வெள்ளி, 11 அக்டோபர், 2013

செல்போன் வைத்திருந்ததால் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண்


பாகிஸ்தானில் இருக்கும் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில், தேராகாஸிக்கான்
என்ற மாவட்டத்தில் இருக்கும் கிராமத்துப் பெண் அரஃப்பா பீவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. கடந்த ஜூலை மாதம் அவளது துணிமணிகளுக்கு இடையே ஒரு செல்போனை அவளது குடும்பத்தில் இருந்த ஆண்கள் பார்த்தனர். ‘ஒரு பெண்ணிடம் மொபைல் போனா?’ என்று அதிர்ச்சியடைந்த அவர்கள், விஷயத்தை ஊர் பஞ்சாயத்துக்குத் தெரிவித்தனர்.
பஞ்சாயத்தாருக்கும் அதிர்ச்சி. ‘பெண்ணிடம் செல்போனா? இந்தப் பாவியை சாகும்வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’ என்று தண்டனை வழங்கினர். அதோடு, இந்தத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமே ஒப்படைத்தனர்.
இதையடுத்து,  அரஃப்பா பீவியை  ஊருக்கு வெளியே ஒரு மைதானத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அவரது உற்றார், உறவினர்கள் என்று அத்தனை பேரும் அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு கருங்கற்களை அவள் மீது வீச ஆரம்பித்தனர்  சாகும்வரை  துடிக்கத் துடிக்க அடித்தே கொன்றனர். அவளது  குழந்தைகளுக்குக்கூட  உடலைக் காட்டாமல், அங்கேயே புதைத்தனர்.

உபி மக்களிடம் துப்பாக்கிகள் 11 லட்சம் உள்ளன போலீசாரிடமோ வெறும் 2.25 லட்சம்

லக்னோ: பொதுநல வழக்கு மூலம் மாநிலத்தில் போலீசாரை காட்டிலும்
பொது மக்களிடம் அதிகளவில் துப்பாக்கிவைத்திருப்பதை அறிந்த அலாகாபாத் நீதமன்றம் வரும் காலங்களில் புதிய உரிமம்வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.11லட்சம் துப்பாக்கி: உ.பி., மாநிலத்தில் பொதுமக்களிடம் மக்களிடம் புழங்கும் ஆயுதம் குறித்து ஜிதேந்தர் சிங் என்பவர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி மாநில உள்துறை முதன்மை செயலாருக்கு அலாகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் மதீ்ன் மற்றும் சுதீர்குமார் சக்சேனா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைதொடர்ந்து மாநிலத்தில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 133 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு 11 லட்சத்து 22 ஆயிரத்து 844 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கின் படி 11லட்சத்து 4 ஆயிரத்து 701 துப்பாக்கிகள்உள்ளன. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாரின் எண்ணிக்கை மாநிலம் முழுமைக்கும் 2லட்சத்து 13 ஆயிரம் பேர் வரை மட்டுமே பணிபுரிகின்றனர்.

வியாழன், 10 அக்டோபர், 2013

ஜெயாவைக் காப்பாற்றப் போய் நீதிமன்றமே குற்றவாளிக் கூண்டில்? சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

jaya-case-caption
பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டதே முறைகேடாக நடந்திருக்கிறது.  இது இவ்வழக்கில் ஜெயாவிற்குச் சாதகமாக நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய மோசடியாகும். 
ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடகா அரசு கடந்த செப்.16 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்.30-ஆம் தேதியோடு முடிவடைவதால், இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.  பவானி சிங்கை நீக்கும் கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்தும்; கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நீதிபதி பாலகிருஷ்ணாவிற்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும் இவ்வழக்கில் செப்.30 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
பாலகிருஷ்ணா, பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா மற்றும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்.

தூத்துக்குடி கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்றனர் ! College principal hacked to death by students near Tuticorin

தூத்துக்குடி: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூரம்
    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் என்ஜினீயரிங் என்ற தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் இன்று (10.10.2013) காலை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் சுரேஷ், ஏரோநாட்டிக்கல் பிரிவில் கடைசி ஆண்டு படிக்கும் பிச்சைக்கண்ணன் என்பவரை கடந்த திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்தார். நாசிரேத் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர் கல்லூரி முதல்வர் எடுத்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து கல்லூரி விடுதி தோழர்களான நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த பிரபாகரன், சிவகங்கையைச் சேர்ந்த டேனிஸ் ஆகியோருடன் இன்று காலை பிச்சைக்கண்ணன் கல்லூரி வளாகத்திற்கு வந்தார். அப்போது காலை 8.20 மணி அளவில் காரில் வந்த சுரேஷை மூன்று மாணவர்களும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பங்களதேசத்தில் 372 இந்துக்களை சுட்டுக் கொன்ற முன்னாள் மந்திரிக்கு ஆயுள் தண்டனை !

வங்காள தேச சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1971-ம் ஆண்டு எனவே, இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்பளித்தது. இவர் செய்த கொடூர குற்றத்துக்கு மரண தண்டனை விதிப்பதாக இருந்தது. ஆனால் அவரது வயது மற்றம் உடல் நலம் கருதி அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என அட்டர்னி ஜெனரல் மக்புபே ஆலம் தெரிவித்தார். இவர் சாகும்வரை சிறையில் தனது வாழ்நாளை கழிப்பார் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து பலர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்துல் ஆலிம் (83) என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது இவர் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து ஜாய்புர்கத் மாவட்டத்தில் உள்ள கொராய் காதிபூர் கிராமத்தில் புகுந்து 372 இந்துக்களை 2 வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றார்.

மாதத்தில் ஒருநாள் மௌன உணவகம் ! நியு யோர்க்கில் வித்தியாசமான ரெஸ்டாரன்ட்

;நியுயார்க் : அமெரிக்காவின் நியுயார்க் புறநகர் பகுதியான புரூக்ளீனின்
க்ரீன்பாயின்ட் பகுதியில் ‘ஈட்’ என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்தில் வித்தியாசமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது மாதத்துக்கு ஒரு நாள் இந்த உணவகத்தில், ‘அமைதி நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாப்பிடும்போது வாடிக்கையாளர்கள் யாருமே பேசக்கூடாது. முழுவதும் மவுனம் காக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இங்கு இயற்கையான உரங்கள் மூலம் விளைந்த பொருட்களை மட்டும் உபயோகித்து சமைக்கிறார்கள். இந்த உணவகத்தின் மேலாளர் நிக் நியுமன் என்பவரின் யோசனையில் உதித்த ஐடியாதான் இது. இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள புத்த மத துறவிகளுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவர்களுடன் இருந்தபோது புத்த துறவிகளின் சமையல் முறைகள், உணவு உண்ணும் முறை, உணவுக்கும் மனதுக்குமிடையே உள்ள உறவு குறித்த அவர்களது பழக்க வழக்கங்கள் எனக்கு புதுமையாகவும் பிடித்தும் இருந்தது.

தமிழ் கட்சிகள் பதவிக்காக கடும் இழுபறி ! ஒருவருக்கு ஒருவர் குழிபறிப்பு ! இவர்களை சமாளிக்கவே முதலமைச்சருக்கு நேரம் போய்விடும் !

வடக்கு முதலமைச்சர் சத்தியப்பிரமாணத்தின் பின் தமிழ்  கூட்டமைப்புக்குள் எழுந்திருக் கும்  எதிரொலிகள் – சாலையூரான்

தமிழ் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்த வடக்கு முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணம் ஜனாதிபதிமுன் இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது.
இந்த சத்தியப்பிரமாணம் தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு நேர்மாறானதென்றும் இது அரசுடன் ஒருவகையான சோரம் போவதற்கான முயற்சியென்றும் தமிழ் கூட்டமைப்புக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்த நிலையில் வடக்கின் முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணம் முடிவுக்கு வந்திருக்கிறது. எவ்வாறிருப்பினும் இந்த சத்தியப்பிரமாணத்தை அடுத்து அரசுத்தரப்பும் தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களும் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் மேலான கவனத்துக்குரியவை.
இன்று நாட்டில் இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவதற்கான ஒரு முயற்சியாக இந்த சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி முன் மேற்கொண்டதாக தனது விளக்கத்தை விக்கினேஸ்வரன் முன்வைத்திருக்கிறார்.

அன்பழகனை ஓவர்டேக் செய்ய ஸ்டாலின் முயற்சி ? கலைஞர், கனிமொழி கடும் எதிர்ப்பு ?

உடல் நலம் குறைவினால், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தி.மு.க., பொதுச்
செயலர் அன்பழகனின் பதவியை பொருளாளர் ஸ்டாலினுக்கு வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "அன்பழகனின் பதவியை தொடர்ந்து நீட்டிக்க வைக்கும் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலர் அன்பழகனை விட, தலைவர் கருணாநிதி ஒரு வயது இளையவர் என்றாலும், கட்சி ரீதியாக முக்கிய முடிவு எடுக்கும் முன், அன்பழகனிடம் கருணாநிதி ஆலோசனை செய்வது வழக்கம். இருவரும், நெருங்கிய நண்பர்களை விட, உடன்பிறவாத சகோதாரர்களாக விளங்கி வருகின்றனர்.

முஷாரப்பிற்கு கிடைத்தது ஜாமின்: பறக்கிறார் துபாய்க்கு

Pervez Musharraf has been granted bail from house arrest and his legal team says he is free to fly to Dubai.இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் ராணுவ படை தளபதியுமான பர்வேஸ் முஷாரப்பிற்கு பாக்., நீதிமன்றம் ஜாமி்ன்வழங்கியுள்ளது இதனையடுத்து அவர் துபாய்க்கு பறக்க உள்ளார். பாகிஸ்தானின் வரலாற்றில் ஓய்வு பெற்ற பின்னர் கைது செய்யப்பட்ட முதல் ராணுவ தளபதி மற்றும் முன்னாள் அதிபர் என்ற பெருமைக்குரிய பர்வேஸ் முஷாரப்பிற்கு அந்நாட்டு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. முஸாரப் அதிபர் பதவியை விட்டு விலகிய பி்னனர் வெளி நாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் நைடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தானாகவே முன்வந்து தன்மீதான வழக்குகளின் அடிப்படையில் நேரில் ஆஜரானார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்.

புதன், 9 அக்டோபர், 2013

பாலு மகேந்த்ராவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் தலைமுறைகள் !



தனுஷ், ப்ரியாமணி நடிப்பில் 2005-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த அது ஒரு கனாக்காலம் திரைப்படம் கொடுத்த ஏமாற்றத்திற்குப் பிறகு பாலு மகேந்திரா எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.கிட்டத்தட்ட 8 வருடங்களாக தனது இயக்குனர் பயிற்சிப் பள்ளியில் ஏராளமான மாணவர்களுக்கு டைரக்‌ஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த  பாலுமகேந்திராவின் அடுத்த படைப்பு தான் தலைமுறைகள். சசிகுமார் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பாலு மகேந்திரா இயக்க, இளையராஜா இசையமைக்கிறார்.சில வாரங்களுக்கு முன்பு தணிக்கைத்துறையால் ’U' சான்றிதழ் பெற்ற இத்திரைப்படத்திற்கு, இளையராஜா சமீபத்தில் தான் ரீரெக்கார்டிங்கை முடித்து கொடுத்திருக்கிறார். ரீரெக்கார்டிஙை கேட்டுப்பார்த்த இயக்குனர் பாலு மகேந்திராவும், தயாரிப்பாளர் சசிகுமாரும் இளையராஜாவின் இசையைக் கேட்டு பிரம்மித்துவிட்டனராம். எனவே பாலுமகேந்திராவும், சசிகுமாரும் நேரில் சென்று இளையராஜாவை பாராட்டினர்.

பணிப்பெண்களாக சென்றவர்களில் 463 பேர் சடலங்களாக அனுப்பப்பட்டனர்

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து  மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­
ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் கேள்­வி­யொன்றைத் தொடுத்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்ட தக­வலை வெளி­யிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
சட்­டங்­களும் கட்­டுப்­பா­டு­களும் மீறப்­பட்ட நிலையில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்வோர் அங்கு பல்­வேறு கொடு­மை­க­ளையும் சித்­தி­ர­வ­தை­க­ளையும் அனு­ப­விக்­கின்­றனர் இதே­வேளை, 2012ஆம் ஆண்டில் மாத்­திரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 463 பணிப்­பெண்­களின் சட­லங்கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 300க்கும் அதி­க­மா­னவை 30 வய­துக்கும் குறை­வான பெண்­க­ளு­டை­ய­தாகும். இவர்கள் மார­டைப்பின் கார­ணத்­தி­னா­லேயே மர­ணித்­தி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

சவுதியின் இரட்டை வேஷம் ! மகளை சித்திரவதை செய்து கொன்ற மதகுருவுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும்; 600 கசையடி! ஆனால் ரிசானாவுக்கு ?

மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதகுருவுக்கு சவுதியில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன கடந்த 2012 ஆம் ஒக்டோபர் மாதம் லாமா அல் காம்டி என்ற சிறுமி தந்தையின் கொடூர தாக்குதலுக்குள்ளாகி அவரது மண்டையோடு நொறுங்கியிருந்துடன், மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அச்சிறுமி பல முறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை அவரது தாயார் மறுத்திருந்தார். இச்சம்வம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது  ஒன்றுமே அறியாத சிறுமி ரிஜானாவுக்கு மரண தண்டனையை சரியா சட்டம் என்று சொல்லி கூசாமல் கழுத்தை வெட்டினார்கள் , ஆனால் இந்த கொடியவனுக்கு கூடுமானவரை தயவு காட்டியுள்ளார்கள் ,
சிறுமியின் கொலைக்கு காரணமான அவரது தந்தை சில மாதங்கள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிறுமியின் தாய்க்கு அதாவது தனது மனைவிக்கு குருதிப் பணம் செலுத்த இணங்கியமையால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சி சங்கராச்சாரிக்கு ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதிலும் சங்கரராமன் கொலையிலும் தொடர்பு உண்டு

சங்கரராமன் படுகொலை மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு உண்டு
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகன் சாட்சியம்
எனது தந்தையார் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டதிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்டதிலும் காஞ்சி புரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வ திக்குத் தொடர்பு உண்டு என்று படுகொலை செய் யப்பட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா சென்னை செஷன்ஸ்  நீதிமன்றத்தில் தெளி வாக சாட்சி சொன்னார்.
ஜெயேந்திரர் ஆள் வைத்து தாக்கினார் என்று ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் சாட்சியம் அளித்தார்.

எலும்புத்துண்டு அரசியல் என்றவர்கள் இப்போ நமது பாதையில்! வாழ்த்துக்கள்!! -டக்ளஸ் தேவானந்தா


இலங்கை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுச் செயலாளராக கொண்ட ஈ.பி.டி.பி., “மத்திய (இலங்கை) அரசுடன் நட்புடன் கூடிய எமது அரசியலை ‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றும் தூற்றினர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும், அதே பாதைக்கு வந்துள்ளார்கள். வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளது.
புதிய முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அமைச்சர் பதவிகளுக்காக அடித்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கும் ஒரு சேதி கூறப்பட்டுள்ளது. “அமைச்சர் பதவிக்காக உங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், அமைதியாக வந்து, முதல்வர் கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என்ற அர்த்தத்தில் உள்ளது அந்த சேதி.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்சருக்கு உதவுகின்றவகையில் சுமுகமான தீர்வுக்கு வரவேண்டும்” என அந்த அறிக்கையில் அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு பாண்டியன் கம்யூ. ஆதரவு-

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வருகிற டிசம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியதாவது:- ஏற்காடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணி வேட்பாளருக்குத் தான் ஆதரவு அளிப்போம். அந்த வகையில் அ.தி.மு.க.வை ஆதரிக்க கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன. தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்குமாறு கருணாநிதி அனைத்து கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டோம். தி.மு.க.வை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - சோதனை தொடர்கிறது

சென்னை: நடிகர் நடிகைகளுக்கு தந்த சம்பளத்துக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வரி செலுத்தாததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இன்றும் லிங்குசாமி அலுவலகங்கள், வீடுகளில் சோதனை தொடர்கிறது. இயக்குநர் லிங்குசாமி, தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து படங்களையும் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்தது இவர்கள் நிறுவனம்தான். இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார். இவற்றில் கமல், சூர்யா நடிக்கும் படங்களும் அடங்கும். நேற்று முன் தினம் மட்டும் இவர் தயாரிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அவை, கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவையாகும். இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் லிங்குசாமி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சம்பளத்தில் ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் இயக்குனர்கள்

அதிக சம்பளம் பெறுவதில் ஸ்டார் ஹீரோக்களையே இயக்குனர்கள்
ஓவர்டேக் செய்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் கை ஓங்கி இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஹீரோக்கள் தலையீடுதான் அதிகம், அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு, சம்பள விஷயத்திலும் அவர்களை மிஞ்ச ஆளில்லை என¢றெல்லாம் வழக்கம்போல் சொல்லலாம். ஆனால் அந்த நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சம்பள விஷயத்தில் டாப் ஹீரோக்களையே சில இயக்குனர்கள் ஓரம்கட்டி வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர் ஷங்கர். எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷங்கரின் மார்க்கெட் வேல்யூ எகிறியது. இப்போது சம்பளம் மட்டுமில்லாமல் லாபத்தில் பங்கு என ஸ¢டார் ஹீரோக்களை போல் பெறுகிறார் ஷங்கர். தென்னிந்திய சினிமாவில் லாபத்தில் பங்கு பெறும் முதல் இயக்குனர் இவர்தான். நண்பன் படத்துக்காக அப்பட ஹீரோவான விஜய்க்கு இணையான சம்பளத்தை இவர் பெற்றார். கிட்டத்தட்ட ரூ.11 கோடி இவர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்போது இயக்கி வரும் படத்திலோ அதுக்கு ஒருபடி மேல்போய், அந்த பட ஹீரோவைவிட அதிகம் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஏழைகளே அதிகநாள் வாழ்கிறார்கள் ! கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம் ! புள்ளிவிபரம் சொல்கிறது

பாரிஸ் : ஏழையாக இருந்தால் போதும், ஏழை நாட்டை சேர்ந்தவராக
இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம். என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். பணம், வசதி இருந்தால் போதும், 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை  ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. இது போல பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மரபு நம்பிக்கையை தகர்க்கிறது நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வு முடிவு. நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது.

கலைஞர்: இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.
பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ‘சக்காஷ்’ என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

‘கடவுளின் துகள்கள்’ கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் விருது

ஸ்டாக்ஹோம் : பூமி உட்பட கிரகங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளுக்கு  முன் உருவாவதற்கு காரணம் ‘கடவுளின் துகள்கள்’  தான்  என்று உலகுக்கு சொன்ன பிரபல விஞ்ஞானிகள் இரண்டு பேருக்கு இயற்பியலுக்கான நோபல் விருது அளிக்கப்படுகிறது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிரான்காய்ஸ் யெங்க்லர்ட்; பிரசல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். பிரிட்டனை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ். எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர் கடந்தாண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரப் பகுதியில் விஞ்ஞானிகள் சேர்ந்து பிரமாண்ட அணுத்துகள்களை ‘கொல்லீடர்’ என்ற ராட்சத குழாயில் மிக அசுர வேகத்தில் மோத விட்டு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுத்துகள்கள் இப்படி மோதியதால் தான் பூமி உட்பட பிரபஞ்சத்தில் கிரகங்கள் தோன்றின என்பதை உலகுக்கு உறுதி செய்தனர்.

இந்திய அரசியலில் 43 வீதத்தினர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்

டெல்லி அரசியலில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 43 சதவீதத்தினர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் மொத்தமுள்ளவர்களில் 3ல் 2 பங்கு பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.) ஆய்வு முடிவில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது.  அவற்றில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆய்வு ஒன்றை ஏ.டி.ஆர். அமைப்பு மேற்கொண்டது.
இதில், டெல்லி மாநிலத்தில் 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன என தெரிய வந்துள்ளது.  மத்திய பிரதேசம் 25 சதவீதத்தினருடன் 2வது இடத்திலும், ராஜஸ்தான் 16 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது.  இதே போன்று கோடீஸ்வரர்களாக உள்ள எம்.எல்.ஏ.க்கள் குறித்த ஆய்வில் டெல்லி 69 சதவீதத்தினருக்கு குறையாமல் உள்ளது. 

100 பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அறைகள்

சென்னை 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் வரைபடங்கள் வரைபடங்கள்
வாங்கி மாட்டுவதற்கும், 100 பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அறைகள் அமைப்பதற்கும், கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும்
கல்வி தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வியை அளித்து, தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மாணவர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கிரேயான், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

கிராமங்களுக்கும் வந்து விட்ட போதை ஊசி பழக்கம் !

மக்கள் ஆரோக்கியமாக வாழத்தேவையான, வசதிகளையும்,
வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பணி. ஆனால், நமது துரதிருஷ்டம், அரசாங்கமே "டாஸ்மாக்' மதுக்கடைகளை தெருவுக்குத்தெரு திறந்து, கலர் சாராயம் விற்கிறது. ஆண், பெண் வித்தியாசமின்றி காலை முதல் இரவு வரை குடித்தே சாகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, இக்கூட்டத்துடன் பெண்களும் சேர்ந்துவிட்டது, அவலத்தின் உச்சகட்டம். மது பழக்கத்தால் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, அமைதி இழப்புக்குள்ளாகி தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன. எண்ணற்ற குடும்பங்களில், குழந்தைகள் எதிர்காலமிழந்து, நிர்க்கதியாகி, தெருவுக்கு தள்ளப்படுகின்றனர். இக்கொடிய பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வழியே இல்லையா, என, பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்க, அடுத்ததாக ஒரு அபாயகரமான பழக்கம், நம் இளைஞர்களிடையே தலைதூக்க துவங்கியுள்ளது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களில் மட்டுமே தென்படும் போதை மருந்து கலாசாரம், தற்போது, நம்மூரு கிராமங்கள் வரையும் வந்துவிட்டது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

நடிகர் எஸ்.வி.சேகர் பாஜகவில் இணைந்தார் !

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2006ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுகவில் இருந்து விலகி 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்பாணத்தில் வீடுகளை கையளிக்கும் நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெல்லிப்பளையில் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் மதியம் 1.30 மணியளவில் தெல்லிப்பளையில் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார். தெல்லிப்பளை தந்தை செல்வாபுரம் கிராமசேவையாளர் பிரிவில் இந்திய நிதியுதவியில் 161 வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது. அதில் 44 வீடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது அதில் இரு வீடுகளே முழுமையாக பூர்த்தி ஆகியுள்ளது. அவ்விரு வீடுகளுமே இன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சரால் கையளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளும் தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கபட்டு வருகின்றது