சுமதி விஜயகுமார் : ஒவ்வொரு முறையும் பிஜேபி ஒன்றியத்தில் வெற்றி பெரும் போதும், வடமாநிலத்தவர்களால் தான் வெற்றி கிடைத்தது என்று கூறி,
அவர்களை மிக கேவலமாக சித்தரித்து பதிவுகள் இடப்படும். பீடா வாயன்கள், பாணி பூரி, அறிவில்லாதவர்கள் என்று. அதையெல்லாம் கடந்த உபி தேர்தல் அடித்து நொறுக்கியது.
தினம் தினம் ஒருவேளை சோற்றுக்கே போராடும் அந்த மக்களுக்கு மேலே நடக்கும் அரசியலை ஒரு இடத்தில் அமர்ந்து , அலசி ஆராய எல்லாம் நேரம் கிடைக்காது.
சொல்ல வேண்டியதை, தரவுகளுடன், மக்கள் மொழியில் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை துருவ் ரதி நிரூபித்தார்.
கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை,
கல்வி கற்க வாய்ப்பு அமையாதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.
இந்தியாவிற்கே சமூக நீதியில் வழிகாட்டியாய் தமிழ்நாடு விளங்குகிறது என்று வெட்டி பெருமை பேசிக்கொள்ளலாம்.
ஆனால் இங்கு தான் நாளொரு பொய்யும் பொழுதொரு அவதூறும் பரப்பி வரும் கட்சி தலைவர்களையும், அவர்களை சிலாகிக்கும் படித்த முட்டாள்களை அதிகம் பார்க்க முடியும்.
எவ்வளவு தரவுகளை கொடுத்து அந்த பொய்களை முறியடித்தாலும், அடுத்த பொய்யை பரப்புவதற்கு தயாராய் இருக்கும் அடி முட்டாள்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது தான்.
அந்த வகையில் வேறு எந்த தலைவர்களையும் மிஞ்சி விடும் அளவிற்கு பொய்களை அள்ளித்தெளிக்கும் அண்ணாமலைக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
ஒரு பொய்யை அவ்வளவு ஆனந்தமாய் இவர்களால் எப்படி பரப்ப முடிகின்றது என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.
அவர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு என்ன பண்புகளை சொல்லிக் கொடுப்பர்கள்!
எல்லா தலைவர்களும் எதோ ஒரு கட்டத்தில் பொய் சொல்லி இருப்பார்கள் தான்.
ஆனால் பொய்யை மட்டுமே சொல்லி திரியும் அண்ணாமலை ஒரு தனி ரகம்.
அந்த வகையில் அண்ணாமலையின் பொய்களை தொகுக்கலாம் என்றெண்ணிய பொழுது எதை விடுவது எதை போடுவது என்றே தெரியவில்லை.
அண்ணாமலை சொன்ன பொய்களில் சில துளிகள்:
தமிழ்நாட்டில் பணிபுரியும் பிஹாரி தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப் படுகிறார்கள் என்ற காணொளிகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். அது பொய் என்று தமிழ்நாடு அரசும் தேஜஸ்வி யாதவும் நிரூபித்தார்கள்.
ஒரு ராணுவ வீரரின் மனைவியை பலரும் சேர்ந்து தாக்கினார்கள் என்று காணொளியை பரப்பினார். அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
மைகேல்பட்டி மாணவியின் காணொளியை பரப்பி மதமாற்றத்தினால் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்றார்.
சித்தி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றாள் என்று நிரூபிக்கப்படத்து.
விலை உயர்ந்த ரபால் கை கடிகாரத்தை கட்டிகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அந்த கடிகாரத்தின் விலையை பற்றி கேள்வி எழுந்தவுடன், கைகளால் எழுதப்பட்ட ஒரு invoice ஐ காட்டி இது தான் அந்த கடிகாரத்தின் விலை என்று மக்களின் காதுகளில் பூ சுற்ற நினைத்தார்.
மருதமலை கோவிலில் 1962 வரை மின்சாரம் வராததிற்கு திமுக தான் காரணம் என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்ததே 1967 ல் தான் என்பது கூட தெரியாமல்.
1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் நாத்திகம் பேசியதால் முத்துராமலிங்க தேவரின் கோவத்திற்கு பயந்து அறிஞர் அண்ணா,
மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி ஹிந்து நாளிதழில் வந்தது என்றார். அடுத்த நாளே அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவேயில்லை என்று ஹிந்து நாளிதலே மறுத்தது.
TR பாலு 100 ஆண்டு கால பழமையான கோவில்களை இடித்ததாக கூறினார் என்று சொன்னார்.
TR பாலு GST சாலை விரிவாக்கத்தின் பொழுது இடித்த கோவில்களுக்கு பதிலாக பெரிய கோவிலாக கட்டிக்கொடுத்தேன் என்று தான் பேசி இருந்தார்.
2022ல் காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முன்பு வரை அது ஒரு கனவாகவே இருந்து வந்தது என்றார்.
அதற்கு முன்னர் 2010ல் இந்தியா 101 பதக்கங்களை வென்ற சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
EWS இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களும் பயன்பெறலாம் என்றார்.
EWS இடஒதுக்கீடு பொது பிரிவு என்னும் முன்னேறிய ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு உளவுத்துறையில் 60% மேற்பட்டவர்கள் மாற்று மதத்தினர் என்றார். வெறும் 18% மட்டுமே மாற்று மதத்தினை சேர்ந்தவர்கள்.
ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாடு 50% கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
2022ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியகற்காக தமிழ்நாடு அரசிற்கு விருது வழங்கியுள்ளது.
இந்திய அளவில் 180000 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதினால் percentile 0% குறைக்கப்பட்டது என்றார்.
ஒன்றிய அரசின் இணையதளத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மொத்த எண்ணிக்கை 67,802 என்றிருக்கிறது.
முதுநிலை மட்டும் இல்லாமல் , மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்களை மொத்தமாக கூடினால் கூட 180000 இடங்களுக்கு குறைவாகவே வருகிறது.
பொது அறிவு தான் கொஞ்சம் கம்மி போல, மற்ற படி அறிவாளியாக இருப்பார் போல என்று எண்ணி ஏமாந்து விட வேண்டாம்.
தான் பணி செய்த 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சொன்னார். அவர் ips ஆக பணி செய்தது வெறும் 9 வருடங்கள். அதில் 20,000 குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன.
இதுவரை 20000 நூல்களை படித்துள்ளதாக தெரிவித்தார். அவரின் வயதை கணக்கிட்டு அவர் பிறந்ததில் இருந்து தினம் ஒரு நூல் என்று வைத்தால் கூட 20000 வராது என்பதை யாரும் கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்.
தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டதை இணையதளம் காமெடி ஆக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதை விட பெரிய பெரிய காமெடிகள் எல்லாம் அண்ணாமலை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்.
அண்ணாமலை சொன்ன பொய்களில் மிக சிலவை தான் மேற்சொன்னவை. மொத்த பட்டியலும் இடவேண்டும் என்றால் பல பதிவுகளை தாண்டும்.
இந்த புத்தாண்டில் அண்ணாமலைக்கு சொல்ல ஒன்று இருக்கிறது .
இந்த பொழப்புக்கு.......
அண்ணாமலையின் பொய்களை fire விட்டு பரப்புபர்களுக்கும் சொல்ல ஒன்று இருக்கிறது
Congratulations ......இந்தியாவின் ஆக சிறந்த முட்டாள்களில் நீங்களும் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக