திங்கள், 30 டிசம்பர், 2024

பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்!

தினமலர் : பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்
சண்டிகர் : வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காததாக கூறி, மத்திய அரசை கண்டித்து, பஞ்சாப் முழுதும் விவசாயிகள் நேற்று நடத்திய பந்த்தால், ரயில், பஸ் சேவை முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் - ஹரியானா எல்லைகளான ஷம்பு, கானவுரியில், 'டில்லி சலோ' அதாவது, டில்லிக்கு செல்வோம் என்ற போராட்டத்தை கடந்த பிப்., 13 முதல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

இதனால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் உள்ளே வராதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதியின்றி டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினர் மூன்று முறை தடுத்து நிறுத்தினர்.

பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், 70, கானவுரி எல்லையில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நவ., 26ல் துவங்கினார்.

இந்த போராட்டம், 35 நாட்களை கடந்து நடக்கிறது. இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காத மத்திய அரசை கண்டித்து, முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், டிச., 30ல், முழு கடையடைப்பு போராட்டம் நடக்கும் என, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்துார் மோர்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் சமீபத்தில் அறிவித்தன.

இதன்படி, பஞ்சாப் முழுதும் நேற்று காலை 7:00 மணி - மாலை 4:00 மணி வரை, முழு கடைஅடைப்பு போராட்டம் நடந்தது.

பாட்டியாலா, ஜலந்தர், அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பதிண்டா, பதான்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில், பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

மேலும், இந்த மாவட்டங்களில் அரசு பஸ்கள் குறைவாகவே இயங்கிய நிலையில், தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை. பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க

'பாதுகாப்பு இல்லை எங்களுக்கு...'விவசாயிகள் தற்காப்பு விழிப்புணர்வு பேரணி

பல்வேறு சுங்கச்சாவடிகளில் விவசாயிகள் மறியல் நடத்தியதால், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன.

அமிர்தசரஸ் கோல்டன் கேட் அருகே, ஏராளமான விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால், பொற்கோவிலுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணியர் அவதி அடைந்தனர்.

பெரோஸ்பூர், ஜலந்தர், லுாதியானா, பதிண்டா உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில் நிலையங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால், ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.

இதனால் ரயில் நிலையங்களில் பயணியர் சிக்கித் தவித்தனர். ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சில ரயில்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

லுாதியானா, கபுர்தலா, ஜலந்தர், பாட்டியாலா உள்ளிட்ட மாவட்டங்களில், அனைத்து வணிக வளாகங்களும், காய்கறி சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்த முழு கடையடைப்பு போராட்டம், அண்டை மாநிலமான ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்திலும் எதிரொலித்தது.

அம்பாலாவிலிருந்து பஞ்சாபின் சண்டிகர், மொஹாலி, பாட்டியாலா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பஸ்கள் இயங்காததால், நுாற்றுக்கணக்கான பயணியர் அவதி அடைந்தனர்.

எங்களது பந்த் வெற்றி அடைந்துள்ளது. முழு ஆதரவை வழங்கிய பஞ்சாப் மக்களுக்கு நன்றி. மாநிலத்திற்குள் ஒரு ரயில் கூட இயங்கவில்லை. அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்பட்டன. எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
நமது நிருபர்
3–4 minutes

Advertisement

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பயணியர் அவதி

கருத்துகள் இல்லை: