வியாழன், 10 அக்டோபர், 2013

பங்களதேசத்தில் 372 இந்துக்களை சுட்டுக் கொன்ற முன்னாள் மந்திரிக்கு ஆயுள் தண்டனை !

வங்காள தேச சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1971-ம் ஆண்டு எனவே, இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்பளித்தது. இவர் செய்த கொடூர குற்றத்துக்கு மரண தண்டனை விதிப்பதாக இருந்தது. ஆனால் அவரது வயது மற்றம் உடல் நலம் கருதி அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என அட்டர்னி ஜெனரல் மக்புபே ஆலம் தெரிவித்தார். இவர் சாகும்வரை சிறையில் தனது வாழ்நாளை கழிப்பார் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து பலர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்துல் ஆலிம் (83) என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது இவர் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து ஜாய்புர்கத் மாவட்டத்தில் உள்ள கொராய் காதிபூர் கிராமத்தில் புகுந்து 372 இந்துக்களை 2 வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றார்.


600 இந்துக்களை சுட்டு கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் மீதான 9 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்துல் ஆலிம் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 3 தடவை மந்திரி ஆக பதவி வகுத்துள்ளார்.

வங்காள தேச தேசிய கட்சியின் அமைச்சரவையில் இவர் பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்படும் இவர் கோர்ட்டுக்கு சக்கர நாற்காலியில் வந்து இருந்தார். போர் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களில் வங்காள தேச தேசிய கட்சியின் 2-வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தண்டனை பெற்ற முன்னாள் மந்திரிகளில் இவர் 3-வது நபர் ஆவார்.malaimalar.com

கருத்துகள் இல்லை: