
கட்டுமானப் பணிகளில் இயற்கை மணல் தேவை குறையும்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, கட்டுமானப் பணிகளில் நாளொன்றுக்கு, ஒரு லட்சம் முதல், 1.5 லட்சம் கனஅடி மணல் தேவைப்படுகிறது. இப்போது, அரசால் அனுமதிக்கப்பட்ட குவாரிகளால், இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி ஆகிய, நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஆற்று படுகைகளில் பொதுப்பணித் துறை மூலம் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இந்த மண்டலங்களில் தற்போதைய நிலவரப்படி, 60 குவாரிகளுக்கு மட்டுமே மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் (எஸ்.இ.ஐ.எ.எ.,) ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தவிர, 20க்கும் மேற்பட்ட இடங்களில், மணல் திருட்டு பெருமளவில் நடப்பதாக புகார் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக, ஆற்று படுகைகளில் மணல் எடுக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், பெரும் சர்ச்சையாகவே உருவெடுத்து வருகின்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், இந்த விஷயத்தில் கடும் அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது,கல் உடைக்கும் ஆலைகளில், கழிவாக வெளியேற்றப்படும் துகள்களை நேரடியாகவும், முறையாக ஜலித்து கழுவியும், "எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலாகவும் பயன்படுத்தலாம் என, பரிந்துரைக்கப்படுகிறத
அரசு அனுமதி:
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மையத்தின் மூத்த நிர்வாக மூர்த்தி கூறியதாவது:கருங்கல் துகள்களை மணலுக்கு மாற்றாக பயன்படுத்த, தேசிய அளவில் பல்வேறு
சிக்கல்:
காரணம் என்ன?
இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கான்கிரீட் கலவை தயாரிப்பில், கருங்கல் துகளை நேரடியாக பயன்படுத்தும் போதும், அதை கழுவி, "எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலாக பயன்படுத்தும் போதும், வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதில், ஏதாவது ஒரு இடத்தில் அளவீடு மாறினாலும் கட்டடத்தின் உறுதி பாதிக்கப்படும்.
கலவை கலக்கும்போது கண்காணிக்காமல் விட்டுவிட்டால், கட்டடத்தில் பாதிப்பு ஏற்படும். இதை சரியாக கண்காணிக்க முடியாது என்பதாலேயே பல இடங்களில், ஆற்று மணலையே பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் நிலையில் இவற்றை பயன்படுத்துவது குறித்த தெளிவான அணுகுமுறை ஏற்பட்டால் தான், இது வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் கூறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக