சென்னை: பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியுள்ள சினேகாவின்
காதலர்கள், சாதி வெறி பிடித்த ராமதாசுக்கு புத்தி புகட்டும் என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு
கூறியுள்ளார்.
சினேகாவின் காதலர்கள் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. அதற்கு
முன் முக்கியத் தலைவர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டி
வருகின்றனர் தயாரிப்பாளர் கலைக் கோட்டுதயமும் இயக்குநர்
முத்துராமலிங்கனும்.
படம் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், சிறப்பாக
உள்ளதாக பாராட்டியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித்
தொடர்பாளரான வன்னியரசு, இந்தப் படம் குறித்து பெரிய அறிக்கையே
வெளியிட்டுள்ளார்.
அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும்
அக்கட்சியினரின் சாதி வெறியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமதாசுக்கு புத்தி புகட்டும் 'சினேகாவின் காதலர்கள்'! -
திங்கள், 4 ஆகஸ்ட், 2014
சீனாவில் இன்று 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ! சுமார் 400 பேர் பலி ?
சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30
மணியளிவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்
6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. ;
இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 400 இருக்கலாம் என அஞ்சப்படுகிறது . 2,000 பேர்
காயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று
அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட
சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில்,
மீட்புப்பணைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின், இந்திய
மற்றும் நேபாள எல்லையையொட்டிய அருணாசல பிரதேச மாநிலம் அருகே உள்ள, ஷிகேட்ஸ்
பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. dinamani.com
திருப்பூரில் ஆறு மாதத்தில் 135ர் தற்கொலை! டாஸ்மாக் வருமானம் ஓஹோ !
திருப்பூர்:திருப்பூரில், கடந்த ஆறு மாதத்தில், 90 ஆண்கள்,39 பெண்கள் உள்பட
135 பேர் தற்கொலை செய்துகொண்டனர். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், தமிழக
அளவில் தற்கொலை துயரில் முதல் நகரமாக மாறிவிட்டது.
வேலைவாய்ப்பின்றி திக்கற்று அலையும் எண்ணற்ற வெளிமாநிலத்தவருக்கும் தமிழகத்தின் பிற மாவட்டத்தினருக்கும், வாழ்வளித்து, வந்தாரை வாழ வைக்கும் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.இதனால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் புதிது புதிதாக இந்நகரை நோக்கி படையெடுக்கின்றனர். அதற்கேற்ப, குற்றம் மற்றும் பிரச்னைகளும் திருப்பூரில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தற்கொலைச் சாவுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இனி என்ன ஜாலியாக அம்மாவின் பெயரால் "அம்மா தற்கொலை கடைகள்" ஆரம்பிக்க வேண்டியதுதானே ?

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி ? மோடி முயற்சி !
பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ.,
கூட்டணி அரசுக்கு, இன்சூரன்ஸ் மசோதா விஷயத்தில், முதல் நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய
அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,
இன்சூரன்ஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.
விரைவில் மசோதா:இன்சூரன்ஸ் துறையில், தற்போது 26 சதவீதம் வரை மட்டுமே, வெளிநாட்டு முதலீடு களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படவுள்ளது.ராஜ்யசபாவில், இன்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை எல்லா கட்சிகளும் எதிர்த்து மண்ணாக்க வேண்டும். அது அவர்கள் இந்தியாவிற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும். இது நாள் வரை நீங்கள் அடித்த கொள்ளைக்கு இது பரிகாரமாக இருக்கலாம்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
அருந்ததி ராய் : யார் மகாத்மா ? காந்தியை விட அய்யன்காளியே அதற்கு பொருத்தமானவர் !
கேரளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொற்பொழிவின்போது மகாத்மா காந்தி
குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டதாக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது
போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் பேச்சு அடங்கிய வீடியோவை
அளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் 19-வது நூற்றாண்டில்
தலித் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர் அய்யன்காளியின் நினைவு சொற்பொழிவு
நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி
ராய், மகாத்மா காந்தியை பற்றி விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மாநில டி.ஜி.பி.யிடம்
புகார் மனு அளித்தார்.
நட்வர்சிங்கை விட பிரணாப் முகர்ஜியிடம் அதிக ரகசியம் உள்ளது ! சர்மிஷ்தா முகர்ஜி :ஆனால் அப்பா பண்பானவர் !
நட்வர் சிங்கிடம் உள்ளதை விட அதிக அளவிலான விவரங்கள், தகவல்கள்,
ரகசியங்கள் எனது அப்பாவின் டைரிகளில் உள்ளன. ஆனால் என் அப்பா அவரைப் போல
நடந்து கொள்ள மாட்டார். நம்பிக்கைத் துரோகம் சரியல்ல என்று குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறியுள்ளார்.
மறைந்த ராஜீவ் காந்தி குறித்தும், அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல்
காந்தி குறித்தும் பல்வேறு பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார் நட்வர்சிங். இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குப்
பதிலடியாக தானும் சுயசரிதை எழுதி உண்மைகளை வெளியிடப் போவதாக சோனியா காந்தி
கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்னொரு முன்னாள் முக்கிய காங்கிரஸ்
தலைவரும், குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா
கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை, முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் மாதிரி நடந்து கொள்ள
மாட்டார். அவர் காங்கிரஸில் இருந்தபோதும், அரசில் இருந்தபோதும் நடந்ததை
வெளியில் சொல்ல மாட்டார்
காதல்கதைகளுக்கு தாவிய இயக்குனர் சேகரின் சரவணா பொய்கை !
குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.>அவரது
மகன் கார்ல் மார்க்ஸ் நடிப்பில் உருவாகிவரும் சரவண பொய்கை பற்றி பேசிய
வி.சேகர் “நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்.
குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம். எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக
மட்டுமே. ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது
தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என் படங்களை வெற்றி பெற செய்தார்கள்.
இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து
எடுத்திருக்கும் காதல் கதைதான் ’சரவண பொய்கை’.
தஸ்லீமா நஸ்ஸிரின் விசாவை நீடிக்க தாமதம் ஏன் ? ராஜ்நாத்சிங் தஸ்லிமா பேச்சுவார்த்தை !
இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கு விசா
மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த, சர்ச்சைக்குரிய வங்கதேச பெண்
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு, தஸ்லிமா நஸ்ரீன் தனது டுவிட்டர் இணையதளப் பக்கத்தில், "உங்கள் துயர நாள்கள் முடிவுக்கு வரும் என ராஜ்நாத் சிங் கூறினார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓராண்டு காலம் தங்குவதற்கு அனுமதி கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் தஸ்லிமா நஸ்ரீன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் இரண்டு மாதம் மட்டும் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது.
இதுகுறித்து, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஸ்லிமாவின் விசா மனுவை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதுபற்றி முடிவு எடுப்பதற்கு கால தாமதமாவதால், அவருக்கு இரண்டு மாத விசா வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் வசித்து வருகிறார். dinamani.com

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட
குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற
ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின்
அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டில்: தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. அரசு உதவி பெரும் பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு போட்டியாகிவிடும், என்றும் , பிறகு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்து விடும் என்றும் அரசு எண்ணுவதால் ஆங்கில வழி போதனைக்கு இன்னமும் அனுமதி கொடுக்காமல் தாமதிக்கிறது.. அதுமட்டுமல்லாமல் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படுமே என்று என்னும் அரசு. ஒரே வழி அரசு பள்ளிகளில் அரசியல்வாதிகள் பணக்காரர்கள் பிள்ளைகள் படிக்கும் நிலை வர வெண்டும்?

திமுகவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கூட்டங்கள் ஏற்பாடு செய்ய அம்மா உத்தரவு !
சட்டசபையை பற்றி திமுக மக்கள் மத்தியில் கூறும் குற்றச்சாட்டுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அம்மா நினைக்கிராகளாம் அதனால அவுக அடிமைகளும் கூட்டம் போடணும்னு உத்தரவு !
சென்னை: தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்த, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர்கள் பேசும்போது, கருணாநிதியை விமர்சிப்பதையே வாடிக்கையாக்கினர். ரத்தத்தி்ன் ரத்தங்களே அம்மாவின் அடிமைகளே சட்ட சபையில் நாங்கள் எல்லாம் மேசையை தட்டிக்கொண்டும் சீட் முனையில் அமர்ந்து அம்மாவிடமிருந்து சிகனல் வரும்போதெல்லாம் தடதடவென பெஞ்சை தட்டும் பணியை செவ்வனே செய்து வருகிறோம் அனைத்து அமைச்சர்களின் சார்பாக அம்மாவே பேசி சாதனை புரிகிறார் கருணாநிதி்யை கன்னாபின்னாவென தி்ட்டுவதற்கு மட்டும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சர்கள் எழுந்து பேசி அம்மாவை மகிழ்விக்கிறார்கள் இதுபோன்ற சாதனையை காண சகிக்காமல் தி்முகவினர் வெளியே போய்விடுகிறார்கள் என பேசுவார்களா

ராஜினமா நாடகம் போட்ட ஸ்டாலின் வேட்பாளர்களிடம் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பி கொடுதாரா ?
திமுகவில் நடக்கும் இந்த பதவி சண்டை..ஓர் குடும்ப பிரச்சினையாக
மாறிவிட்டது. அந்த காலத்து மொகலாய மன்னர் பதவி சண்டையை போல கிட்டத்தட்ட
ஆகிவிட்டது. இந்த விஷயத்தில் எனது ஆதரவு கருணாவுக்கே. ஏன்
என்றால்..ஸ்டாலினுக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தார்..ஆனால்
அவரால் மக்களின் மனதை வெல்ல இயலவில்லை. சென்னை மாநகராட்சி தேர்தலை
தில்லுமுல்லு நடத்தி உலகே சிரித்தாலும் கவலையே படாமல்..ஜெயிக்க வைத்து
புதிதாக ஓர் மேயர் என்கிற பதவியை உருவாக்கி கொடுத்தார்..என்ன ஆச்சு..அதற்கு
பின்னர்தான் திமுக சென்னை முழுக்க தோல்வியை சந்தித்தது..மறுக்க முடியுமா?
சரிதான் விடுங்கள்..தனது மூத்த மகனையே இவருக்காக எனது மகனே இல்லை என்று
அறிவித்து..பாராளுமன்ற தேர்தல் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்..என்ன
ஆச்சு..? வேட்ப்பாளர்கள் தேர்வில் பணத்தை எண்ணினாரே தவிர..கட்சியின்
வெற்றியை எண்ணிப்பார்த்தாரா? தேர்தல் தோல்வி முடிந்ததும்..வேட்ப்பாளர்கள்
வீடு ஏறி வாங்கிய பணத்தில் ஒரே ஒரு பகுதிய திரும்ப தாருங்கள் என்று
கேட்டதும்..ராஜினாமா நாடகத்தை கையில் எடுத்து நாடகம் ஆடினாரே அன்றி
பணத்தில் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைத்தாரா? அவரது பேச்சை தொடர்ந்து
கேட்டுப்பாருங்கள்..எழுதி வைத்து படிப்பார்..விஷய ஞானம் இல்லாத அதே
பேச்சு..என்கிற காரணத்தால்..என்கிற வாரத்தையை மூச்சுக்கு முன்னூறு முறை
ஒப்புவிப்பார்..கையை நீட்டி ஏதோ வித்தைக்காரன் பேச்சுபோல இருக்குமே அன்றி
ரசிக்கும்படியோ..அல்லது புரியும்படியோ..ஹ்ம்ம் ஒரு எழவும் புரியாது.
அம்மாஞ்சி என்பார்களே அந்த வாரத்தைக்கு உரியவர் ஸ்டாலின். தந்தை என்கிற
பொறுப்பில் இருந்து கருணாவின் எண்ணம் ஸ்டாலினை பற்றியது சரிதான்..தளபதி
என்றால் ஒருவித எழுச்சியோடு பணியாற்றுவார்கள்..இவருக்கு எனக்கு தெரிந்தே 40
வருட அனுபவம் இருக்கும்போல..இன்னமும் உருப்படாத பேச்சை வைத்து எப்படி
இவரால் அரசியலில் பிரகாசிக்க முடியும். திணிக்கப்படுகின்ற வாரிசுகள்
ஜொலிப்பதில்லை என்பதை இவரது அரசியலை வைத்தே கணித்து விடலாமே..பட்டங்கள்
எல்லாம்..அவரது ஜால்ராக்கள் மூலம் இதனை விட பெற்றிட முடியும்..பிரயோஜனம்..?
அப்பா 40சதம் கட்சியை அழித்தால் என்றால்..மிச்சத்தை ஸ்டாலின்
அழித்துக்கொண்டு வருகின்றார்.. dinamalar.com
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
கலைஞர் திமுகவின் இதர தலைவர்களையும் தளபதிகள் என்று அழைத்தார் ! அப்ப ஸ்டாலின் ?
தி.மு.க., உட்கட்சி தேர்தல் முடிந்ததும், அடுத்த மாதம் தி.மு.க.,
பொதுக்குழு நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில், கட்சியின் தலைவர்
பதவியிலிருந்து, கருணாநிதி விலகிக் கொண்டு, பொருளாளர் ஸ்டாலினுக்கு,
அப்பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள், வலியுறுத்தி
வருகின்றனர்.
ரசிக்கவில்லை:இப்படியொரு கோரிக்கை ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருவதை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. ஆரம்பத்தில் இந்த கோரிக்கை தொடர்பாக, கண்டும் காணாமல் இருந்தவர், சமீப நாட்களாக மறைமுகமாக இந்த கருத்தை எதிர்த்து வருகிறார்.'சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், கடந்த 31ம் தேதி, சென்னை தி.நகரில் தி.மு.க., சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், கருணாநிதி. அப்போது, தன் உள்ளக் கிடக்கையை அவர் மறைமுகமாக கோடிட்டு காட்டிப் பேசினார்.'என் வாழ் நாள் முழுவதும், நான்தான் கட்சியின் தலைவராக நீடிப்பேன்' என்பது போல அவர் பேசினார்.அதோடு, முன்னாள் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் மேடையில் ஏற்றி அமர வைத்துக் கொண்ட கருணாநிதி, ஸ்டாலின் முன்பாகவே அவர்கள் அனைவரையும் 'தளபதிகள்' என அழைத்துப் பேசி, ஸ்டாலின் தரப்பினரை கடும் அதிருப்திக்குஉள்ளாக்கினார்.'

சனி, 2 ஆகஸ்ட், 2014
கூடுவாஞ்சேரி கோயிலில் தீ மிதித்த 3 பக்தர்கள் காயம் !
கூடுவாஞ்சேரி கோயில் விழாவில் தீமிதித்த 3 பக்தர்கள்
படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் கன்னியம்மன் கோயில்
உள்ளது. இங்கு நேற்று இரவு 71ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில்
150 பக்தர்கள் தீமிதித்தனர். கூடுவாஞ்சேரி ஈவிஆர் தெருவை சேர்ந்த
ரவிச்சந்திரன் (42), அவர் மகன் கேசவன் (11), நீலமங்கலம் பிள்ளையார் கோயில்
தெருவை சேர்ந்த பாபு (58) ஆகியோர் தடுமாறி தீயில் விழுந்தனர். இதை பார்த்த
பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த 3 பேரையும் மீட்டு நந்திவரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்
இல்லாததால் பெத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
tamilmurasu.org
tamilmurasu.org
தருண் விஜய் BJP Mp : சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள் கற்பிக்க படவேண்டும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கான நேரத்தில் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய், தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு சிறப்பு செய்ய அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பாராட்டத் தக்கவையாகும்.
பொதுவாகவே வட இந்தியாவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைவிட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற எண்ணம் உண்டு.

கத்தி படம் வெளிவர கட்டை பஞ்சாயத்தினர் கப்பம் கேட்கிறார்களா ?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஊர்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று ‘கத்தி’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
தற்போது மீண்டும் இப்பிரச்னை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால லைக்கா’ நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து இருக்கிறாராம்.

ஜெயலலிதா: 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள் தான் அல்லது எனது தொகுதிகள்தான் !
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ் ஜெயலலிதா 3
அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய
கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.விவாதத்தை தொடங்கி வைத்து தே.மு.தி.க. உறுப்பினர் அருள் செல்வன் (மயிலாடுதுறை தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-உறுப்பினர்
அருள் செல்வன்:- எனது தொகுதியில் கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என
அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயலலிதா:-
இந்த அறிவிப்பை வெளியிட்டது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என்று
எதிர்பார்த்து அல்ல. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் அ.தி.மு.க.
தொகுதிகள்தான். மயிலாடுதுறை தொகுதியை தனது தொகுதி என்று உறுப்பினர் சொந்தம்
கொண்டாடுகிறார்.
விஷ வாயு கசிவு ! Bhopal Union Carbide பொறுப்பேற்காது என நியூயார்க் கோர்ட் உத்தரவு !
நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட்
கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட
அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி,
அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி,
அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த
1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில், போபால் நகரின் மத்தியில்
அமைந்திருந்த, அமெரிக்க நிறுவனமான, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில்
இருந்து விஷ வாயு கசிந்தது. நகரில் காற்றில் பரவிய விஷ காற்றால், 5,000
பேர் பலியாயினர்;
இதை போல தான் 123 nuclear agreement இலும் அவர்கள் இப்போதுள்ள liability clause ஐ நீர்த்துப்போக செய்ய அலைகிறார்கள்.அது இதே மாதிரி பேரிடர் ஏற்படும் வேளையில் அந்த அணு உலை சப்பளை செய்த நிறுவனம் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்து இந்திய அரசே அதற்கான இழப்பீட்டை தர அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய துடிக்கிறார்கள். இப்போது ஜான் கெர்ரி வந்தது ஒப்பந்தத்தை உடன் அமல் செய்ய அழுத்தம் கொடுக்கத்தான்.அதற்குதான் மோடி ஜி க்கு விசா மூடிக்கொண்டு கொடுத்துள்ளனர் அமேரிக்கா வர.வருந்தி வருந்தி அழைப்பது போல பாசாங்கும் செய்கின்றனர்..கச்ச தீவு அபிடவிட்டு தாக்கல் பண்ணிய மாதிரி சொதப்பாமல் இங்கு நமது நாட்டின்,மக்களின் பாதுகாப்பை முன் நிறுத்தி அதை அனுமதிக்க கூடாது..

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014
IAS - IPS போன்ற குடிமக்கள் சேவை பரீட்சை பிராந்திய மொழி உரிமை ! எதிர்கட்சிகள் அமளி !
புதுடெல்லி:
சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்னையை எழுப்பி மாநிலங்களவையில் இன்று
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து,
மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு
காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் இன்று
தெரிவித்தார். மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல்நிலை தேர்வில்
ஆங்கிலத்தில் மட்டும் கேள்வி தாள் தயாரிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தி உள்பட பிராந்திய மொழி மாணவர்கள்
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னை நாடு
முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துனிசியாவில் திடீரெனத் தோன்றிய ஏரி ! 600க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் என்று
வறட்சி மிகுந்த ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா
பகுதியில் திடீரெனத் தோன்றியுள்ள ஏரி ஒன்று வெயிலில் வாடித் தவிக்கும்
மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தலமாக மாறியுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பில் ஒரு மில்லியன் கன மீட்டர்
கொள்ளளவுடன் 10 முதல் 18 மீ வரையிலான ஆழத்துடன் இந்த ஏரி காணப்படுவதாக
உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் பாஸ்பேட்
சுரங்கங்கள் அதிகம் காணப்படுவதால் தண்ணீர் மாசுபட்டதாகவோ, கதிரியக்கத்தன்மை
கொண்டதாகவோ இருக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதற்கேற்றாற்போல் முதலில் தெளிவாக நீல நிறத்தில் காணப்பட்ட இந்தத் தண்ணீர்
இப்போது அடர்த்தியான பச்சை நிறத்தில் பாசி படிந்து காணப்படுவதையும் அவர்கள்
குறிப்பிடுகின்றனர்.
தமிழகம் :300 அம்மா அங்காடிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு !
ரூ.37 கோடியே 17 லட்சம் செலவில், தமிழகம் முழுவதும் 300 'அம்மா அமுதம்
பல்பொருள் அங்காடிகள்' துவங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா:
1. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் 114 பல்பொருள் அங்காடிகள்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23 அமுதம் பல்பொருள்
அங்காடிகள் என மொத்தம் 137 அங்காடிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு
வருகின்றன. பல்பொருள் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும்
அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில்
300 ‘அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்’ தமிழகமெங்கும் துவங்கப்படும். அம்மா தாயே எல்லா தர்மமும் பண்றீங்க கூடவே கொஞ்சம் அம்மா டாஸ்மாக் தெறந்தா கும்பிடுவேன் ஆத்தா
5 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் அதிசயம் நிகழ்த்தும் இலங்கையர் ! அமெரிக்க தொலைகாட்சிக்கு நேர்காணல்
உணவுகள் எதனையும் உட்கொள்ளாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என
இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள்
மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் கிர்பி டி
லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும்
ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என
குறிப்பிட்டுள்ளார்.
சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் கடவுளின்
அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
யார் இந்த நட்வர்சிங்? இராக் பெற்றோலிய ஊழலில் சோனியா தன்னை காப்பாற்றவில்லையாம் ! அதுதான் கோபமாம் ?
இந்திய வெளியுறவுத் துறையில் 30 ஆண்டுகாலம் அதிகாரியாக பணியாற்றியவர்
நட்வர்சிங்.
சீனா, அமெரிக்கா மற்றும் யுனிசெப் ஆகியவற்றில் முக்கிய பணிகளுக்கு
அதிகாரியாக செயல்பட்டவர் நட்வர்.
1966ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் கீழ் பிரதமர் அலுவலக பணிக்கு
இடமாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் இந்திரா குடும்பத்துக்கு நெருங்கிய
நபராக உருவெடுத்தார்.
1984ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய நிலையில் தமது அரசு
பணியை ராஜினாமா செய்தார் நட்வர்சிங்.
1984ஆம் ஆண்டு நட்வர்சிங்குக்கு மத்தியாரசு பத்மபூஷண் விருது அளித்தது.
1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜீவ் காந்தி
அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார்.
1985-க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில்
ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார்.
1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.டி. திவாரி,
அர்ஜூன்சிங் ஆகியோருடன் சேர்ந்து அனைத்திந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
என்ற தனிக்கட்சியை நடத்தினார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா கை ஓங்கிய பின்னரே மீண்டும்
காங்கிரஸில் இணைந்தார் நட்வர்சிங்.
1998- 99 ஆம் ஆண்டு 12வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
நட்வர்சிங்.
2002ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் நட்வர்சிங்.
2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த போது
வெளியுறவுத் துறை அமைச்சரானார் நட்வர்சிங்.
2005ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐ.நா.
திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர்சிங்.
2005ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட 2008ஆம் ஆண்டு
பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அக்கட்சியிலும்
இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார்.
அம்பலமாகும் இந்திரா குடும்பத்து ரகசியங்கள்.. யார் இந்த நட்வர்சிங்?
சோனியா மீது கோபம் ஏன்?
சோனியா மீது ஏன் கோபம்?
2005ஆம் ஆண்டு உணவுக்கு எண்ணெய் ஊழலில் தன்னையும் மகனையும் சோனியா
காப்பாற்றுவார் என நம்பியிருந்தார் நட்வர்சிங்.
இந்திரா குடும்பத்துக்கு நீண்டகால நண்பரான தனக்கு சோனியா துரோகம்
செய்து கட்சியைவிட்டே நீக்கினார் என்பது நட்வர்சிங்கின் குமுறல்
இதனாலேயே சோனியாவை ஒரு சர்வாதிகாரி, மாக்கியவெல்லி என்றெல்லாம்
விமர்சித்தார் நட்வர்சிங்.
திடீரென நட்வர்சிங் சுயசரிதை என்ற பெயரில் தனக்கு தெரிந்த இந்திரா
குடும்பத்து ரகசியங்களை பகிரங்கப்படுத்த சோனியா கொந்தளித்துப் போனார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
உ.பியில் 92 வயது மூதாட்டி மீது 26 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் ! பாலியல் வறுமையோ வறுமை
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த
92 வயது மூதாட்டியை கடந்த 2011–ம் ஆண்டு ஆக.10–ந் தேதி அன்று மன்ட்டு (வயது
26) என்ற இளைஞன் கற்பழித்தார்.
இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில்
ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ
அறிக்கையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை
கற்பழித்ததாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார். தயவு செஞ்சு யாராவது உலகநாடுகளில் இருந்து விலைமாதர்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் இம்போர்ட் பண்ணுங்கப்பா ! நிலமைய பாத்தாக்கா ரொம்ப ரொம்ப பயமாக இருக்கிறது . செக்சுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை சமயங்களும் கலாச்சாரமும் சேர்த்து உருவாக்கிட்டாய்ங்க . காப்பாத்துங்கப்பா !

மகாராஷ்ட்ராவில் நிலச்சரிவில் கிராமமே புதைந்தது பலியானவர்கள் சுமார் முன்னூறு ?
நிலச்சரிவு
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர்.
கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் - CSE எச்சரிக்கை ! மெல்ல மெல்ல உங்களை ....

Seventeen per cent of the samples tested had more than one drug, found the CSE study, Antibiotics in Chicken: அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஓர் ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)