புதன், 27 நவம்பர், 2024

பங்களாதேஷில் ஹரே கிருஷ்ணா சாமியாருக்காக வாதாடிய முஸ்லீம் வழக்கறிஞர் கொலை

 மாலை மலர் : டாக்கா வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.
இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.



இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பாக வாதாடும் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார். 

விசாரணையில், உயிரிழந்தவர் பயிற்சி வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: