வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நடிகர் விஜய் மனைவி மணமுறிவு வழக்கு! செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜாராக உத்தரவு

May be an image of smiling and text that says "NEWS அவமானம் "என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாராக சேர்ப்பேன் 27FEB2026 FEB 2026 Of SUNNEWSTAMIL © SUNNEWS sunnewslive.in"

 Rebel Ravi :  விவாகரத்து வழக்கு :  நடிகர் விஜய் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடன் விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2021-இல் நடிகை ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் விஜய் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, விவாகரத்து முடிவை எடுத்ததாக சங்கீதா கூறியுள்ளார்.
நடிகையுடனான உறவை விஜய் தொடர்ந்ததால்தான், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் சங்கீதா தெரிவித்தார்.


இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா, 1999-இல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில்தான், சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர சங்கீதா மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த வழக்கில் ஏப்ரல் 20ஆம் தேதியில் விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: