புதன், 27 நவம்பர், 2024

பெங்கல் புயல் கரையை கடக்கும் 7 மாவட்டங்கள் .. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை

 tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. வானிலை மைய கணிப்புபடி இன்று அது புயலாக மாறும். இதற்கு 'FENGAL - ஃபெங்கல்’ என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
tamilnadu weatherman weather news
சென்னை டூ கன்னியாகுமரி.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அடுத்த 3 மணி நேரம் அலர்ட்



இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளது இதன் காரணமாக புயல் உருவாவதற்கான.. அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன.

எங்கே உள்ளது?: சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத்து வருகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
வங்கக் கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்! எந்த நாடு பெயர் வைத்தது தெரியுமா?

கரையை கடப்பது எப்படி?: இந்த புயல் தற்போது வங்கக்கடலில் இருந்து அரபிக்கடல் நோக்கி நகர முயற்சிக்கும். நிலப்பரப்பு வழியாக செல்ல முயற்சிக்கும். இதனால் தற்போது வங்கக்கடலில் உள்ள புயல் சின்னம் டெல்டா அருகே வந்து வடக்கு தமிழ்நாடு அருகே கரையை கடக்கும்.

பின்னர் வலிமை இழந்து அப்படியே பயணிக்கும். இந்த புயல் சின்னம் கரையை கடக்கும் போது கண்டிப்பாக தீவிர புயலாக அல்லது வலிமை நிறைந்த புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளது இதன் காரணமாக புயல் உருவாவதற்கான.. அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன.

டெல்டா அருகே மழையை கொடுப்பது போல வந்தாலும் 30ம் தேதி புயல் கரையை கடக்கும். அந்த நாளும்.. அதற்கு முதல் இரண்டு நாட்களும் கண்டிப்பாக சென்னைக்கும் மழையை கொடுக்கும்.
விட்டா ஆளையே தூக்கிரும் போலயே.. ஓவென இரைச்சலுடன் ஆர்ப்பரிக்கும் கடல்! பயத்துடன் பாம்பன் வாசிகள்!

இன்று சென்னைக்கு மழை பெய்யவில்லை. சென்னை மழைக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை கண்டிப்பாக மழை பெய்யும் வாய்ப்புகள் இதனால் உள்ளன .

7 மாவட்டங்கள்: வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை

ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். நாளை முதல் இந்த மாவட்டங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: