மாலை மலர் : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. நச்சுக் கழிவை பாதுகாப்பாக இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
250 கி.மீ. தூரம் க்ரீன் காரிடாரில் கண்டெய்னர் லாரிகள் பயணிக்கிறது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புடன் நச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது. 50 போலீசார் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கின்றனர்.
இதற்காக 12 கண்டெய்னர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். 30 நிமிட ஷிஃப்ட் முறையில் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசங்களுடன் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிதாம்பூருக்குப் பதிலாக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலை ஆகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.
கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் அழித்தால் 51 நாட்கள் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக