திங்கள், 23 செப்டம்பர், 2024

ஏழைகளின் தட்டுச்சோற்றை தட்டிவிட்ட சக்திகளின் சூழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி

 Perumal Ganeshan  :     நவீன இலங்கையின் சிற்பியும்... ஏழையின் ஒரு பிடி சோற்றையும் தட்டிவிட்ட வஞ்சகமான பணக்காரர்களும்.
உலகம் 21 ஆம் நூற்றாண்டில் பெற்றெடுத்த மாபெரும் தலைவர் . 2022 ல் இலங்கை பொருளாதாரத்தில் மீளுமா உணவு மருந்து சாதாரண இயல்பு வாழ்வு என ஒவ்வொரு இலங்கை பிரசையும் தவித்த வேளை நானுங்களை கரை சேர்ப்பேன் என தன்நம்பிக்கை ஊட்டி இரண்டரைக்கோடி மக்களை தன் பிள்ளைகளாக சுமந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க.
இவர்மீது இனவாதம் மதவாதம் முலாம் பூசப்பட்ட போதும் நரி என தமிழ்மொழியினரும் சிங்களமொழியினரும் சேறு எறிந்தபோதும் அவை மழலைகளின் திட்டலாக காதால் வாங்கி காதால் உதிர்த்த புண்ணியவான்.


சந்தர்ப்ப சூழலால் ஊழலை கண்டு கொள்ளா தலமைத்துவத்தினால் நாட்டை பொருளாதார அரசியல் சிந்தனையோடு  கையாண்டவர்.
பணக்காரரிடம் மட்டும் வரியை உயர்த்தி ஏழைகளுக்கு நிவாரணம் அளித்தவர்.ஆனால் பணக் காரர்களின் வஞ்சக வலையில் ஏழைகள் வீழ்ந்து இவரை தம் வாக்குகளால் ஓரங்கட்டினார்கள்.
ஏழைகளின் சகாயனான இந்த மனிரை ஏழைகளாலேயே கைவிடச்செய்தமை புத்திசாலிகளாக இந்த நாட்டில் இருக்கும் டாக்டர்களும் பேராசிரியர்களும் பெரும்பதவிகளிலுள்ள ஆளுமைகளுமே.
 

உள்ளூர் உயர் வருமான தாரிகள் அந்த வரியை கொடுப்பதால் நாடு சர்வதேச கடன்களில் மீண்டு நல்லதொரு தலா வருமானத்தை உருவாக்கும் காலத்தை எட்ட இருந்தநேரம் பால் பொங்கும் போது பானை உடைத்த செயலை மக்கள் செய்தார்கள்.
இவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட வேளை இவர் அமைதியாக தன்கடமையை பொறுப்போடும் தன் ஆளுமையாலும் நுரூபித்த தலைவர்.
 

இலங்கை வரலாற்றில் இவரை போல புத்திக் கூர்மையும் துணிச்சலும் கொண்ட தலைவர் எந்த இனத்திலும் கிடைக்க வில்லை. தன்னை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யாத மக்களின் செயலை.சிறுபிள்ளைத்தனமானது என புறந்தள்ளி பொருளாதார வரட்சியில் மீளமுடியாத இடத்திற்கு இருந்த. ஆட்சியாளரால் கொண்டு செல்லப்பட்ட பின்பும் பலர் இத்தலைமைத்துவத்துக்கு முன்வராத தீர்மானம் மிக்க பயங்கரமான வேளை துணிவோடும் மக்கள் மீதான பாசத்தாலும் பொறுப்பேற்று நாட்டை அதள பாதாழத்தில் இருந்து மீட்டெடுத்து குழந்தைகளுக்கு பால்மா கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து நோயாளிக்கு மருந்து நவீன சாதனங் களின் செயற்பாட்டிற்கு  மீள் உயிர்ப்பு என தன் பொருளாதார திறமையாலும் பலகாலத்து அரசியல் சாணக்கியத்தாலும். நாட்டு மக்களை மூச்செடுக்கச் செய்தவர்
 

அது எல்லா இன மக்களும் இன்னொரு நாட்டுக்கு பிச்சை பாத்திரம் ஏந்தாமல் விளிம்பில் வைத்து மீட்ட பெரும் ஆளுமை ரணில்விக்ரமசிங்க.
 

தனது சேவைக்காக அரச சம்பளத்தை எப்போதும் பெறாதவர் தனது பூர்வீக சொத்துக்ளை நாட்டின் நிறுவனங்களுக்கு எழுதி கையளித்தவர். இவரின் கனவுகளாலாக்கப்பட்டவையே தேசிய கல்வி நிறுவகம் கல்வியியல் கல்லூரிகள் இளைஞர்சேவை மன்றங்கள். முதன் முதலில் இலங்கையர்க்கு கணணியை அறிமுகப்படுத்தியவர். இலங்கையர்களுக்கு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியவர்.
இலங்கையர் இன்று வலையமைப்பை (Internet)அனுபவிக்க 1993 ல் அமரிக்க உதவி ஜனாதிபதியுடன் அல்கோர் அவர்களுடன் உடன்படிக்கை செய்து வலையமைப்புகளை இலங்கைக்கு கொணர்ந்தவர்.
 

கையடக்க தொலைபேசி இவரின் பரிசு.
எனின்   நவீன இல்லங்கையர்களை ஆக்கிய சிந்தனையாளர்.
ஒப்பந்தம் மட்டும் செய்ய முடிந்தது என்பதுவே கவலை. இலங்கையிலுள்ள எண்ணைய் குதங்களுக்கு இந்தியாவிலிருந்து தரைவழி நிரப்பும் குழாய்களை அமைக்க தீர்மானித்திருந்தவர்.
 

இந்திய பிரதமர்  மோடியோடு ஒப்பந்தம் செய்து இலங்கையை உலகத்தரைவழி நாடாக மாற்ற எணிய  வரலாற்று மனிதர் இதனால் இந்த நாட்டை சிறந்த   சுற்றுலா தளமாக மாற்றி சுற்றுலா வருமானத்தால் இலங்யையர்களின் தலா வருவாயை உயர்த்த இருந்தவர். கொள்ளையிடப்பட்ட வீடு மறுநாளே செழிக்காதே. அதற்கான பொறுமையும் புரிந்துணர்வும் மக்களுக்கு இருக்க வேண்டும். ”எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு “  மக்கள் இந்தக்குறளை மறந்து போனதை அனுபவிப்பர்.
 

200 வருடங்களாக மலையகத்தில் நிலமற்று வாழும் தமிழர்களுக்கு இம்முறை நிலம் கொடுப்பதற்கு ஆசைப்பட்டிருந்தார். அதை மலையகத்தில் அந்த ஏழை மக்களின் அகக்காட்சியில் விதைக்க சுயநலமிகள் விரும்ப வில்லை..அன்றாட் கூலிகளாகவே இருக்கும் இவர்கள் சிறந்த தலைவர்களின் கருத்துக்களை கேட்கவோ அறியவோ  வாய்பற்றவர்கள் இதுவே இவர்களின் சாபக்கேடு. தங்களை சுற்றி வந்த ஏமாற்றும் தலைவர்களை இன்னும் நம்புகிறார்கள் என்பதும்  இதன் பாற்படும்.
 

2050 ல்  இலங்கையை பொருளாதார சமூக நிலைகளில் சிறந்த நாடாக்க இன்றே அடித்தளம் இட்டவர்.என்பதும் கூறவேண்டியதே.
இப்பத்தியின் நோக்கம் போன பஸ்சுக்கு கை காட்டுவதல்ல இனிவரும் பஸ்சையாவது புரிந்து கொள்ளும் அறிவை ஏற்ப்படுத்தவே.
சுயநலவாதிகளின் துாண்டலால் தாம் செய்யும் முட்டாள் தனம் ஒரு நாட்டில் எத்தனை பேராபத்துகளை ஏற்படுத்தும் என்பதை புரியவே.
இப்பத்தியாளர் வரிச்சுமையால் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்கவில்லையா ஆனால் ஒரு பொது நன்மைக்கா சுமைகளை பங்கிடுவதே சிறந்த பிரசையின் லட்சணம்.
சிறந்த பிரசையாக இருப்பதனால் மாத்திரமே சிறந்த ஆட்சியை உருவாக்க முடியும்.
 

ஏழைகளின் கைகளில் இருந்த ஒரு பிடிசோறும் பணக்கார , அறிவாளிகளால் தட்டி கீழே  கொட்டப்பட்டது.
மக்கள் ஆபத்தில் உள்ளபோது அவர்களை மீட்டெடுக்கும் ஆற்றலும் மனப்பாங்கும் எவரிடம் உள்ளதோ  அவரே சிறந்த தலைவர் என கோட்பாடுகள் கூறுகின்றன. அது சரியா ? என்ற கேள்வி தேர்தலின் பின் எழுகிறது

கருத்துகள் இல்லை: