செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

துண்டா:1995 முதல் ஐ.எஸ்.ஐ.,யுடன் எனக்கு தொடர்பு உள்ளது! PAK லிருந்து போலி இந்தியநோட்டுக்களை ....

புதுடில்லி:"பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன், 1995ம் ஆண்டு முதல், எனக்கு தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 70, தெரிவித்துள்ளான்.நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின், வெடிகுண்டு நிபுணரான, அப்துல் கரீம் துண்டா, கடந்த வெள்ளியன்று, இந்திய - நேபாள எல்லையில், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான். தற்போது, டில்லி போலீஸ் காவலில் உள்ள, அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையின் போது, துண்டா கூறியதாவது:நான் சவுதி அரேபியா வழியாக பாகிஸ்தான் சென்றேன். அங்கு, 1995ம் ஆண்டில், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் அப்போதைய தலைவர், ஹமீத் குல்லை சந்தித்தேன். அதன்பின், அவருடன் தொடர்ச்சியாக பேசி வந்தேன். ஐ.எஸ்.ஐ., அமைப்பின் ஆதரவுடனே, லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகள், குண்டு வெடிப்புகள் உட்பட, பல சதி செயல்களை அரங்கேற்றுகின்றன. இந்தியர்கள் மொகலாயர்களைத் தாக்கியதனால்தானா அவர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து அட்டூழியம் புரிந்தனர் ?இல்லையே அது இந்திய கலாச்சரமேயில்லை இதில் யார் குற்றவாளி ?...

பேராசை எஸ் பி பாலசுப்ரமணியம் யேசுதாஸ் வகையறா ? ராயல்டியிலும் பங்குக்கு அடிபோடும் ,,,

TM சௌந்தரராஜன் போன்ற எத்தனையோ உன்னதமான பாடகர்களுக்கு போக வேண்டிய வாய்ப்பை தந்திரமாக பெற்று பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இந்த கோடிஸ்வரர்கள் இன்னும் வேண்டுமாம்,இந்திய பாடகர்கள் உரிமை சங்கம் என பாடகர்கள் தங்களுக்கான புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர். இதுதொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில், தமிழ் திரைப் பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் இளைய பாடர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் கூறும்போது, இந்திய அரசின் சட்டப்படி பாடகர்களுக்கான ராயல்டியை பெற்றுத்தர இச்சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, இணையதளம், தொலைபேசி ரிங்டோன் என எந்த வகையிலும் பாடல் ஒலிப்பரப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நேரடி இசைக்கச்சேரிகள் சங்கத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பின்னணி பாடகர்கள் அனைவரும், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் ராயல்டியை பெறலாம். இந்த சங்கத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பின்னணி பாடகர்கள் உறுப்பினர் ஆகலாம். 1963ல் தொடங்கி பின்னணி பாடிய அனைத்து பாடகர்களுக்கும் ராயல்டி பெற இதில் வாய்ப்பு உள்ளது. டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் போன்றவர்களுக்கான ராயல்டியை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொள்வர். இதுவரை எந்ததெந்த ஊடகங்களில் பாடங்கள் வெளிவந்திருக்கிறது என இந்த சங்கம் ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது, நாங்கள் மக்களின் சந்தோஷத்திற்காகவும், சோகத்திற்காகவும் மட்டுமல்ல, எங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் பாடுகிறோம்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

அதிகாரிகளிடம் பெற்றோரை காட்டி கொடுக்கம் இந்திய பெண்கள் ! இங்கிலாந்தில் இந்தியர்களின் கட்டாய திருமண விவகாரம்

லண்டன்:இங்கிலாந்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை
சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்று, அங்கேயே தங்கி குடியுரிமை பெற்று விடுகின்றனர். அங்கேயே அவர்களது குழந்தைகளும் வளர்கின்றன. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு சொந்த நாட்டில், சொந்தபந்தங்களில் இருந்தே மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். இதனால், ஆகஸ்ட்&செப்டம்பரில் வரும் கல்லூரி விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லலாம் என மகள்களை அழைத்துக் கொண்டு இந்தியா வரும் பெற்றோர், தங்களது மகள்களுக்கு சொந்த ஊரில் கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இது தவறானது என இந்தியா உள்ளிட்ட தெற்காசிய மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரசா பே உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்டாயத் திருமணம் செய்வது இங்கிலாந்து சட்டப்படி குற்றமாகும். கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மட்டும் 400 கட்டாய திருமண புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோகாமல் நொங்கு எடுக்கும் தலைவா ? சினிமாகாரர்களின் கல்லாவை நிரப்பும் முட்டாள் ரசிகனும் அவனது மன்றங்களும்

தலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக்கிறது.இந்த அட்டக்கத்திகள் திரையரங்கு இருட்டில், இருந்தால் இமயமலை எழுந்தால் எரிமலை என்று சுயபுகழ்ச்சி பாடுகையில் கைத்தட்டுகிற ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்தப் படிப்பினையை பால பாடமாக மனதின் ஓரத்தில் வைத்திருப்பது அவசியம்.தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகளுக்கு வந்த வெத்து வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பிரச்சனை ஆரம்பித்தது. படத்தை வெளியிட்டால் பிரச்சனை வெடிக்கும் என்று காவல்துறை அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படத்தின் பேனர்கள், கட் அவுட்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணை 42 நிமிடம் கழித்து பிழைக்க வைத்த ஆஸி. டாக்டர்

 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ
மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார். 41 வயது நிரம்பிய வநேசா தனசியோ என்ற அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்த ரத்தக்குழாய் ஒன்று முற்றிலுமாக அடைத்திருந்தது.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பின் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. ஆயினும், மருத்துவர்கள் மனம் தளரவில்லை. ஆஸ்திரேலியாவிலேயே அரிதான லூகாஸ்-2 என்ற கருவியை உபயோகித்து அவரது மூளைக்குத் தொடர்ந்து ரத்தம் செல்லுமாறு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான வாலி அகமர் நோயாளியினுடைய ரத்தக்குழாயில் இருந்த அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியில் வெற்றியடைந்த பின்னர் தனசியாவின் நின்றுபோன இதயம் 42 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய அதிர்வுக்குப்பின் வேலை செய்ய ஆரம்பித்தது.தனசியாவை உயிர்ப்பிப்பதற்கு சில மருந்துகளையும், அதிர்வுகளையும் அவருக்குக் கொடுத்ததாக மருத்துவர் அகமர் தெரிவித்தார். தனசியா மீண்டு வந்துள்ளது மிகப்பெரிய அதிசயம் என்றும் அவர் கூறியுள்ளார தான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது வரை நினைவிருந்ததாகக் கூறும் தனசியா, அதன்பின்னர் ஒரு வாரம் கழித்துதான் தான் நலமுடன் இருப்பதை உணர்ந்ததாக சந்தோஷத்துடன் கூறுகின்றார் malaimalar.com

முலயம்சிங்கின் ஆதரவை நாடும் காங்கிரஸ் ! உணவு பாதுகாப்பு மசோதா

முலாயம் சிங்குடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு கேட்டனர்பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மசோதாவை நாளை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முக்கிய கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி திரட்டி வருகிறது. இந்நிலையில், உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற ஆதரவு அளிக்கும்படி முலாயமிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவும் உடனிருந்தார்.

35 சிவபக்தர்கள் பலி ! தண்டவாளத்தை கடக்கையில் பயங்கர விபத்து


AccidentSpeeding train kills 35 in Bihar, angry mob sets coaches on fire

The victims, mostly kanwarias (devotees of Lord Shiva), were standing on the railway tracks at the station when the Rajrani Express hit them.
பீகார் மாநிலம், பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 சிவ பக்தர்கள் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர். பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பாமரா ரெயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்பகுதியில் யாத்திரை செய்ய வந்திருந்த சிவ பக்தர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் வேகமாக மோதியது. இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கியும், தூக்கி வீசப்பட்டும் 20 சிவ பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ள

P.சிதம்பரம் :10 பாயிண்ட் ஆக்ஷன் பிளான்' 10-point-action-plan! 1.1 லட்சம் கோடி திட்டங்கள்!

டெல்லி: ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மின்துறையில் ரூ. 83,722 கோடி முதலீடுகள் வரவுள்ளன. இந்த முதலீடுகளால் 18 மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்பாட்டு வரும். இதனால் 15,636 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தியாகும். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 4,359 கோடி முதலீடு செய்யத் தயாராக உள்ள 4 நிறுவனங்களுக்கும் உடனடி அனுமதியை சிதம்பரம் வழங்கியுள்ளார். மேலும் ரூ. 7,103 கோடி மதிப்பிலான சட்டீஸ்கர், அஸ்ஸாம், மிசோகம் ரயில்வே திட்டங்கள், பாரத் பெட்ரோலியத்தின் வினியோகப் பிரிவில் ரூ. 1,419 கோடி முதலீடு, ஒரிஸ்ஸாவில் இரும்பு எஃகு துறையில் ரூ. 1,190 கோடி முதலீட்டுக்கும் சிதம்பரம் பச்சைக் கொடி காட்டியுள்ளார். இது தவிர டெல்லி விமான நிலையத்தை ஒட்டி ஏரோ சிட்டியை உருவாக்கும் ரூ. 12,000 கோடி திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் நெருக்குதலால் கேபினட் செயலாளர் அஜீத் சேத் தலைமையிலான குழு ஒவ்வொரு துறையுடனும் பேசி இந்தத் திட்டங்களுக்கு இருந்தத் தடைகளை நீக்கி ஒப்புதலைப் பெற்றுள்ளது

காணமல் போன Time to Lead விஜய் ஒப்புதல்வாக்குமூலம் : மாண்புமிகு புரட்சிதலைவி இதயதெய்வம் அம்மாவுக்கு நன்றி நன்றி நன்றி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:
 நடிகர் விஜய் அறிக்கை
நடிகர் விஜய் ’’வெளியிட் டுள்ள ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சனையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கி  றேன்’’என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்க அரசு தீர்மானம்

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப்
பயிற்சி அளிக்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட செஸ் விளையாட்டுக் கழகம் தலைவர் என்.விஜயன் கூறினார். சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செல்லம்மாள் நினைவு செஸ் போட்டி பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த 780 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். 8 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 5 பிரிவுகளில்  போட்டியில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கு முதல் பரிசாக சைக்கிளும், இதர 100 மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் என்.விஜயன் பேசியது: அண்மையில் தமிழக கல்வித்துறை சார்பில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு உருவாக்குவதுடன்,பயிற்றுவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

M-Sand கட்டிடத்துறையில் செயற்கை மணலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு

- Engineers and specialists have come out with their own ideas to minimise the use of river sand and use recent innovations such as M-Sand
 கட்டுமானப் பணிகளில் இயற்கை மணல் தேவை குறையும்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, கட்டுமானப் பணிகளில் நாளொன்றுக்கு, ஒரு லட்சம் முதல், 1.5 லட்சம் கனஅடி மணல் தேவைப்படுகிறது. இப்போது, அரசால் அனுமதிக்கப்பட்ட குவாரிகளால், இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி ஆகிய, நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஆற்று படுகைகளில் பொதுப்பணித் துறை மூலம் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இந்த மண்டலங்களில் தற்போதைய நிலவரப்படி, 60 குவாரிகளுக்கு மட்டுமே மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் (எஸ்.இ.ஐ.எ.எ.,) ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தவிர, 20க்கும் மேற்பட்ட இடங்களில், மணல் திருட்டு பெருமளவில் நடப்பதாக புகார் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக, ஆற்று படுகைகளில் மணல் எடுக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், பெரும் சர்ச்சையாகவே உருவெடுத்து வருகின்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், இந்த விஷயத்தில் கடும் அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது,கல் உடைக்கும் ஆலைகளில், கழிவாக வெளியேற்றப்படும் துகள்களை நேரடியாகவும், முறையாக ஜலித்து கழுவியும், "எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலாகவும் பயன்படுத்தலாம் என, பரிந்துரைக்கப்படுகிறத

இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை எகிப்து தடை செய்கிறது !

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்வது குறித்து
ராணுவத்தின் உதவியுடன் அமைந்துள்ள அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான், பதவி நீக்கப்பட்ட அதிபர் முகமது மோர்ஸி மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்று கடுமையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அக்கட்சியை தடை செய்ய, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இடைக்கால அரசின் பிரதமர் ஹஸம் பெப்லாவி மேற்கொண்டுள்ளார். நாட்டில் வன்முறை அதிகரித்தால் அதனை ராணுவம் வேடிக்கை பார்க்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 4 நாள்களாக நிகழ்ந்த மோதல்களில் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து நடந்து வந்த போராட்டங்களை வாபஸ் பெறுவதாக புரட்சி எதிர்ப்பு கூட்டணி அமைப்பு அறிவித்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்

மும்பை: தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளாலும், சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளதாலும், நம் நாட்டில், ஆபரண தங்கத்தின் விலை, மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. கடந்த, 50 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை, 4,536 ரூபாய் கூடியுள்ளதால், டிசம்பருக்குள், விலை உயர்வு, புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில், விலை உயர்வால், "தங்க நகைகளின் விற்பனை, 25 முதல், 30 சதவீதம் வரை பாதிக்கும்' என, நகை வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர அன்னிய செலாவணி கையிருப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியால், மத்திய அரசின் நிதி கையிருப்பு வெகுவாகக் குறைந்தது. நம் நாட்டின் இறக்குமதியில், முதலிடம் பெறுவது கச்சா எண்ணெய். இதற்கான பணத்தை, அமெரிக்க டாலர் மதிப்பில் செலுத்துவதால், அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.அதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. "பொதுமக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது. இதன் பயனாக, ஜூன் மாதம், தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது. ஜூன், 28ம் தேதி, ஒரு சவரன் தங்கம், 19,032 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

துண்டா:கராச்சியில் தாவூத் இப்ராகிமை பலமுறை சந்தித்தேன், 56வது வயதில், 18 வயது இளம் பெண்ணை மணந்தான் வாக்குமூலம்

புதுடில்லி:"மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமை, கராச்சி நகரில் பல முறை சந்தித்தேன். அவனுக்கு, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு அளிக்கிறது. எனக்கும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, அப்துல் கரீம் துண்டா தெரிவித்துள்ளான இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின், முக்கிய மூளையாக செயல்பட்டவனும், மத்திய அரசின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவனுமான, பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, டில்லி போலீசாரால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். தற்போது டில்லி போலீசாரின் காவலில் உள்ள அவனிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

SRM பச்சமுத்து: வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் தொடர்பில்லையே ? அப்புறம் ? இன்னா பாரி வேந்தரே ?

 வேந்தர் மூவீஸுடன் எனக்கு தொடர்பே இல்ல! - சொல்கிறார் பச்சமுத்து சென்னை: விஜய் நடித்த தலைவா படத்துடனோ, அதை வெளியிடும் வேந்தர் மூவீஸுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, என்று கூறியுள்ளார் எஸ்ஆர்எம் குழுமத்தின் டி ஆர் பச்சமுத்து. தலைவா படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. இந்த வேந்தர் மூவீஸ் பச்சமுத்துவுக்கு சொந்தமானது என்று திரையுலகில் கூறப்படுகிறது. பச்சமுத்து இப்போது தனக்கு வைத்துக் கொண்டுள்ள பெயர் பாரிவேந்தர் என்பதாகும். வேந்தர் டிவி, வேந்தர் மூவீஸ் என்பதெல்லாம் அவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களே என்று கூறிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் தில்லு முல்லு படம் வெளியானபோது வேந்தர் மூவீஸில் வருமான வரி சோதனை நடந்தது.

துணிந்து 60 வயது பெண்ணை மணந்த 80 வயதுகாரர் ! வாழ்க

பரமத்திவேலூர் அருகே 60 வயது பெண்ணை மணந்த 80 வயது முதியவர் ;மோகனூர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மனைவியை இழந்த இவர் வெற்றிலை கொடிக்கால் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வயதானதால் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய ஒரு வயதான பெண் தேவை என பரமத்திவேலூரை சேர்ந்த ஒரு பெண் பார்க்கும் புரோக்கரிடம் கூறியுள்ளார். புரோக்கரும் அவருக்கு ஏற்ற வகையில் ஒரு பெண் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண் பார்க்கும் புரோக்கர்கள் தினமும் பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோயில் அருகே சந்தித்து, ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள ஜாதகத்தை மாற்றிக்கொண்டு பெண் பார்த்து வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் இரண்டு புரோக்கர்கள் சந்தித்துக்கொண்டபோது, கணவனை இழந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மணமகன் தேவை என ஒரு புரோக்கர் கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் வெள்ளதில் 300 வெளிநாட்டுக்காரர்களை காணவில்லை ! இறந்திருக்கலாம் !

டேராடூன்: உத்தரகாண்டில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை
மாநிலத்தை புரட்டி போட் டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் உருக்குலைந்தன. பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாசி போன்ற பகுதிகளுக்கு யாத்திரை சென்ற ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்த பகுதிகளில் வசித்த ஏராளமான மக்கள் வீடுகளை இழந்தனராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.ர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மூலமாக அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளவரசி டயனா கொல்லப்பட்டாரா ? இங்கிலாந்து ராணுவம் கொன்றதா ? புதிய தகவல் விசாரணை....

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா,
அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் 31-8-1997 அன்று காதலர் டோடி ஃபயீத்துடன் பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் காரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். டயானாவை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பிரான்ஸ் அரசு நடத்திய விசாரணையின் முடிவில் கூறப்பட்டது போல் டயானாவின் கார் டிரைவர் அதிக போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்தில் சிக்கி டயானா உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து ராணுவத்தினர் கொன்று விட்டனர் என ரகசியமாக கூறி வைத்துள்ளார். ரகசியத்தை கூறிய ராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை ராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனை ‘போட்டுக் கொடுத்து’ பழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.

Delhi 43 வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்ட பயங்கரவாதி சையத் அப்துல் கரீம் கைது


Describing Tunda as a major catch, the security agencies say he would be able to throw some light on Lashkar-e-Toiba's operations in India.
 புதுடெல்லி,
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்ட அதிபயங்கர தீவிரவாதி, சையத் அப்துல் கரீம் என்ற துண்டா.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னர், இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்ட 20 தீவிரவாதிகளை கொண்ட பட்டியலில் முதல் இடம் பிடித்தவர்.
வெடிகுண்டு வல்லுனர்
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முன்னணி வெடிகுண்டு தயாரிப்பு வல்லுனராக திகழ்ந்து வந்த துண்டாவை நேற்று முன்தினம் பகல் 3 மணிக்கு இந்தியநேபாள எல்லையில் (பன்வாசாமகேந்தர்நகர் எல்லைப்பகுதி) டெல்லி போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி: மணமகன்–மணமகள்கள் திரண்டனர்

சென்னை, ஆக. 18– சென்னையில் நடந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில்
மணமகன்–மணமகள்கள் திரண்டனர். உலக வள்ளுவர் குல சங்கம் சார்பில் சென்னை சூளைமேடு சமுதாய நலக்கூடத்தில் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி இன்று நடந்தது. டாக்டர் எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தார். தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதி மணி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த வள்ளுவர் குல மணமகன், மணமகள்கள் 700 பேர் கலந்து கொண்டனர். சுயம்வரத்தில் கலந்து கொண்ட மணமகன், மணமகள்கள் தங்கள் சுய விபரம் குறித்து அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்டர்களில் பதிவு செய்தனர்.
பின்னர் மேடையில் ஏறி தங்கள் படிப்பு, வேலை, வரன் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.

வியாசர்பாடி அருள்வாக்கு சொல்கிறவர் சிறுமியின் உடலில் வீபூதி தடவி கற்பழித்து பின் பலருக்கு சிறுமியை விற்றார்

சிறுமியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கினாரா?: வியாசர்பாடி
ஜோதிடரை காவலில் விசாரிக்க முடிவு" அவரா அப்படி... நம்ப முடியவில்லையே.... இதுதான் வியாசர்பாடி பி.வி.காலனி முழுக்க இன்றைய பேச்சு. பி.வி.காலனி 24–வது தெருவில் தனம் ஜோதிட நிலையம் என்ற பெயர் பலகையுடன் காட்சி தரும் அந்த ஜோதிட நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. ஜோதிடம் பார்க்க வந்த ஒரு சில பெண்களும் விசயத்தை கேள்விப்பட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் அறவாளிசித்தர் பொது மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றார். அறவாளி சித்தர் சொன்னால் பலிக்குது.... அவர் சொல்லும் பரிகாரங்களை செய்தால் கஷ்டமெல்லாம் விலகி போகிறது... என்று பலர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர் தனக்கு இப்படி ஒரு இடி விழும் என்று அவரது ஜாதகத்தில் கூட கணிக்கவில்லையோ என்னவோ...?

பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி நஜ்மா தாலிபன்களால் சுட்டு கொலை

Unknown gunmen Friday shot dead Awami National Party (ANP)leader Najma Hanif  பெஷாவர்: பாகிஸ்தானில் அவாமி நேஷனல் பரி கட்சியின் மூத்த உறுப்பினரான பெண் அரசியல்வாதி ஒருவர் நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வரை அவாமி கட்சி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. ஆனபோதும், இந்தக் கட்சியின் செயல்வீரர்கள் பலரும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். அவாமி கட்சியின் மூத்த உறுப்பினரான நஜ்மா ஹனிப் என்ற 35 வயது பெண் அரசியல்வாதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருகிறார். ஏற்கனவே இவரது கணவர், மகன் மற்றும் பாதுகாவலர்கள் கடந்த 2011ம் ஆண்டு தாலிபான் தற்கொலைப்படை வீரன் ஒருவனால் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தனிமையில் வசித்து வந்த ஹனிப்பை நேற்றிரவு படுகொலை செய்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள்.

தலைவா 20-ம் தேதி ரிலீஸ் ! ஜெ.அன்பழகனின் அதிரடி வேலைசெய்கிறது ? இன்று முன்பதிவு ஆரம்பம் !

தலைவா 20-ம் தேதி ரிலீஸ்... இன்று முதல் முன்பதிவு! சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழகத்தில் மட்டும் வெளியாகாமலிருந்த தலைவா படம், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிக!ர் விஜய்யும் சரி, இயக்குநர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சரி சொல்லவே இல்லை. இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, போலீசார் கூறிவிட்டனர். ஆனால் படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை. ஆனாலம முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார். இந்த நிலையில்தான், தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் நாளையே 300 தியேட்டர்களில் வெளியிட்டுக் காட்டுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன். இதற்குப் பிறகுதான் படத்தை வெளியிட விஜய்யும் வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கினர். இப்போது படம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முன்பதிவு தொடக்கம் என்றும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது. ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும், சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.
  tamil.oneindia.in/

விஜய் ஒரு அவாளாக இல்லையே ? தலைவா வெளிவந்திருக்கும் ? ஜெயாவின் ஆட்சி / அலங்கோலம் !

சென்னை: தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும்
சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை. முதல்வரைச் சந்தித்து படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத் திட்டமிருந்தது விஜய் தரப்பு. ஆனால் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துவிட்டதாம் அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில் கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள் tamil.oneindia.in

RSS : மோடியை விமர்சிபவர்களை தூக்கி எறியுங்கள் ! இப்பொழுது எல்லாம் புரிகிறது !

பாரதிய ஜனதா கட்சியில் நிலவும், உட்கட்சி பூசலை தடுத்து நிறுத்த, சங் ஆனாலும், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், மோடிக்கு அமோக வரவேற்பு உள்ளதால், அவரை எப்படியும், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதில், கட்சியின் தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் தீவிரமாக உள்ளார். இவை அனைத்துமே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வழிகாட்டுதலின்படியே, நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பரிவார் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சிக்கும், கட்சித் தலைவர்களுக்கு கடிவாளம் போடுங்கள்; மீறிப் பேசினால், அவர்களை கட்சியிலிருந்தே நீக்குங்கள்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, அந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. அடுத்த எட்டு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், கட்சி மேலிடம், இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. மோடியின் தலைமையை ஏற்க, கட்சியில் உள்ள, சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதே, இதற்கு காரணம்.குறிப்பாக, மூத்த தலைவர் அத்வானியும், அவரின் ஆதரவாளர்களும், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர .சர்வாதிகாரிகள் இப்படிதான்  உருவாகிறார்கள் கூஜா தூக்கும் கூட்டம் வெறிபிடித்த கூட்டம் எல்லாம் நாட்டை நாசமாக்கியே தீரும் .