ஞாயிறு, 11 அக்டோபர், 2026

எலான் மஸ்கின் ஸ்டார் லிங்கை கண்டு நடுங்கும் அம்பானி கூடாரம்

May be an image of text
Kulitalai Mano >  : மொபைல் ஆபரேட்டர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த நேரம் 
எளியவர்கள் மொபைலை ஏலியனை பார்ப்பது போல பார்த்து வியந்தனர் ஏங்கினர் 
திமுக ஆ.ராசா வை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியது 
சென்ற இடத்தில் அலங்கார பொம்மையாக இராமல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போது இயல்பாக ஒரு வார்த்தை வந்து விழுந்தது 
அலைக்கற்றை மொபைல் வியாபாரிகளுக்கு ஒதுக்கியது போக மீதியை யார் பயன்படுத்துகிறார்கள் ?
ராணுவம் குறிப்பிட்ட சதவீத அலைக்கற்றையை பயன்படுத்துகிறது மீத அலைக்கற்றை வெறுமனே பயன்படுத்தப்படாமலிருக்கிறது என்பதை அறிய வருகிறார் 
அவற்றையும் ஏலம் விட முடிவெடுத்து பலத்த எதிர்ப்புகளை புறந்தள்ளி சாமான்யனும் மொபைல் உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்தி புரட்சியை ஏற்படுத்தினார் புரட்சி செய்தவன் திமுக அதுவும் தலித் எனும்போது தாங்க முடியுமா சங்கிகளுக்கு ?
2ஜி ஊழல் என ஊத ஆரம்பித்தனர் 
அதை தனிமனிதனாக கலைஞர் நிழலில் நின்று ஆ.ராசா வென்று மீண்டார் என்பது வரலாறு 
அதே போல  பெரும் புரட்சி செய்ய 
உலக அளவில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு ஆப்பு வைக்க விஞ்ஞான உதவியுடன் எலான் மஸ்க்  ஸ்டார்லின்க் Launch பண்ண ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கிறார் 
ஒன்றிய அரசின் எசமானன் அம்பானி மிட்டல் கும்பல் ராசாவை எதிர்த்தது போலவே அரசு அனுமதி கிடைக்க விடாமல் செய்றானுக 
இந்திய மக்களின் ரகசியம் போய்விடுமாம் 
இந்தியர்கள் தீவிரவாதிகளா அந்த ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என பயப்பட ?
எலான் மஸ்க் மிகவும  குறைந்த விலயில் சேவை தந்தால் அம்பானி மிட்டல் கொள்ளை அடிப்பது பாதிக்கும் 
எலான் மஸ்க்கை தடுக்குறானுக ஒன்றிய அரசும் அவனுக கொள்ளைக்கு காவல் இருக்கிறது 
எலான் மஸ்க் ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமலே காற்றாக இந்திய தொலைத் தொடர்பை கைப்பற்ற வேண்டும்
விஞ்ஞானம் வாழ்க எலான் மஸ்க் முயற்சி வெல்க.

 

கருத்துகள் இல்லை: