வியாழன், 13 டிசம்பர், 2012

கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன் ! நாஞ்சில் சம்பத் வசனம்

சென்னை: ""கல்லறைக்குச் செல்லும் வரை, அ.தி.மு.க.,வில் நீடிப்பேன்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார். அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில்,  மாங்கொல்லை திடலில், நேற்று நடைபெற்றது.
இதில், சம்பத் பேசியதாவது: ஒரு காலை இழந்தவன், இன்னொரு காலை நேசிப்பதைப் போல, நான் அ.தி.மு.க.,வை நேசிக்கிறேன். ஏற்கனவே இருந்த இயக்கத்தில் கிடைத்த கசப்புகளை, கசக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறேன். இனி, அந்த இயக்கத்தைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ, விமர்சிக்க மாட்டேன். அ.தி.மு.க., சிறப்புகளைப் பற்றியும், இந்த ஆட்சிக்கு கருணாநிதி கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். கருணாநிதி, இந்த ஆட்சிக்கு தோள் கொடுக்க முடியாவிட்டாலும், தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், துரோகத்தை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இன்று நிலவும், மின் வெட்டுக்கு காரணம், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தான். மத்திய அரசிடம் உபரியாக இருக்கும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல், தடை செய்கிறார்.    http://www.dinamalar.com/
வாசகன் - Bangalore,இந்தியா

வாசகன் மதிமுக வில் வைகோவால் கொடுக்க முடியாத ஒன்றை இங்கே இவர் பெறலாம். பணம். மற்றபடி அங்கீகாரமாவது அதிமுக விலாவது. வைகோ கொடுத்த மரியாதையில் பாதி கூட அம்மா தர மாட்டார்.
ranjani - san diego,யூ.எஸ்.ஏ

ranjani எப்பொழுது கல்லறை செல்லலாம் என முடிவு செய்துள்ளீர்கள் என்றும் தெரிவித்தால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

6.75 கோடி மோசடி :கலாநிதி மீது போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை,: சினிமா இயக்குனர், தியேட்டர் உரிமையாளர்களிடம், 6.75 கோடி ரூபாய்க்கு மேல், பண மோசடி செய்தது தொடர்பாக, "சன்' குழும தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கடந்த சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்தார். அதன் விவரம்:
"எந்திரன்' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகிக்கும் உரிமை வழங்குவதற்காக, 6.75 கோடி ரூபாயை, சன் குழுமத்தினர் வாங்கினர். ஆனால், எங்களுக்கு வினி@யாக உரிமை வழங்கப்படவில்லை.எங்களிடம் வாங்கிய பணத்தில், 2.75 கோடி ரூபாயை, திருப்பி தந்துவிட்டனர். மீதமுள்ள, 4 கோடி ரூபாயை தராமல், ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு, "சன் டிவி' நிறுவனத்திற்கு சென்ற போது, கலாநிதி தூண்டுதலின் பேரில், மேலாளர்கள் ரமேஷ், கண்ணன், செம்பியன் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.அதுபோல், "காவலன்' படத்திற்காக, "சேட்டிலைட்' உரிமம் வழங்கியது தொடர்பாக, 2.75 கோடி ரூபாயை பெற்றனர். அந்த, பணத்தை கோர்ட்டில் கட்டி விட்டதாகவும் தெரிவித்து, பணத்தை தர மறுக்கின்றனர்.இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.

புதன், 12 டிசம்பர், 2012

ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன

அண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்?? நான் பலவற்றையும் வெளியே பேச முடியாது

அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப் பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த் கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும் போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர். அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.   இவிங்க ரெண்டு பேர்வழிகளும்  ஓவரா பேசும்போதே ஸ்பெலிங் மிஸ்டேக் ஆவறது  உத்துப்பார்த்தால் RSS ஓட்டை நன்னாவே தெரியறது ,,,, http://www.badriseshadri.in/

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?



2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்?
2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும்.
* * *
2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால்,  சற்று காமெடியாகவே ஆராய்வோம்.
ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு அறிக்கை விட்டுள்ளது. உலக அழிவு முன்னோடிகளை கலாய்க்க முன்னர் அதையும் பார்த்து விடுவோம்.http://www.venkkayam.com/

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து 'டிஸ்மிஸ்': தமிழக அரசு அதிரடி

சென்னை: பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.http://tamil.oneindia.in/

விஸ்வரூபத்தை கேபிள் டிவியில் இலவசமாக ஒளிபரப்புவோம்!' - கமலுக்கு ஒரு எச்சரிக்கை

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. கேபிள் டி.வி. தொழிலை ஒழிக்க முற்படுவோருக்கு மத்திய அரசு துணை போனாலும் டி.டி.எச். 3 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பதை தனது கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கும் உலக நாயகனுக்கு உளமார்ந்த நன்றியை தமிழக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணம் குறைந்த விலை நிறைந்த சேவை என்ற தாரக மந்திரத்தை தந்து கேபிள் டி.வி. தொழிலை தமிழகத்தில் தழைந்தோங்க வழிகாட்டி நிற்கும் முதல்-அமைச்சரின் சீரிய சிந்தனையே ஆகும்.http://tamil.oneindia.in/

True HERO Traffic Ramasamiy குறைந்தபட்சம் தவறுக்கு எதிரா ஒரு குரல்

வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!‘‘அதிகாலையில் ஏழு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். பஸ்லதான் போகணும். கூட்டம் நெருக்கியடிக்கும். எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லே, ஆனா, எனக்குப் பாதுகாப்புக்குன்னு இந்தத் துப்பாக்கியை வெச்சுக்கிட்டு என்னோடவே பஸ்ல வர்ற போலீஸ் தம்பிங்க தான் பாவம். கோடம்பாக் கத்தில் இருந்து கிளம்பினா, பஸ் லிபர்டியைத் தாண்டு றதுக்குள்ளவே நெருக்கியடிச்சு டிராஃபிக் முட்டிக்கும். உடனே பஸ்ல இருந்து இறங்கி, ரோட்ல டிராஃபிக்கை ஒழுங்குபண்ண ஆரம்பிச்சுடுவேன். தம்பிக்குத் தான் சிரமம், ஏ.கே. 47 துப் பாக்கியை வெச்சுக்கிட்டு என் பின்னாலயே ஓடி வரும்’’ என்று தன் பாதுகாவலரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ராமசாமி.‘‘பி.அண்ட்.சி. மில்லில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வெளியில் வந்த பிறகு, தினமும் ரோட்டில்தான் எனக்கு வேலை.http://trafficramaswamy.blogspot.com/

ரஜினியின் அலப்பறை தாங்க முடியல்ல .கந்த சஷ்டி கவசம் போல் ரஜினி படப்பாடல்கள்

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லா இடங்களிலும் அவரின் படப்பாடல்கள் கந்த சஷ்டி கவசம்போல் அலறிக்கொண்டு இருக்கின்றது. தமிழனுக்கு ஹீரோ வொர்ஷிப் மிக மிக அதிகம். இது ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதான். சினிமாவிலோ அரசியலிலோ யாராவது அவர்களின் மனங்கவர்ந்து விட்டால் பின் என்ன ஒரே காவடி ஆட்டம்தான். சுயமாக சிந்திக்க தெரியாத கூட்டம் வேறு என்னதான் செய்யும்.
எல்லோரும் சாதாரண மனிதர்களே. இவர்கள் கொண்டாடும் இந்த பெரிய மனிதர்கள அனேகமாக சொந்த வாழ்வில் மிகவும் கேவலமான சுய நலமிகளாக இருக்கிறார்கள். தங்கள் திரைப்படங்களுக்கு இலவச விளம்பரம் செய்யும் ரசிகர் பட்டாளத்தை அப்படியே முட்டாள்களாக வைத்திருப்பார்கள் ஆனால் அந்த களவு தெரிந்து விடக்கூடாது என்று சதா இரவல் வாங்கிய தத்துவ கருத்துக்களை பொழிந்து தள்ளுவார்கள். இந்த மாதிரி ஹீரோ பக்தியை திறமையாக தக்க வைத்துகொள்ளும் ஒரு நடிகனை விட அவனை கடவுளாக என்னும் முட்டாள் ரசிகனைக் நினைத்தால் என்ன செய்வது சிலர் சில நல்ல காரியங்களை சத்தம் போடாமல் செய்கிறார்கள் அவர்களை இந்த தமிழ் சமுகம் கண்டு கொள்வதே இல்லை.  உதாரணமாக Traffic Ramasamy என்கின்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் தனி நபராக நின்று எத்தனையோ பொது நல வழக்குகள் மூலம் சமுகத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார் இந்த பொது காரியங்களுக்காக அவர் இழந்தது சொல்லி மாளாது சென்னையில் அவரை தெரியாத வக்கீல்களோ அரசியல் வாதிகளோ இருக்க முடியாது சென்னையில் பொது மக்களை பாதிக்கும் எத்தனையோ விடயங்களில் மக்களுக்காக சொந்த செலவில் நீதிமன்ற படி ஏறியவர் இந்த சினிமா நடிகன் எவனாவது இதுபோன்ற நல்ல செயல்களுக்கு உதவியாவது செய்திருக்கின்றான?

விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளார் வைகைப் புயல் வடிவேலு என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு வடிவேலு கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தடாலடியாக திமுகவுக்கு ஆதரவாக மாறினார் வடிவேலு. தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக போய் விஜயகாந்த்தை கடுமயாக தாக்கிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கு ஊரெங்கும் மகத்தான கூட்டமும் கூடியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் திமுக படு தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.http://tamil.oneindia.in/

திருமணத்திற்கு மதம் மாறிக் கொள்வது சட்டப்படி செல்லாது கேரள உயர்நீதிமன்றம்

கொல்லம்: திருமணத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்காக, திருமணத்திற்கு சற்று முன் மதம் மாறிக் கொள்வது சட்டப்படி செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைஜு. 24 வயதான இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், எனது மனைவி அஸ்வதி ரவீந்திரனை, அவரது தந்தையும், தாய்மாமனும் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

சினிமா நடிகனின் Birthday கொண்டாடும் தமிழன்

ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்திருப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நகரில் திரும்பிய பக்கமெங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் களை கட்டியுள்ளன. ரஜினி ரசிகர்கள் கோவில்களில் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் சிறப்பு அர்ச்சனைகளை செய்து வருகின்றனர்."என் வழி தனி வழி".... , "நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"..... இவை நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள். இவைதான் ரஜினி ரசிகர்களின் தாரக மந்திரங்கள்t குடும்பத்தினரின் பிறந்தநாளை, திருமணநாளை நினைவு வைத்திருப்பார்களோ இல்லையோ தங்கள் தலைவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் நாளை நினைவு வைத்துக்கொண்டு கோவில்களில் சிறப்பு அர்ச்சனையும், பால்குடமும் எடுத்து கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள்.

Ravi Shankar சிதார் மேதை ரவி சங்கர் மரணம்

டெல்லி: சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் காலமானார். அவருக்கு வயது 92.
 Sitar Maestro Pandit Ravi Shankar Passes Away சிதார் மேதை பண்டிட் ரவி சங்கருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவின் லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. அவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நோரா ஜோன்ஸ், அனோஷ்கா சங்கர் ஆகிய மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருமே இசைத்துறையில் பிரபலமாக உள்ளனர்.
இந்திய இசையை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இறுதி காலம் வரை அவர் இசையுலகில் ஆர்வமாக இருந்தார். ஏற்கனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து அவருடைய மகள் அனோஷ்கா சங்கரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.http://tamil.oneindia.in/   Rare photo of Ravi Shankar and George Harrison

தமிழகத்தில் கால் பதிக்கும் வால்மார்ட்..

சென்னை: தமிழகத்தில் கால்பதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை எதிர்த்து டிசம்பர் 26ம் தேதி சென்னை அண்ணாநகர் வால்மார்ட் அலுவலம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளைத் திறப்பதற்கு முயற்சிகள் செய்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் திருவேற்காடு நகராட்சி பள்ளிக்குப்பத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடி அளவில் வால்மார்ட் நிறுவனத்திற்காக சேமிப்புக்கிடங்கு கட்டப்படுவதாகவும் அண்ணா நகரில் மார்க்கெட்டிங் அலுவலகம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. oneindia.in

மலலா உலக குழந்தைகளின் கல்வி முன் மாதிரி

பாக்: மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம்

இஸ்லாமாபாத்.டிச.11 -தலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலலா. தற்போது இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, இங்கிலாந்து சென்று அந்த சிறுமியை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார். மலலாதான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது

ஆனந்த விகடன் ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதாம்

பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார். 
முக்கியமான அறிவிப்பு இது:தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல் என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள் பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர் குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன். விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.

ஊழல் ராணியும் - மலை முழுங்கி மகாதேவனும்

பேரம் படிந்தது நாடகம் முடிந்தது
 காங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா? 
 கிரானைட் மெகா கொள்ளை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற பிரசுரம்!
கடந்த 7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி –  கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.http://www.vinavu.com/

லண்டனில் கர்நாடக நர்ஸ் மர்ம மரணம் ! கொலையா? தற்கொலையா ?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தவர் ஜெசிந்தா சல்தானா (46). இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை ஜெசிந்தா கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, ஆஸ்திரேலிய ரேடியோ ஜாக்கிகள் 2 பேர், பரபரப்பு செய்திக்காக ராணி எலிசபத் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் மிமிக்ரி செய்து பேசி, கேத் மிடில்டனுக்கு அளித்த மருத்துவ விவரங்களை பெற்று ஒலிபரப்பினர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அருகில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். கொலையா ?தற்கொலையா? http://www.tamilmurasu.org/index.asp

செவ்வாய், 11 டிசம்பர், 2012

DTH கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை மினிமம் கேரண்டி

 இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.
விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,
இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.
“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.

Maruthy..Hyundaii.. லாரி ஓட்டுநர்களின் கதை இது.

இந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தாலும் நம்மோடு பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக அவ்வப்போது காற்றைக் கிழித்துக் கொண்டு சர் சர் என்று பாயும் பல கார்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சென்னையில் மட்டும் ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யு, லான்சர், ஸ்கோடா, ரெனால்ட் நிசான், மகிந்த்ரா எனப் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில், பணி புரியும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து முன்னூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மாருதியின் மானேசர் ஆலையிலோ அதைவிட அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் உள்ளன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது. வினவு.com

பிடிவாரண்ட் எச்சரிக்கை கோர்ட்டில் சசி ஆஜர்

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று நேரில் ஆஜராகாவிட்டால் கைது செய்ய பிடிவாரண்ட் பிரப்பிக்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக எச்சரித்ததையடுத்து உடனடியாக இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீண்டநாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பலமுறை வாய்தாக்கள், ஒத்திவைப்புகள் நடந்துள்ளன.
நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த புதிய நீதிபதி பாலகிருஷ்ணா சசிகலா, இன்றைய வழக்கு விசாரணைக்கு சசிகலா ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது ஜெயலலிதாவுக்கு களங்கம்! நக்கீரன் கோபால் மீது அவதூறு வழக்கு

சென்னை: நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்தியைத் தொடர்ந்து ஆசிரியர் கோபால் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 5-ம் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது. வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குஷ்புக்கு எதிராக போராட்டம் இந்து மக்கள் கட்சி

 Kushboo Yet Another Controversy
சென்னை: இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

 Supreme Court Declines Stay Jallikattu டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பிராணிகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உச்சநீதிமன்ற நிபந்தனைப்படிதான் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு
ப் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 9- ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்துவிட்டது.http://tamil.oneindia.in/

தமிழச்சி தங்கப்பாண்டியன்.மனசில் என்ன இருக்கு...?

சென்னை: தமிழ்த் திரையுலகில் நுழையப் போகிறது ஒரு அழகு முகம், தமிழ் முகம் என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசுவாக உள்ளது. அந்த அழகு முகத்துக்குரியவர், தமிழச்சி தங்கப்பாண்டியன்.
திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் தமிழச்சி. கல்லூரிப் பேராசிரியை, கவிதாயினி, பேச்சாளினி என்பது தவிர அரசியல் ஆர்வம், இலக்கிய ஆர்வம் மிகுந்தவர் என்பதும் இவரது கூடுதல் அடையாளங்கள்.
அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அருமையாக பேசக் கூடிய ஒரு தமிழ்ப் பெண். மறத் தமிழச்சியான இவர் இப்போது சினிமா விழாக்களில் அடிக்கடி வலம் வர ஆரம்பித்துள்ளார்.