பீகாரில் நடைபெறவுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், லாலு
பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன்
கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் நிதிஷ் குமார், லாலு இடையேயான 24 ஆண்டுகால
மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. பீகார் இடைத்தேர்தல்: பீகாரில்,
சாப்ரா, பாகல்பூர், ஹாஜிபூர், மொஹானியா, நர்கடியாகஞ்ச் ஆகிய 5
தொகுதிகளின் எம்எல்ஏக்கள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்றனர்.
ராஜ்நகர், ஜாலே, மொகிதீன் நகர், பர்பட்டா, பங்கா
ஆகிய மற்ற 5 தொகுதிகளின் எம்எல்ஏக்கள், அரசியல் காரணங்களுக்காக தங்களது
பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதனால் காலியாக உள்ள 10 சட்டமன்ற
தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெறவுள்ளது. நிதிஷ்,
லாலு, காங்., கூட்டணி: இடைத்தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்,
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளன. ஐக்கிய ஜனதா தளம்,
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடத்திலும்
போட்டியிட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்
எனத் தெரிகிறது.
பாஜகாவால் விழைந்த ஒரே ஒரு நன்மை இதுதான் போலும்