அதன்படி
இந்த ஜெர்மன் அரசோடு ஜெர்மன் மொழி சம்பந்தமாகப் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையப்பம் இட்ட கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கான கமிஷனர்
அவினாஷ் தீட்சித் என்பவரை விடுமுறையில் செல்லுமாறு பணித்துள்ளார்கள்
என்றும்கூட கூறப்படுகிறது.
மத்தியில்
ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சி பொறுப்பேற்ற
இந்த 5,6 மாதங்களில் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை தந்து அதனை எப்படியும்
சிம்மாசனத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடாப்
பிடியாக உள்ளது.
அதனால்தான்
சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும் என்று கூறிய திணிப்பு முயற்சியை,
தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து நின்றதால், கூடாரத்துக்குள்
நுழைந்து தலையை நீட்டி, பிறகு முழுவதும் உள்ளே வந்து, கூடார உரிமையாளனைத்
துரத்திய கதைபோல முயற்சிகள் அவ்வப்போது தொடர் முயற்சியாக நடைபெற்று
வருகிறது!
1938இல்
ஆச்சாரியார்கூட, முதலில் ஹிந்தி கட்டாயம் என்று துவங்கி, சமஸ்கிருதம்
என்றால் ஆரிய ஆதிக்கம் என்பது பளிச் சென்று தமிழ் நாட்டு மக்களுக்குப்
புரியும் என்று கருதியே ஹிந்தி மூலம் - முதற்படியாக அதனைச் செய்யும் நிலை
இருந்தது. இப்போது நேரடியாகவே இதனை வாய்ப்பு நேரும் போதெல்லாம்,
புற்றுக்குள்ளிருந்து பாம்பு தலை நீட்டுவதும், எதிர்ப்புக் குரல் - என்ற
தடியைக் கண்டதும், தலையைப் பின் வாங்கிக் கொள்வதுமான ஆதிக்கப் போரில்
ஈடுபட்டுள்ளனர்!
இது
ஒரு வெறும் மொழிப் படிப்புப் பிரச்சினை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பின்
ஒரு முக்கிய கட்டம்; ஆரியக் கலாச்சாரத் திணிப்பிற்கு அப்பட்டமான முகவுரை
நுழைவு வாயில்.
இப்படி
கல்வியில் மத்திய ஆட்சி அடிக்கடி பல்வேறு ‘சமஸ்கிருத சித்து’ வேலைகளில்
ஈடுபடுவதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கைகட்டி, வாய் பொத்தி
இருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு
மீட்டுக் கொண்டு வருதலேயாகும்.
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைக் காப்பாற்ற அறவழியில் போராடுவது அவசரம் - அவசியம்!
இதற்காக
திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஒரு
கண்டன ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி காலை மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு
பெரியார், இணைச் செயலாளர்கள் இளந்திரையன், அஜீத்தன் ஆகியோர் முன்னிலையில்
மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக