இதை லைக்குக்கும், கொமண்டுக்கும், பகிர்வுக்கும் பெயர் வாங்கி கொள்ள,
இந்த Sri Vidya முகநூலில் பதிவு செய்து மலையக சமூகத்தை பிச்சைக்கார சமூகமாக உலகிற்கு காட்டி ஏமாற்றியது கொண்டிருப்பது மிக வேதனையானது.
உங்களுக்கு ஜீவன் தொண்டமான் சொத்துகளை ஏன் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால்,
ஏன் முழு மலையக சமூகத்தையும் பிச்சைக்கார சமூகமாக உலகிற்கு காட்ட வேண்டும்.
இன்று குறையும் களுசானையும் உடுத்தி கொண்டு தோட்டங்களை விட்டு வெளியே வந்து தொழில் புரியும் நிலமையையும்,
அடையாள அட்டை எடுத்து பாஸ்போட் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் தொழில் புரிகிறீர்களே அதையும் இ.தொ.காவும் தொண்டமான்களும் உருவாக்கி கொடுத்தது.
இல்லை என்றால் இன்றும் தோட்டங்களில் வேலையும் இல்லாமல் வெட்டியும் இல்லாமல் தோட்டங்களை விட்டு வெளியேற முடியாமல் கல்வி கற்க தோட்ட பாடசாலைகளை தவிர வேறு பாடசாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
தொண்டமானின் முயற்சியில் 1988ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம்தான் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை, வாக்குரிமை கிடைத்தது.
அதன் பின்பே தோட்டங்களை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தது.
இதை எல்லாம் உங்கள் பாட்டன் பாட்டியிடம் அவர்கள் கஷ்டபட்ட விதத்தை தெரிந்து கொண்டு வந்து பதிவிட வேண்டும்.
இத்தனையும் அனுபவித்து கொண்டு இப்படி கேவலமாக பதிவிட கூடாது.
முகநூலில் லைக், கொமணட், சியா பண்ணி பெயர் வாங்குவதற்காக எமது மலையக சமூகத்தை கேவலப்படுத்தி பதிவிட கூடாது.
தொண்டமானை தவிர தலைவனாக எவன் மலையக மக்களுக்கு சேவை செய்தான் என்பதை தெளிவாக பதிவிடுங்கள்.
இப்படி நன்றி கெட்டதனமான பதிவு ஓன்றை பதிவிட்டு எமது சமூகமே இப்படி அடுத்தவரின் பிச்சைக்காக ஏங்கும் சமூகமாக வெளிப்படுத்தி விட்டீர்கள். கேவலம் கேவலம் கேவலம்.
முதலில் நமக்கு செய்த சேவைக்கு நன்றி சொல்லி பழகுங்கள்.
அவர்கள் செய்த சேவையில் இதோ ஒரு துளி.. முழுவதும் எழுதுவதாக இருந்தால் ஒரு பைபிளே எழுதலாம். தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதி வெளியிட வேண்டும்.
1947 ஆம் ஆண்டு knavsmire உருளவள்ளி போராட்டத்தின் பொழுது கைது செய்யப்பட்ட ஆயிரம் தொழிலாளர்களுக்கான பிணை தலைவர் தொண்டமானின் சொந்த பணத்திலேயே கட்டப்பட்டது
அதுவே இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய தொழிற்சங்க போராட்டம்
அதன்பிறகு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்துவதற்கு பணம் இல்லாத பொழுது,
அப்பொழுதெல்லாம் இப்பொழுது போல் சந்தா பணம் அறவிடப்படுவதில்லை.
மக்கள் விரும்பி தந்தால் மட்டுமே,
அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தலைவர் தொண்டமான் தனது சொந்த பணத்தையே செலவழித்து இருக்கிறார்.
அவர் மக்கள் தலைவனாக இருந்ததாலே அவரது தோட்டங்கள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டன
ஸ்ரீ மா அரசாங்கத்தில் 70களில் தோட்டங்கள் அரசு உடமையாக்கப்பட்ட பொழுது அவரது தோட்டமே முதல் முதலாக அரசு உடமையாக்கப்பட்டது.
காரணம் என்னவெனில் அவர் ஒரு இந்திய வம்சாவளி தமிழர்
அதே சமயம் சிரிமா அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார் என்பதே.
அந்த சமயம் மலையகத்தின் பல தோட்டங்கள்பிரிட்டானியருக்கு சொந்தமாக இருந்தன
ஆனால் அவற்றை எல்லாம் எடுப்பதற்கு முன்பு தொண்டமான யாவின் தோட்டத்தையே அரசு கை ஏற்றது
நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறீர்கள்
சரித்திரம் தெரிய வேண்டும்
பேசுவதற்கு முதல் வாய் இருப்பதற்காக எல்லாம் பேசக்கூடாதுஎன்
47 ஆம் ஆண்டு அவர் பிணை வைப்பதற்காக செலவழித்த பணம்சுமார் ஒரு லட்சம்
இன்றைய பெருமதியில் அது 10 கோடி
பிச்சைக்காரனுக்குபத்து ரூபாய் போடுவதற்கு மனம் இல்லாதவர்கள் அவரை குறை சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது
நான் கற்ற பூண்டுலோயா பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு வசதி இருக்கவில்லை
70களில் இறுதியில் தொண்டமான் அவர்களின் முயற்சியிலேயே அது ஆரம்பிக்கப்பட்டது
அதில் கற்றே நான் சட்டம் படிப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது அங்கு நான் கல்வி கற்றபொழுதும் தனிப்பட்ட ரீதியில் எனக்கு உதவி செய்திருக்கிறார்
பிச்சைக்காரனுக்கு 10 ரூபாய் கொடுக்காதவர்கள் அவரை குறை சொல்வது நன்றி கெட்ட தனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக