after fining contractors
Officials said on condition of anonymity that the powerful contractor
lobby was responsible for the decision to move Pingale out of the
corporation. "The timing of his transfer, only days after he penalised
contractors responsible for poorly laid roads, is no coincidence," an
official said.
The corporation, under Pingale, had on Wednesday made public the names of nine contractors who it said would have to reimburse the civic body 2 crore for repairs it carried out on stretches laid by them. Pingale had promised to name other contractors for poor work and said the total penalties were likely to rise.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதில் பேட்ச் அப் வேலைகள் செய்ய தவறிய ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட 3 நாட்களில் மாநகராட்சி உயர் அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் இணை ஆணையராக இருந்த டாக்டர் விஜய் பிங்ளே திடீரென கடந்த சனிக்கிழமை தொழில்துறை இணை செயலாளராக இட மாற்றம் செய்யப்பட்டார். விஜய் பிங்ளே ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். கடந்த 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். கடந்த 16 மாதங்களாக மாநகராட்சியில் இவர் பல்வேறு பணிகளையும் மிகவும் சிரத்தையாக செய்து வந்தார். சாலை பணிகளின் தர நிர்ணய குழுவில் மிக முக்கியமான அதிகாரியான இவர்நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுபவர்.ஊருக்கு ஒரு சகாயமும் ட்ராபிக் ராமசாமியும் தேவை
The corporation, under Pingale, had on Wednesday made public the names of nine contractors who it said would have to reimburse the civic body 2 crore for repairs it carried out on stretches laid by them. Pingale had promised to name other contractors for poor work and said the total penalties were likely to rise.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதில் பேட்ச் அப் வேலைகள் செய்ய தவறிய ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட 3 நாட்களில் மாநகராட்சி உயர் அதிகாரிக்கு டிரான்ஸ்பர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் இணை ஆணையராக இருந்த டாக்டர் விஜய் பிங்ளே திடீரென கடந்த சனிக்கிழமை தொழில்துறை இணை செயலாளராக இட மாற்றம் செய்யப்பட்டார். விஜய் பிங்ளே ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். கடந்த 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். கடந்த 16 மாதங்களாக மாநகராட்சியில் இவர் பல்வேறு பணிகளையும் மிகவும் சிரத்தையாக செய்து வந்தார். சாலை பணிகளின் தர நிர்ணய குழுவில் மிக முக்கியமான அதிகாரியான இவர்நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுபவர்.ஊருக்கு ஒரு சகாயமும் ட்ராபிக் ராமசாமியும் தேவை
160 சிஷ்யர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கமா ! சாமியார் குர்மீத் ராம்சிங்கின் கடவுள் பாதை?
சண்டிகர்: ஹரியானாவின் சர்ச்சை சாமியார்களுக்கு 'நேரம்' சரியில்லை
போல.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ராம்பாலைப் போல
'கட்டாய ஆண்மை நீக்க' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் தேரா சச்சா சவுதா
என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ராம்சிங். குர்மீத்தின் 160க்கும்
மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதா?
என்பது குறித்து பரிசோதிக்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சீக்கியர்களில் ஒரு பிரிவுதான் தேரா சச்சா சவுதா. சில ஆண்டுகளுக்கு இந்த
அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் வியன்னாவில் மற்றொரு சீக்கியர் பிரிவினரால்
படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே இந்தியாவிலும் பெரும்
மோதல் வெடிக்க பதற்றம் பற்றி எரிந்தது. அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்னர்
ராஜ் சவுகான் என்ற முன்னாள் சீடர், குர்மீத்தின் ஆசிரமத்தில் சீடர்களுக்கு
கட்டாயமாக ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.. ஆண்கள் ஆண்மையை நீக்கிவிட்டால்
ஆண்டவனை அடையலாம் என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி இந்த சட்டவிரோத
செயலில் குர்மீத் ஈடுபடுகிறார் என்று வழக்கு தொடர்ந்தார்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் விசாரணை தொடங்கியது!
இந்த வழக்கின் புகார்தாரரும், மத்திய அமலாக்கத் துறையின் இணை இயக்குநருமான ஹிமான்ஷு குமார் லால், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் புதன்கிழமையும் (நவம்பர் 19) தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
பிகாரில் லாலு கட்சியும் நிதீஷ்குமாரின் கட்சியும் ஒரே கட்சியாகிறது, 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்தனர்
பாட்னா: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,
பெற்ற வெற்றி, பீகார் மாநில அரசியல்வாதிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.
அதனால், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய
ஜனதா தளம் கட்சியும் விரைவில் இணைய உள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்
கலைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில்,
பா.ஜ., பெற்ற பிரமாண்டமான வெற்றி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க,
ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்
நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. அதனால்,
லோக்சபா தேர்தலுக்கு பின், பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலின்
போது, தன் பரம எதிரியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத்
யாதவுடன் கூட்டணி சேர்ந்தார்.
பெரியாறு அணையில் கேரளா MLA பிஜூமோள் அத்துமீறல்: அணை பாதுகாப்பு கேள்விக்குறி?
கூடலூர் : முல்லைப் பெரியாறு அணையில் நேற்று பீர்மேடு எம்.எல்.ஏ.,
பிஜூமோள் தலைமையில் சென்ற கேரள பத்திரிகையாளர்கள், தமிழக பொதுப்பணித்துறை
செயற்பொறியாளரை கீழே தள்ளிவிட்டு பேபி அணைக்குள் அத்துமீறி நுழைந்து போட்டோ
எடுத்தனர். அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார் இதை
கண்டுகொள்ளாததால் அணைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
முல்லைப்
பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அளித்த
தீர்ப்புக்குப்பின் நீர்மட்டம் நேற்று 141 அடியைக் கடந்துள்ளது. சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அணையில் தண்ணீர் தேங்க இன்னும்
ஒரு அடியே உள்ள நிலையில் தமிழக பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிஜுமோள் போன்ற மலையாளிகளை உசுப்பி விட்டது வைகோதான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் மனம் குழம்பி போயிருந்த மலையாளிகளை மேலும் கோபம் அடைய செய்யும் விதமாக வெற்றியை கொண்டாடி டிவிக்களில் பேசினார் .ஏதோ மலையாளிகளை போரில் வென்றது போல சவடால் முழக்கம் இடுவது பட்டாசு கொழுத்துவது மலர் தூவுவது போன்ற முட்டாள்தனமான செய்கைகளை செய்து மலையாளிகளை பகையாளி ஆக்கிவிட்டனர். Hate அரசியலை நடத்தும் வைக்கோ போன்றவர்களால் தான் பிஜுமோள் போன்ற அரசியல் வாதிகளுக்கு அவல் கிடைத்துவிட்டது, மீண்டும் பெரியாறுஅணை பிரச்சனை தலை எடுத்தால் வைகோ போன்றவர்களே பொறுப்பு ,
திங்கள், 17 நவம்பர், 2014
நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்கிறார் ! லேட் நியுஸ் இது உண்மையில்லையாம்? கிளாமர் போயிடுமே? பிசிநேசு?
சென்னை,நவ.17 (டி.என்.எஸ்) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி
நடிகையாக உள்ள திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவர்
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார்.தெலுங்கு நடிகருடன்
காதல், பிறகு முறிவு, திருமணம் என்று அவ்வபோது திரிஷா குறித்து செய்திகள்
வெளியானாலும், இறுதில் அவை வெறும் வதந்திகளாகவே மாறியது.ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல், நம்பகமான தகவல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திரிஷாவுக்கு
அவரது தயார் திருமணம் செய்ய முடிவு செய்து, மனமகனை தேடி வந்த நிலையில்,
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வருண் மணியன், என்பவரை திரிஷாவுக்கு
பேசி முடித்துள்ளார்களாம். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக விளங்கும்
ரேடியன் சி, நிறுவன உரிமையாளரான வருண் மணியன் ரேடியன் மீடியா என்ற நிறுவனம்
சார்பில் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வாயை
மூடி பேசவும்' இவர் தயாரித்த படம் தான். விரைவில் வெளியாக உள்ள,
'காவியத்தலைவன்' படத்தியும் வருண் மணியன் தயாரித்து வருகிறார்.
