ஞாயிறு, 27 ஜூலை, 2014

பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு அருகே தமது MP க்கள் அமர்வதை கண்டு பயப்படும் இதர கட்சி தலைவர்கள்

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகே அமர பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மறுத்து வருவதால் சபாநாயகருக்கு புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
பிரதான எதிர்க்கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மிக குறைந்த அளவாக வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கூட பெறுவதற்கு அக்கட்சி போராடி வருகிறது.
எனினும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு இடதுபுறம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்ததாக பிஜு ஜனதாதளம் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த மாநில கட்சிகளுக்கு தங்கள்  கட்சிஎம்பிக்களின்  யோக்கியதை  நல்லாவே  தெரியும்,  எதிர்காலத்தில்  இவனுக காங்கிரசில் சேரக்கூடிய வாய்ப்புக்களை கூடியவரையில்தவிர்க்கும்  முயற்சி தான்  இந்த  தூரத்தே  விலகி  இரும் பிள்ளாய்  தந்திரம் ,

சம தொலைவில்... ஆனால் ஒடிசாவில் காங்கிரசை மண்ணை கவ்வ வைத்த பிஜு ஜனதாதளம், பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு அடுத்ததாக அமர விரும்பவில்லை. இதைப்போல மற்ற பெரிய கட்சிகளான 37 உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க., 34 உறுப்பினர்களை கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகே அமர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அரசியல் அரங்கில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை விட்டு சம தொலைவில் விலகி இருப்பதாக கூறியுள்ள அக்கட்சிகள், இதே நிலை பாராளுமன்றத்தில் இருக்கை ஒதுக்குவதிலும் கண்டிப்பாக எதிரொலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அப்போது அந்த கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஒட்டி உறவாடியும், இருக்கையை பகிர்ந்தும் கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 200–க்கும் மேல் இருந்தது. ஆனால் தற்போது வெறும் 44 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் காங்கிரசை விட்டு விலகியிருக்கவே விரும்புகின்றன என்று கூறப்படுகிறது.
புது குழப்பம் இவ்வாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகே பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர மறுத்து வருவதால், பாராளுமன்றத்தில் இருக்கை ஒதுக்குவதில் சபாநாயகருக்கு புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் அரைவட்ட வடிவில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை வரிசையில் முதல் வரிசை கவுரவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் முதல் வரிசையில் 4 இருக்கைகளை தங்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் கட்சி கோரியது. ஆனால் அக்கட்சி உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் வெறும் 2 இருக்கைகளையே அரசு வழங்கி உள்ளது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: