![]() |
Kulitalai mano: எலான் மஸ்க் கிண்டல் பதிவை அதன் பொருள் உணராமல் நம்ம கமல் போன்ற அறிவுஜீவிகூட தேவையற்று பொங்கி
தம் தேசபக்தியை தமுக்கடித்திருக்கும் அவலம் நடந்துள்ளது
இந்திய ஒன்றியத்தில் தேசபக்தி என்பது உணர்வல்ல அது ஒரு அரசியல்
இங்கே உண்மையில் இந்தியன் என்று யாருமே இல்லை
நம் காந்தி மொரார்ஜி மோடி அமித்சா கூட இந்தியன் அல்ல
அவர்கள் குஜராத்தியர்கள்
நாம் தமிழர்கள்
பினராய் மோகனலால் மம்முட்டி மலையாளிகள் சந்திரபாபு ஜெகன் ஆந்திரர்கள் சித்தராமையா எடியூரப்பா ராஜ்குமார் கன்னடர்கள்
அதேபோல் அந்தந்த மாநிலத்தவர்கள்
மாறாக குடுகுப்பைக்காரன் ஒட்டு சட்டையான இந்திய ஒன்றியம் துண்டுத்துணிகளால் ஆன குடுகுடுப்பைக்காரன் சட்டை
அதன் வண்ணம் ஒன்றில்லை
இங்கே நம் தேசம் எது என்று நாம் உணர்ந்துவிடக்கூடாது என்ற அரசியலே உள்ளது
அதற்காகத்தான் தேசப்பக்தி வேசம் போடப்படுகிறது
கமல் இந்த பதிவு தவறு என சொல்ல முடியுமா?சொல்ல மாட்டார் அவருக்கு அறிவு உண்டு
ஔவை சண்முகி போல இந்தியனும் ஒரு வேசமே அவருக்கு
தேசபக்தி இந்திய ஒன்றியத்தில் அரசியல் மட்டுமே
புல்லரிப்பதும் செயற்கையே
இயற்கை அல்ல

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக