ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யாழ்ப்பாணத்தில் வட மாகாண விவசாய கண்காட்சி!

இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப் பொருளிலான வடமாகாண விவசாய கண்காட்சி நாளை திங்கட்கிழமை முதல் அடுத்த சனிக்கிழமை வரை யாழ் மாவட்ட பயிற்சி நிலைய வளாகத்தில் நடை பெறவுள்ளதாக வடமாகாண விவசாய- கால்நடை அபிவிருத்தி- காணி- நீர்ப்பாசன- கடற்றொழில் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சி இரவு 7.00 மணி வரை தினந்தோறும் இடம்பெறும் இக்கண்காட்சியில் 32 க்கும் மேற்பட்ட விவசாய காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறினார். அதேவேளை தனியார் துறையினரின் காட்சி கூடங்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் நாள் நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்- வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும்- 6ஆம் திகதி விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்தனவும்- 7ஆம் திகதி நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும்- 8ஆம் திகதி கைத்தொழில்-வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்இ- 9ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும்- 10ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
அன்றைய தினம் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது?

ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில் யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது?

 
ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனைச் சமாளிக்க யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக தற்போது இந்தோனேஷியத் தலைநகர் மணிலாவில் தற்போது நடைபெற்றுவரும் உலக உணவுத்திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள இமெல்டா, அங்கிருந்து நேரடியாக ஜெனீவா செல்வார் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவில் இறுதிவரை கடமையாற்றியவர் அப்போது அங்கு அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தும் இருந்தார்.
எனவேதான் அவரை இறுதிப் போர் குறித்த அரச தரப்பு சாட்சியாக ஜெனீவாவில் முன்நிறுத்த அரச தரப்புத் தீர்மானித்துள்ளது.
போரின் பின்னர் அரசு மேற்கொண்ட நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை முன்னிறுத்தியே ஜெனீவாவில் அரச தரப்பு தன்னை நியாயப்படுத்தும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி புலிகளின் கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றி வருவதாக ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பொதுவான ஓர் இணக்கப்பாட்டை எட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பொதுவான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மெய்யான நாட்டம் காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் புலிகளின் கோட்பாடுகளையே முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண புலிகள் விரும்பவில்லை எனவும், இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எவ்வித பயனும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்படும் தீர்வுத் திட்டத்தை தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இன சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழில் மர்ம மனிதனை பிடிக்க இராணுவம், பொலிஸ் கூட்டு ரோந்து குழுக்களாக கூடி நிற்கவேண்டாமென மக்களுக்கு அறிவுரை!


யாழ். குடாநாட்டு மக்களை மர்ம மனிதனிடம் இருந்து பாதுகாப்பதற்காகவும் கிaஸ் மனிதனைப் பிடிப்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை கூட்டு ரோந்தில் ஈடுபடு வதற்கு முடிவு செய்துள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அறிவித்துள்ளார்.

இரவு ரோந்து நடவடிக்கைக்குப் பொலிஸார் நேற்றிலிருந்து ஆரம்பித்துள் ளதாகவும் இராணுவத்தினர் அவர்கள் கடமையாற்றுகின்ற காவலரணில் நின்று கொண்டும் துவிச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிள்களிலும் மற்றும் நடைபாதையாகவும் ரோந்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாடக் கடமைகளுக்கு பாதுகாப்பாக இராணுவத்தினர் இருப்பார்கள் எனவும் குழுக்களாக எங்கும் கூடி நிற்க வேண்டாம் எனவும் மர்ம மனிதன் நடமாடினால் அருகில் உள்ள காவலரணுக்கு சென்று தகவல் கொடுக்கும் படியும் இராணுவத்தினர் உங்களுக்கு உதவி புரியக் காத்திருப்பதாகவும் ஹத்துரு சிங்கவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் சிங்கள மொழிகளில் இணையத்தள டொமேன்!


தமிழ் மற்றும் சிங்கள் மொழி மூலம் இணையத்தள டொமேன் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆங்கில மொழியை பயன்படுத்தாமல் தமிழ் மற்றும் சிங்கள விசைப்பலகையை பயன்படுத்தி இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமென எல்.கே டொமேன் பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் குறிப்பிடுகிறார்.
அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் இந்த திட்டத்தின் தம்மை இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியுமென அவர் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ள இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக இதுவரை காலமும் ஆங்கிலமொழியில் அதற்கான பெயரை தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது.
புதிய நடைமுறைக்கு அமைய இணையத்தளத்தில் முகவரியை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழயில் தட்டச்சு செய்வதன் மூலம் அதற்குள் பிரவேசிக்க முடியுமென அவர் குறிப்பிடுகிறார்.

1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!


விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன் தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும் இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.

இதற்காக முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன், சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில் உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளன.

யாழப்பாணத்தில் கிரீஸ் மனிதனை கண்டால் அழையுங்கள் 0773588778 - 0213211257


யாழப்பாணத்தில் கிரீஸ் மனிதனை கண்டால் அழையுங்கள் 0773588778 - 0213211257
கிரீஸ் மனிதன் மனிதன் என்பது ஒரு வதந்தியே அதனை நம்பி கலகங்களை ஏற்படுத்த வேண்டாம் என யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் , அவர் கருத்து தெரிவிக்கையில்:- சமாதானத்தை விரும்பதாவர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிகக்கும் வகையில் கிரீஸ் மனிதன் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை, கலகங்கம் ஏற்படும் போதும் அதனை தடுத்து நிறுத்த வேண்டியதும் பொலிஸாரின் கடமை. ஆனால் அதனை பொலிஸார் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துதுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்துவருவதற்கு முன்பு இராணுவம் அந்த இடத்திற்கு வருவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நேற்றிலிருந்து தினமும் மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை 6 மணி வரை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே கிறீஸ் மனிதன் ஏன்ற சர்ச்சை ஏற்பட்டதும் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டாம்.
கிரீஸ் மனிதன் என எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் 0773588778 மற்றும் 0213211257 தொடர்பு கொண்டு அறிவியுங்கள் என்றார்

ஸ்டாலின் சிகிச்சை பெற லண்டன் புறப்பட்டார்

சென்னை : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்காகவும், மருத்துவப் பரிசோதனைக்காகவும் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகள், துர்காவின் தங்கை ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஏற்கனவே பலமுறை லண்டனுக்குப் போய் சிகிச்சை பெற்றுள்ளார் ஸ்டாலின் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும் அவர் சென்றுள்ளார். அவர் திரும்பி வர ஒரு வாரமாகும் என்று தெரிகிறது.

புலம்பெயர்ந்தோரின் காணிகளை உறுதிப்படுத்த புதிய விண்ணப்பப் படிவம்: ஜனக்க

வடக்கு கிழக்கில் காணி உரித்துடைய புலம்பெயர்ந்தவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த விண்ணப்பப் படிவம் இன்று அல்லது நாளை வெளியிடப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதி களில் காணிகள் அளக்கப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

"மஹிந்த சிந்தனை' திட்டத்தின் கீழ் காணி உரிமைப்படுத்தவும் நாட்டிற்கான காணிப் பலத்தை ஸ்திரப்படுத்தவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அளக்கப்பட்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இது வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்களின் காணிகளை அளப்பதற்காக அவர்கக்காக புதிய விண்ணப்பப் படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன் ஊடாக அவர்கள் தங்களுடைய காணிகளை அளப்பதற்கும், எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவும் முடியும். அந்த விண் ணப்பத்திற்கான விபரத்தை அவர்கள் இணை யத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த புதிய விண்ணப்பம் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். அந்த விண்ணப் பத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் விண்ணப் பதாரிக்கு எதிராக ஆட்சேபனைக் காலமாக இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்படும்.

காணிகள் அளக்கப்பட்டு எல்லை நிர்ணயிக்கும் நடவடிக்கையின் முதற் கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள் ளப்பட்டு வருவதனால் இதனை முழுமையாக செய்து முடிக்க நீண்டகாலம் தேவைப்ப டுகிறது என்றார்.

இந்த நிலையில் "மஹிந்த சிந்தனை' திட் டத்தின் கீழ் காணி உரிமையைப்பலப்படுத் தவும், நாட்டிற்கான காணிப்பலத்தை ஸ்திரப் படுத்தவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் "பிம் சவிய' வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டமானது 1998ஆம் ஆண்டின் உறுதிப்பதிவுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2007 முதல் ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் காணிகள் அளக்கப்பட்டும், எல்லைகள், நிர்ணயிக்கப்பட்டும் உரிமம் உறுதிப்படுத்தப்பட்டும், இலவசமாக உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் இப் பணியை செய்து முடிப்பதே பிரதான இலக்கு என காணி மற்றும் காணி அபி விருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, புலம் பெயர்ந்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விண்ணப் பம் தொடர்பான விபரத்தை தீதீதீ.ஞடிட்ண்ச்திடிதூச்.ஞ்ணிதி.டூடு இன் ஊடாக விண்ணப் பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது!

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரோட்டரி கழகத்தின் தெற்காசிய நாடுகளுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரைநிகழ்த் துகையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்காக சில வெளிநாட்டுச் சக்திகள் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எமக்குத் தகவல் வழங்கி வருகிறார்கள்.
இலங்கையில் உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிவார்களா? பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை குறித்தாவது அவர்களுக்குத் தெரியுமா?
மிகுந்த சிரமத்துடன் தான் நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டோம். ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு பொதுமக்களை மீளக் குடியமர்த்துவது என்பது இலகுவான காரியமல்ல. ஆயுதம் ஏந்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோர்கள், சிறுவர்களை நாம் மீட்டெடுத்தோம். தமது பிள்ளைகளை பயங்கரவாதத்துக்கு அனுப்பி வேதனை அனுபவித்த தாய்மாருக்கு நாம் ஆறுதல் அளித்தோம். தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றப்பட்ட பெண்களுக்கும் ஆயுதம் ஏந்தியோருக்கும் நாம் புனர்வாழ்வளித்தோம்.

Wikileaks ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார்

Karunanidhi with Kanimozhi
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர். அவர் ஒரு மோசமான பிரதமராக இருப்பார். அவர் அடிப்படையில் ஒரு அதிகாரி. விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

மேலும் பிரகாசம் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி பிரதமராக விரும்புவதாக கூறினார் என்றார்.

அதேபோல தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை என்றும், அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாளின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை கருணாநிதி கொடுத்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.

முதல் மனைவியான தயாளு அம்மாளின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப் பொறுக்க முடியாமல்தான் மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள் துடித்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியதாக ஹாப்பர் தனது கேபிளில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

யாழ் நகரப் பகுதிகளில் கண்காணிப்புக் கமராக்கள்!

யாழ் நகரப் பகுதிகளிலும் இராணுவ முகாமை அண்டிய பிரதேசங்களிலும் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துவதற்குப் இராணுவத் தரப்புத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் தற்போது பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் போன்றே இவையும் செயற்படவுள்ளன.எதிர்காலத்தில் இலங்கையின் பாதுகாப்புத்துறையில் நவீன தொழில்நுடப் முறைமைகளைப் பாதுகாப்பு அமைச்சு கையாளவுள்ளது. இதனடிப்படையில் அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலும் இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

கேரள பத்மநாபசாமி கோயில் தங்க நகை கடத்தல் அம்பலம்

சாமி குத்தம் - உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் மூடநம்பிக்கைகளே!
ஆறாவது அறை திறந்து எல்லா பொக்கிஷமும்  கணக்கிட வேண்டும் மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்திடுக!
சென்னை, செப்.3- பத்மநாபசாமி கோயிலி லிருந்து மன்னர் குடும்பத்தினர் தங்கம் நகை கடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளிப் படையாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் கோயிலின் ஆறாவது கதவையும் திறந்து மொத்த பொக்கிஷங்களையும் மத்திய அரசு கணக்கிட வேண்டும். மூடநம்பிக்கைகளைக் கண்டு ஏமாறக் கூடாதென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

சாமி குத்தம் - உயிருக்கு ஆபத்து!
நம் நாட்டில் இருப்பதிலேயே மிகப் பெரிய முதலாளிக் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதிதான் என்று நிலவிய கருத்தை பின்னுக்குத் தள்ளி திருவனந்தபுரத்து பத்மநாபசாமி அதன் ஆறு அறைகளில் வைக்கப்பட்டு, திறந்தநிலையில் இன்னும் ஆறாவது அறையைத் திறக்கவே இல்லை, காரணம் அதற்கு அங்குள்ள மன்னர் வம்சத்தவரும் மற்றும் சிலரும் தேவபிரசன்னம் சாமி குத்தம், உயிருக்கு ஆபத்து, நாட்டிற்கு கேடு என்ற பூச்சாண்டி, புருடாக்களை விட்டு, தினம் தினம் கோயில் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு போகின்றன என்ற நிலை உள்ளது என்பதை முன்னாள் கேரள முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையான அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

மன்னர் தங்கம் கடத்தல்
பழைய மன்னர் பரம்பரையான மார்த்தாண்டவர்மன் என்பவர் நாளும் வழிபடச் செல்வதாகக் கூறி, பிரசாதம் வாங்குவதாகக் கூறி நகை, தங்கம் இவற்றைக் கடத்துகிறார் என்று கூறியுள்ளார். இது மிகப் பெரிய குற்றச்சாற்று அல்லவா? இதுபற்றி விசாரிக்க கேரள மாநில அரசு தயங்குகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு கை கட்டி வாய்களைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது. தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

கேரள பகுத்தறிவாளர்கள் கொடுத்த விண்ணப்பம்
கேரள பகுத்தறிவாளர்கள் - யுக்திவாதிகள் சங்கத் தினர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு ஒரு விண்ணப்ப மனுவையே இதற்கென அனுப்பி யுள்ளனர்!

முடிவு செய்வது நீதிபதிகளே தவிர பூசாரிகள் அல்ல
உச்சநீதிமன்றமும் நேற்று கடுமையாக கூறியுள்ளது. இனியும் ஏதோ வீண் சால்ஜாப்பு - சமாதானம் - கூறாமல்,   நகைகள், சொத்துக்களின் மதிப்பீட்டை செய்யத் துவங்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் இதை முடிவு செய்ய வேண்டியது நீதிபதிகளே தவிர, பூசாரிகள் அல்ல! அல்லவே!

21ஆம் நூற்றாண்டிலும் ஏன் இந்த மூடநம்பிக்கை?
ஆறாவது அறை என்ன மற்ற 5 அறைகளுக்குமேல் சக்தி உள்ளதா? பின் ஏன் வேண்டுமென்றே இந்த அச்சுறுத்தல்கள்? அதுவும் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூடவா இவ்வளவு தேவபிரசன்னம் மூடநம்பிக்கை?
கேரள உயர்நீதிமன்றத்தில் வந்த ஒரு பொது நல வழக்கையொட்டி, அய்யப்பன் மகரஜோதி மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது என்றாலும் பக்தி மூடநம்பிக்கையில் பரவசம் காணுவோர் குறைய வில்லையே!

அரசியல் சட்டம் 51A பிரிவின்படி
உடனடியாக மத்திய மாநில அரசுகள் அரசியல் சட்டம் 51A பிரிவு விதித்துள்ள அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பாங்கு பெருக்கத்தினையாவது (Scientific temper) செய்ய வேண்டாமா அதன் மீது பிரமாணம் எடுத்த முக்கிய ஆட்சியினர்?

இப்போதாவது புரிகிறதா?

நமது இயக்கம் இத்தகைய பிரச்சாரத்தினை தொடர்ந்து செய்து வருவது எவ்வளவு நியாயம் என்பது இப்போதாவது புரிந்தால் போதும்.

பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வருவதுபற்றி மன்மோகன்சிங் கவலை

முதலமைச்சர்களுக்குக் கடிதம்
புதுடில்லி, செப்.2: இந்தியாவில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வருவது பற்றி கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த பிரச்சினை தொடர்பாக மாநில முதல் அமைச்சர்க ளுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவில் சமீபத் தில் எடுக்கப்பட்ட 2011-ஆம் ஆண்டின் தற்கா லிக மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 6 வயது வரையிலான 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 வரை மட்டுமே பெண் குழந்தைகள் விகி தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விகித மானது ஆந்திர பிரதே சம், சத்தீஸ்கார், பீகார் உள்ளிட்ட சில மாநிலங் களில் மிகவும் குறை வாகக் காணப்படுகிறது.
எனவே, இதுகுறித்து விரைவான மற்றும் கூட்டு முயற்சியுடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல் அமைச்சர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறி இருப்பதாவது:- சில மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதே சங்களில் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம், நாட்டின் மொத்த விகிதாச்சாரத்தைவிட மிகவும் குறைவாக உள் ளது. இந்த பிரச்சினை குறித்து மாநில முதல் அமைச்சர்கள் தீவிர அக்கறையுடன் செய லாற்ற வேண்டும்.
1994-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கருவில் இருக்கும் குழந் தைகளுடைய பாலி னத்தை தெரிந்து கொள் வதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்தை கடு மையாக அமல்படுத்த வேண்டும்.
மத மற்றும் சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மூலமாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற் படுத்துவதன் மூலமாக வும், கொள்கை மற்றும் வேலைத்திட்ட நடவடிக் கைகளை மேற்கொள்வ தன் மூலமாகவும் பெண் களுக்கு எதிரான சமூக பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளைக் களை வதற்கு தேவையான நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இந்த சட்டத்தை பல பகுதிகளில் அமல்படுத் துவது சவாலான ஒன் றாக இருந்து வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடுமையாக மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த தேவை யான கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறை களை பலப்படுத்த வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தி சட் டத்தை மீறுவோர்களுக்கு விரைவாக மற்றும் கடு மையான தண்டனை கிடைக்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடி தத்தில் பிரதமர் மன் மோகன்சிங் தெரிவித் துள்ளார்.

அன்புள்ள கமல் Kamal Four friends

Tamil Flim Anbulla Kamal



 மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, "போர் பிரண்ட்ஸ்" படம், தமிழில் "அன்புள்ள கமல்" என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

"தெனாலி", "பஞ்சதந்திரம்" ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயராம், மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த படம் "போர் பிரண்ட்ஸ்". இந்தபடத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில், முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். கமல், ஜெயராமுடன், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாஜி சுரேந்திரன் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் இப்படம் சூப்பர் டுப்பர் ஹி்ட்டாகியுள்ளது. இந்தபடத்தில் கமல்ஹாசன் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். இப்படத்தைதான் தமிழில் அன்புள்ள கமல் என்று மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். பி.சகாயராஜின் பி.எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் பி.எஸ்.ஆர்.பிரதீப், பி.எஸ்.ஆர்.பிரசாத், பி.எஸ்.ஆர்.மைக்கேல் தயாரித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் இசைகச்சேரி: ஹாரிஸ் புது ப்ளான்!


Harris to Plan world wide music function 3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் இசைப்பயணம் மேற்கொண்டு இசைக் கச்சேரிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இதற்காக 4 மாதம் படங்களுக்கு இசையமைப்பதையும் நிறுத்தியுள்ளார். "மின்‌னலே" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். தற்ப‌ோது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா படங்களுக்கு இசையமைப்பதை சிலகாலம் ஒத்தி வைத்துவிட்டு, உலகம் முழுவதும் புதுமையான முறையில் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் கூறுகையில், நான் சினிமாவிற்கு வந்து 10வருடம் ஆகிவிட்டது. முதன்முதலாக என்னை கவுதம் மேனன் தான் அறிமுகம் செய்தார், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளேன். நிறைய பேர் என்னை, மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும்படி கூறுகின்றனர். அதனை ஏற்று உலகம் முழுவதும் எனது இசைப்பயணத்தை தொடங்க இருக்கிறேன். வழக்கமான இசை நிகழ்ச்சியை போல் இல்லாமல், எனது இசை நிகழ்ச்சி புதுமையாக இருக்கும். அதாவது, 3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி இருக்கும். வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இசை கச்சேரியில் இடம் பெறும்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஸ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றி பாடுவார்கள். டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இது இருக்கும். முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஐதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும். என்னுடைய இந்த இசைப்பயணத்திற்காக, 4 மாதங்கள் படங்களுக்கு இசை அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

6 ஆயிரம் லேப்-டாப் கொள்முதல் 6000 Laptop purchasing


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கும், அரசு கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்' வழங்கும் திட்டத்துக்காக, முதல் கட்டமாக 6 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.ஒரு "லேப்-டாப்'பின் விலை ரூ.14 ஆயிரம் என்ற அளவில் கொள்முதல் செய்வதற்கு மறு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவதற்கு எல்காட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக "லேப்-டாப்' வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கும், அரசு கலை-அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச "லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும் 9.12 லட்சம் "லேப்-டாப்'கள் அளிக்கப்படுகின்றன. அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இதற்கான விழா நடைபெறுகிறது."லேப்-டாப்'கள் கொள்முதல்: "லேப்-டாப்'களை கொள்முதல் செய்யும் பணியை தமிழக அரசு நிறுவனமான "எல்காட்' மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் எய்சர் மற்றும் ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.இந்த நிறுவனங்கள் நல்ல தரமிக்க "லேப்-டாப்'களை கொள்முதல் செய்து கொடுத்தாலும் அதன் விலை அதிகமாக உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நிறுவனங்கள் ஒரு "லேப்-டாப்'பை 16 ஆயிரத்து 383 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்தன. ஆனால், அரசுத் தரப்போ ரூ.16 ஆயிரத்துக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியது. ஒரு "லேப்-டாப்'புக்கு ரூ.383 என்பதை குறைக்க கணினி நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கணினி நிறுவனங்கள் குறிப்பிட்ட அதே விலைக்கு வாங்கினால் அரசுக்கு கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும். இதற்கு நிதித் துறை ஒப்புக் கொள்ளவில்லை.இதையடுத்து, திட்டத் தொடக்க விழாவுக்காக குறைந்த எண்ணிக்கையிலான "லேப்-டாப்'களை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கணினி நிறுவனங்கள் குறிப்பிட்ட விலைக்கே முதல் கட்டமாக 6 ஆயிரம் லேப்-டாப்களை கொள்முதல் செய்துள்ளது தமிழக அரசு.மறு ஒப்பந்தப் புள்ளிகள் கோரல்: இந்த நிலையில், 9.1 லட்சம் "லேப்-டாப்'களை மலிவு விலையில் பெறுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஒரு "லேப்-டாப்'பை ரூ.14 ஆயிரத்துக்கும் குறைவாகப் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.திட்டத் தொடக்க விழாவுக்காக, 6 ஆயிரம் "லேப்-டாப்'கள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விநியோகம் முடிவதற்குள்ளேயே, ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் மலிவு விலையில் "லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு விடும் என அரசுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மறு ஒப்பந்தப்புள்ளிகளை அளிப்பதற்கு கடைசி தேதி, செப்டம்பர் 21-ம் தேதியாகும்.மற்ற இலவச திட்டங்கள்அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி, வேறு சில இலவசத் திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். ஆடு-கறவை மாடு வழங்கும் திட்டத்துக்காக, அவற்றை கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடு, கறவை மாடுகளை வாங்க கால்நடைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.திட்டத்தின் தொடக்க தினத்தில் ஆயிரத்து 500 ஆடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன.கறவை மாடுகளைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்திலும் அவற்றை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதேபோன்று, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்காக அவற்றை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் நிதியாண்டில் இவை 25 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

அ.தி.மு.க.,வினர் என்றால் நடவடிக்கையே இல்லை:கருணாநிதி புகார்

சென்னை:"ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு; மறு கண்ணுக்கு வெண்ணை என, நில அபகரிப்பு வழக்குகள் தி.மு.க.,வினர் மீது பாய்கிறது. அ.தி.மு.க.,வினர் என்றால் நடவடிக்கையே இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, நாகர்கோவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கள்., முன்னாள் எம்.பி., என்.ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார்கள் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை.
ஆனால், பொய்யான நில அபகரிப்பு புகாரிலும், புகார்கள் கூட இல்லாமல், கைது செய்துவிட்டு புகார்களை தயாரிப்பதும், வாரன்ட் இல்லாமல் கைது செய்வதும், கைதாகி ஜாமின் பெற்றவுடன், வேறொரு வழக்கில் கைது செய்வதும், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாமலேயே கைது செய்வதும் தி.மு.க.,வினர் மீது மட்டுமே நடக்கிறது.அ.தி.மு.க., ஆட்சியின் 100 நாள் சாதனையாக, தமிழகத்தில் இதுவரை 323 பேர், குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். மிகக் கடுமையான குண்டர் சட்டம், சட்டம் - ஒழுங்கிற்கு பாதகம் விளைவிப்பவர் என கருதுபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் பயன்படுத்த வேண்டும். இச் சட்டத்தை பயன்படுத்தும் முன், ஒன்றுக்கு பல முறை ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியிலோ, ஒருவகை பயமுறுத்தலோடு நாட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், குண்டர் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். குண்டர் சட்டத்தைவிட பெரும் துன்பங்களை தி.மு.க.,வினர் சந்தித்துள்ளனர். எனவே, இச்சட்டத்தைக் கொண்டு பயமுறுத்த முடியாது.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனைக்கு பதிலாக சாகும் வரை சிறை


கும்பகோணம்: ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்
பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு பதில் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என மணிசங்கர் அய¢யர் எம்பி தெரிவித்
தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளாட்சி தேர்தல் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மணிசங்கர் அய்யர் எம்பி பேசியதா
வது:
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம் அல்லது  தனித்து போட்டியிடலாம். 2009 பாராளுமன்ற தேர்தலில் எனக்கு துரோகம் செய்தவர்களும், கூட்டணிக்கு துரோகம் செய்தவர்களும் உண்டு.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் துரோகங்கள் தொடர வாய்ப்புள்ளது. அதை தாங்கக்கூடிய, முறியடிக்ககூடிய சக்தி, ஆற்றல் உள்ளவர்கள் தைரியமாக தேர்தலில் போட்டியிடுங்கள். உங்களுக்கு துணைநின்று நான் வாக்கு சேகரிக்கிறேன்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனைக்கு பதில், சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும். இதேபோல் அஜ்மல் கசாப்பையும் தூக்கில் போடாமல், சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தால் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்து மீண்டும் ஒரு முதல்வரையோ, பிரதமரையோ கொலை செய்யவும் வாய்ப்புள்ளது.
எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆ சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு மணிசங்கர் அய்யர் பேசினார்.

பிரதமர், 71 மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியீடு

புதுடெல்லி : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் 71 பேரின் சொத்து பட்டியல்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட் டன. சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சர்ச்சையை கிளப்பியது. இதன்பின், நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க பிரதமர் முடிவு செய்தார். இதற்காக, மத்திய அமைச்சர்கள் இந்த ஆண்டு தங்கள்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் மற்றும் 71 அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்தனர். பிரதமர் உள்பட 72 பேரின் சொத்து பட்டியல்கள், பிர தமர் அலுவலக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதில் பணக்கார அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கமல்நாத் மொத்தம் ரூ.263 கோடி சொத்துகள்  உள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், ஸீ2.7 கோடிக்கு வங்கி டெபாசிட்கள், சண்டிகரில் ஸீ90 லட்சத்தில் வீடு, டெல்லியில் ஸீ88 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 1996ம்  ஆண்டு மாடல் மாருதி 800 கார் வைத்துள்ளதாகவும், மனைவி கவுரின் சேமிப்பு கணக்கில் ஸீ11 லட்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஸீ11.15 கோடிக்கும், மனைவி நளினி சிதம்பரத்துக்கு ஸீ12.34 கோடிக்கும் சொத்துகள் மற்றும் 4 கார்கள் உள்ளதாக கூறியுள்ள £ர். விவசாய அமைச்சர் பவார் ஸீ12 கோடி, தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் ஸீ20 கோடி, பிரணாப் முகர்ஜி ஸீ3 கோடி என்று சொத்து விவரம் அளித்துள்ளனர்.
குறைந்த பட்சமாக, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தனக்கு அசையா சொத்துகளே இல்லை என்றும், தன்னிடம் ஸீ1.8 லட்சம் சேமிப்பும், மனைவிக்கு ஸீ30 லட்சம்  சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார். தகவல் தராத 5 பேர்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கேபினட் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணா டிராத், இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், ஜிதேந்திர சிங் ஆகிய 5 பேர் மட்டும் இன்னும் சொத்து விவரங்களை பிரதமரிடம் தாக்கல் செய்யவில்லை. முக்கிய அமைச்சர்கள் சொத்து பட்டியல்:

பிரதமர் சொத்து

பிரதமர் மன்மோகன் சிங்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 4,498 சதுரடி மனையில் 2,907 சதுரடி கொண்ட 2 அடுக்கு மாடி வீடு & மதிப்பு ரூ90 லட்சம். டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ரூ88.67 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு. விவசாய நிலம் எதுவுமில்லை. பல்வேறு வங்கிகளில் ரூ3.22 கோடி டெபாசிட், சேமிப்பு. 1996ல் வாங்கிய மாருதி &800 கார் & மதிப்பு ரூ24,745. மனைவி குர்சரண் கவுர் பெயரில் சண்டிகர் வங்கியில் ரூ11 லட்சம் டெபாசிட். தங்க நகைகள் 150.8 கிராம் & மதிப்பு ரூ2.75 லட்சம். மொத்த சொத்து மதிப்பு ரூ5.11 கோடி.

வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா:
ரூ31 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் விவசாய நிலங்கள், 2 கார், ரூ50 ஆயிரம் மதிப்பில் நகைகள். ரூ3 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ27 லட்சம். தொழிலில் ரூ88 லட்சம் முதலீடு. மனைவிக்கு ரூ2.21 கோடி சொத்து, ரூ14 லட்சம் மதிப்பில் பங்குகள். வங்கி சேமிப்பு ரூ8.42 லட்சம்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம்:
ரொக்க கையிருப்பு: ரூ4,574,324
வங்கி டெபாசிட்: ரூ12,907,699
பங்குகளில் முதலீடுகள்: ரூ9,129,955
குடகுமலையில் காபி எஸ்டேட் மதிப்பு ரூ2,894,579
ஸ்கோடா, போர்டு பியஸ்டா, வோக்ஸ்வேகன் கார்கள்.
மொத்த சொத்துகள் : ரூ111,585,090
மனைவியின் சொத்துகள்: ரூ123,477,967

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி:
மதுரை மாவட்டத்தில் சுமார் ரூ90 லட்சத்தில் 3 விவசாய நிலம். சுமார் ரூ2 கோடி மதிப்பில் 5 பிளாட்கள். ரூ1.13 கோடி மதிப்பில் 4 வீடுகள். தொழிலில் ரூ1.28 கோடி முதலீடு, வங்கியில் ரூ2 லட்சத்து 26 ஆயிரம் சேமிப்பு. இரண்டு கார். ரூ1.42 லட்சம் மதிப்பில் 85 கிராம் தங்க நகை. மனைவி பெயரில் 3 இடங்களில் சுமார் ரூ37 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்கள், ரூ5.83 கோடியில் 4 பிளாட்கள், ரூ25 லட்சம் மதிப்பில் வீடு. ரூ1.33 கோடியில் வர்த்தக கட்டிடம். வங்கியில் ரூ1.25 லட்சம் சேமிப்பு, 2 கார், ரூ1.95 கோடியில் தங்க மற்றும் வைர நகைகள்.

ஜி.கே.வாசன் (கப்பல் போக்குவரத்து அமைச்சர்):
சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் ரூ18.75 லட்சம் மதிப்புள்ள 4ல் ஒரு பங்கு சொத்து. கும்பகோணம் பெசன்ட் சாலையில் 4ல் ஒரு பங்கு வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடம் & மதிப்பு ரூ1.40 கோடி. கபிஸ்தலம் கிராமத்தில் ரூ7.33 லட்சம் மதிப்புள்ள 7.33 ஏக்கர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ70,000 மதிப்புள்ள 0.14 ஹெக்டேர் நிலம். சோழபுரம் கிராமத்தில் ரூ4.41 லட்சம் மதிப்புள்ள 0.13.5 ஹெக்டேர் வீட்டுமனை. ரூ7.06 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் நகை. வங்கியில் சேமிப்பு ரூ18.39 லட்சம். மனைவி சுனிதா வாசனுக்கு 750 கிராம் நகைகள் & மதிப்பு ரூ13.23 லட்சம். 10 காரட் வைர நகை & மதிப்பு ரூ4 லட்சம். வெள்ளி மற்றும் இதர பொருட்கள் ரூ15.36 லட்சம். மகன் பிரணவுக்கு 100 கிராம் நகைகள் & மதிப்பு ரூ1.76 லட்சம்.

நிதித்துறை அமைச்சர்
பிரணாப் முகர்ஜி:
டெல்லி, கொல்கத்தாவில் தலா ஒரு பிளாட் வீடு உள்ளது. இதன் மதிப்பு, ரூ50 லட்சம். மேலும் மேற்கு வங்காளத்தில் பீர்பம் மாவட்டத்தில் பூர்வீக சொத்து உள்ளது. 2000ம் ஆண்டில் வாங்கிய போர்டு கார் ஒன்றும் வைத்துள்ளார். இது தவிர வங்கிகளில் ரூ50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி சுர்வாவுக்கு ரூ1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள 5 வீடுகளும், விவசாய நிலமும் உள்ளது. ரூ22 ஆயிரம் மதிப்புள்ள பழைய அம்பாசிடர் காரும் வைத்துள்ளார். ரூ31 லட்சம் மதிப்புள்ள 1,395 கிராம் தங்க நகைகள் மற்றும் வங்கியில் ரூ21 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

அதிவேகமாக பரவும் இன்டர்நெட்டுக்கு அலறும் சீன கம்யூனிஸ்ட் அரசு!.

பிஜிங்: இளைஞர்களிடம் பரவி வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடுகள் சிதைந்துவிடும் என்று சீன அரசக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியில் இன்டர்நெட் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சில நிமிடங்களில் உலகளவில் தகவல்கள் பரவ இன்டர்நெட் வழிவகுப்பது சீன அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிராக இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இன்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். இதன் மூலம் பொதுமக்களிடம் ஆங்காங்கே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

இன்டர்நெட் தகவலின் அடிப்படையில் சீனாவில் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த சீன அரசு ஆயிரக்கணக்கான இன்டர்நெட் வெப்சைட்டுகளை அழித்து விட்டது. பல வெப்சைட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும் இன்டர்நெட்டை சீனாவில் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், அதிகரித்து வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால், உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்துவிடும்.

பல நாட்டு அரசுகள் நெருக்கடியை சந்தித்து வருவதற்கு இன்டர்நெட்தான் காரணம்ÕÕ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டிவிட்டர், பேஸ் புக் போன்றவற்றில் அரசு நாடுகளில் இருந்து பலரும் பலவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருவதால், அவற்றை எப்படி தடுப்பது என்று தெரியாமல் சீன அரசு கைபிசைந்து வருகிறது. இன்டர்நெட்டில் உடனடியாக கருத்து பரவுகிறது. அது ஒரு மாபெரும் இயக்கத்துக்கு வழிவகுக்குகிறது என்று கம்யூனிச எழுத்தாளர்களும் அரசை எச்சரித்துள்ளனர்

:கட்சிகள் குழப்பம்:ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற குரல் எழுப்புகின்றனர்:

தமிழகத்தில் மரண தண்டனை: அரசியல் சலசலப்பு:கட்சிகள் குழப்பம்:ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற குரல் எழுப்புகின்றனர்: ராஜிவை கொன்றவர்வர்களுக்கு மன்னிப்பு அளித்தால் தேச விரோத சக்திகளுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் ஊறு செய்பவர்களுக்கும் ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும் என எதிர்ப்புக் குரலும் மற்றொருபுறம் ஒலிக்கிறது!

சென்னை:இலங்கை பிரச்னையைக் கொண்டு மீண்டுமொரு அரசியல் களம், தமிழகத்தில் சலசலப்பாகி வருகிறது. இலங்கை தமிழர் நலனைத் தாண்டி, இந்தியாவின் இளைய தலைவர் என மக்களால் போற்றப்பட்ட ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற, இன்று குரல் எழுப்புகின்றனர்.இன்று இவர்களுக்கு மன்னிப்பு அளித்தால், தேச விரோத சக்திகளுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் ஊறு செய்பவர்களுக்கும், ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும் என, எதிர்ப்புக் குரலும் மற்றொருபுறம் ஒலிக்கிறது.

அதே சமயம், அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு பற்றி இளைய தலைமுறையினர் காட்டிய ஆர்வத்தில், பத்தில் ஒரு பங்கு கூட இதற்குக் காணோம்.மூன்று பேருக்குத் தண்டனைக் குறைப்பு என்பது, தமிழக கட்சிகளின் பிரதான பிரச்னையாகி உள்ளது. ஆளும் கட்சி முதல், சிறு கட்சிகள் வரை, தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகள், மரண தண்டனைக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்கின்றன. நளினி தூக்கை நிறுத்த உதவிய தி.மு.க., மற்ற மூன்று பேர் விஷயத்தில் அப்போதே அக்கறை காட்டாதது ஏன் என்று, மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார். காங்கிரசை பொறுத்தவரை, தங்களது தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்பதில், உறுதியாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாக பேச அச்சப்படுகிறது.காங்கிரசின் முக்கிய கூட்டாளியான தி.மு.க.,வோ, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிறது. "21 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர்.

இதையே, அவர்களின் அதிகபட்ச தண்டனையாகக் கருதி, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்துகிறார். காங்கிரசின் தயவு தேவையில்லை என்ற நிலையிலிருந்தே, இப்பிரச்னையை தி.மு.க., அணுகுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எதுவெல்லாம் நடக்கக் கூடாது என தி.மு.க., நினைத்ததோ, அதுவெல்லாம் நடந்து விட்டது. இனி, காங்கிரசின் தயவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று தான், தி.மு.க., கருதுகிறது. அதுவும், நில மோசடி வழக்குகளில் அடுத்தடுத்து தி.மு.க.,வினர் கைது என்ற நிலையில், "தமிழர் நலன்' என்ற பேச்சில் களமிறங்கி சலசலப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றினால், அதையே தமிழர்களுக்குச் செய்த தியாகமாக வெளிப்படுத்தவும், தி.மு.க., தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் இவ்விஷயத்தில் மவுனம் சாதிக்கிறது.

மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என எழுந்துள்ள நெருக்கடியால் தான், சட்டசபை தீர்மானம் வரை அ.தி.மு.க., சென்றுள்ளது. ஆனால், அதனால் பயன் பெரிதும் இருக்காது என்பதை, மத்திய சட்ட அமைச்சர் குர்ஷித் வெளிப்படையாகக் கூறிவிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கிறது. அதன் தமிழ் மாநில குழுவோ, "தூக்கு தண்டனைக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தண்டனை குறைப்பு வேண்டி கோர்ட்டை அணுகியுள்ளனர். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்' என, குழப்பமான கருத்தைக் கூறுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல், தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றன. பொதுவாக, மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் மன்றத்தில் அன்னியப்பட்டு விடுவோமோ என்ற எண்ணம், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

ராஜிவ் கொலைக்குப் பின், புலிகள் ஆதரவு, ஈழப் போராட்ட ஆதரவு என்ற நிலையிலிருந்து, தமிழக கட்சிகள் விலகியே இருந்தன. இன்று, சிலர் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் நலன் என்பதை வேறுவிதமாகவும், பயங்கரவாதச் செயலால் நடந்த ராஜிவ் படுகொலை என்பதை வித்தியாசமாகவும் அணுகும் போக்கு, மக்களிடம் தெளிவாக இருக்கிறது.

மூன்று பேரையும், 11 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிட்டிருந்தால், அப்போது, இந்தளவிற்கு எதிர்ப்பு வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், 11 ஆண்டுகளுக்கு முன் தமிழக கவர்னரிடம், மூவரும் கருணை மனு அளித்தனர். இதை, தமிழக அரசு நிராகரித்தது. "அப்போது நிலவிய சூழலில், வேறு முடிவை எடுக்க முடியவில்லை' என, அப்போது முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியது கருத்தில் கொள்ளத்தக்கது.

எஸ்.திருநாவுக்கரசு.

சமாதானம் காவல்துறைக்கு மாத்திரம் பொறுப்பல்ல,லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய!

நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவது காவல்துறையினரது மாத்திரமன்றி ராணுவத்தினரதும் கடமை என ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டம் நீக்கப்பட்டு;ள்ள நிலையில், நெருக்கடியான தருணங்களில் காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கைகளில் ராணுவத்தினர் தலையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மெக்ஹெய்சர் மைதானத்தில் இடம்பெற்ற ராணுவ பயிற்சிகளின் போது செய்தியாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த 24 ம் திகதி ஆரம்பமான குறித்த பயிற்சி நடவடிக்கைகள், எந்தவொரு அவசர தருணத்திலும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஏற்றவகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாளை மறுதினம் வரை இடம்பெறும் குறித்த பயிற்சி நடவடிக்கைகளில் முப்படையைச் சார்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் இணைந்து கொண்டுள்ளனர்.

சனல் 4விற்கு பதிலளிக்கும் காணொளியை ஐநா வளாகத்தில் ஔி

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்குப் போட்டியாக, இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“எத்தனை குண்டிலை போடச் சொன்னவர்” என அவன் திருப்பி வினவினான்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (12)
12. கால்களில் விலங்கிடப்பட்டேன்!
chainசங்கிலி போடுவது என்றதும், என்ன நடக்கப் போகிறது என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது. எமது வீடுகளில் நாய்களை சங்கிலிகளால் கட்டி வைப்பது நினைவுக்கு வந்தது. அந்தச் சங்கிலயை ‘நாய்ச் சங்கிலி’ என அழைப்பர். நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த ‘மனோகரா’ படத்தில், ஒரு தூணில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிகரமாகப் பேசிய அடுக்கு வசனங்களும் ஞாபகத்துக்கு வந்தன. மனித சமுதாயம் அடிமை நிலையில் இருந்த காலத்தில், போர்களில் வென்ற ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை நீண்ட சங்கிலிகளில் பிணைத்து வைத்திருப்பர் என்பதை புத்தகங்களில் படித்திருக்கிறேன். பிரித்தானிய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் தம் ‘முக்கோண வர்த்தகம்’ எனப்படும் (ஆபிரிக்காவில் கறுப்பு அடிமைகளை வாங்கிச் சென்று, அவர்களை அமெரிக்காவிலுள்ள பருத்தி பயிரிடும் முதலாளிகளுக்கு விற்றுவிட்டு, அதற்குப் பண்டமாற்றாக பருத்தியை வாங்கி இங்கிலாந்து கொண்டு சென்று, அவற்றை ஆடைகளாக்கிப் பின்னர் அந்த ஆடைகளை இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்று இலாபம் சம்பாதிப்பது) வர்த்தக நடவடிக்கைகளின் போது, தமது ஆபிரிக்க அடிமைகளை கப்பல்களில் ஏற்றுவதற்கு முன்னர் அவர்களை வாங்கும் நாடுகளின் கடற்கரைத் துறைமுகங்களில் நீணட சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்ததையும் நான் படங்களில் பார்த்திருக்கிறேன். (மேலும்) 04.09.11