Yoga குரு ராம்தேவுக்கு இசட்பிரிவு பாதுகாப்பு ! 22 காவலர்கள். Yoga guru Ramdev Z category security by 22 armed guards and escort car.
புதுடெல்லி: யோகா குரு பாபா ராம்தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் 22 பேர் மற்றும்
பாதுகாப்பான காரும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது பாபா ராம்தேவ்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஊழல் மற்றும்
மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி 2012 ஆகஸ்ட்
மாதம் அவர் டெல்லி போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.dinakaran.com இனி வேற வேற சாமியார்களுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு கேப்பாய்ங்க ! ஏன்னா நெறைய சாமியாருங்க பொம்பள சமாசாரம் போன்ற பல தில்லுமுல்லுகள் செஞ்சு சதா பயந்து கிட்டே இருக்காய்ங்க .பாரபட்சம் இல்லாம் எல்லாருக்கும் இசட் பிரிவு கொடுங்க ,
விஜய்: எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது? இசை படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா
வாழ்வா, சாவா என்கிற நிலையில் இருந்த என்னை தூக்கி விட்டவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா என்று நடிகர் விஜய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்
'இசை'. இப்படத்தை இயக்கி நடித்தது மட்டுமன்றி இசையமைப்பாளராகவும்
அறிமுகமாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய், தனுஷ்,
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் விழாவில்
கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்ச்சியில் விஜய் பேசியது:
"எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப் படமும்
ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி'
என்கிற வெற்றிப் படம் கொடுத்து என்னைத் தூக்கிவிட்டவர் சூர்யா. இப்போது
அதற்கு நன்றி சொல்கிறேன்.
ஜெயாவை நிரபராதியாக காட்ட துடியாக துடிக்கும் ஆரிய,பார்பன,மேல்தட்டு,மதவெறி,ஜாதிவெறி, ஊழல் கிருமிகள்.
ஜெயா – சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அவ்வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் இந்தியச் சமுதாயத்தின் தலைமை சக்தியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் கிரிமினல் புத்தியை, பித்தலாட்டத்தனத்தைப் புரிந்துகொள்ளும் வாப்பைத் தமிழக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்பார்ப்பனக் கும்பல் ஊடகங்களில் தமக்குள்ள ஆதிக்கம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இச்சொத்துக் குவிப்பு வழக்கே மோசடியானது போலவும், தேர்தல்கள் மூலம் ஜெயாவை வீழ்த்த முடியாத தி.மு.க., அவரைப் பழிதீர்த்துக் கொள்ள பின்னிய சதிவலை போலவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநியாயமானதென்றும் ஒரு அயோக்கியத்தனமான கருத்தைத் தமிழக மக்களின் பொதுப்புத்தியில் விதைத்துவிட முயலுகின்றன. இந்த வகையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அம்மாவின் அடிமைகளைவிட, தினமணி, இந்து, துக்ளக், கல்கி, விகடன் குழும இதழ்கள் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும்; தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட சூத்திர ஊடகங்களும் தம்மை அபாயகரமானவையாகத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுள்ளன.
நடிகை Naga Prayag கை 70 அடி உயரத்தில் பார்த்த பெற்றோர் கண்ணீர்.மிஸ்கின் இயக்குகிறார் .
சென்னை:
ஹீரோயினை 70 அடி உயரத்தில் தொங்க விட்டதை பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர்
விட்டனர் என்றார் மிஷ்கின். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து
மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரிக்கிறார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார். அரோல் கோர்லி
இசை. ரவி ராய் ஒளிப்பதிவு. இப்படம் பற்றி மிஷ்கின் கூறியது: நிராதரவாக நான்
கீழே விழுந்த சமயத்தில் கைதூக்கி விட்டார் பாலா. அவரது தயாரிப்பில் பிசாசு
படம் உருவாகிறது. நாகா ஹீரோ. பிரயாகா ஹீரோயின். முக்கிய வேடத்தில் ராதாரவி
நடிக்கிறார். இந்த படத்தை பிரயாகாவுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு கடுமையாக
உழைத்திருக்கிறார்.
மத்தியில் மீண்டும் புதிய கூட்டணி உருவாகிறது? காங்கிரஸ் காய் நகர்த்துகிறது!
புதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐ.மு.,
கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, இன்று துவங்கும் நேரு தொடர்பான சர்வதேச மாநாட்டில்
பங்கேற்க, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளுக்கு, காங்.,
மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின்
முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின், 125வது பிறந்த நாளையொட்டி, காங்.,
கட்சி சார்பில், இன்றும், நாளையும், டில்லியில் சர்வதேச மாநாடு
நடத்தப்படுகிறது.இந்த மாநாட்டில், நேருவின் சிந்தனைகள், கொள்கைகள் குறித்த
கருத்தரங்கங்களும் நடக்கவுள்ளன. 'ஜனநாயகமும், மக்களுக்கான அதிகாரமும்.
நேருவின் உலகளாவிய சிந்தனை' ஆகிய தலைப்புகளின் கீழ், விவாதங்களும்
நடக்கவுள்ளன
இந்த
சர்வதேச மாநாட்டை, தங்களின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக பயன்படுத்த
காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பா.ஜ., தலைமையிலான தே.ஜ.,
கூட்டணியில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுக்கு, இந்த மாநாட்டில்
பங்கேற்க, காங்., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. சரியான திட்டமிருப்பின் நிச்சயம் காங்கிரஸ் மீண்டும் அரசியலில் ஜொலிக்க
ஆரம்பித்துவிடும். ஏனென்றால் பா ஜ கவின் குளறுபடிகள்..நிச்சயம்
காங்கிரசுக்கு சாதகமாகவே இருக்கும். நான்காண்டுகளில் பா ஜ க மேலும்
மோசமாகவே ஆட்சியை செய்யும். அதற்குள் காங்கிரஸ் தனது பிரச்சாரம் மூலம் தனது
பலத்தை அதிகரிக்க செய்திடலாம். காங்கிரசின் எழுச்சி பா ஜ கவின் வீணான
திட்டங்களே என்பதிலே மாற்று கருத்தே இருக்க முடியாது. சுயவிளம்பர
திட்டங்கள்..மக்களுக்கான திட்டங்களே காணோமே..வெறுத்துபோயுள்ள மக்களின்
கவனம் காங்கிரசை நோக்கி திசை திருப்ப பா ஜ க அணைத்து வேலைகளையும் நன்றாக
செய்துவருகின்றது...
லிங்காவின் வசூலுக்கு அரசியல் ஆச்சி மசாலா ரொம்ப முக்கியம்! ரஜினியின் அல்வா அள்ளிக்கோ அள்ளிக்கோ!
அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், தயக்கமாக இருக்கிறது. எப்படி
இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என, லிங்கா பட இசை வெளியீட்டு
விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவரது ரசிகர்கள் மத்தியில், கடும்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நடிகர்
ரஜினி நடித்து வெளியாக இருக்கும், 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா,
சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, கவிஞர் வைரமுத்து,
இயக்குனர் அமீர் ஆகியோர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து
பேசினர்.விழாவில், ரஜினி பேசுகையில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை;
ஆனால், கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு
நல்லது செய்வேன்,'' என்றார்.அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல, ரஜினி
பேசிய பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி
இருக்கிறது.இதுகுறித்து, ரஜினி ரசிகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
கிட்டத்தட்ட,
15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இப்படித்தான், பேசி வருகிறார்.
நமக்கு வாய்த்த 37 எம்.பி க்கள் ? கேள்வியே கேட்பதில்லை! ஒரே அமைதி சதா அம்மா பயம்?
ஜெயலலிதா என்ற தனி மனுஷியை குஷிப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் அளப்பெரிய
லாபமீட்டுவதே குறிக்கோளாக கொண்டிருக்கும் பிரதிநிதிகளை தேர்வு செய்த மக்கள்
தான் தங்கள் தவறை முதலில் உணர வேண்டும். சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்துடன் 1960 களில் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த திமுக
உறுப்பினர்கள் புதியவர்களாயிருந்தும் மாநில நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட
மக்களுக்காகவும் எதிர்க்கட்சிகளோடு இணைந்து குரலெழுப்பி காரியம்
சாதித்தார்களே.....அது என் இப்போது தயக்கமாக மாறி விட்டது? மக்களிடம்
இல்லாத எழுச்சி. மக்களுக்கு இல்லாத அக்கறை அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்
பிரதிநிதிகளுக்கு எப்படி வரும். ஒரு ரூபாய் கொடுத்தால் அம்மா கடையில்
இட்லி, இப்போதைக்கு அது போதும் என்ற அலட்சியம் மேலோங்கி விட்டது. எது சரி
எது தவறு என்று உணர முடியாத நிலையில் மக்களின் மனோபாவம் இருக்கும் வரை
தமிழகம் பின்னோக்கித்தான் போகும்.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசின் பல துறைகளின் திட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் கேள்விகள் எழுப்புவதற்கான தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து, கேள்விகள் எழுப்ப, தமிழக எம்.பி.,க்கள் தயக்கம் காட்டுவதாகவும், நடைமுறைகள் பற்றி தெரியாததால், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது கேள்வி நேரம். ஒவ்வொரு நாளும், காலை, 11:00 மணிக்கு துவங்கி, 12:00 மணி வரை கேள்வி நேரம் நடக்கும். அப்போது, லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும், எம்.பி.,க்கள் பெருமளவில் ஆஜராகி இருப்பர்.அதற்கு காரணம், எம்.பி.,க்கள் எழுப்பும், காரசாரமான கேள்விகளையும், அதற்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசின் பல துறைகளின் திட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் கேள்விகள் எழுப்புவதற்கான தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து, கேள்விகள் எழுப்ப, தமிழக எம்.பி.,க்கள் தயக்கம் காட்டுவதாகவும், நடைமுறைகள் பற்றி தெரியாததால், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பார்லிமென்ட் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது கேள்வி நேரம். ஒவ்வொரு நாளும், காலை, 11:00 மணிக்கு துவங்கி, 12:00 மணி வரை கேள்வி நேரம் நடக்கும். அப்போது, லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும், எம்.பி.,க்கள் பெருமளவில் ஆஜராகி இருப்பர்.அதற்கு காரணம், எம்.பி.,க்கள் எழுப்பும், காரசாரமான கேள்விகளையும், அதற்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே
ஞாயிறு, 16 நவம்பர், 2014
ராஜ்நாத் சிங் : இந்தியை கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது!
நாட்டில் 75 சதவீதத்தினர் இந்தி மொழியை அறிந்திருக்கும்போது, அதனை நாம்
ஆட்சி உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நிகழ்ச்சியில்
பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பேசும்போது, "நாடு
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன போதிலும் நமது அலுவலக மொழியாக இந்தி
உபயோகபடுத்தப்படவில்லை. நமது நாட்டில் இருக்கும் மக்களுள் 75 சதவீதத்தினர்
இந்தி தெரிந்தவர்களாகவோ அல்லது இந்தி பேசக் கூடியவர்களாகவோ இருக்கின்றனர்.
நமது முன்னோடிகளான பால கங்காதர் திலக், சுபாஷ் சந்திர போஸ், ராஜக்கோபாலச்சாரி ஆகியோர் இந்தி அறியாமலே, இந்த மொழியை பரப்பினர். ஆனால் இந்தி நமது ஆட்சி மொழியாக இல்லை. தற்போது இந்தியை கொண்டாட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் நமது இந்தி மற்றும் பல மொழிகள் அழிவை நோக்கி சென்றுவிடும். அத்தகைய நிலையை நம்மால் ஏற்க முடியாது.
21-வது நூற்றாண்டில் இந்திய மற்றும் ஆசிய மொழிகள் மிகவும் அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். நம் மொழியை பரப்ப அனைத்து வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்றார்.
டெல்லியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நிகழ்ச்சியில்
பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பேசும்போது, "நாடு
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன போதிலும் நமது அலுவலக மொழியாக இந்தி
உபயோகபடுத்தப்படவில்லை. நமது நாட்டில் இருக்கும் மக்களுள் 75 சதவீதத்தினர்
இந்தி தெரிந்தவர்களாகவோ அல்லது இந்தி பேசக் கூடியவர்களாகவோ இருக்கின்றனர். நமது முன்னோடிகளான பால கங்காதர் திலக், சுபாஷ் சந்திர போஸ், ராஜக்கோபாலச்சாரி ஆகியோர் இந்தி அறியாமலே, இந்த மொழியை பரப்பினர். ஆனால் இந்தி நமது ஆட்சி மொழியாக இல்லை. தற்போது இந்தியை கொண்டாட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் நமது இந்தி மற்றும் பல மொழிகள் அழிவை நோக்கி சென்றுவிடும். அத்தகைய நிலையை நம்மால் ஏற்க முடியாது.
21-வது நூற்றாண்டில் இந்திய மற்றும் ஆசிய மொழிகள் மிகவும் அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். நம் மொழியை பரப்ப அனைத்து வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே வாசன் புதிய கட்சிக்கு சூட்டுகிறார்!
தமிழ்நாடு காங்கிரசில் உறுப்பினர் அட்டையில்
காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெறும் பிரச்சினையில் மேலிடத்துடன்
ஏற்பட்ட மோதலால் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். அவரது
ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம் புதிய தலைவராக இளங்கோவனை
நியமித்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி
தொடங்குவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து
தொண்டர்களும், நிர்வாகிகளும் விலகினார்கள்.
இதையடுத்து ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையே ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். வருகிற 28–ந்தேதி திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர், கொடி போன்ற விவரங்களை அறிவிக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். வாழப்பாடி, நெடுமாறன் வைகோ கட்சிகளின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியல்லையே முடியல்லையே ?
இதையடுத்து ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையே ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். வருகிற 28–ந்தேதி திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர், கொடி போன்ற விவரங்களை அறிவிக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். வாழப்பாடி, நெடுமாறன் வைகோ கட்சிகளின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியல்லையே முடியல்லையே ?
தேஜாஸ்ரீ கொலை! அக்காவை பழி வாங்க தங்கையை கொன்றேன்:கைதான வாலிபர் திடுக் வாக்குமூலம்
சேலம்: சேலம் அருகே உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (42). தனியார்
கிரானைட் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கஸ்து£ரி (38). இவர்களது மகள்கள்
ஹரிணி(20), தேஜாஸ்ரீ (14). இதில் தேஜாஸ்ரீ, தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு
படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த
தேஜாஸ்ரீ, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்
குற்றவாளிகளை பிடிக்க 11 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட தேஜாஸ்ரீயின் அக்கா
ஹரிணியை ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியை சேர்ந்த யுகாதித்தியன் (28) என்பவர்
காதலித்தது தெரிய வந்தது. யுகாதித்தியனை பிடித்து விசாரித்தனர். அவர்
தேஜாஸ்ரீயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த
அவரது நண்பர் சசியையும் போலீசார் கைது செய்தனர். யுகாதித்தியன் போலீசிடம்
அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் மொழியை கற்பிக்கவும்! மோடியிடம் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வலியுறுத்தினார்.
நரேந்திர மோடியுடன் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்| படம்: பி.டி.ஐ.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட
வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை
விடுத்துள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன்
பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது அவர் மோடியிடம், "இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
ஜெர்மன் மொழிப்பாடத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக்
கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை
நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கோரியுள்ளார்.
முத்தமா ? நிர்வாணமா? கலாசார காவலர்களே / மதவாதிகளே கண்ணாடியில் உங்களை பாருங்கள்?
கல்லுாரி மாணவர்களிடையே, முத்த போராட்டம், பரவாமல்
தடுக்க, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள, தேநீர் விடுதியில், மாணவ, மாணவியர்,
ஒருவரை ஒருவர் கட்டியணைத்து, முத்தம் கொடுத்தனர். இதற்கு, சில அமைப்புகள்,
எதிர்ப்பு தெரிவித்தன.அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
நேற்று முன்தினம், சென்னை ஐ.ஐ.டி.,யில், மாணவ, மாணவியர், முத்த போராட்டம்
நடத்தினர். இதையடுத்து, மற்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள்
மத்தியில் முத்த போராட்டம் பரவாமல் தடுக்க, போலீசார்
உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக, தனி போலீஸ் படையும்
அமைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.ரெஜினா:கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும்! சக ஹீரோயின்களுக்கு சவால்?
கவர்ச்சியாக
நடிப்பேன் என்றதால் சர்ச்சையில் சிக்கினார் ரெஜினா.கண்ட நாள் முதல்,
பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர்
ரெஜினா. தற்போது ‘ராஜதந்திரம்' என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார்.
தெலுங்கில் 3 படங்கள் நடிக்கிறார். திரைக்கு வந்த ஆரம்ப காலங்களில்
கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள்
குறையத் தொடங்கின. முற்றிலுமாக பட வாய்ப்பு கைநழுவிப்போய்விடுமோ என்று
பயந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும்
என்று சக ஹீரோயின்களுக்கு சவால் விடுவதுபோல் தெரிவித்ததுடன் கவர்ச்சி
ஹீரோயின் வேடங்களையும் ஏற்றார். அவரது அறிவிப்பு திடீர் தலைவலியை அவருக்கு
ஏற்படுத்திவிட்டது.
கவர்ச்சியாக நடிக்கும் நீங்கள் அதற்கான எல்லையை
வகுத்து வைத்திருக்கிறீர்களா? என்றும், திடீரென்று கவர்ச்சிக்கு மாறியது
ஏன்? கவர்ச்சி காட்டாவிட்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காதா என்று
அவரது ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர். கடுப்பான ரெஜினா,‘வெளிப்படையாக
சொல்லவேண்டுமென்றால் நடிகையாக வேண்டும் என்று நான் ஒருநாளும்
நினைத்ததில்லை. கடவுள் அருளால் நடிகை ஆனேன். சில நல்ல கதாபாத்திரங்கள்
எனக்கு கிடைத்ததில் சந்தோஷம். கந்துவட்டி தொழில் அபார வளர்ச்சி ! ஒரு வருடத்தில் நூற்றுக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் தற்கொலை!
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5 குழந்தைகள் சாவு!
தர்மபுரி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த
3 சிசுக்கள் உள்பட 5 குழந்தைகள் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இறந்த
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்குபேட்டர் கோளாறு,
மருத்துவர்களின் அலட்சிய போக்கால் குழ ந்தைகள் இறந்திருக்கலாம் என
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில், நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் புறநோயாளிகள், ஆயிரம்
உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி,
சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த
நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதிமுக அமைச்சர்களும் அடிவருடிகளும் முழுக்க முழுக்க கோவில்களில்அம்மாவுக்காக பூஜை யாகம் ஹோமம் மண்சோறு காவடி போன்ற நாட்டுக்கு தேவையான விடயங்களில் full time ஈடுபடுராய்ங்க ! இவிங்க பேசாம அதிமுகவை ஒரு அம்மா பக்தி இயக்கமாக மாத்திடலாம் . இந்துசமய பூஜை புனஸ்கார ADMK ன்னு ஒரு NGOவாக மாத்திடலாம்?ஆட்சின்னா கொஞ்சம் நாட்டு நிர்வாகத்தையும் கவனிக்கனும்ல?
இறந்த 91 வயது மூதாட்டி 11 மணி நேரத்துக்குப் பின்பு உயிரோடு எழுந்த அதிசயம்! போலந்தில் ...
A 91-year-old woman has woken up in a body bag after being declared dead and kept in a morgue's cold storage room for 11 hours.
Janina
Kolkiewicz was declared dead after an examination by the family doctor
in the eastern Polish town of Ostrow Lubelski, and sent to a mortuary
while her family planned her funeral.
;
போலந்து நாட்டின் ஓஸ்ட்ரோ லுபெல்ஸ்கி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜனினா
கோல்கிவ்ஸ் (வயது 91). முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக சாப்பாடு
எதுவும் சாப்பிடாமல் இருந்த அவர் கடந்த 6-ம் தேதி உடல் அசைவற்று கிடந்தார்.
இதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர்.
பின்னர் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது ஜனினா இறந்து
விட்டார் என்று கூறிய டாக்டர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதனால்,
உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அவரது உடலை, உடல்
குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்தனர்.
ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















