திங்கள், 28 ஜூலை, 2014

Belgaum முக்காக கர்நாடக–மராட்டிய மாநிலங்கள் சண்டை ! போலீசார் மீது கற்கள் வீச்சு–தடியடி

பெல்காம்; கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டு இருந்த மராட்டிய மாநில அறிவிப்பு பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய அமைப்பினர் போலீசார் மீது கற்கள் வீசியதாலும், போலீசார் நடத்திய தடியடியாலும் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
அறிவிப்பு பலகை கர்நாடக மாநிலத்தின் எல்லையான பெல்காம் மாவட்டத்தில் மராட்டியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பெல்காம் மாவட்டம் எல்லூர் கிராமத்தில் மராட்டிய மாநிலம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த பலகையை கடந்த 25–ந் தேதி கர்நாடக அரசு அதிகாரிகள் அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு பஸ்கள் மீது சிவசேனா கட்சியினர் கற்களை வீசி தாக்கினார்கள். நேற்று முன்தினம் அங்கு மராட்டிய எகிகரன் சமிதி (எம்.இ.எஸ்.) கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைத்தனர். அங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்கியது.
144 தடை உத்தரவு இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெல்காம் மாவட்ட எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை கர்நாடக அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அகற்றினர். இதற்கு எம்.இ.எஸ். கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை, தொலைகாட்சி செய்தியாளர்கள் மீது மராட்டிய அமைப்பினர் திடீரென்று கற்களை வீசினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள் ஒரு வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் 150–க்கும் மேற்பட்டோர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து 200–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்தனர். போலீஸ்காரர்கள் மீதும் அவர்கள் கற்களை வீசினார்கள்.
போலீஸ் தடியடி கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தி பத்திரிகையாளர்களை மீட்டனர். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கல்வீச்சில் போலீஸ்காரர்கள் சிலரும் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் பெல்காம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் ஐ.ஜி. பாஸ்கர் ராவ் கூறினார்.
இந்த
சம்பவங்களால் கர்நாடகம்–மராட்டிய எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்கு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: