Raja Rajpriyan : யார் பிரதமர் ? அம்பானியா மோடியா?
இந்தியாவின் உண்மையான பிரதமர் அம்பானியே என அமெரிக்காவின் பெரும் பணக்காரரும் ஸ்டார்லிங்க் உரிமையாளருமான எலன்மாஸ்க் கிண்டலாக, கோபமாக அறிவித்துயிருக்கிறார். இதனை சர்வதேச நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கும். காரணம், சொல்வது உலகின்பெரும் பணக்காரர். அவரின் இந்த கருத்துக்கு உலகமீடியாக்கள் முக்கியத்துவம் தரும். அதனால்தான் இந்திய அதிகாரவர்கம் பதறுகிறது.
இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து இந்திய அரசிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளார் எலன்மாஸ்க். பலமாதங்களாகியும் அனுமதிதராமல் இழுத்தடிக்கிறது ஒன்றியத்தை ஆளும் பா ச க அரசு. இதன்பின்னல் இருப்பது அம்பானி தான் என்பதால்தான் அவர் பொறுமை இழந்து தனது எக்ஸ் தளத்தில் பதவிவிட்டு உலகம் முழுவதும் இந்தியா பிரதமர் மோடியின் மானத்தை வாங்கியுள்ளார்.
இதற்கு நம்மவூர் நடிகரும் கட்சி தலைவருமான கமல்ஹாசன் உட்பட சில பிரபலங்கள் பொங்கியிருப்பதை தான்
என் கேள்வி என்னவென்றால் எலன்மாஸ்க் சொன்னதில் என்ன தவறு. இந்தியாவின் நிர்வாகம் அப்படித்தான் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோதி கார்ப்பரேட்களின் பொம்மை என்பது அரசியல் அறிந்தோர்க்கு தெரியும்.
இன்று இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையை ஆட்டிவைப்பது இரண்டே கம்பெனிகள் தான் ஒன்று மிட்டலின் ஏர்டெல் மற்றொன்று அம்பானியின் ஜியோ. அதன்பின் டாடாவின் வோடாபோன். பி.எஸ்.என்.எல் என ஒரு அரசு நிறுவனம் இருக்கிறது. இவைகளை கடந்து இன்னும் வேறு எந்த கம்பெனிகள் தொலைத்தொடர்பு சேவையில் உள்ளன என இந்த கட்டுரையில் குறிப்பிட யோசிக்கிறேன் உடனடியாக நினைவுக்குவரவில்லை.
2007 களில் இந்தியாவில் அத்தனை தொலைதொடர்பு நிறுவனங்கள் சிறியதும், பெரியதுமாக இருந்தன. ஆ.ராசா தொலை அந்ததுறையின் அமைச்சராக இருந்தபோது அத்தனை கம்பெனிகளுக்கு லைசென்ஸ்களை வாரி வழங்கி போட்டிகளை அதிகப்படுத்தி விலையை குறைத்தபோது இந்த பக்காசூர கார்ப்பரேட் கம்பெனிகள் இணைந்து ஆ.ராசா மீது 2ஜி ஊழல் என பிரமாண்ட நம்பரை பரப்பின. ஊழல், ஊழல் என கத்தின. இதுக்குறித்து ஆ.ராசா சொன்னபோது எல்லாருமே விலைப்போனார்கள். இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான லாபிக்கு அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் தலைகள் துணை போனதன் விளைவுதான் கடந்த 15 வருடங்களாக கூப்பில் உட்கார்ந்துள்ளன காங்கிரஸ்.
அதன்பின் 10 தொலைதொடர்பு கம்பெனிகள் 5 கம்பெனிகளாக சுருங்கி இன்று இவைகள் தான் தொலைதொடர்புத்துறையை ஆட்டிவைக்கின்றன.
இந்தியாவுக்காக பேசுகிறேன் என்கிற பெயரில் அம்பானிக்கு ஆதரவாக கமல்ஹாசன் சொல்கிறார், மற்ற நாடுகளைவிட மிககுறைவான விலையில் இந்திய மக்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கிறது என்கிறார்.
உலகநாயகனுக்கு பொருளாதாரம் தெரியாது எனச்சொல்லமுடியாது. மேற்கத்திய நாடுகளில் குறைவான மக்கள் தொகை உள்ளார்கள். விலை அதிகமாக தந்து ஸ்பெக்ட்ராமை வாங்குவதால் அதிகவிலைக்கு தான் அங்கு தரமுடியும். இந்தியா என்பது 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு ஸ்பெக்ட்ராம்மை விலை அதிகமாக தந்து வாங்கினாலும் மக்கள் அதிகம் என்பதால் கொழுத்த லாபம் தரும், தருகிறது. அப்படியிருந்தும் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ரீசார்ஜ் விலையை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. முன்பு மாதம் 100 ரூபாய் ரீசார்ஜ் இருந்தது இப்போது 300 ரூபாய்க்கு போய் நிற்கிறது. இந்த ரீசார்ச் திட்டங்கள் எல்லாம் 28 நாட்களுக்குதான். இந்த கம்பெனிகள் திட்டமிட்டு கூட்டுசதி செய்து மக்களை சுரண்டுகின்றன. தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்யின் உத்தரவை மயிராககூட இந்த நிறுவனங்கள் மதிப்பதில்லை.
இந்த மோனோபோலியை அன்று முதல் இன்றுவரை இந்த மோனோபோலியை விமர்சிக்க, எதிர்க்க எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை.
அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை திட்டமிட்டு நட்டமாக்கி அதன்சொத்துக்களை விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியில் இருக்கும் கேடிகள். உலகமே 6ஜி, 7ஜியை நோக்கி போய்விட்டது. இந்தியா 5ஜியில் முக்கிக்கொண்டு இருக்கிறது. அதிலும் பி.எஸ்.என்.என் இன்னமும் 4ஜியிலேயே இருக்கிறது அதற்கு காரணமானவர்களை கமல் உட்பட யாரும் கண்டிக்கவில்லை. அப்படியிருக்க எலன்மாஸ்க் சொன்ன உண்மையை ஜீரணிக்கமுடியாமல் சங்கிகள் குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் நாங்களும் கார்ப்பரேட் அடிமைகள் தான் என கமல்ஹாசன் போன்றவர்கள் கத்துவது என்பது நீங்கள் எல்லாம் மக்களுக்கானவர்களா? கார்ப்பரேட்டுகளுக்கானவர்களா என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக