![]() |
புதுதில்லி, பிப். 21 –
உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.
அதானி குழுமம் என்றால் என்ன?
கௌதம் அதானி 1962-இல் குஜராத்தில் பிறந்தவர். ஒரு சிறிய வர்த்தகராக தொடங்கி, இன்று அவரது வணிகப் பேரரசு துறைமுகங் கள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், சிமெண்ட் ஆலைகள், ஊடகங்கள் என பல துறைகளில் பரவியுள்ளது.2022-ல் அவரது சொத்து மதிப்பு ₹10 லட்சம் கோடியை தாண்டி, சிலகாலம் உலகின் இரண்டா வது பணக்காரரான ஜெஃப் பெசோஸைக் கூட முந்தினார். மோடி அரசாங்கத்துடன் மிக மிக நெருக்கமான உறவு கொண்ட தொழில் அதிபர். அரசின் முடிவுகள் அனைத்தும் இவருக்கானதே.
ஊழல் எப்படி தொடங்கியது?
2023 ஜனவரி 24-இல் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research) நிறுவனம் 106 பக்க அறிக்கையை வெளியிட்டது. இரண்டு வருட ஆழமான ஆராய்ச்சியின் விளைவான இந்த அறிக்கையின் தலைப்பே அதிர்ச்சியானது: “உலகின் மூன்றாவது பணக்காரர் நவீன வணிக வரலாற்றின் மிகப்பெரிய மோசடியை எப்படி நடத்துகிறார்?”
இந்த அறிக்கையின் முக்கிய குற்றச்சாட்டு கள்: கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்படுத்திய 38 மொரீஷியஸ் தீவு நிறுவனங்கள் - அதாவது லெட்டர் பேடு கம்பெனி கள், அடையாளம் காணப்பட்டன. இந்த நிறு வனங்களில் உண்மையான பணியாளர்கள் இல்லை, தனி அலுவலகங்கள் இல்லை, அர்த்தமுள்ள வணிகம் இல்லை. ஆனால் இவை அதானி நிறுவனங்களின் பங்குகளில் 30% முதல் 47% வரை வைத்திருந்தன.
நோக்கம் என்ன?
பங்கு விலையை செயற் கையாக உயர்த்துவது.
சாதாரண முதலீட்டா ளர்கள் “பல வெளி நபர்கள் பங்குகளை வாங்கு கிறார்கள், இது நல்ல நிறுவனம்” என நினைக்க வேண்டும். உண்மையில் அதானி குடும்பமே தங்கள் சொந்த பங்குகளை வெவ்வேறு பெயர்களில் வாங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான உடன் அதானி குழும பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. மொத்தம் ₹12,50,000 கோடி மதிப்பு ஒரே வாரத்தில் காணாமல் போனது - இது இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரே நபர் இழப்பு. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ₹10 லட்சம் கோடியிலிருந்து ₹4 லட்சம் கோடியாக சரிந்தது. உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து 25-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இப்போது என்ன நடந்தது?
2026 பிப்ரவரி 17-இல் மற்றொரு பெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசிசி ஆர்பி (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகை நிறுவனமும், பிரிட்டனின் Financial Times செய்தித்தாளும் இணைந்து ஒரு விசேஷ அறிக்கை வெளியிட்டன.இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான இண்டேசா சான்பாலோ (Intesa Sanpaolo) தனது உள்விசாரணையில் கண்டுபிடித்த ரகசிய ஆவணங்கள் இவை.
யார் இந்த இரு மர்ம மனிதர்கள்?
முதல் நபர் : சாங் சங்-லிங் (Chang Chung-Ling) - 70 வயதுக்கு மேற்பட்ட தைவான் நாட்டு வணிகர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அதானி குடும்பத்துடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். 2005-இல் சிங்கப்பூரில் வினோத் அதானியுடன் ஒரே வீட்டு முகவரியைப் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது அரசு பதிவுகளில் இருக்கிறது. இவர் பல அதானி-தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார்.
சாங்கின் வணிகம் சந்தேகத்திற்குரியது: இவர் சுமார் ₹16,800 கோடி மதிப்புக்கு நிலக்கரி யை அதானிக்கு விற்றதாக Financial Times தெரிவிக்கிறது -
சந்தை விலையை விட மிக அதிக விலையில். இவரது நிறுவனமான லிங்கோ இன்வெஸ்ட்மென்ட் (Lingo Investment Ltd) மூலம் ₹8,500 கோடி மதிப்புள்ள அதானி பங்குகளை வைத்திருந்தது.
இரண்டாவது நபர்: நாசர் அலி ஷபான் அஹ்லி (Nasser Ali Shaban Ahli) - ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்) வணிகர். Quartz செய்தி நிறுவனம் இவரை “அதானியின் துபாய் மனி தர்” என்று குறிப்பிடுகிறது. 2009-இல் இவர் ஒரு மின்சார நிறுவனத்தை தொடங்கி, அடுத்த வருடமே அதன் உரிமையை வினோத் அதானிக்கு மாற்றினார் - இது பினாமி (proxy) உறவின் தெளிவான அடையாளம். அஹ்லி தனது கல்ஃப் ஏசியா டிரேட் (Gulf Asia Trade & Investment Ltd) நிறுவனம் மூலம் ₹16,800 கோடி மதிப்புள்ள அதானி பங்குகளை வைத்திருந்தார்.இரு நபர்களும் இந்திய வரு மான வரித் துறை மற்றும் சுங்க விசாரணை களில் முன்பே அதானியுடன் தொடர்புடைய வராக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பணம் எப்படிப் பயணித்தது?
இந்த உலகளாவிய அதானி மோசடியின் சிக்கலான கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும்:
படி 1: பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands) - வரி இல்லாத இடம் - அங்கு பெயரளவு நிறுவனங்கள் - அதாவது லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கப்பட்டன.
படி 2: இந்த நிறுவனங்களின் பணம் துபாய் வங்கியான ரேய்ல் எம்இஏ (Reyl MEA) என்ற சுவிஸ் தனியார் வங்கிக்கு அனுப்பப்பட்டது.
படி 3: அந்த பணம் பெர்முடா தீவில் (Bermuda) பதிவு செய்யப்பட்ட ஐந்து ஹெட்ஜ் ஃபண்ட்களுக்கு - (அதாவது, நிறுவனங்களுக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டால் உதவுவதற்காக தனி யார் முதலாளிகள் நடத்தும் நிதியம்) சென்றது. இவற்றை லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எலாரா கேபிடல் (Elara Capital) நிர்வகித்தது.
படி 4:இந்த நிதிகள் மொரீஷியஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட அந்நிய நிறுவன முதலீட்டாளர் (FPI - Foreign Portfolio Investor) நிதிகளாக மாற்றப்பட்டன.
படி 5: அதைக் கொண்டு, இறுதியாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் வாங்கப்பட்டன. ஏன் இவ்வளவு சிக்கலான வழி? உண்மை யான உரிமையாளர்கள் யார் என்பதை மறை க்கத்தான். வெளியில் இருந்து பார்த்தால் “சுதந்தி ரமான வெளி நாட்டு முதலீட்டாளர்கள்” போல் தெரி யும். உண்மையில் அதானி குடும்பமே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பதுதான் சூட்சுமம்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், எலாரா நிதிகளில் 97% முதல் 99% வரையிலான பணம் அதானி பங்குகளில் இருந்தது. எனவே இது இயல்பான முதலீடு அல்ல. ஒரு சாதாரண முதலீட்டு நிதி ஆபத்தைக் குறைக்க பல நிறுவனங்களில் ப ணத்தை பரப்பும், ஆனால் இங்கே 99% அதானி குழுமத்தில் மட்டும் என்பதுதான் ஊழலின் அடிப்படை!
சுவிஸ் விசாரணை - மிக முக்கியமான சான்று
சுவிஸ் நீதித்துறை அதிகாரிகள் 2021 டிசம்பரி லேயே அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு வருவ தற்கு ஒரு வருடம் முன்பே - சாங் சங்-லிங் மீது பண மோசடி மற்றும் ஆவண மோசடி சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர்.
இது மிக முக்கியம்: ஹிண்டன் பர்க்கிற்கு முன்பே ஐரோப்பிய சட்ட அமைப்புகள் சந்தேகம் கொண்டிருந்தன. சுவிஸ் அதிகாரிகள் சாங்கின் ஐந்து வங்கி கணக்குகளில் ₹2,600 கோடியை முடக்கி யுள்ளனர். 2024 ஆகஸ்ட் 9-இல் சுவிஸ் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பு வழங்கியது. “அதானி குழுமம் பணமோசடி மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக் கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.சாங் ஒரு ‘முக மூடிமனிதர்’ (frontman) ஆவார் - உண்மை யான உரிமையாளர்களை மறைக்க பயன் படுத்தப்படுகிறார்.
” அமெரிக்க குற்றப்பத்திரிகை
2024 நவம்பர் 20-இல் அமெரிக்க நீதித்துறை (US Department of Justice) கௌதம் அதானி, அவரது அண்ணன் மகன் சாகர் அதானி உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2020-2024 காலகட்டத்தில் இந்தியாவில் சூரிய மின்சார ஒப்பந்தங்களைப் பெற மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு ₹2,100 கோடிக்கும் அதிகமான லஞ்சம் அளித்தது/உறுதியளித்தது.
இந்த ஒப்பந்தங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் ₹16,000 கோடிக்கும் அதிக மாக லாபம் தரும் என அமெரிக்க நீதித்துறை கணக்கிட்டுள்ளது - என்ற விபரம், மேற்கண்ட குற்றப் பத்திரிகையில் உள்ளது. மேற்கண்ட சதிகாரர்கள் தங்களுக்குள் கௌதம் அதானியை “நம்பர் ஒன்” (Numero Uno) மற்றும் “பெரிய மனிதர்” (The Big Man) என குறிப்பிட்டதாக குற்றப்பத்திரிகையில் உள்ளது. மொபைல் சாட்கள், மின்னஞ்சல்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய விசாரணை என்ன சொல்கிறது?
சர்வதேச விசாரணையில் உண்மை நிலை இப்படி இருக்க, இந்திய பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான செபி 2025 செப்டம்பர் 18-இல் அதானியை, “ரொம்ப நல்லவர்” என்று சான்று அளித்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கள் நிரூபிக்கப்படவில்லை என இரண்டு இறுதி உத்தரவுகளை வெளியிட்டது. ஆனால் இது சர்ச்சையை முடிக்கவில்லை.
உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு கூட, சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டு முதலீட்டு நிதிகளின் “உண்மையான பயனாளர்கள்” யார் என செபியால் கண்டறிய முடியவில்லை.
849 தானியங்கி வர்த்தக எச்சரிக்கைகள் உருவாக்கப் பட்டன. ஆனால் முழுமையான விசாரணை நடக்கவில்லை என்று ஒப்புக் கொண்டது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவை யில் உள்ளன. செபி எலாரா நிதிகளிடம் விரிவான தகவல்களை இரண்டு வருடங்களாக கோரி வருகிறது,
ஆனால் இன்னும் பெறவில்லை. ஆனால், உலக அளவில் அதானி ஒரு பெரும் மோசடிப் பேர் வழி என்று, ஆதாரப் பூர்வ மாக வருகிறது. அம்பலமாகி; பல நீதிமன்றங் களில், பல நாடுகளில் வழக்குகள் நடக்கின்றன.
ஆனால் ₹25,000 கோடி மதிப்புள்ள ரகசிய முதலீடுகள், 99% செறிவு கொண்ட நிதிகள், சுவிஸ் நீதிமன்றம் “முகமூடி மனிதர்” என குறிப்பிடுதல், அமெரிக்க குற்றப்பத்திரிகை - இவை அனைத்தும் மோடியின் கூட்டுக் களவாணி நண்பரை முற்றுகையிட்டுள்ளன. இதை முழுவதும் நீதி அமைப்புகள் கூர்ந்து கவனிக்கின்றன.
இது ஒரு சாதாரண வணிக மோசடில்ல - பல ஆண்டுகள், பல கண்டங்கள், பல விசாரணை அமைப்புகளை உள்ளடக்கிய மிகச் சிக்கலான மெகா மோசடி. அந்த மோசடியின் மன்னன் அதானி; மந்திரி மோடி.
நன்றி : தீக்கதிர் 22 / 02 / 26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக