புதன், 15 பிப்ரவரி, 2023

இயக்குனர் A. K. சுப்ரமணியம் .. 88 வயத்தில் அரசு மருத்துவமனையில் உதவி கேட்கிறார்

May be an image of 1 person

Dinakar Kasiviswanathan  :  AKS என்ற A. K. சுப்ரமணியம் ஆகிய இந்த 88 - வயது முதியவர்,
மாமியாரா, மருமகளா ?, பிஞ்சு மனம் உட்பட 5 திரைப்படங்களின் டைரக்டர் .
தற்போது, இடுப்பு எலும்பு முறிந்து, ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அனாதை ஆசிரமத்தில் வசித்த ,மிக, மிக வறுமையான  சூழலில் உள்ள இவருக்கு உதவ விரும்பும் நண்பர்கள் பண உதவி அல்லது வேறு உதவிகளை வழங்லாம்.
நன்றி.(GPAY : 9444344440 - B. Manikandan)
இந்தப் பதிவு எனக்கு பிறவா ஆனால் மகனாக நான் எண்ணும் ஐயப்பன் என்ற விஸ்வாமித்திரன்-னது ஃஃபேஸ் புக் பக்கத்தில் பார்த்தேன்.மனம் வருந்தினேன்.
படத்தில் இருப்பவர் டைரக்டர் ஏ.கே.எஸ்.என்று எங்களால் அழைக்கப்பட்டவர்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்...
அவர் இயக்கிய வீட்டு மாபபிள்ளை பட பிர்பல ஹீரோயின் அவரை தீவிரமாக காதலிக்கும் அளவிற்கு அழகாக இருந்தவர்..


அவர் காதலித்தாரா இல்லியா என்பது தெரியாது.
மிகச் சிறந்த எழுத்தாளர்,எம்ஜியாரே பயப்படும் பானுமதியை வைத்து தாய் பிறந்தாள் படம் இயக்கியவர். ..
ஏகப்பட்ட படங்கள்.  .பிற்காலத்தில் அவர் படங்கள இல்லாத காலங்களில் பல கதை விவாதங்களில் அவரோடு நானும் இருந்து இருக்கிறேன்.
நான் சம்பந்தப்ப்ட்ட இடங்களில்-சேனல்களில் அவரை அறிமுகப்படுத்தி சம்பளமும் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.
.அவர் என்னவானார்  என்று தெரியாத இவ்வளவு காலங்கள் கழித்து,
 இந்தப் பதிவைப் பார்த்த உடன் அவருக்கு உதவ எண்ணிணாலும்...அவ்வளவு பண உதவி செய்யும் அளவிற்கு இயலாத நிலை.
.ஏதோ என்னால் முடிந்த உதவி செய்வேன்,,,
ரைட்டர் யூனியன் என்று ஒன்று இருக்கிறதே என்று எண்ணிக் கேட்டால் அவர் அதில் மெம்பரே இல்லையாம்.
அதற்கு கட்ட பணம் இருந்திருக்காது.
.ஆனாலும் அவர்கள் ஒன்று கூடி வசூலித்து அவருக்கு உதவலாம்.
ஆனால் மார்க்கட்டில் இருக்கும்  பிரபலங்கள் பின்னால் அலையும் யூனியன் கள்தான் இங்கு அதிகம்
.சினிமாவை கலை என்று முட்டாள்தனமாக சொல்லும் தமிழ் சினிமாஉலகில் பலருடைய வாழ்க்கை இந்த தொழிலால் கலைந்து போனதால்தான்  கலை கலை என்று சொல்கிறார்களோ?என்னவோ?

ஆனானப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர்-என்.எஸ்.கிருஷ்ணன்-சந்திரபாபு-மட்டுமல்லாமல்
மிகப் பெரிய எழுத்தாளர்கள்-இயக்குநர்கள் உட்பட பலர் வாழ்வே கடைசி காலத்தில் கலைந்து வறுமையின் கோரப் பிடியில் சிக்கி சிதறுண்டு போனவர்கள்,
 மத்தியில் இவர் எப்படி தாக்குப் பிடிக்கிறார் என்பது பதிலே இல்லாத கேள்வி.....முடிந்தவர்கள் உதவுங்கள்.....

கருத்துகள் இல்லை: